எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 10, 2014

குளிர்பானம் குடித்துக் குழந்தை பலி

சற்று முன் தொலைக்காட்சிச் செய்தியில் குளிர்பானம் குடித்துக் குழந்தை பலி எனச் செய்தி வந்தது.  குளிர்பான பாட்டில் பெரியது வாங்கிச் சென்றது குழந்தைகளின் தந்தை.  மளிகைக்கடையிலே வாங்கி இருக்கார்.  அது வழக்கமாக வாங்குவது தான் என்கிறார்கள்.  குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததிலே ஒரு குழந்தை குடித்த அரைமணிக்குள் இறந்து போல மற்றக் குழந்தைகள் கவலைக்கிடம்.  இது தேவையா?

நம் நாட்டில் எத்தனையோவிதமான சுதேசிக் குளிர்பானங்கள் இருந்தன.  கிராமங்களில் அதை "கலர்" என்றே சொல்வார்கள்.  அத்தகைய கலரில் ஜிஞ்சர் பீர், பன்னீர் சோடா, போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்காத குளிர்பானங்களே இருந்தன. செயற்கையான ரசாயனக் கலவை இல்லாமல் தயாரிக்கப்பட்டவை.  இன்று அவை எல்லாம் சென்ற இடமே தெரியவில்லை. காளிமார்க் ஒன்று தான் நிலைத்து நிற்கிறது.  மற்ற மாநிலங்களின் சுதேசிக் குளிர்பானங்களின் செய்முறைக் காப்பிரைட்டோடு வெளிநாட்டுக் குளிர்பானக் கம்பெனிகள் வாங்கிவிட்டு அவற்றின் உற்பத்தியை நிறுத்திவிட்டுத் தங்கள் செயற்கைக் குளிர்பானங்களையே அறிமுகம் செய்துவிட்டார்கள்.

இன்று யார் கையில் பார்த்தாலும் வெளிநாட்டுக் குளிர்பானபாட்டில்களே. அவற்றின் தீமையை நாம் யாரும் நன்கறிந்திருக்கவில்லை;  அல்லது அறிந்திருந்தாலும் அதன் மோகத்தால் கவரப்பட்டிருக்கிறோம். இது இன்று உயிரை வாங்கும் ஒரு விஷமாக மாறியுள்ளது!  என்ன இல்லை நம் நாட்டில்?


இந்தக் குளிர்பானங்கள் வாங்கும் பணத்துக்கு இளநீரோ, பன நுங்கோ, அல்லது தர்பூஷணிப் பழமோ, கிர்ணிப்பழமோ, அல்லது ஏதேனும் பழச்சாறுகளோ வாங்கித் தரலாம் குழந்தைகளுக்கு. உடலுக்கும், வயிற்றுக்கும் கேடு விளைவிக்காத ஒன்று இவை அனைத்தும். ஆனால் யார் கேட்கிறார்கள்?  பெரிய கிரிக்கெட் வீரர்கள் இதற்கு ப்ரான்ட் அம்பாசடர்களாக இருந்து விளம்பரம் செய்கையில் எல்லாருடைய மனமும் இதை வாங்கிக் குடித்து ஹீரோ மாதிரி இருக்கணும்னு தான் தோணுது.  கடைசியில் ஜீரோ ஆகப் போவதை நினைக்கிறதில்லை.

அடுத்த விஷம் இந்த லேஸ் எனப்படும் சிப்ஸ் பாக்கெட்கள். இதில் உள்ள கொழுப்புச் சத்து குறித்து யாரும் அறியவில்லை. அரை கிலோ எண்ணெய் வாங்கி உருளைக்கிழங்கை வாங்கிச் சீவி சிப்ஸ் பண்ணிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.  ஆனால் அதைச் செய்ய அம்மாமார்களுக்கு சோம்பல்.  இதை ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்துடறதோடு அல்லாமல் அவங்களும் சாப்பிடறாங்க.  இன்னிக்கு எங்க அம்மா சூப்பர் உமன் அப்படினு குழந்தைகள் சொல்வதே இந்த திடீர் தயாரிப்பில் விதவிதமான பலகாரங்கள் செய்து கொடுக்கும் அம்மாக்களைத் தான்.  அடுப்படியில் வெந்து கொண்டு சிரமப்பட்டுச் செய்வதெல்லாம் கனவாகிக் கொண்டு வருகிறது.  இன்னும் போனால் சாப்பாடு எல்லாமே டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும்.  அதை வாங்கிச் சாப்பிடப் போறாங்கனு நினைக்கிறேன்.  வீட்டில் சமையல்னா அதிசயமாப் பார்ப்பாங்க போல!

தயவு செய்து இந்த செயற்கைக் குளிர்பானங்கள், செயற்கை உணவுகள் வாங்குவதையும், அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதையும் யாரும் ஆதரிக்காதீர்கள்.  உங்கள் குழந்தைக்கு நீங்க எப்படிச் செய்து கொடுத்தாலும் அது அம்மா செய்தது; அவங்களுக்கு அது அமிர்தமே!

12 comments:

  1. குளிர்பானம் குடித்ததால் டக்கென்று உயிர் போயிருக்காது. வேறு ஏதாவது உள்ளே இருந்திருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். லப்பட சாப்பிட்ட மிச்ச 3 பேர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே...

    ஆனால்...

    நீங்கள் சொல்லும் விஷயங்கள் முற்றிலும் உண்மைதான்.

    ReplyDelete
  2. மிகவும் வருத்தப்படும் சம்பவம் அம்மா...

    முதலில் பெற்றோர்கள் மாற வேண்டும்...

    ReplyDelete
  3. எல்லாமே கை விட்டுப் போச்சுது அதனால் தான் அற்ப ஆயுளுடன்
    கதை முடிந்து விடுகிறது .இந்த யுகம் என்ன ஆகுமோ என்ற மனக்
    குழப்பம் சொல்லி வேலை இல்லை :( இது போன்ற மரணச் செய்தி
    கண்டேனும் மனங்கள் மாற வேண்டும் .சிறப்பான விழிப்புணர்வுப்
    பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

    ReplyDelete
  4. ரு வேளை டெட்ரா பாக் ஆக இருக்கலாம்.எக்ஸ்பைரி தேதி முடிந்திருக்கும் என்று நினைத்தேன்.பாட்டில் என்கிறீர்களே. என்ன விஷயமோ. இந்த பானமோகம் எப்போது தீருமோ.

    ReplyDelete
  5. உடல் இளைக்க diet coke என்று வாங்கிக் குடிக்கிறார்கள். இது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று எங்கோ படித்த நினைவு.

    ReplyDelete
  6. குளிர்பானம் குடிச்சுத் தான் ஶ்ரீராம், இன்னைக்கு தினசரியிலும் வந்திருக்கு! :( மத்த மூணு பேருக்கு இன்னும் சரியாகலை.

    ReplyDelete
  7. சரிதான் டிடி, பெற்றோர்கள் மனம் மாற வேண்டும். அவங்க இம்மாதிரியான பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை நிறுத்தணும்.

    ReplyDelete
  8. வாங்க அம்பாளடியாள், மனக்குழப்பம் தான் அதிகம் ஆகிறது! :(((

    ReplyDelete
  9. டெட்ரா பாக் இல்லை. பாட்டில் தான் வல்லி. :( கெட்டுப் போனதா இருக்கலாம்.

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், இந்த செயற்கைக் குளிர்பானம் எதுவானாலும் உடலுக்குக் கேடு விளைவிப்பது தான்! :(

    எங்க வீட்டிலே நாங்க வாங்கறதில்லைனு கேலி செய்யறவங்க நிறைய உண்டு. யார் என்ன சொன்னாலும் சரினு நாங்க வாங்கி வைச்சுக்கறதில்லை. குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தால் எதுவும் இல்லாமல் இருக்கிறதைப் பார்த்துட்டு ஆச்சரியம் மட்டுமில்லாமல் குறை சொல்பவர்களும் உண்டு. அப்படி வாங்கினால் ரூஹ் அஃப்சா எப்போதேனும் வாங்குவோம். அல்லது வீட்டிலேயே ரோஸ்மில்க் தயாரிப்பது, பாதாம் மில்க் தயாரிப்பது உண்டு.

    ReplyDelete
  11. நல்ல அறிவுரை....

    கேட்கத்தான் பலருக்கு மனமில்லை....

    ReplyDelete
  12. விழிப்புணர்வு பகிர்வு.

    ReplyDelete