எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 06, 2013

ஊர்லே கல்யாணம், மார்பிலே சந்தனம்!

இங்கே எங்க குடியிருப்பு வளாகத்துக்கு எதிரிலுள்ள கல்யாணமண்டபத்தில் நெருங்கிய உறவினர் திருமணம்.  அதுக்காக ஏற்கெனவே ஞாயிறன்று என் தம்பி குடும்பத்தோடு வந்திருக்கிறார்.  இன்னிக்குக் காலம்பர திடீர்னு ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸின் தாமதத்தினால் கல்யாணப் பிள்ளையே அவர் அப்பா, அம்மாவோடு இங்கே  நம்ம வீட்டில் வந்து இறங்கும்படி ஆயிற்று. எதிரிலே கல்யாணம்; இங்கே அமர்க்களம்! :)))) அண்ணா குடும்பம் வேறு வந்திருக்காங்க.  ஆகவே இரண்டு, மூன்று நாட்களுக்கு இணையத்தில் அமர நேரம் இருக்காது.  வீடு நிறைய மனிதர்கள்.  சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி சாமான்கள். :)))

வெள்ளிக்கிழமை வரையும் வலைச்சர வேலையைக் கவனிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கேன்.  சனிக்கிழமைக்கான வலைச்சரப் பதிவை வெள்ளிக்கிழமைக்குத் தான் எழுத முடியும். :))) வலைச்சர வேலையும் திடீர்னு வந்த ஒன்று. ஆகவே அயோத்தித் தொடருக்குக் கொஞ்சம் தாமதம் ஆகும்.  டிடியை வேறே காணோமா!  வலைச்சரத்துக்கு வரவும் யாரும் இல்லை.  எனக்கும் போய்ச் சொல்ல முடியலை.  எல்லாரும் வலைச்சரத்துக்கு ஆதரவு கொடுத்து உங்கள் ஓட்டை வலைச்சரத்துக்கே அளித்து என்னை வெற்றியடையச் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


சே, தேர்தல் நினைப்பு வந்துடுச்சு! :P

15 comments:

  1. அதென்ன... வலைச்சரத்துல நான் இன்றும் கமெண்ட் போட்டிருந்தேனே... சொல்லவே மாட்டேங்கறீங்க! :)) என்ன சொல்லணும்? ஆ...ங்! grrrrrrr !

    விருந்தின வருகையா... அய்.... ஜாலி...ஜாலி!

    ReplyDelete
  2. ஶ்ரீராம், உங்க கமென்டை வலைச்சரத்தில் பார்த்தேன். டிடி இருந்தால் அறிமுகப் பதிவர்களின் வலைக்குச் சென்று சொல்லிட்டு வருவார். இந்த வாரம்னு பாருங்க சோதனையா டிடிக்கு என்னமோ வர முடியலை போலிருக்கு! :))) அதான் சொல்லறதுக்கு ஆளில்லைனு சொல்லி இருந்தேன். சொன்னது போதுமா? இன்னும் சொல்லணுமா? ஹிஹிஹிஹிஹி

    ReplyDelete
  3. டிடி பாவம்! அவரு போய் போய் சொல்லிகிட்டுத்தான் இருக்கார்!

    ReplyDelete
  4. //வீடு நிறைய மனிதர்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி சாமான்கள். :)))//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! ;)

    நல்ல உதா .... ரணம்.

    மிகவும் ரஸித்தேன்.

    ReplyDelete
  5. அமர்களம்:) வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. விருந்தினர் வருகை நடுவே நான் வேற வந்து உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்! :(

    வலைச்சரம் இன்றைக்கு இன்னும் படிக்கலை. படிக்கிறேன்.

    ReplyDelete
  7. வாங்க வா.தி.,

    டிடி முதல் நாள் வந்தது தான், அப்புறமா வரவே இல்லை. அதான் கேட்டுட்டு இருக்கேன். :)))

    ReplyDelete
  8. வாங்க வைகோ சார், ஆமாம், வந்து பாருங்க, அப்போத் தான் புரியும். :)))

    ReplyDelete
  9. வாங்க வெங்கட், நீங்க வந்தப்போ தம்பிக்கு உடல்நிலை சரியில்லாமல் அந்த டென்ஷன் தான் பாதி. திடீர்னு வயிறு அப்செட். அதோட உங்களோட சரியாப் பேசவும் முடியலை. அதுவும் கொஞ்சம் வருத்தமாத் தான் இருந்தது. மாமாவும் சொல்லிட்டே இருக்கார். :))))

    ReplyDelete
  10. வோட்டு போடாச்சு

    ReplyDelete
  11. கல்யாணம் ஒருபக்கம். வலைச்சரம் ஒரு பக்கம். கீதா. படு சுவாரஸ்யம் உங்கள் லைஃப்.:)
    எஞ்சாய் மாடி.

    ReplyDelete
  12. எனக்கு ஊருக்கு
    (இந்தியா கிளம்பும் நாள் வந்து விட்டது கோவில், பார்ப்பது மூட்டை கட்டுவது என்று இருப்பதால் உங்கள் வலைச்சர பகிர்வுகளை நிதானமாய் படிக்கவேண்டும்.
    அருமையாக தொகுத்து வருகிறீர்கள்.
    10 தேதி கோவைக்கு போய் அத்தை மாமாவை பார்த்து விட்டு மாயவரம் போவேன் அது வரை இணையத்துடன் இணைய முடியாது.
    பார்ப்போம்.

    ReplyDelete
  13. நன்றி "இ" சார்.

    ReplyDelete
  14. வாங்க வல்லி, மூணு நாள் போனதே தெரியலை. :)))) இன்னிக்கு back to pavilion. :)))

    ReplyDelete
  15. வாங்க கோமதி அரசு, உங்க வேலைகளை முடிச்சுட்டு மெதுவா வாங்க. தாய் நாட்டுக்கு நல்வரவு. :)))

    ReplyDelete