கல்யாணி கொஞ்ச நாட்களாகவே கவனித்து வந்தாள். அவள் மாமனாரும், மாமியாரும் தனியாக ஏதோ ரகசியமாகப் பேசிக் கொண்டனர். என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. இது வரை அப்படி நடந்ததில்லை. அவளும் திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. அவள் கணவன் சொல்லிக் கொள்ளும்படி நிறையச் சம்பாதிக்காவிட்டாலும், குடித்தனம் நடத்தப் போதுமான அளவு சம்பாதித்து வந்தான். மாமனாருக்கும் ஓய்வூதியம் ஏதோ வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை எடுப்பதில்லை என ஒரு வைராக்கியமாகவே அவள் கணவன் இன்று வரை இருந்து வருகிறான். அந்தப் பணம் தனியாகச் சேர்ந்து போய் இன்று லக்ஷங்களில் இருந்தது. வட்டி கிடைத்தது என்றாலும் அதையும் எடுக்க விடுவதில்லை.
தாய், தந்தையைப் பாதுகாக்கவேண்டியது தன் கடமையே எனத் தானே அவர்களுக்காகவும் செலவு செய்து வந்தான். அவர்கள் இருந்த வீடு அவள் கணவன் திருமணத்துக்கு முன்னரே அப்படி, இப்படி சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீடு. ஒரே படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில் அந்தப் படுக்கை அறையில் தன் தாய், தந்தைக்காக வெஸ்டர்ன் கழிவறையும், ஏ.சியும் போட்டு வைத்திருந்தான். அவள் திருமணம் ஆகி வரும்வரை அவர்கள் அங்கே தான் படுத்திருந்தனர். அவள் வந்ததும் ஓரிரு தினங்கள் அங்கே இருவரும் தனிமையாக இருந்தனர். ஆனால் அதுவே அவள் கணவனால் பொறுக்க முடியவில்லை. பெற்றோரையும் வந்து அந்த அறையில் படுக்க வைத்தான். நால்வரும் அங்கே தான் படுத்து வந்தனர்.
வெளியே உள்ள கூடத்தில் பீரோ, வந்தவர் அமரும் சோஃபா, சுவாமி அலமாரி போன்றவை இருந்ததால் படுக்க வசதி இல்லை. அப்படியும் ஓரிரு சமயங்களில் அவள் கணவன் அங்கேயே சோஃபாவில் படுப்பான். அவள் மாமியார் மாமனாரும் காலை விரைவில் எழுந்து சுவாமிக்கு பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள். காலையில் கூடத்தில் படுத்திருக்க முடியாது. வேறு வழி ஏதும் இல்லை என்பது தெரிந்தாலும் கல்யாணிக்குப் பெரிய மனம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போகும் என நினைத்த வண்ணம் பொறுமையாகவே இருந்தாள். மாமனார், மாமியாரையும் கண்ணுக்குக் கண்ணாகக் கவனித்து வந்தாள். அவள் பெற்றோரும் இதையே வலியுறுத்தினார்கள். அப்படி எல்லாம் இருந்தவளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அன்று மாலை அவள் கணவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் அவர்கள் தாங்கள் இருவரும் முதியோர் இல்லம் போகப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை எதிர்வீட்டுப் பையர் மூலம் செய்துவிட்டதாகவும், நாளை நாள் நன்றாக இருப்பதால் நாளையே அதிகாலை தங்களைக் கொண்டு முதியோர் இல்லத்தில் விடும்படியும் பிள்ளையிடம் கூற அவள் கணவனோ திரும்பிக் கல்யாணியைப் பார்த்தான்.
அப்பப்பா! அவன் பார்த்த பார்வை! கல்யாணியின் உடல் பதறியது. அவள் மனமே நடுங்கியது. பகவானே! அவள் ஏதும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லையே! ஆனால் இவர்கள் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கார்களே! அவள் கணவனோ அவளை ஒன்றுமே கேட்காமல் உடனேயே பெற்றோரைப் பார்த்து, "அதெல்லாம் நான் இருக்கும் வரையில் அனுமதிக்க மாட்டேன்!" என்று கறாராகச் சொன்னான். ஆனால் அவர்களோ சிரித்தனர்.
"அப்பா, குழந்தை, நாங்க ஒரு மலையாள ஜோசியரைப் பார்த்தோம். கோயிலுக்குப் போயிட்டு வரும் வழியில் எதிர்ப்பட்டார். எங்களைப் பார்த்ததுமே நீங்க ரெண்டு பேரும் பிள்ளை கிட்டே இருந்து பிரிஞ்சு இருங்க; இல்லைனா ஆபத்துனு சொல்லிண்டே போயிட்டார். அதுக்கப்புறமாத் தான் நாங்க இந்த முடிவுக்கு வந்தோம். எங்களுக்கு வேண்டியது எல்லாம் நீ நல்லா சிரஞ்சீவியா வெகுகாலம் இருக்கணும்ங்கறது தான்." என்றனர். அன்று இரவு முழுவதும் பெற்றோரிடம் தூங்காமல் விழித்திருந்து ஐந்து நிமிஷத்துக்கு ஒருதரம் முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தான் கல்யாணியின் கணவன். ஆனால் அவர்களோ முடிவை மாத்திக்கச் சம்மதிக்கவே இல்லை. மறுநாள் கல்யாணியும் கூடப் போய் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்தார்கள். அவள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவள் கணவன். அவள் வீடு இருக்கும் தெரு வந்ததும் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் நேரே அவன் அலுவலகம் செல்லும் பாதையில் திரும்பிப் போயே போய்விட்டான்.
அன்றிரவு அவன் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள் கல்யாணி. ஆனால் அவனோ படுக்கை அறைக்குள் சென்றவன் வெளியே வரவே இல்லை. மெல்லச் சென்று அறையைத் திறக்க முற்பட்ட கல்யாணி படுக்கை அறைக் கதவு உள்பக்கம் சார்த்தித் தாழ்ப்பாளிட்டிருந்ததைக் கண்டதும் வெட்கத்திலும், அவமானத்திலும் உள்ளம் குன்றிப் போய்விட்டாள். இருந்தாலும் அவன் சாப்பிட வில்லையே என்பதை நினைத்துக் கொண்டு சாப்பிட அழைத்துக் கதவைத் தட்டினாள். கதவு திறக்கவே இல்லை.

சற்றுப் பொறுத்த கல்யாணி மெள்ள ஒதங்கிக் கூடத்து சோபாவில் அமர்ந்து கண்ணயர்ந்தாள்.
ReplyDeleteஅவள் மனம் மதியம் படுக்கையறை மெத்தை, தலையணையடியில் விட்டுப் போர்த்தியிருந்த நாலைந்து நட்டுவாக்களிகளைச் சுற்றி வந்தது.
கல்யாணியின் மனம் அவற்றைச் சுற்றிவரவில்லை, அப்பாதுரை, அவை அவற்றைப் பிடுங்கிய பிடுங்கல் அவளால் தாங்க முடியலை! :(
ReplyDeleteகதைக்குக் கதை??/
ReplyDeleteஎசப்பாட்டா?
ReplyDeleteஅப்பாதுரையின் பின்னூட்டம் சிரிக்க வைத்தது.
ராஜராஜேஸ்வரி, நன்றி. கீழே விளக்கம் கொடுக்கிறேன், பார்க்கவும்.
ReplyDeleteஶ்ரீராம், அப்பாதுரையின் பின்னூட்டம் எனக்கு வேதனையைத் தந்தது. :(
ReplyDeleteஎசப்பாட்டெல்லாம் இல்லை. திரு ஜீவி அவர்களின் பின்னூட்டம் என்னோட பதிவில் கீழ்க்கண்டவாறு:
ReplyDeleteஜீவி said...
//காரணம் என்னமோ நல்லது தான். ஆனாலும் பெற்றோர் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் ஜாதகத்தைக் காரணம் காட்டுவது இந்தக் காலத்திலும் அதை நம்புபவர்கள் இருப்பதையும் காட்டுகிறது.//
காரணம் என்னவோ நல்லதுக்குத் தான் என்று நீங்களே சொல்லும் பொழுது கதையின் உள்ளடக்கத்தில் உங்களுக்கு உடன்பாடு இருப்பது தெரிகிறது. கதையைச் சொன்ன முறையில் தான் நீங்கள் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
நீங்கள் நினைக்கிற மாதிரியே நீங்கள் படிக்கிற ஒரு கதையும் எழுதி இருக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி நீங்கள் நினைக்கிற மாதிரி நீங்களே ஒரு கதையை எழுதி விட வேண்டியது தான்.
அப்படி ஒரு கதை எழுதுங்கள். நாம் இந்த சப்ஜெக்ட்டை விவாதிக்கலாம்
வெற்று அரட்டை இல்லை.நாம் எழுதுவதில், நினைப்பதில் விவாதிப்பதில் யாருக்காவது நன்மை ஏற்பட வேண்டும். அதற்காகத்தான்.
மேலே சொன்னது போல் எழுதியதோடு இல்லாமல் இரண்டாம் முறையும் கேட்டிருந்தார். மூன்று நாட்களாகவே இது மனதில் உள்ளேயே ஊறிக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தேன். :)))))
ReplyDeleteஆனால் பாதியில் நிற்பது போலத் தெரிகிறதே...
ReplyDeleteஜீவி ஸார் யோசானையை ஒட்டி எழுதி இருக்கிறீர்கள் என்பது படிக்க ஆரம்பிக்கும்போதே புரிந்தது.
ReplyDelete//கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போகும் என நினைத்த வண்ணம் பொறுமையாகவே இருந்தாள்.//
ReplyDelete:)))))
எனினும் தாங்கள் அந்தக் கல்யாணி போல பொறுமையாக இல்லை.
திரு. ஜீவி ஐயா அவர்கள் தங்களைச் சற்றே உசுப்பி விட்டதும் ஓர் அருமையான கதையைப் புதுமையாகப் படைத்து சாதித்துக் காட்டி விட்டீர்கள்.
இப்போ நம் திரு. ஜீவி ஐயா என்ன சொல்லப்போகிறார்கள் என நாமும் சற்றே பொறுத்திருந்து பார்ப்போம்.
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
அன்புடன் கோபு [VGK]
ReplyDeleteகதை என்பது ஒருவர் கற்பனையில் தோன்றுவது. எனக்கு இந்தக் கதையை (முடிந்து விட்டதா) படித்தபோது ஏதோ முழுமை பெறாமல் தொக்கி நிற்பது போல் தெரிந்தது. அதை வேண்டுமானால் நான் தெரிவிக்கலாம். இல்லாமல் இப்படி இப்படி எழுதி இருக்கலாம் என்றோ எழுதி இருக்க வேண்டும் என்றோ தெரிவிப்பது சரியாகப் படவில்லை. பின்னூட்டங்கள் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது
அது சரி ஜீவியின் பின்னூட்டத்தை முழுவதும் பிரசுரிக்காமல் அதன் ஒரு பகுதிக்குப் பதில் எழுதுவது சரியா.? Durai A மூன்றாம் சுழி அப்பாதுரையா?
எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் இன்று 6-9-2014 பிரசுரித்த கதைக்கு எழுதிய பின்னூட்டம் /மூன்று நாட்களாகவே இது மனதில் உள்ளேயே ஊறிக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தேன்/ இது சாத்தியமா?
ReplyDeleteஶ்ரீராம், கதை முடியவில்லை. நான் அவசர வேலையா எழுந்தப்போ பப்ளிஷ் கொடுத்திருக்கேன் தப்பா! அதனால் பப்ளிஷ் ஆகி அப்பாதுரை பின்னூட்டமும் கொடுத்துட்டார். :)
ReplyDeleteஆமாம், அவர் தான் திரும்பவும் சொன்னாரே! :))))
ReplyDeleteவைகோ சார், கதை இன்னமும் முடியலை!:) பாதியில் பப்ளிஷ் ஆயிடுத்து! :)
ReplyDeleteDurai A, அப்பாதுரையே தான் ஜிஎம்பி சார்.
ReplyDeleteஜீவி சாரின் பின்னூட்டத்தில் கதை எழுதச் சொல்லி அவர் சொன்ன பகுதியை மட்டும் வெளியிட்டிருக்கேன். :))))
கதை இன்னமும் முழுமை பெறவில்லை. முடிக்கிறதுக்குள்ளாகத் தப்பாய் பப்ளிஷ் கொடுத்துட்டேன். :)
//எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் இன்று 6-9-2014 பிரசுரித்த கதைக்கு எழுதிய பின்னூட்டம் /மூன்று நாட்களாகவே இது மனதில் உள்ளேயே ஊறிக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தேன்/ இது சாத்தியமா?//
ReplyDeleteஎனக்கு இது புரியவில்லையே? எந்தக் கதை 6-9-20144 அன்று பிரசுரம் ஆனது? நான் திரு வைகோ சாரின் முதிர்ந்த பார்வை சிறுகதை விமரிசனத்துக்குப் பரிசு கிடைத்ததற்காகப் போட்ட பதிவில் ஜீவி சாரின் பின்னூட்டத்தை ஒட்டி எழுதிய கதை இது. அது வந்து கிட்டத் தட்ட ஒரு வாரம் ஆகப்போகிறது. ஒரு வாரமாக அவருக்கு எப்படி இந்தக் கதையை மாத்தி எழுதிக் காட்டறதுனு யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்று நாட்களாகக் கொஞ்சம் பிடிபட்டது. :)))) அதைத் தான் சொல்லி இருக்கேன்.
http://sivamgss.blogspot.in/2014/08/blog-post_31.html
இந்தச் சுட்டியில் பாருங்கள், புரியும். :)
//எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் இன்று 6-9-2014 பிரசுரித்த கதைக்கு எழுதிய பின்னூட்டம் /மூன்று நாட்களாகவே இது மனதில் உள்ளேயே ஊறிக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தேன்/ இது சாத்தியமா?//
ReplyDeleteநீங்கள் கேட்டது இந்தக் கதைக்கரு எனச் சொல்லி இருந்தால் சாத்தியமே. ஒரு விஷயம் திரும்பத் திரும்ப மனதில் ஊறிக்கொண்டே இருப்பதும் புதுசு இல்லையே! யோசித்து, எழுதி, எழுதித் தானே மெருகேறும். யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் இன்று வடிவம் பெற்றது.
ReplyDeleteநான் இன்றெழுதிய கதை என்றுதான் நினைத்தேன் இதற்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் என்று தெரிந்து கொள்ளுபடியாக பதிவு இல்லையே. என்றோ எழுதிய பதிவின் பின்னூட்டம் ஒரு கதைக்கு வித்திட்டு, அது பற்றிய எந்த சேதியும் இல்லாமல் முற்றுப் பெறாதகதையை பப்லிஷ் செய்து ஒரேயடியாக என்னையே நொந்து கொள்ள வைத்து விட்டீர்கள். பின்னூட்டம் அந்தப் பதிவுக்கு என்றுதான் என்னைப் போல் இருப்பவர்கள்நினைக்க முடியும்
உங்கள் மாத்தி யோசி நன்றாகவே இருக்கிறது. தொடராக எழுதுகிறீர்களா?
ReplyDeleteஜிஎம்பி சார், அநேகமாய்ப் பின்னூட்டம் கொடுப்பவர்கள் அனைவரும் என் பதிவுகளைத் தொடர்பவர்கள் என்பதால் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். அவ்வளவே! :))))
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, தொடரெல்லாம் இல்லை. ஆரம்பிச்சேன், முடிக்கிறதுக்குள்ளே வேறே வேலை வந்தது. இன்னிக்கு முடிச்சுட்டேன். கொஞ்ச நேரத்தில் பப்ளிஷ் ஆயிடும். :) தொடரும் எண்ணமெல்லாம் இல்லை.
ReplyDelete