பண்ணும்போதே படம் எடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன் . அடுத்தடுத்து யார், யாரோ வந்ததால் அடுப்பிலும், வாசலிலுமாக கவனம்! மறந்தே போச்சு. அப்புறமா நிவேதனம் பண்ணிட்டு எடுத்து வைக்கிறச்சே தான் நினைவு வந்தது. சுண்டல் கலெக்ஷனுக்குப் போற அவசரம் வேறே. ஆகவே நினைவாகக் கரண்டியை எடுத்துட்டு, (தளிர் சுரேஷ், கவனிக்க) படம் எடுத்தேன். வந்து போடலாம்னா கூப்பிட்டிருந்தவங்க வந்துட்டாங்க. எட்டு மணி வரைக்கும் ஆட்கள் வந்ததால் கணினியில் உட்கார முடியவில்லை. அப்புறமாப் போட்டிருக்கலாம். அலுப்பு, சோம்பல்! :))) முடிஞ்சா இன்னிக்குச் சுண்டலை உடனே போடப் பார்க்கிறேன். நிவேதனம் பண்ணறச்சே கூடப் படம் எடுக்கிற நினைப்பே இல்லை. சுண்டல் நல்லா இருந்ததுனு ரங்க்ஸ் சர்டிஃபிகேட் கொடுத்துட்டார். அதான் யாருக்கும் கிடைக்கலை. நேரில் வாங்க ஒரு தரம். பண்ணித் தரேன். :)))))
கடலைப்பருப்புச் சுண்டல். சொல்லாமலேயே தெரிஞ்சிருக்குமே! :)
நேரில்தானே... வந்துட்டாப் போச்சு! படம் பிரமாதம்!
ReplyDeleteமஞ்ச மஞ்சேர்னு என்ன அழகு.சுண்டல் டேஸ்ட்டுக்கு நான் காரண்டி. நான் ஸ்ரீரங்கம் வரும்போது வத்தக் குழம்பும்,சிதம்பரம் கொத்சும்,இந்த சுண்டலும் வேணும். மிச்ச லிஸ்ட் அப்புறமாத் தரேன் கீதா. கொலுவை நினைக்கையில் வெகு சந்தோஷம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், சுண்டல் குழைவாத் தான் இருக்கும். பார்க்கத் தனித்தனியாகத் தெரிந்தாலும் பருப்புக் குழைந்து விட்டது. :) சாப்பிட வசதி தான்.
ReplyDeleteவாங்க வல்லி, கடலைப்பருப்பே மஞ்சள் கலர் தானே! அதான் மஞ்ச மஞ்சேர்னு இருக்கு. வத்தக் குழம்புக்கு என்ன பஞ்சம்! முதல்லே நீங்க ஶ்ரீரங்கம் வாங்க. கல் சட்டியில் வத்தக்குழம்பு பண்ணித் தரேன். தொட்டுக்கக் கடலைப்பருப்புச் சுண்டலும். :)) இட்லிக்குச் சிதம்பரம் கொத்சு! :)))
ReplyDeleteகடலைப்பருப்பு சுண்டல் பார்க்கும்போதே கண்ணைக் கட்டுது! என்னை ஞாபகமாக நினைவு கூர்ந்து தெரிவித்தமைக்கு நன்றி!
ReplyDelete
ReplyDeleteவெறுமே படத்தில் காட்டினால் எப்படி.?வந்து எடுத்துக் கொள்ளும் நிலையிலா நாம் இருக்கிறோம். நிவேதனங்கள் மாற்றப்பட வேண்டும்.
அருமையான கடலைப்பருப்பு சுண்டல்.
ReplyDeleteவாங்க சுரேஷ், நீங்க சொன்னப்புறமாத் தான் கரண்டியை எடுக்கிறதில்லைனே புரிஞ்சது! :)))
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், நீங்க இங்கே வர நேர்ந்தால் ஏதேனும் ஒரு சுண்டல் பண்ணிடலாம். நிவேதனங்களை மாத்தித் தான் பண்ணுவோம். சில சமயம் வேறே ஏதானும் கூடப் பண்ணுவது உண்டு.
ReplyDeleteநன்றி காசிராஜலிங்கம்.
ReplyDeleteநன்றி கோமதி அரசு.
ReplyDelete