நம்ம வீட்டுக் குட்டிக் கொலு. மேல் தட்டில் மூணு வரிசையில் தசாவதார செட், அறுபது வருஷப் பழமையான பொம்மைகளும், அதன் பின்னர் காயத்ரி அம்மன், சிவன், அஷ்டலக்ஷ்மி, வெண்ணைத்தாழிக் கிருஷ்ணன், தவழ்ந்த கிருஷ்ணன், டெரகோட்டாப் பிள்ளையார் கச்சேரி பண்ணிட்டு இருக்கார்.
கீழே காதியில் விற்கும் மாக்கல்லில் ஆன தசாவதார செட். பரிசாக வந்தது. அதிலே ஒரு புலி பொம்மை மட்டும் வாத்திய செட்டில் இருந்ததில் என்னிடம் தங்கி இருக்கு. மிச்சம் கரடி, யானை, சிங்கம், மான், எல்லாம் யார் கிட்டே இருக்கோ தெரியலை. மரப்பாச்சியை நிற்க வைச்சா நிற்கலை. சரினு படுக்க வைச்சேன். இனிமேல் அவங்களை நிற்க வைக்க வழி பார்க்கணும். :)))) செட்டியார் பழத்தட்டுப் போதும், கடை பரப்பாதேனு சொல்லிட்டார். வெண்கலச் சொப்பு செட், மரச் சொப்பு செட், மாக்கல் சொப்பு செட் எல்லாமும் இருக்கு. வைக்கலை. வைக்கலாமா, வேண்டாமானு யோசனை. :)
இன்றைய நிவேதனம் வெற்றிலை, பாக்கு, பழத்தோடு, பயறுச் சுண்டல். கொஞ்சம் தான் பண்ணினேன். போணி ஆகணுமே. நான் இன்னும் சுண்டல் கலெக்ஷனுக்குப் போக ஆரம்பிக்கலை. இங்கே ஜாஸ்தி கலெக்ஷனும் ஆகிறதில்லை. :P :P :P :P
நவராத்திரிக்கு ஏதும் எழுதப் போவதில்லை. போன வருஷமும் அப்படித் தான் நினைச்சேன். அப்புறமா நீலீ பத்தித் தேடிப் பிடிச்சு எழுதறாப்போல் ஆச்சு. இந்த வருஷம் கணினிக்கு வந்தாலும் மத்தவங்க எழுதறதை மட்டும் படிக்கிறதாக உத்தேசம். :)) அநேகமா இன்னிக்கு நிறையக் கூட்டம் வரும். ஹிஹிஹி, சுண்டலுக்கு இல்லைங்க, இந்தப் பதிவுக்கு. நாளைச் சுண்டல் படம் சுடச் சுட அடுப்பிலிருந்தே!
கொலுவில் கலசம் இருக்க வேண்டுமென்று என் மனைவி சொல்லுவாள். உங்கள் கொலுவில் இருக்கிறதாகத் தெரியலையே. இந்த வருடமும் எங்கள் வீட்டில் கொலு கிடையாது. இல்லாவிட்டாலும் என் அகமுடையாள் 108 தாமரை காசுகள் கொண்டு( பழைய 20 பைசா நாணயங்கள் ) அர்ச்சனை செய்து பூஜிப்பாள்.
ReplyDeleteகொலு வைத்து வழக்கமில்லை. வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று சுண்டல் சாப்பிட்டு மட்டுமே வழக்கம்.
ReplyDelete(கொலு) வைப்பவர்களுக்கு ஒரு சுண்டல்! வைக்காதவர்களுக்கு பல சுண்டல்! :)))))
நான் ஆஜர் கீதா மேடம். பயறு சுண்டல் எடுத்துக்கலாமா?
ReplyDeleteஅறுபது வருஷப் பொம்மைகளும் வைத்து அருமையான கொலு!
ReplyDeleteஆச்சரியமான விஷயம்தான்!
// கீழே காதியில் விற்கும் மாக்கல்லில் ஆன தசாவதார செட். பரிசாக வந்தது. அதிலே ஒரு புலி பொம்மை மட்டும் வாத்திய செட்டில் இருந்ததில் என்னிடம் தங்கி இருக்கு. மிச்சம் கரடி, யானை, சிங்கம், மான், எல்லாம் யார் கிட்டே இருக்கோ தெரியலை.//
நல்ல ஜோக். நன்றாகவே ரசித்தேன். புத்தகங்களை இரவல் வாங்குபவர்களும் அப்படித்தான். பலபேர் வாங்கினால் திருப்பியே தருவதில்லை!
தங்களுக்கு எனது உளம் நிறைந்த நவராத்திரி நல் வாழ்த்துக்கள்!
வாங்க ஜிஎம்பி சார், சுண்டல் சாப்பிட முதல் வரவுக்கு நன்றி. :))))
ReplyDeleteமாமியார் வீட்டில் கலசம் வைத்துப் பார்க்கலை. அதோடு கலசம் வைத்தால் நிபந்தனைகள் அதிகம். கொலுவில் பின்னர் எதையும் மாற்ற முடியாது. படியைத் தொடக் கூடாது. தினசரி கட்டாயமாய்ப் பூஜை செய்யணும். பூஜைக்கு நியமங்கள் பல உண்டு. நவராத்திரிக்கு நிவேதனம் மட்டுமே செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக இதே பழக்கம். நவராத்திரி பூஜை எல்லாம் பழக்கம் இல்லை. ஆகவே கலசம் வைப்பதில்லை.
ப்ழைய தாமரைப்பூ 20 காசுகள் எங்களிடமும் உண்டு.
ReplyDeleteஸ்ரீராம்,
ReplyDeleteஹா, நாங்களும் சுண்டல் கலெக்ஷனுக்குப் போவோமுல்ல, நாங்களும் பல சுண்டல் சாப்பிடுவோமே! :))))
வாங்க ராஜலக்ஷ்மி, சுண்டல் நல்லா இருந்ததா?
ReplyDeleteவாங்க தமிழ் இளங்கோ ஐயா. பொம்மைகளை நான் தானம் தான் செய்தேன். இரவல் கொடுக்கலை. படிகளைக் கோர்ப்பதும், பொம்மைகளை வைப்பதும் பின்னர் திரும்ப எடுத்து வைப்பதும், படிகளைப் பிரிப்பதும் எங்க ரெண்டு பேராலேயும் தனியாக முடியவில்லை. ஆள் போட்டால் படியைக் கோர்க்க மட்டும் 500 ரூபாய் கேட்கிறாங்க. படி வாங்கியதே ஆயிரம் ரூபாய்க்குள்ளே தான். :)))))
ReplyDeleteஅது என்ன தாமரை பூ காசு? கொலு நன்னா இருக்கு, யார் பாட்டு? சரி சுண்டலுக்கு பதிலா சுவாரஸ்யமா எதா....வது......உ????ண் டுமா? இப்பத்தான் வந்தேன். திடீர்னு உக்காரை சாப்பிட்டு நாளாச்சுன்னு ...ஒரு எண்ணம்......கேட்டா ஒதை விழுமோ? :))))) மஹாலக்ஷ்மிக்கு உக்காரை தான் பிடிக்கும்னு நான் மனசுல சொல்லிப்பேன் சின்ன வயசுல. இல்லாதத கேட்டா வாங்கி கட்டிப்போமோ ன்னு பயம். .ஆனா ஒத்துருக்கும் புரியாதபடி வாய் விட்டு why don't you sit down !why don 't you sit down latchu (!உட்காரேன்) நு ரஹஸிய குரலில் சாமிகிட்ட சொல்வேன். ஒருமாமி அதான் உக்காந்துண்டு தானேடி இருக்கு இன்னும் என்ன உக்காரேன் உக்காரெங்கற அசடுன்னா )) அதிசயம்! யாரோ உக்காரை தந்தா எனக்கு!!!ஹ ஹா ஹா .கடவுள் இனிமை! Thank you Lord For this Food For this day and for this life .Happy navrathri
ReplyDeleteஅது என்ன யார் பிரசாதம் செய்தாலும் உடன் கரண்டியும் சேர்த்து எடுத்து வந்து நிவேதனம் பண்றீங்க? சாமி திட்ட்மா கொஞ்சமா எடுத்து சாப்பிடனும்னா?! ஹாஹாஹா! சிம்பிளான கொலு அருமை!
ReplyDeleteசூப்பர் கொலு.கச்சிதமான அழகு. மனம் லயித்துச் செய்யும் எந்த வேலையும் நிறக்கும் என்பதில் உங்கள் கொலுவே அடையாளம். மனம் நிறைந்த பாராட்டுகள் கீதாமா.
ReplyDeleteஜெயஶ்ரீ, ஒரு முப்பது வருடங்கள் முன்னர் (?) தாமரைப்பூ அச்சிட்ட 20 காசு நாணயம் மஞ்சள் கலரில் வெளியிட்டனர். எல்லோருமே அதைச் சேகரித்தோம். பூஜைக்குத் தான் . 108 வைத்துக் கொண்டு விளக்கு பூஜை செய்தால் நல்லதுனு யாரோ சொல்லி அப்போது நானும் சேகரித்தேன். 88 காசோ என்னமோ இருக்கு இன்னமும். மிச்சம் 20 காசு கிடைக்கலை. :))) பூஜையும் அந்தக் காசுகளை வைத்துச் செய்யலை. சாதாரணமாப் பூப் போட்டுத் தான் செய்து வந்தேன்.
ReplyDeleteவாங்க சுரேஷ், நேத்திக்குக் கரண்டியை எடுத்துட்டேன். :))) எடுத்துட்டுத் தான் படம் எடுத்துப் போட்டிருக்கேன், பாருங்க. :))))
ReplyDeleteவாங்க வல்லி, கொலுவைப் பாராட்டியதற்கு நன்னி ஹை! :)))
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteதொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
மின் தடையால் கணினி பக்கம் வரமுடியவில்லை. கீதா எப்போதும் பதிவு போடுவார்களே! நவராத்திரிக்கு என்று பார்த்தேன், பார்த்தவுடன் ஓடி வந்தேன் கொலு பார்க்க.
ReplyDeleteஅருமையான மினி கொலு.
சுண்டல், வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம் எடுத்துக் கொண்டேன்.
நன்றி காசிராஜலிங்கம்.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, தாமதமாய் வந்தாலும் வந்து மஞ்சள், குங்குமம் எடுத்துக் கொண்டதற்கு நன்றி. :)
ReplyDeleteஅட நான் வரதுக்குள்ள சுண்டல் தீர்ந்து போச்சு போல! :)
ReplyDelete