எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 18, 2014

கௌதமன் கேட்ட "தால் " செய்முறை!

இணையம் ஒரு பக்கம் படுத்தல்; மின்சாரம் எப்போப் போகும்னு சொல்ல முடியலை. அதோடு வீட்டில் வேலைகளும் ஜாஸ்தி.  எனவே என்னோட தொல்லை கொஞ்சம் இல்லை நிறையவே குறைஞ்சிருக்கு. :))) ஆனாலும் விட மாட்டோமுல்ல!  அது என்னமோ தெரியலை.  நான் இந்த மாதிரி மொக்கை போஸ்டெல்லாம் நேரடியாகத் தான் தட்டச்சுகிறேன். அப்போப் பார்த்து எரர் மெசேஜ் வரும்.  இதைப் பிரசுரிப்பதில் பிரச்னை இருக்குனு சொல்லிட்டே இருக்கு. அதையும் மீறித் தான் பிரசுரிக்க வேண்டி இருக்கு.  பல சமயங்களில் எழுதி வெளியிடும் சமயம் மொத்தமாய்க் காக்கா உஷ் ஆகிறது. :)))) சேமிச்சு வைச்சுக்கணும். இல்லைனா மறுபடி எழுதறச்சே முதல் தரம் எழுதின நடை மாறி வேறே மாதிரி வருது. ஒரு எழுத்தாளி ஆகறதுக்கு எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு பாருங்க! :)


இப்போச் சப்பாத்திப் பதிவின் தொடர்ச்சியாக முதலில் கௌதமன் சார் கேட்ட தால் செய்முறை.  அவர் இப்போப் பண்ணும் தாலைக் குறித்துக் கேட்டிருக்க மாட்டார். அந்தக்கால பிரபலமான தாலைத் தான் கேட்டிருப்பார்னு நினைக்கிறேன். எங்க மாமியார் வீட்டில் தேங்காய்ச் சட்டினி, நெய், சர்க்கரை, வெல்லம்னு கூடத் தொட்டுப்பாங்க. நமக்கு நாக்குக்கு அதெல்லாம் இறங்கவே இறங்காது.  அங்கே தாலை முதல் முறையாக அறிமுகம் செய்தது நாம தான். 


என் அம்மா பண்ணும் தால் செய்முறை நான்கு பேர்களுக்கு:


பாசிப்பருப்பு குறைந்தது 200 கிராம்

பச்சை மிளகாய்                   2 அல்லது 3 (காரம் வேணும்னா கூட்டிக்கலாம்)

வெங்காயம் (அப்போல்லாம் சின்ன வெங்காயம் தான் அங்கே கிடைச்சது. அதான் ஒரு கைப்பிடி எடுத்துப்போம்.  சென்னை வந்ததும் தான் பெரிய வெங்காயமே பழக்கம்.)

சின்ன வெங்காயம் என்றால் ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் என்றால் 2  (தோல் உரித்துப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.)

இஞ்சி (தேவையானால், எங்க வீட்டில் அம்மா சேர்த்தது இல்லை)

தக்காளி        நல்ல நாட்டுத் தக்காளி என்றால் 4 பெங்களூர் தக்காளி என்றால் அளவைப் பொறுத்து 4 அல்லது 5, பொடிப் பொடியாக நறுக்கவும்.

மஞ்சள் பொடி

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, (சீரகம் எல்லாம் பின்னாட்களில் சேர்க்க ஆரம்பித்தேன். இது அந்தக்காலத்து தால்)


தேவையான உப்பு, தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் தேவையானால்

எலுமிச்சம்பழ மூடி ஒரு பாதி


பருப்பை நன்றாகக் குழைய வேக வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்,  இன்னொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளித்துப் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்க்கவும்.  வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கினதும் தக்காளியைச் சேர்க்கவும்.  தக்காளியும் வதங்கியதும் வதக்கலை அப்படியே வெந்து கொண்டிருக்கும் தாலில் கொட்டிக் கிளறவும்.  பின்னர் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொத்துமல்லி போட்டுக் கிளறவும்.  இது ரொம்பக் கெட்டியாக இல்லாமலும், அதே சமயம் நீர்க்கத் தண்ணீர் போல் இல்லாமலும் கரண்டியால் எடுத்து ஊற்றினால் நிற்கும் பதத்துக்கு இருக்க வேண்டும்.  ரொம்ப நீர்க்க இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் கொதித்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவையான நீர் சேர்க்கவும். மாவு எல்லாம் இதற்கு விடக் கூடாது. 


இது தான் அப்போதெல்லாம் அதாவது அறுபதுகளில், எழுபதுகளில் நான் ராஜஸ்தான் போகும் வரையிலும் செய்து வந்த முறை.  இப்போது இதே பாசிப்பருப்பை வேறு முறையில் செய்கிறேன்.  அது பின்னர்.   இப்போ தாலை விதம் விதமாக பல்வேறு மாறுபட்ட ருசிகளில் மாறுபட்ட மசாலா சேர்த்துச் செய்ய முடிகிறது. 

18 comments:

  1. நாங்களும் இப்படித்தான் செய்கிறோம். (மசாலா கிடையாது)

    சமயங்களில் ஒரு வேக வைத்த உ.கி நன்றாக மசித்துச் சேர்ப்போம்.

    ReplyDelete
  2. இதிலே மசாலாவே கிடையாது. ஜீர்கம் கூடத் தாளிப்பதில்லை. உ.கி. நாங்களும் போடுவோம். :))) இதிலே அதைச் சொல்ல விட்டுப் போச்சு
    ! :)

    ReplyDelete
  3. சுவையான தால் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. எர்ரர் மெசேஜ் வரதுக்கு இணையம் மெதுவ்வவ்வவ்வாஆ வேலை செய்யறது முக்கிய காரணம் . நான் முன்னெல்லாம் நிறைய கஷ்டப்படுவேன் . போஸ்ட் சேவ் பண்றது ,ஷெட்யூல் படி பப்ளிஷ் ஆறது ,அப்டேட் பண்றது எல்லாம் கஷ்டம் . ஸ்பீடு நல்லா ஆனதும் தான் எல்லாம் சரியாச்சு. மத்த தால் செய்முறைகளும் சொல்லுங்கோ . முந்தி போட்டிருந்தாலும் பாக்கறேன் .

    ReplyDelete
  5. படம் போடலையா? :p

    ReplyDelete
  6. நானும் இதே மாதிரி தால் செய்வது வழக்கம். வேறு என்னென்ன தால் வகைகள் செவீர்கள் என்று சொல்லுங்களேன்....தெரிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  7. ஆரம்பிக்கும் பொழுதே இப்படி 'உச்சு'க் கொட்டினால் எப்படி?..

    ReplyDelete
  8. வாங்க சுரேஷ் நன்றி

    ReplyDelete
  9. பார்வதி, சமயத்தில் பாதி தட்டச்சும்போதே இணைய இணைப்புப் போயிடும். :) அதைக் கவனிக்காம பப்ளிஷ் கொடுத்தால் சுத்திட்டே இருக்கும். :) நமக்குத் தலை சுத்தல் வ்ந்துடுது. இப்போவே இதை எழுதறதுக்குள்ளே 2 முறை இணைப்புப் போயிட்டு வந்திருக்கு.

    ReplyDelete
  10. அம்பி, வம்பி, இதுக்கேத்தாப்போல் படம் இணையத்தில் கிடைக்காது. வீட்டில் செய்யறச்சே தான் எடுத்துப் போடணும்.

    பி.கு. எதுக்குக் கேட்டீங்கனு புரியுது!:P:P :P

    ReplyDelete
  11. ராஜலக்ஷ்மி, வடமாநிலங்களில் வசித்திருக்கும் உங்களுக்குத் தெரியாததா நான் சொல்லிடப் போறேன். கொஞ்சம் செய்முறை மாறி இருக்கலாம். :)

    ReplyDelete
  12. நன்றி காசிராஜலிங்கம். :)

    ReplyDelete
  13. ஜீவி சார், எதைச் சொல்றீங்கனு புரியலை. இணைய இணைப்புன்னா இங்கே அது சகஜமாப் போச்சு. இணைப்புத் தொடர்ந்து கிடைச்சாத் தான் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமா இருக்கும். படு கேவலம். :)))))

    ReplyDelete
  14. வடக்கே வந்த பிறகு செய்முறையில் மாற்றங்கள். முன்னால் இப்படிச் செய்ததுண்டு! :)

    ReplyDelete
  15. நானும் இப்படி செய்வேன், ஆனால் எலுமிச்சை பிழிவது இல்லை.

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், சமையலில் நளனாக ஆயிட்டு இருக்கீங்க போல! :)

    ReplyDelete
  17. வாங்க கோமதி அரசு, எலுமிச்சை பிழிந்தால் அது தனி ருசி. :)

    ReplyDelete
  18. என்னைக் கேட்டால் இதுதான் பெஸ்ட்.வயிற்றுக்கு நல்லது.

    ReplyDelete