எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 08, 2014

முதிர்ந்த பார்வை! யாருக்கு? :) (விட மாட்டோமுல்ல)

ஜீவி சார் சொன்னதையே யோசிச்சுட்டு இருந்தேனா!  திடீர்னு இப்படி ஒரு கோணம் இருந்தால்னு தோணிச்சு.  அதையும் சொல்லிடலாமேனு வந்தேன்.  கதையோடு தொடர்பு கொண்டது தான் ஜீவி சார்.  அங்கே பின்னூட்டமாக் கொடுத்தாப் பெரிசா இருக்கும்.  எல்லோரும் படிக்க மாட்டாங்க. அதான், தனிப்பதிவு, மத்தபடி புதுசா எதுக்கும் போகலை, சரியா? :)))

*********************************************************************************

மணிகண்டன் தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்ததில் இருந்தே அவன் நடத்தை சரியாக இல்லை.  அங்கே அவர்களுக்கு எதிரே அழுதவன் வீட்டுக்கு வருகையிலேயே கல்யாணியைச் சீண்டுவதும், அவளைப் பார்த்துச் சிரிப்பதுமாக இருந்தான்.  கல்யாணியின் மனதில் ஆச்சரியம் மிகுந்தது.  என்ன இது?  இவன் தாய், தந்தையரைப் பிரிந்து இருப்பதில் ரொம்பவே வருத்தப்படப்போகிறான் என்றல்லவோ நினைத்தோம், இவன் நடவடிக்கை நேர்மாறாக இருக்கேனு நினைச்சாள்.

வீட்டுக்கு வந்ததும், அவளை விட்டு விட்டு, "நீ போய்ச் சாப்பிட ஏற்பாடு பண்ணு;  நான் இதோ வரேன்!" என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டான்.  அடுப்பில் அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி. மனதிற்குள் கணவனின் விசித்திரமான நடவடிக்கை ஏற்படுத்திய குழப்பம். அதற்குள்ளாகப் பக்கத்து வீட்டு உமா அங்கே வந்தாள்.  சாயந்திரம் வெளியே போகும்போது அவளிடம் பாத்திரத்தைக் கொடுத்துப் பால் வாங்கி வைக்கச் சொன்னதைக் கல்யாணி மறந்தே போய்விட்டாள்.  இப்போப் பாத்திரத்துடன் உமா வருவதைப் பார்த்ததும், "வா, உமா, பால் வாங்கச் சொன்னதையே மறந்துட்டேன்.  ஒரே குழப்பம்!" என்றாள் வருத்தத்துடன்.

உமா அவளைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தாள். "இது தானே வேண்டாம்கிறது!  கல்யாணி, உன் திட்டம் எனக்குத் தெரியாதா? எத்தனை நாளைக்குத் தான் நீயும் பொறுமையாக இருப்பாய்!  அப்படி, இப்படி ஏதேதோ சொல்லி, மெதுவாக் கிழங்களை வெளியேற்றி விட்டாய்!  இந்த புத்திசாலித் தனத்தைச் "சிக்"னு பிடிச்சுக்கோ!  ஆனா, ஒண்ணு, உன் கணவனுக்கு இந்த விஷயம் தெரியாமப் பார்த்துக்கோ!  தெரிஞ்சதா ஏதேனும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போறது!"  என்றாள்.

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயைத் தன் மேல் யாரோ ஊற்றிவிட்டது போலக் கல்யாணி துடித்தாள்.  அவள் மனமும் அந்தக் கொதிக்கும் எண்ணெயைப் போல் கொதித்தது.  "உமா, இத்தனை வருடங்களாக என்னை நீ பார்க்கிறாயே!  என்னைப் புரிந்து கொண்டது இதானா?  இப்படி எல்லாம் பேச உனக்கு எப்படி மனசு வந்தது!   உன் மேல் நான் ரொம்ப நம்பிக்கை வைச்சிருந்தேனே!  எனக்கு உற்ற தோழி என நினைத்து உன்னிடம் இதைக் குறித்துப் பேசி அடுத்து என்ன செய்யலாம்னு யோசனை கேட்க நினைத்தேனே!  நீயும் இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்!" என்று படபடவெனப் பொரிந்தாள்.

அவள் கோபத்தைக் கண்டு உமா ஆச்சரியம் அடைந்தாலும் முழுதும் அவளை நம்பவில்லை என்பது அவள் சிரிப்பில் இருந்து புரிந்தது.  ஆனாலும் பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.  வழியில் மணிகண்டன் திரும்பி வருவதையும், அவன் கைகளில் இருந்த பொருட்களையும் பார்த்தவள் அர்த்தமுள்ள பார்வை ஒன்றைக் கல்யாணியிடம் வீசி விட்டு மறைந்தாள்.  மணீகண்டன் வீட்டுக்குள் வந்தான். கல்யாணியிடம் தன் கையிலிருந்த பொருட்களைக் கொடுத்தான்.  அவற்றை என்னவென்று பார்த்த கல்யாணிக்கு விஷயம் புரிந்தது.  ஆனால் அவள் மனம் கூசியது.  என்னவாக இருந்தாலும் சாப்பாடு முடியட்டும், இல்லை எனில் மணிகண்டன் சாப்பிடமாட்டான் என்பதைத் தெரிந்து வைத்திருந்த கல்யாணி மௌனமாக இருந்தாள்.

சாப்பாடு முடிந்தது.  சமையலறையைச் சுத்தம் செய்த கல்யாணி ஹாலுக்கு வந்து அங்கேயே ஒரு துணியை விரித்துப் படுத்தாள். உள்ளே அறையில் அவளுக்காகக் காத்திருந்த மணிகண்டன் அவள் வராததைக் கண்டு வெளியே வந்தான்.  தன்னந்தனியாக அவள் கீழே வெறும் விரிப்பில் படுத்திருப்பதைக் கண்டு அவள் பக்கம் அமர்ந்தான்.

"என்ன இங்கேயே படுத்துவிட்டாய்?" என்று கேட்டான். கல்யாணி பதிலே சொல்லவில்லை.  "உமாவும் நீயும் பேசினதைக் கேட்டேன் கல்யாணி. உமா சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.  உண்மையில் உன் சாமர்த்தியத்தைக்கண்டு நான் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.  எப்படி நீ இதைச் சாதித்தாய்!  அவங்களாப் புரிஞ்சுப்பாங்கனு  நினைச்சேன்; எப்படிடா சொல்றதுனு நான் தவிச்ச தவிப்பு!  எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிட்டாயே கல்யாணி!  உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்.  இனிமேலும் அவங்க அங்கேயே இருக்கட்டும்.  நாம தான் வாரா வாரம் போய்ப் பார்க்கப் போறோமே! இனிமேலே உனக்கு நான்;  எனக்கு நீ!" என்றவண்ணம் தன் கைகளில் வைத்திருந்த பூவை அவள் தலையில் வைக்கப் போனான். அவள் மௌனமாக அதை அவன் கைகளிலிருந்து வாங்கித் தன் தலையில் வைத்துக் கொண்டு சற்று நகர்ந்து உட்கார்ந்தாள்.


தன் கையிலிருந்த அட்டைப்பெட்டியில் இருந்து மைசூர்ப்பாகை எடுத்தான்.  "இந்தா கல்யாணி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்ப் பா!  இதைச் சாப்பிடு!  இதைப் போல் தித்திப்பாக நம் வாழ்க்கையும் ஆரம்பிக்கட்டும்.  இப்படி ஒரு நாளுக்காக நான் ஏங்கிக் கொண்டிருந்தேன் தெரியுமா!" என்ற வண்ணம் ஒரு மைசூர்ப்பாகை எடுத்து அவள் வாயில் ஊட்டப் போனான்.  சட்டெனப் பின்னுக்கு நகர்ந்தாள் கல்யாணி.  அவனையே ஆச்சரியமும் திகைப்பும் கலந்த பார்வையோடு பார்த்தாள்.

"என்ன கல்யாணி, நான் கோவிச்சுப்பேன்னு நினைச்சுப் பயப்படறியா?  அதெல்லாம் இல்லை.  நீ செய்தது சரிதான்.  உமாவும் நீயும் பேசினதை வெளியே நின்னு கேட்டுட்டுத் தான் இருந்தேன்.  உமா கிட்டே நீ இல்லைனு சொல்லலாம்.  ஆனால் இது உன் முயற்சியால் தான் நடந்திருக்குனு எனக்குப் புரிஞ்சு போச்சு!  அதுக்காக உன்னைத் தப்பு சொல்வேனா!  ம்ஹூம்!  அதெல்லாம் இல்லை. இங்கே வா!  எத்தனை நேரம் தான் காத்திருப்பேன்!  " என்ற வண்ணம் அவள் கைகளைப் பிடித்து இழுத்தான்.  அப்போது......


தொலைபேசி அடித்தது.  கல்யாணி எழுந்தாள்.  எடுத்துப் பேசியவள் குரலில் கலவரம். என்னவோ, ஏதோனு பயந்தான் மணிகண்டன்.  இருந்து இருந்து இப்படி ஒரு சமயம் வாய்த்திருக்கு!  அதைக் கெடுக்கிறாப்போல் ஏதேனும் செய்தி வந்து தொலைக்கப் போறதே!  கல்யாணி பேசுவது அவன் காதுகளில் கேட்டது. "இல்லை அம்மா!  நீயுமா என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கறே! அதெல்லாம் இல்லை.  நான் ஒண்ணும் சொல்லவும் இல்லை;  செய்யவும் இல்லை!  என்னை நம்பும்மா!" என்று கெஞ்சினாள் கல்யாணி.  ஃபோனில் பேசுவது அவள் தாயார் எனப் புரிந்து கொண்டான் மணிகண்டன். அவள் தாயார் கோபமாக ஏதோ சொல்லி இருக்கணும்.  கண்களில் கண்ணீருடன் கல்யாணி தொலைபேசியை வைத்துவிட்டு அங்கேயே அப்படியே சரிந்து அமர்ந்தாள்.

அவள் கண்களிலிருந்து மாலை, மாலையாகக் கண்ணீர் வழிந்தது.  அவளிடம் சென்று சமாதானமாக ஏதோ சொல்ல ஆரம்பித்த மணிகண்டனைப் பார்த்து அவ்ள், "ஏங்க, ஏங்க, இப்படி எல்லாம்?  இப்படி எல்லாம் ஏன் நினைக்கறீங்க எல்லோருமே?  உண்மையிலேயே எனக்கு ஏதும் தெரியாது!  அவங்க ஜோசியம் பார்த்தேன், அதிலே பிரிஞ்சிருக்கணும்னு சொன்னதும் உங்க கிட்டேத் தான். என் கிட்டே இதைப் பத்திப் பேசக் கூட இல்லை.  நான் என்ன குறை வைச்சேன் அவங்களுக்கு?  நல்லாத்தானே பார்த்துக்கிட்டேன்! என்னிக்காவது ஒரு நாள், ஒரு நேரமாவது உங்களோட தனியா இருக்க முடியலைனு வருத்தமா ஒரு சொல் சொல்லி இருப்பேனா?  கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகப் போறது? பொறுமையுடன் காத்திருப்போம் னு தானே பேசாமல் இருந்தேன்."

"இவங்க திடீர்னு நினைச்சுட்டுத் தனியாப் போய் முதியோர் இல்லத்தில் இருக்கேனு சொன்னது எதுக்குனு எனக்கு இன்னிக்குக் கூடப் புரியலை.  நீங்க செலவுக்குக் கொடுத்த பணத்திலே சிறுகச் சிறுகச் சேமிச்சுக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வரை வைச்சிருக்கேன்.  வங்கியிலே இருக்கு. அதோடு கூட என் அப்பாவும் கொஞ்சம் பணம் போட்டு இன்னொரு அறை கட்டித் தரதாச் சொல்லி இருந்தாங்க. இதை ஒரு ஆச்சரியமான செய்தியா உங்க எல்லோருக்கும் தெரிவிக்கணும்னு இருந்தோம்.  அதுக்குள்ளே இப்படிப் பண்ணிட்டாங்களே!  நீங்களும் உங்க பெற்றோர் எதிரிலே இதைப் பத்திப் பேசி ஒரு முடிவுக்கு வராமல், அவங்க அங்கே போனதும் இதுக்குத் தான் காத்திருந்த மாதிரி வழியறீங்களே!  என்னையும் அவ்வளவு கேவலமா நினைச்சுட்டீங்களே!"

"இப்போ என்னோட அம்மா, அப்பா கூட என்னைத் தப்பாப் பேசும்படி ஆயிடுச்சு. ஒரு நாள் பார்த்து உங்க மாமியார், மாமனார் கிட்டே இதைப் பத்திப் பேசலாம்னு நினைச்சிருந்தோம்.  அதுக்குள்ளே உன்னோட அவசர புத்தியாலே இப்படி ஆயிருக்கே!  அக்கம்பக்கம் என்ன நினைக்கும்? உறவுக்காரங்க என்ன நினைப்பாங்கனு அம்மா கோவிக்கறாங்க.  என் கிட்டே ரொம்ப ஆசையா இருக்கும் என்னோட அப்பா, இப்போ என் கிட்டே பேசமாட்டேன்னு சொன்னதோடு, நான் சொல்வதையும் ஏத்துக்க மறுக்கறாங்க! அவங்க வந்தாத் தான் இனிமேலே என்னைப் பார்ப்பாங்களாம். "

"என்னிக்கு அவங்க முதியோர் இல்லம் போகணும்னு சொன்னாங்களோ அன்னிக்கே அதுக்கான காரணத்தை  வெளிப்படையா நீங்களே அவங்க கிட்டே கேட்டு அதைச் சரி செய்திருக்கணும். இது உங்களோட பொறுப்புங்க.  பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு, உங்களுக்குத் துணையா உங்க பெற்றோரும் இல்லாமல், எனக்குத் துணையா என்னோட பெற்றோரும் இல்லாமல் நாம் வாழ்ந்து சுகத்தைக் கண்டு, குழந்தை, குட்டிங்களைப் பெற்று என்ன கிடைக்கப்போகிறது?   நாம் வாழப் போற வாழ்க்கை சுகமா இருக்கணும்னா, நாம மகிழ்ச்சியா இருக்கணும்னா பெரியவங்க ஆசி வேண்டாமா? அது இல்லாமல் நமக்கு சந்தோஷம் கிடைக்குமா?  நம்ம குழந்தைங்களுக்குத் தாத்தா, பாட்டி வேண்டாமா?  இல்லைங்க, இது தப்பு! இப்படியாவது நாம் வாழ்ந்தாகணுமா? வேண்டாம் எனக்கு இந்த வாழ்க்கை!  என்னை விட்டுடுங்க! நாம் ஊரார் கண்ணுக்கு முன்னாடி கணவன், மனைவியா இருப்போம்.  இப்படி எல்லோருடைய வருத்தத்தில் வரும் சுகம் எனக்கு வேண்டவே வேண்டாம். அது என் குழந்தைங்களையும் பாதிக்கும். "


கல்யாணி பேச்சு மூச்சின்றிக் கீழே விழ மணிகண்டன் அவளை மயக்கத்திலிருந்து எழுப்பக் கூடத் திராணியின்றித் திகைத்து நின்றான்.


நாளை எப்பாடு பட்டாலும், பணம் நஷ்டம் ஆனாலும் சரி, அப்பா, அம்மாவிடம் உண்மையான காரணத்தைக் கேட்டு அவங்களை மனம் மாற வைத்து  இங்கே கொண்டு வரவேண்டும் என்பது அவன் மனதில் தீர்மானமாக மாறி உரம் பெற்றது.


மெல்ல மெல்ல நடுங்கும் கைகளால் கல்யாணியின் முகத்தில் நீர் தெளித்து அவளை எழுப்ப முயற்சித்தான்.

*********************************************************************************

ஜீவி சார், இது போதுமா பாருங்க! இதையும் இன்னும் நீட்டலாம், சுருக்கலாம், எழுதாமலும் இருந்திருக்கலாம்.  இல்லையா? :)))))

25 comments:

  1. அன்புள்ள கீதா,
    உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:

    http://wp.me/p244Wx-HR

    நன்றி,
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  2. மாறுபட்ட கோணம். அதற்காக மணிகண்டன் ஒரேயடியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசுவானா என்ன?

    ReplyDelete
  3. என்னங்க இப்படி ......

    அந்தப் பூவையும் வாட வெச்சு .......

    கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ’மைசூர்பாக்’கையும் எறும்பு மொய்க்கும்படியா .......

    பண்ணிட்டேளே !

    ReplyDelete
  4. இல்லை. எழுதினது அற்புதமா முடிஞ்சுப் போனதை நினைச்சுத்தான்
    ஆச்சரியப்பட்டு நிற்கிறேன்.

    அன்பின் சிறப்பு இதுதான். தன் மேல் அன்பை வர்ஷித்தவரிடம் அதைத் திருப்பித் தரத் தயங்காது அது. அதுவும் பெண்கள் இதில் ஒரு படி மேல். எந்த அன்பையும் ஏற்றுக்கொள்ள ஆரம்ப தயக்கம் அவர்களிடம் உண்டு; ஏற்றுக் கொண்டு விட்டார்களேயானால் பெற்ற அதை இழக்க உயிருள்ளவரை மனத்தளவில் அவர்கள் தயாராக மாட்டார்கள்!

    அந்த அன்பு கவைக்குதவாத வேறு காரணங்களினால் மாற்றம் கொண்டிருப்பதாக மாயையாகத் தோற்றம் கொண்டாலும், போராடியாயினும் இழந்திருக்கிறோம் என்று உணரும் அந்த அன்பைப் மீட்டுக்கொள்ளாவிட்டால் நிம்மதி பிறக்காது அவர்களுக்கு.

    'வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும், வையகத்தின்' பழிச்சொல்லை
    அதன் குணம் தெரிந்து பொருட்படுத்தாமல், அது தன்னை மனத்தளவில் பாதிக்காது, அப்படியும் அந்தப் பழி தன் மேல் பாயும் பொழுது அதனைச் சாடி எதிர்த்து நின்றிருக்க வேண்டும் கல்யாணி!
    இந்த இடத்தில் ஒரிஜனல் கதாசிரியரே கோட்டை விட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது. (ஏனோ பாரதிராஜாவின் 'புதுமைப்பெண்'இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறாள்)

    கல்யாணியை உயர்த்திப் பிடிப்பதில் அவள் கணவனை லேசாகத் தாழ்த்தியதில் வழக்கமான ஆண்களின் மனநிலையை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதை வேறு மாதிரிச் செய்திருக்கலாம்.

    இறுதி முடிவும் என்னைப் பொறுத்த மட்டில் உடன்பாடில்லை. நல்லவைகள் எப்பவுமே அது சம்பந்தப்பட்ட யாருக்கும் எந்த இழப்புமில்லாமல் நல்லவையாகவே முடியும். வாழ்க்கை இழுபாடுகளில் அவை அப்படி முடியாமல் சற்றே கோணிப் போனாலும் அவற்றை சரிப்படுத்தி தங்கள் கதைகளில் ஆயினும் நல்லனவற்றை நல்லபடி முடித்து வைத்தல் எழுதுவரின் பொறுப்பும் கடமையுமாகும். நல்லவைகள் கதைகளில் கூட வாழாமல் மாய்ந்து போனால், அது ஒரு சமூக பாதிப்பாகி விடும் என்பதினால் எழுத்தாளரின் பொறுப்பு இந்த விஷயத்தில் இன்னும் கூடுகிறது.

    நல்லன அல்லவைகள் சூழ்ந்திருக்க
    நல்லனவற்றிற்காக போராடுவது
    யதார்த்த பார்வையில்லை என்கிற குற்றச்சாட்டு போலியானது. யதார்த்த கோணல்களையும் அதை சீர் படுத்துகிற பொறுப்பும், மனத் திண்மையும் எழுத்தாளனுக்கு உண்டு.

    அதுசரி, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?.. இன்னொரு அறை கட்டுவதற்காக கல்யாணியிடம் தங்கள் ஓய்வூதியத்தின் பெரும் பகுதியையும்,சிறுகச் சிறுக சேமித்த சேமிப்பையும் கொடுத்து வைத்திருப்பது அவள் கணவனின் பெற்றோர்களே என்பது தெரியுமா? இல்லை, தெரிந்தும் கல்யாணியின்
    பெற்றோர்கள் அதற்காக ஒரு தொகை அளித்திருப்பதாக தவறிப் போய் எழுதிவிட்டீர்கள் போலிருக்கு.

    இதில் பரிதாபம் என்னவென்றால்
    இன்னொரு அறை கட்டுவதும் அவர்கள் எண்ணத்தில் இருந்து, அதற்கு அவர்கள் அளித்த பண சேமிப்பும் இருப்பதால்,'அந்தக் காரணத்திற்காக' அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள் என்று கல்யாணியையே நினைக்க வைத்து விட்டது.

    இன்னொரு அறை அந்த வீட்டில் எழுப்பப்படப் போகிறது என்பது அந்தக் குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று தான்.
    அந்த அறை கட்டுவதற்கான ப்ளான் சாங்ஷனில் லேசான டிலே!
    அந்த தாமத்தைப் பொறுக்க முடியாமலே முதியோர் இல்லம் ஏகிய அந்த வயசானவர்களின் நடவடிக்கையும். கேட்டால், 'குழந்தை தவழ்ந்து விளையாடுவத- ற்கு வசதியான இடமாக அது இருந்து விட்டு போகிறது' என்று இன்னொன்றைச் சொல்வார்கள்!

    நல்லதிற்காக செய்கிறோம் என்று மனசில் ஒன்றை வைத்துக் கொண்டு உடும்புப் பிடியாக செயலாற்றும் அந்தக் காலப் பெரியவர்களை சந்தித்தவர்களுக்கு இந்தக் கதையெல்லாம் ஜூஜூபி!

    தாங்கள் சிரமம் எடுத்துக் கொண்டு
    இன்னொரு முயற்சியை செய்ததற்கு மிக்க நன்றி, கீதாம்மா.

    ReplyDelete
  5. என்ன அக்கிரமம் இது? தாங்கீஸ்! எல்லாத்தையும் வாபஸ் வாங்கிக்கிறேன்!

    ReplyDelete
  6. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகிவிட்டதே..!

    ReplyDelete
  7. இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--

    கதைசொல்லிக்கு கதைசொல்லியாகவும், எழுத்தாளருக்கு எழுத்தாளராகவும், இரண்டு திறமைகளும் கலந்தும் ஜமாயுங்கள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஜீவி said...
    இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--//

    அதானே ! :)

    //இரண்டு திறமைகளும் கலந்தும் ஜமாயுங்கள்!//

    ததாஸ்து !!

    ReplyDelete
  9. வாங்க ரஞ்சனி, வீட்டில் எல்லோரும் சுகமா? ரொம்ப நாளைக்கப்புறம் பார்ப்பதில் சந்தோஷம் என்றால் விருது அளித்ததில் மிகவும் சந்தோஷம். முன்னாடியே இந்த விருது வேறே யாரோ கொடுத்தாங்க! :)))) மறுபடி உங்க கையால் கிடைச்சதுக்கூ நன்றி. வரேன். வந்து பெற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. ஶ்ரீராம், எத்தனையோ ஆண்கள் கட்டின மனைவியையே ஏமாற்றிவிட்டு இன்னொருத்தியைத் தேடிச் செல்கையில் இங்கே அப்பா, அம்மாவிடம் நாடகமாடுவது சிரமமான காரியமே இல்லை. அப்பா, அம்மா தன்னைப் பற்றித் தப்பாய் நினைக்கக் கூடாது. ஆனால் மனைவி வெளியே இருந்து வந்தவள் என்பதால் அவளைத் தப்பாய் நினைச்சால் நினைச்சுட்டுப் போகட்டும். இது தான் யதார்த்தமும் கூட என்னும் எண்ணமாக இருக்கலாம் இல்லையா?

    இது ஒரு கோணம்! :))))

    ReplyDelete
  11. வைகோ சார், வருத்தமே பட வேண்டாம். கதையின் கடைசி வரிகளைப் படியுங்க. மணிகண்டன் தான் மறுநாள் முதியோர் இல்லம் போய்த் தன் பெற்றோரை அழைத்து வந்துவிடும் முடிவில் இருக்கானே! ஆகவே பூக்கள் மீண்டும் மலரும், மைசூர்ப்பாகும் பத்திரமா டப்பாவில் போட்டு மூடி வைச்சு இருக்கு. :)))

    ReplyDelete
  12. //'வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும், வையகத்தின்' பழிச்சொல்லை
    அதன் குணம் தெரிந்து பொருட்படுத்தாமல், அது தன்னை மனத்தளவில் பாதிக்காது, அப்படியும் அந்தப் பழி தன் மேல் பாயும் பொழுது அதனைச் சாடி எதிர்த்து நின்றிருக்க வேண்டும் கல்யாணி!
    இந்த இடத்தில் ஒரிஜனல் கதாசிரியரே கோட்டை விட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது. (ஏனோ பாரதிராஜாவின் 'புதுமைப்பெண்'இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறாள்) //

    வாங்க ஜீவி சார், பாராட்டுக்கு முதலில் நன்றி. செய்யாத குற்றத்துக்குப் பல முறை பொறுப்பேற்று அதை எதிர்த்து நின்ற என்னோட நினைவுகள் தான் இங்கேயும் துணைக்கு வந்தன! :))) ஆகவே கல்யாணி இதை எதிர்த்துக் கணவனிடம் சண்டை போட்டிருக்க வேண்டும் என விமரிசனத்திலேயே முதலில் எழுதி இருந்தேன் தான். ஆனால் என்னவோ தோணி அதை எடுத்தேன். அது தப்போனு இப்போத் தோணுது! :))))

    ReplyDelete
  13. //இன்னொரு அறை அந்த வீட்டில் எழுப்பப்படப் போகிறது என்பது அந்தக் குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று தான்.//

    ம்ஹூம், எனக்கென்னமோ எல்லோருக்கும் தெரிஞ்சதாச் சொல்றது சரியாப் படலை சார். ஏன்னா, இது ரகசியமா இருந்தாத் தான் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கும். பெரியவங்க தங்களால் குழந்தைகள் பிரிந்து வாழ வேண்டி இருக்கேனு நினைச்சு வருந்துவது அப்போத் தான் இயல்பா இருக்கும்.

    என்றாவது ஒரு நாள் இன்னொரு அறை கட்டிடப் போறோம்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருந்தால் அவங்க அந்த நாளுக்காகத் தான் காத்திருப்பாங்க. இப்படித் தனியா எல்லாம் போயிருக்க மாட்டாங்க. இத்தனை நாள் பொறுத்தாச்சு; இன்னும் கொஞ்ச நாள் தானேனு தோணும். மணிகண்டனுக்கும் இது தெரிஞ்சிருந்தால் உண்மையாவே பெற்றோரைப் போக விட்டிருக்க மாட்டான். :))))

    ReplyDelete
  14. வா.தி. என்னத்தை வாபஸ் வாங்கப் போறீங்க? பிரியலையே? அபூர்வமா வந்துட்டு இப்படிப் பிரியாமச் சொன்னா எப்பூடி தம்பி?

    ReplyDelete
  15. வாங்க ராஜராஜேஸ்வரி, இதன் மூலம் மணிகண்டனின் சுயநலம் வெளிப்பட்டு அவன் மனிதனாக ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு இல்லையா? ஆகையால் இதுவும் நன்மைக்கே! :))))

    ReplyDelete
  16. //இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--//

    ஜீவி சார், வேறே யாரானும் சொல்லி இருந்தா என்னோட விளையாடறாங்க, இல்லாட்டி வம்பு பண்றாங்கனு சொல்லி இருப்பேன். நானும் பதிலுக்கு வம்புக்கு நின்னிருப்பேன். :))))))

    ஆனால் நீங்க சொல்லி இருப்பதால் இதைத் தக்க வைச்சுக்கணும்னு புரியுது. ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  17. வைகோ சார், அப்படி ஏதேனும் திறமை என் கிட்டே இருந்தால் அதுக்குக் காரணம் நீங்களும் உங்கள் கதையும், அதுக்கு நான் எழுதும் விமரிசனமும் தான். கொஞ்சமானும் எழுத்துத் திறமை வந்திருந்தால் அதுக்கு முழு முதல் காரணம் நீங்களே தான். ரொம்ப நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  18. ஏதோ 'சகுனம்' மூன்றாம் பரிசு என்ற பதிவைப் பற்றி நோடிஃபிகேஷன் வந்திருந்ததே.... வந்து பார்த்தால் ஒன்றையும் காணோம்!

    ReplyDelete
  19. அட?? அதுக்குள்ளேயுமா? ஒரு செகண்ட் தான்; உடனே எடுத்துட்டேன். ஷெட்யூல் பண்ணினா துரோகி ப்ளாகர் பப்ளிஷ் கொடுத்தது. :))) அதான் ஜீவி சாருக்கு வாக்குக் கொடுத்திருக்கேனே! ஆகவே 2,3 நாட்களுக்கு நோ பதிவு! :)))))

    ReplyDelete
  20. அது சரி இதைக் கழுகுப் பார்வைனு சொல்றதா? அல்லது விளக்கெண்ணெய் ஊத்திட்டுப் பார்த்தீங்கனு சொல்றதா? :))))

    ReplyDelete
  21. // ஸ்ரீராம். said...
    ஏதோ 'சகுனம்' மூன்றாம் பரிசு என்ற பதிவைப் பற்றி நோடிஃபிகேஷன் வந்திருந்ததே.... வந்து பார்த்தால் ஒன்றையும் காணோம்!//

    அதை வெளியிட இப்போ சகுனம் சரியில்லையாம் :)))))

    கதையில் வரும் தடிப்பிரம்மச்சாரி சிவராமன் மேல் பழி போட்டது போல .... இவங்களும் நம்ம ஜீவி சார் மேல .... போட்டுட்டாங்கோ !
    ......
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    VGK

    ReplyDelete
  22. Geetha Sambasivam said...
    To ஸ்ரீராம்

    //அட?? அதுக்குள்ளேயுமா? ஒரு செகண்ட் தான்; உடனே எடுத்துட்டேன். ஷெட்யூல் பண்ணினா துரோகி ப்ளாகர் பப்ளிஷ் கொடுத்தது. :))) அதான் ஜீவி சாருக்கு வாக்குக் கொடுத்திருக்கேனே! ஆகவே 2,3 நாட்களுக்கு நோ பதிவு! :)))))//

    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் !

    போறபோக்கப்பார்த்தா இவங்க இந்த விமர்சனப்போட்டியிலே ‘ஹாட்-ட்ரிக்’ அடிக்காம விடமாட்டாங்க போலத்தெரியுது ......

    'கிருஷ்ணா, முகுந்தா, முராரே....ஜெயகிருஷ்ணா, முகுந்தா, முராரே..."ன்னு யாராத்து டிவிலேந்தோ கேட்ட பாகவதரின் குரலுக்கு இழைஞ்சு நானும் இப்போ ஹம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.;)

    VGK

    ReplyDelete
  23. //ஆகவே கல்யாணி இதை எதிர்த்துக் கணவனிடம் சண்டை போட்டிருக்க வேண்டும் என //

    நான் சொன்னது கணவனிடம் இல்லை; சமூகத்தின் சிண்டு முடிதலை எதிர்த்து! 'என் மாமியார்-மாமனாரின் பாசமும்,அன்பும் எனக்குத் தெரியும்;
    தயவுசெய்து நீங்கள் இதில் தலையிட வேண்டாம்' என்கிற நிலை எடுத்திருந்தாள் என்றால் அந்தப் பெரியவர்கள் இவள் மேல் காட்டிய அன்பிற்கு அர்த்தம் கிடைத்திருக்கும்.
    அக்கம்பக்கத்தினரின் பேச்சுகளுக்கு இடம் கொடுத்ததினால் தான் இவளும் அனாவசிய குழப்பங்களில்
    சிக்கிக் கொள்கிறாள்.

    எவ்வளவு தலைக்கு மீறினாலும்,
    'தான்' என்கிற ஈகோவிற்கு இடம் கொடுக்காமலும் தன் குடும்ப உறுப்பினர்களை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமலும் இருந்தாலே போதும்; பல துன்பங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படும்.

    கதை புனையும் பொழுதும், கருத்துக்கள் சொல்லும் பொழுதும்
    'இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடும்' என்று மிகுந்த பொறுப்புடன்
    பல விஷயங்களை தேர்ந்து ஆராய்ந்து எழுத வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  24. //ஆகவே 2,3 நாட்களுக்கு நோ பதிவு! :))))) //

    இந்தப் பதிவு உங்களிடமிருந்து வந்ததும் இந்தக் கதைக்கு உங்களில் இந்த மாற்றமே போதும் என்கிற எண்ணமே வந்தது. இந்தக் கதைக்குத் தானே இது தவிர ஒரு பெண்ணின் நிலையில் இதுவே முழுமையான தீர்வும் அல்ல.

    முழுமைக்கான பல சாதக பாதகங்கள் அலசப்படவில்லை என்பது பெரும் குறை. அவற்றை என்னுடைய ஏதாவது தொடர்களில் வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் வந்து விட்டது.

    முடிந்தால் 'கமலி காத்திருக்கிறாள்' குறுந்தொடரைத் தொடரப் பார்க்கிறேன்.

    அடுத்த பதிவுக்கு நீங்கள் போவதற்கு தடையேதும் இல்லை, கீதாம்மா.

    ReplyDelete
  25. சிறந்த ஆய்வுப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete