எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 17, 2013

ஶ்ரீராமனின் பாதையில்! அவரைக் காணோமே!

காலை எழுந்ததும் குளித்து முடித்துத் தயாராகிக் காலை உணவு எடுக்காமல் நேரே ப்ரஞ்ச் சாப்பிடலாம்னு முடிவெடுத்து விடுதிக் காப்பாளரிடம் வண்டி பற்றிக் கேட்டோம்.  அவரும் லக்னோ செல்ல நாங்க சொன்ன தொகைக்கு ஒத்துக் கொண்டு ஒருத்தர் வரேன்னு சொல்லி இருப்பதாய்ச் சொன்னார். சரினு நாங்களும் அக்கம்பக்கம் கொஞ்சம் பார்த்து வரலாம்னு போயிட்டு வந்தோம். திரும்பி வந்தால் பசிக்கிறாப்போல் இருக்கவே கீழே போய் வெறும் ப்ரெட் டோஸ்டும், தேநீரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு எப்போத் தயாராகும்னு கேட்டுக் கொண்டு திரும்பினோம்.  கிளம்பத் தயாராக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தோம்.  துணி துவைக்க நிறைய இருந்தது. சித்ரகூடம் போய்த் தான் தோய்க்கணும்.

பதினொன்றரைக்கு மீண்டும் கீழே போய் உணவு எடுத்துக் கொண்டோம். சரியாய்ப் பனிரண்டுக்கு வண்டியும் வர, விடுதி ஆட்கள் உதவி செய்ய லக்னோ நோக்கிக் கிளம்பினோம். விடுதியின் கவனிப்புக்கும், உதவிகளுக்கும் நன்றி சொல்லி ஆட்களுக்கும் தாராளாமாய் டிப்பி விட்டு சந்தோஷமாய்க் கிளம்பினோம்.  டிரைவர் இளைஞன்.  இன்னும் சொன்னால் சிறுவன் என்றே சொல்லலாம்.  ஆனாலும் அபாரமாக வண்டி ஓட்டினார். அவர் வீட்டில் ஆயிரம் வருஷத்துப் பழைய ஶ்ரீராமர் சிற்பங்கள் இருப்பதாகச் சொல்லி அங்கே அழைத்துச் சென்றார்.  வீடு தான் என்றாலும் கோயில் போன்ற அமைப்பில் இருந்தது.  அங்கிருந்தவர் அன்றைய வழிபாடு முடிந்து கதவு சார்த்திவிட்டதால் இனி மாலை மூன்று மணிக்கு மேல் தான் பார்க்கலாம்னு சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றமே. லக்னோவுக்கு இரண்டரையிலிருந்து மூன்றுக்குள் வந்துவிட்டோம்.  நேரே முன் பதிவு செய்யும் இடம் போய் அன்றைய சித்ரகூட் எக்ஸ்பிரஸில் முன் பதிவுக்குக் கேட்டால் இங்கே டிக்கெட் மட்டும் தான்.  ரயிலில் டிடி யிடம் கேட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்னு சொல்லிட்டாங்க.  சரினு டிக்கெட்டை வாங்கிண்டு  உள்ளே போனால் ரயில் எங்கே வரும்னு தெரியலை.

அங்கே இங்கே அலைந்து விசாரித்தால்,"அது சோட்டி லைன்! அந்த ஸ்டேஷனுக்குப் போங்க!" னு சொல்லிட்டாங்க.  அப்போ மீட்டர் கார்டிலா வண்டி ஓடுது? சந்தேகம்.  சோட்டி லைன் ஸ்டேஷன் எங்கேனு கேட்டுண்டு போனோமா! வந்தது வினை!  எல்லா ஆட்டோக்காரங்க, ரிக்‌ஷாகாரங்க எல்லாம் சூழ்ந்து கொண்டு, 'எந்த வண்டி'னு கேட்கவே சரி, விபரமானும் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னோம்.  உடனே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ரயிலுக்கு நேரமாச்சாக்கும்.  உங்களால் போய்ப் பிடிக்க முடியாது;  நாங்க கொண்டு விடறோம்னு கையிலே இருந்து பெட்டிகளைப் பிடுங்காத குறை.

சமாளித்துக் கொண்டு நடந்தோம்.  ஒரு போர்ட்டரிடம் கேட்கலாம் என்றால் ஒருத்தருமே கண்ணில் படலை.  எல்லாரும் ஒளிஞ்சுண்டாங்க போல! அதற்குள்ளாகக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு ஆட்டோ ஓட்டி மெதுவாக எங்களிடம் வந்து எதிரே இருக்கும் கட்டிடத்தைக் காட்டி, அங்கே இருந்து தான் சித்ரகூட் எக்ஸ்பிரஸ் கிளம்பும், ரயிலுக்கு நேரமிருக்கு, மெதுவாகவே போங்கனு சொன்னார்.  அடக் கடவுளே! எப்படி எல்லாம் ஏமாத்த நினைக்கிறாங்கனு நினைச்சு அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் மெதுவாவே போக ஆரம்பிச்சோம்.

ரங்க்ஸ் முன்னாலே போக நான் பின்னால் போய்க் கொண்டிருந்தேனா!  ஒரு இடத்தில் நடைமேடை ஒன்றைக் கடக்கணும்.  அப்போ அவர் இறங்கிட்டார். கையில் பெட்டியை வைத்துக் கொண்டு என்னால் இறங்க முடியலை.  ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இறங்கினேன்.  அதுக்குள்ளாக அவர் இன்னும் தூரமாகப் போயாச்சு.  என்னை ஒரு ஆள் தொடர்ந்து வந்தான்!  "மேடம், மேடம்," என்றான்.  திரும்பிப் பார்த்தேன்.  "உங்க பர்ஸ் அங்கே விழுந்துடுச்சு. எடுத்து வைச்சிருக்காங்க. வாங்க, வாங்கித் தரேன்!"  என்றான். எல்லாம் ஹிந்தியிலே தான்.

நான் எப்போவுமே கையிலே பர்செல்லாம் வைச்சுக்க மாட்டேன்.  கைப்பை தான்.  அதிலேயே குடித்தனமெல்லாம் பண்ணிடுவேன். சின்ன பர்ஸ் அவர் தான் வைச்சுப்பார்.  அதையும் அவர் மறந்து வைச்சுடறார் என்றே இம்மாதிரியான நேரங்களில் நான் வாங்கி என் கைப்பையின் உள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுடுவேன்.  ஆகவே நிச்சயமாய்ப் பர்ஸ் விழவில்லை. என்றாலும் நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவாறே, "நீயே எடுத்துக்கோ!" என்று சொல்லிவிட்டேன்.  அதுக்குள்ளாக ரங்க்ஸுக்கு நான் வரேனானு சந்தேகம் வந்து திரும்பிப் பார்த்து அங்கிருந்தே என்னனு கேட்க, நானும் ஒண்ணும் இல்லைனு சொன்னேன்.

வந்த ஆளும் தன்னோட வேலை இங்கே ஆகாதுனு புரிஞ்சுண்டு திரும்பினான்.  அந்த ஸ்டேஷனுக்குப் போய் எந்த நடைமேடைனு பார்த்துட்டு அங்கே போகிறதுக்குள்ளே எனக்கு அவசரமாக இயற்கையின் அழைப்பு வர ரங்க்ஸிடம் கைப்பையைக் கொடுத்து பத்திரமா வைச்சுக்கச் சொல்லிட்டு பயணிகள் தங்கும் அறைக்குப் போய்ப் பார்த்தா சுத்தம்! ஒண்ணுமே இல்லை.  அங்கே இருந்தவங்க கிட்டேக் கேட்டால் தெரியாதுனு சொல்றாங்க.  ஆஹா, கொடுத்து வைச்சவங்கப்பா!  இயற்கை அழைப்புக் கூட இல்லாதவங்களா இருக்காங்களேனு நினைச்சு வெளியே வந்து அங்கே இங்கே மோதி ஒரு வழியாக் கண்டுபிடிச்சுப் போனால்!


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  பணம் கொடுக்கணும்.  வெறும் கையை வீசிண்டு போனால்?? திரும்ப ரங்க்ஸை விட்ட இடத்திலே தேடி அவர் கிட்டே பணத்தோடு அர்ச்சனையும் வாங்கிக் கட்டிண்டு மறுபடி கழிவறை போய்ட்டுத் திரும்பி வரேன். சாமான் எல்லாம் பப்பரப்பேனு கீழே வைச்சிருக்கு.  சாமான் மட்டும் இருந்தால் பரவாயில்லையே!  எடுத்துட்டுப் போக வசதியா என்னோட கைப்பையும் அங்கே வைச்சிருக்கு. ஆனால் ரங்க்ஸைக் காணோம்! கடவுளே! இந்தக் கைப்பையில் தானே  திரும்பிப் போக டிக்கெட்டிலே இருந்து எல்லா கஜானாவும் இருக்கு.  இதை இங்கே இப்படி அநாதையா விட்டுட்டு அவர் எங்கே போனார்?

14 comments:

  1. //சாமான் எல்லாம் பப்பரப்பேனு கீழே வைச்சிருக்கு. சாமான் மட்டும் இருந்தால் பரவாயில்லையே!

    எடுத்துட்டுப் போக வசதியா என்னோட கைப்பையும் அங்கே வைச்சிருக்கு.

    ஆனால் ரங்க்ஸைக் காணோம்! கடவுளே! இந்தக் கைப்பையில் தானே திரும்பிப் போக டிக்கெட்டிலே இருந்து எல்லா கஜானாவும் இருக்கு.//

    நல்ல சுவாரஸ்யமாக இருக்குது. ;)

    ReplyDelete
  2. //இதை இங்கே இப்படி அநாதையா விட்டுட்டு அவர் எங்கே போனார்?//

    உங்களைத்தேடித்தான் போயிருப்பார். ;)

    நல்லா சஸ்பென்ஸ் ஆக முடித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  3. OMG!! Please publish the next part tomorrow itself. :)

    ReplyDelete
  4. என்ன சஸ்பென்சா நிறுத்திட்டீங்க?

    ReplyDelete
  5. ஹாஹா, வைகோ சார், இன்னிக்கு முழுக்க மின்சாரம் இல்லை. ஐந்தேகாலுக்குத் தான் வந்தது. உங்க பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  6. பிங்கோ, கொஞ்சம் பொறுங்க. :))

    ReplyDelete
  7. ஹாஹா, ஶ்ரீராம், சஸ்பென்ஸ் வேண்டாமா!

    ReplyDelete
  8. முன்பின் தெரியாத , மொழியும் அதிகம் புரியாத இடங்களில் கிடைக்கும் அனுபவங்களே சுவாரசியம்தான். சுவைபடச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. அட கடவுளே! :))

    புதுஇடத்தில் நல்ல சோதனை.

    அடுத்து என்ன ஆகியது.....

    ReplyDelete
  10. கைப்பை தான். அதிலேயே குடித்தனமெல்லாம் பண்ணிடுவேன்.

    ~ ரயிலடுக்கு மாதிரியா? அப்ப ரங்க்ஸ்ஸை உள்ளே போட்றுக்கிறது தானே!

    ReplyDelete
  11. வாங்க ஜிஎம்பி சார்,மொழிப் பிரச்னை எல்லாம் இல்லை. தேவைக்கு மேலேயே புரிஞ்சது தான் சில சமயம் கஷ்டமாக் கூட இருந்தது. :))))

    ReplyDelete
  12. மொழி தெரியலைனா தனியாவே போயிருக்க மாட்டோமே! ;)

    ReplyDelete
  13. ஹிஹிஹிஹி, "இ" சார், நல்வரவு. நல்வரவு. ஆமா இல்ல, கைப்பையிலேயே போட்டிருக்கலாமே! பை என்ன ஆறது! :))))

    ReplyDelete