எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 27, 2014

மூன்றாம் நாளான இன்றைய சுண்டல்!


சுண்டல் கொஞ்சம் கொஞ்சமாய்த் தயார் ஆகிறது.  வாணலியில் கடுகு, கருகப்பிலை , மி.வத்தல் தாளித்துக் கொண்டு மொச்சையை வேக வைத்துச் சேர்த்தாச்சு.  அடுத்த நிலையில்



கொஞ்சம் போல் சாம்பார்ப் பொடியும் சேர்த்தாச்சு.  நன்கு கிளறணும். ஆகையால் கரண்டி  இருக்கு  "தளிர்  சுரேஷ்! "  கரண்டியை எடுக்கலை!  ஹிஹிஹிஹி, சும்மா ஜாலிக்கு!





தேங்காய் சேர்த்த சுண்டல் இப்போது விநியோகிக்கத் தயார் நிலையில்! 


தேங்காய் தினம் வாங்க முடியலைங்கறவங்க முதல் நாள் உடைத்த தேங்காய் மூடியையே துருவிக் கொண்டு. நிவேதனம் செய்யத் தேங்காய் இல்லாமல் கொஞ்சம் போல் தனிக்கிண்ணத்தில் எடுத்துக்கணும்.  அதை நிவேதனம் செய்துட்டுப் பின்னர் தேங்காய் சேர்த்த சுண்டலோடு சேர்த்துக்கலாம்.  தேங்காய் வாங்க முடிஞ்சவங்களோ, வீட்டில் தேங்காய் காய்த்தாலோ தினம் ஒரு தேங்காய் உடைச்சுக்கலாம். :)))))))) ஆனால் அம்பத்தூரிலேயே நான் தினம் ஒரு தேங்காய் உடைச்சதில்லை. :))))  ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய் உடைப்பேன். 


13 comments:

  1. தேங்காயில் இப்படி ஒரு கணக்கா...

    மொச்சை சுண்டல் கவர்கிறது! (வெங்காயம் போடாமல் என்ன சுண்டல் போங்க!)

    ReplyDelete
  2. நான் நேரடியா மூன்றாம் நாள் வந்திருக்கேன். ரொம்பவும் ருசியாக இருக்கும் போலிருக்கே சுண்டல்!

    கொலு பார்க்கப் போறேன்.

    ReplyDelete
  3. சுண்டல் அருமை.நானும் தேங்காய் தினம் உடைப்பது இல்லை.
    மொத்தமாய் தேங்காய் திருகி கொண்டு ஃப்ரீசரில் போட்டு வைத்துக் கொண்டால் தினம் சுண்டலுக்கு தேங்காய் போடலாம்.

    ReplyDelete
  4. ஹை! நண்பர் ஸ்ரீராம்! அப்ப நீங்களும் நம்ம கட்சியா!!! ஹாஹஹ (துதி , கீ)

    சுண்டல் பாக்க சூப்பரா இருக்கு! எடுக்கத்தான் முடியல....

    தொடர்கின்றோம்!

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், நாம சிக்கன மன்னி இல்லையோ? ஆகவே எல்லாமும் கணக்காய்த் தான் இருக்கும். அதான் இங்கே கஷ்டமே! :)))))

    ReplyDelete
  6. வாங்க ரஞ்சனி, நல்லா இருந்ததுனு ரங்க்ஸ் சொன்னார். எனக்கு நேத்திக்குச் சுண்டல் கிடைக்கலை! :)) ந்ல்ல போணி!

    ReplyDelete
  7. நன்றி காசிராஜலிங்கம், படித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, என்னதான் துருவி ஃப்ரீசரில் வைத்தாலும் அவ்வப்போது துருவற மாதிரி இருக்கிறதில்லை என்றே எனக்குத் தோணும். ஃப்ரீசரில் இருந்து வெளியே வைத்தால் கொஞ்சம் ஒரு மாதிரி ஆயிடுது. :(

    ஆகவே தேங்காய் மூடியின் அளவைப் பொறுத்து நான் தேவைக்கு ஏற்ப மட்டும் துருவி விட்டு மூடியைக்குளிர்சாதனப் பெட்டியில் வைப்பேன். மறுநாள் துருவுவதற்கு இரண்டு மணி முன்னால் வெளியே எடுத்து வைச்சுட்டுத் துருவினால் துருவல் புதியதாக இருக்கிறது.

    ReplyDelete
  9. வாங்க துளசிதரன், நவராத்திரியில் வெங்காயம் போட முடியாதே! :)))

    வெங்காயத்தையும் போட்டு வதக்காமல் பொடிப் பொடியாக நறுக்கிச் சுண்டலைத் தாளித்துக் கீழே இறக்கும்போது போட்டு ஒரு புரட்டுப் புரட்டி விட்டுப் பின் பச்சைக் கொத்துமல்லியும், சாட் மசாலாவும் சேர்க்கலாம். எல்லாச் சுண்டல்களையும் இப்படிப் பண்ணலாம். உ.கி. வேக வைத்துக் கொண்டு தோல் உரித்துப் பொடியான துண்டங்களாக நறுக்கிக் கொண்டு முட்டைப் பொரி, வேர்க்கடலை, அவல்,மிக்சர் போன்றவற்றோடு வேக வைத்த சுண்டலையும் சேர்த்துக் கொண்டு பேல்பூரியாகச் சாப்பிடலாம்.

    ReplyDelete
  10. என்னை மறக்காம நினைவில் வைச்சிருக்கிறதுக்கு நன்றி மாமி! சுண்டல் பார்க்கையிலேயே பசி எடுக்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நானும் அப்படித்தான் துருவி விட்டு மீதியைக் குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவேன். மருமகள் இப்படி
    ஃப்ரீசரில் வைப்பதால் நானும் வைத்தேன். ஆனால் கொஞ்சம் தான் வைப்பேன் , மறு நாள் எடுத்து சமைத்து விடுவேன் அதனால் புதிதாக இருக்கிறது.

    ReplyDelete
  12. மொச்சை சுண்டல்....

    நவராத்திரி சமயமாக இல்லாமல் இருந்தால் வெங்காயம் சேர்த்து செய்யலாம்!

    நவராத்திரியிலும், நிவேதனம் செய்த பிறகு தனியாக கொஞ்சம் வெங்காயம் வதக்கி அதில் மூன்று பேருக்கு சுண்டலைச் சேர்த்து விடலாம்! :) மூன்று பேர் - ஸ்ரீராம்/துளசிதரன் ஜி மற்றும் நான்!

    ReplyDelete
  13. இது நல்ல ஐடியா வெங்கட்! :))))

    ReplyDelete