அவசரமாய் திடீர்னு பெரிய பெருமாள் கூப்பிட்டுட்டார். என்னனு பார்த்தால் நாளைக்குப் புரட்டாசி மாசம் முதல் சனிக்கிழமை ஆரம்பம். அப்புறமா நவராத்திரியும் வந்துடும். அந்தக் கூட்டத்தில் உங்களாலே வர முடியாது, அதனால் இப்போவே வந்துட்டுப் போயிடுங்கனு ரங்க்ஸ் கிட்டே சொல்லி இருக்கார். திடீர்னு இன்னிக்கு மத்தியானம் மூன்றரை மணிக்கு ரங்க்ஸ் வா பெருமாளைப் பார்க்கலாம்னு கூப்பிட தலைவிரிகோலமாக இருந்த எனக்குத் தூக்கி வாரிப் போட( ஹிஹி, தலைக்குக் குளித்ததால் தலைவிரிகோலம், தலை வாரிக் கொண்டிருந்தேன்.) முடியுமானு யோசிக்க, முடியணும்னு ரங்க்ஸ் கிளம்ப ஒருவழியா நானும் நாலரைக்குக் கிளம்பிட்டேன்.
நாலில் இருந்து ஐந்து வரை மூத்த குடிமகன்கள் செல்லும் நேரமாம். ஆகவே ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கற இடத்திலே கூடக் கூட்டம் இருந்தது. ஆனாலும் இருபது நிமிடத்தில் பெருமாளைப் பார்த்துட்டோம். பெருமாள் பவித்ரோத்சவம் முடிந்து எண்ணெய்க்காப்பில் மார்பிலிருந்து கால் வரை போர்த்துக் கொண்டு படுத்திருந்தார். ஏற்கெனவே வயசாச்சு. நாளுக்கு நாள் கூட்டம் வேறே. எனக்கு ஓய்வே இல்லை. மதியம் ஒரு மணிநேரம் நடை சாத்தறாங்க. நிவேதனம் முடிச்சு நான் கொஞ்சம் ஓய்வு கூட எடுத்துக்க முடியாமல் எல்லோரும் பார்க்க வந்துடறாங்க. எனக்குத் தூக்கம்ங்கறதே இல்லாமல் போயிடுச்சு.
படுத்துத் தூங்கறதுக்காக படுக்கை எல்லாம் போட்டுக் கொண்டு படுத்தால் தூங்க விட மாட்டேங்கறாங்களே! னு அலுத்துக் கொண்டார். உள்ளே நுழையறச்சேயே நம்பெருமாளைப் பார்த்தேன். வழக்கமான குறும்புச் சிரிப்போடு இருந்தாலும் பெரிய பெருமாள் பேசிக் கொண்டிருந்ததில் நம்பெருமாளைக் கொஞ்சம் கவனிக்கலை. மூஞ்சியைத் திருப்பிக் கொண்டார். அதுக்குள்ளே கூட்டம் வந்து மறைக்க நம்பெருமாளின் "கலகல"வென்ற சிரிப்பு மட்டும் கேட்க மனசுக்குள்ளே , அப்புறமா வந்து உன்னைஒரு கை பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
என்னதான் நல்ல தரிசனம் என்றாலும் நம்பெருமாளை வழக்கம் போல் பார்த்துக் குசலம் விசாரிக்க முடியாதது வருத்தம் தான். ஆண்டாளம்மாவைப் பார்க்கலாம்னா அங்கே திருப்பணி வேலை நடந்துட்டு இருந்தது. தாயாரைக் கூடக் கொஞ்சம் கஷ்டப்பட்டே பார்க்க வேண்டி இருந்தது. அங்கேயும் கூட்டம். ஐந்தரைக்கு மறுபடி நடை சார்த்திடுவாங்களா. அதுக்கான முன்னேற்பாடுகளில் இருந்தாங்க கோயில் ஊழியர்கள். அதனால் அவசரம் தான் அங்கேயும். என்றாலும் நன்றாகப் பார்த்தோம். அப்புறமா சக்கரத்தாழ்வார் கிட்டேப் போய்ப் பார்த்துப் பேசிட்டு, அங்கிருந்து நடந்தே ஒரு சில வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வர ஏழேகால் மணி ஆச்சு.
பெருமாள் தரிசனமா... நானே சொல்லணும்னு நினைச்சேன். இன்றைய செய்தித் தாளில் ஸ்ரீரங்கம் கோவிலில் தேவை இல்லாத ஒரு மண்சுவரை இடித்து 70 வருஷங்களா மறைஞ்சு இருந்த 100 கால் மண்டபம் வெளில தெரியுதாமே... பார்த்தீங்களோ...
ReplyDeleteதூசி கிளம்புவதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே போனோம். எங்கே பார்த்தாலும் சிமென்ட், மணல், தூசி, புழுதி! :)))) கண்ணுக்கு ஆபத்து வராமல் இருக்கௌமே! :)))))
ReplyDelete//தேவை இல்லாத ஒரு மண்சுவரை இடித்து 70 வருஷங்களா மறைஞ்சு இருந்த 100 கால் மண்டபம் வெளில தெரியுதாமே.. //
ReplyDeleteஸ்ரீராம்! நீங்கள் சொல்லித்தான் அவருக்கே தெரியும் போலிருக்கு.
அதான் தூசி, புழுதி என்று பூசி மெழுகி விட்டார். அவருக்கே தெரிஞ்சி பார்க்கப் போயிருந்தால், இதுதான் இன்னிக்கு படப்பிடிப்புகளோட இந்தப் பதிவுக்கு தலைப்புச் செய்தியாகியிருக்கும்.:))
அடடா கூப்பிட்டே விட்டாரா.கண்ணன் வந்தான் எழுதறியே என்னைப் பார்த்துட்டு எழுதக் கூடாதான்னு சொல்லக் கூப்பிட்டு இருப்பார்மா. அருமை சேவை எனக்குக் கிடைத்தது. நவம்பரில் திருப்பதியா ஸ்ரீரங்கமான்னு மனசில ஒரு குழப்பம்.யார் கூப்பீட்டாலும் நான் தயார், பார்க்கலாம்.
ReplyDelete"பெருமாள் கூப்பிட்டார்!" போய் வந்தேன் என்று சொல்லியுள்ளீர்கள். கேட்க சந்தோஷமாகவே உள்ளது.
ReplyDelete’VGK-35 பூபாலன்’ கதை விமர்சனத்திற்குத் தங்களுக்கு வெற்றி கிடைக்க அருளியிருப்பாரோ எனவும் எனக்கு நினைக்கத்தோன்றுகிறது.
நடுவர் ஜீவி சார் என்ன செய்யப்போகிறாரோ? பார்ப்போம்.
அந்தப்பெருமாள் தான் அவருக்குத் தங்களின் விமர்சனத்தைத் தேர்ந்தெடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
‘எண்ணங்கள்’ வலைத்தளமாச்சே !
அதனால் எனக்கு இந்த எண்ணங்களெல்லாம் தோன்றுகிறது போலிருக்கு ! :)
ஈஸ்வரோ ரக்ஷது !
இன்னும் ஓரிரு நாட்கள் சென்றால், தானே தெரிந்துவிடுமே. பொறுமையாய் இருப்போம். :)
அன்புடன் கோபு [VGK]
ஹாஹாஹா ஜீவி சார், என் கணவருக்குக் கண் ஆபரேஷன் ஆகி இருக்கு. 22 நாட்கள் தான் ஆகிறது. அதனால் தான் போகவே நான் நிறைய யோசித்தேன். திருப்பணி நடப்பதாலும் தூசி, புழுதி கண்களில் போகக் கூடாது என்பதாலும், எனக்கும் தூசி, புழுதி அலர்ஜி என்பதாலும் யோசனையாகவே இருந்தது. கோயிலுக்குள்ளாகக் கண்ணுக்குக் கறுப்புக் கண்ணாடி போட முடியாது. :( ஆகவே தரிசனம் மட்டுமே போதும்னு வந்தது தான் உண்மை. வெயிலின் பாதிப்புக் கண்களுக்குக் கூடாது என்பதால் நாலரை மணிக்கு மேலே வேறே தாமதமாய்க் கிளம்பி இருந்தோம். அங்கே எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வர ஒரு நாள் போதாது.
ReplyDeleteமற்றபடி இதை எல்லாம் தேடி அலையும் மனநிலையோ, உடல்நிலையோ இல்லை. :)))))
ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். :)))))))
வாங்க வல்லி, எதிர்பாரா அழைப்பு. முக்கியமாய் ஆண்டாளம்மாவைப் பார்க்கணும்னு நினைச்சோம். அங்கே மண்டபத்தை இடித்து வேலை நடப்பதால் உள்ளே போக முடியவில்லை. புழுதி பறக்குது! :))) ஆனால் உள்ளே இருந்த ஆண்டாளம்மாவை வெளியே இருந்தே பார்க்க முடிந்தது. ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகை வேறே வைச்சிருக்காங்க. பத்துத் தப்படி நடந்தால் ஒரு மண்டபத் திருப்பணி வந்து குறுக்கிடும். :)))) இதிலே கூட்டம் வேறே!
ReplyDeleteவாங்க வைகோ சார், உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது. பரிசு கிடைப்பதைக் குறித்து நான் ரொம்பவெல்லாம் அலட்டிக்கலை. போட்டினாலே காத தூரம் ஓடுவேன். என்னைப் போட்டியில் கலந்துக்கும்படி நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லலைனா கலந்து கொண்டிருக்கவே மாட்டேன். கிடைத்த வரைக்கும் போதும். More than enough! :)))))
ReplyDeleteபெருமாள் தரிசனம் கிடைத்தது.... ம்கிழ்ச்சி.
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
Geetha Sambasivam said...
ReplyDelete//வாங்க வைகோ சார், உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது.//
வேறு ஏதோ பெரியதாக செய்ய நினைக்கிறீர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. :)))))
//பரிசு கிடைப்பதைக் குறித்து நான் ரொம்பவெல்லாம் அலட்டிக்கலை.//
பெரும்பாலும் பலரும் உங்களைப் போலவே தான் அலட்டிக்கொள்வதே இல்லை. நீங்களாவது சிரத்தையாக எழுதி ஒவ்வொரு போட்டிக்கும் அனுப்பி வைக்கிறீர்கள். 100% Attendance க்கே ஒரு பரிசு கொடுக்கலாமா என நினைக்க வைக்கிறது ... என்னை.
//போட்டினாலே காத தூரம் ஓடுவேன்.//
உங்களாலும் என்னாலும் ஓட முடியுமா? நம்ம முடியவில்லை ... இல்லை .. இல்லை ... :)))))
//என்னைப் போட்டியில் கலந்துக்கும்படி நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லலைனா கலந்து கொண்டிருக்கவே மாட்டேன்.//
அதனால் மட்டுமே அடிக்கடி வாராவாரம் நினைவூட்டல் கடிதங்கள் உங்களுக்கு மட்டுமே அனுப்பி வருகிறேனாக்கும் ... ஹூக்க்கும் !
//கிடைத்த வரைக்கும் போதும். More than enough! :)))))//
என்னே ஒரு தன்னடக்கம். இந்த மனநிறைவு எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. சொல்லப் போனால் ஸ்திதப் பிரக்ஞன் என்னும் வார்த்தைக்குச் சரியான உதாரணம் தாங்கள் மட்டுமே.
ஏதோ ஆங்காங்கே கோயிலில் கட்டட வேலைகளால் தூசி, புழுதி, குப்பைகள் என எழுதியிருந்ததால் எனக்கு என் சமீபத்திய கதை நாயகன் ‘பூபாலன்’ நினைவுக்கு வந்தான். அதற்கு தாங்கள் எழுதியனுப்பிய விமர்சனமும் நினைவுக்கு வந்தது. அதனால் மட்டுமே மேலே அவ்வாறு எழுதியிருந்தேன்.
எனினும் தங்கள் விமர்சனம் [VGK-35 - பூபாலன்] வெற்றிபெறும் என என் உள்மனதுக்குத் தோன்றுகிறது. அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
VGK-36 ’எலி’ஸபத் டவர்ஸ்’ கதைக்கான விமர்சனம் இன்னும் வந்து சேரவில்லை என்பதை இப்போது இங்கேயே நினைவூட்டி விடுகிறேன். :)))))
அன்புடன் கோபு
நாலில் இருந்து ஐந்து வரை மூத்த குடிமகன்கள் செல்லும் நேரமாம். //
ReplyDeleteநல்ல செய்தி. இனி வரும் போது அந்த நேரம் பெருமாளை சேவிக்கலாம்.
நன்றி.
அவன் அழைக்கனும் அவன் நினக்கனும் எல்லாம் அவன் செயல் அல்லவா?
//அவருக்கே தெரிஞ்சி பார்க்கப் போயிருந்தால், இதுதான் இன்னிக்கு படப்பிடிப்புகளோட இந்தப் பதிவுக்கு தலைப்புச் செய்தியாகியிருக்கும்.:))//
ReplyDeleteஇதைக் கவனிக்காமல் விட்டுட்டேன். :)))) காமிராவெல்லாம் எடுத்துட்டு ஏற்பாடாப் போகமுடிகிறதில்லை. எடுத்துப் போனாலும் ரங்க விலாச மண்டபத்திலிருந்து படம் எடுக்கப் பணம் கட்டணும். செல்லில் காமிரா என்ன காரணமோ தெரியலை, வேலை செய்யலை. ஆகவே படம் எடுக்கற நோக்கமே இல்லை. ஶ்ரீரங்கம் குறித்த தொடர்களுக்குப் படம் எடுக்கணும் தான். அது தனியா ஒரு நாள் வைச்சுக்கணும். இன்னும் ஆயிரக்கால் மண்டபமே முழுசாப் பார்க்க முடியலை. :))))
வாங்க வெங்கட், "ஆதி"லக்ஷ்மி தரிசனமும் கிடைச்சதாக்கும். :))))
ReplyDeleteவாங்க காசிராஜலிங்கம், நன்றி.
ReplyDeleteகிடைத்த வரைக்கும் போதும். More //than enough! :)))))//
ReplyDeleteஇது உண்மையாகவே சொன்னது தான் வைகோ சார். எப்போவுமே அதிகம் எதிர்பார்ப்பெல்லாம் வைச்சுக்கறதில்லை. எனக்கு என்ன வேணும்னு "அவனு"க்குத் தெரியும். அதைச் சரியான நேரத்தில் கிடைக்க வைப்பான். :))))) மனிதர்கள் தவறினாலும் அவன் மறக்கவோ, தவறவோ மாட்டான். :))))
பெருமாளுடன் அளவளாவி விட்டல்லவா வந்திருக்கிறீர்கள். சுவாரஸ்யமான உரையாடல் அல்லவா இது.....
ReplyDeleteஎப்படியோ, உங்கள் தயவில் அரங்கனின் தரிசனம் கிடைத்தது. அந்தப் புண்ணியத்தில் மூன்றில் ஒரு பங்கு உங்களுக்கே உரியதாகட்டும்!-இராய செல்லப்பா
ReplyDeleteவாங்க கோமதி அரசு, ஶ்ரீரங்கம் வரச்சே சொல்லிட்டு வாங்க. :))
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, எப்போவும் எல்லோரோடயும் பேசுவேன். பிள்ளையாரோட சண்டை தான்! :))) முந்தாநாள் பெரிய பெருமாள் ஏகப்பட்ட புகார்களைச் சொன்னதில் நம்பெருமாளை (உற்சவர்) கவனிக்கவில்லை. அதுக்காக மறுபடி போகணும். மோவாய்க்கட்டையைச் சுருக்கிக் கொண்டு அவர் சிரிக்கிற அழகு இருக்கே! காணக் கண் கோடி வேணும். :))))
ReplyDeleteவாங்க செல்லப்பா சார், தரிசனம் கிடைக்கப்பெற்றதிலும், இங்கே வருகை புரிந்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி. :))))
ReplyDeleteவாங்க தமிழ் இளங்கோ ஐயா, இப்போது தான் உங்கள் பதிவிற்குச் சென்று பார்த்து வந்தேன். எனக்கு இவ்வளவு நபர்கள் அறிமுகம் இல்லை. வரவுக்கும், என்னையும் அறிமுகம் செய்ததுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅரங்கனின் தரிசனம் கிடைத்தது.
ReplyDelete