சென்ற பதிவுக்கு நிறையப் பார்வையாளர்கள், நிறைய ஜி+ பண்ணியவர்கள்னு இருந்தாலும் பின்னூட்டங்கள் குறைச்சல் தான். நாம தான் அதுக்கெல்லாம் கவலைப் பட்டுக்க மாட்டோமே! :) நாம நம்ம கடமையை ஆத்துவோம். காப்பி மட்டுமா ஆத்துவோம்? கடமையையும் ஆத்துவோமுல்ல!
நாங்க ஶ்ரீரங்கத்திலிருந்து கிளம்பும்போது திருவனந்தபுரத்தில் செவ்வாய், புதன் இருநாட்கள் தங்கிட்டு புதன் மாலை நாகர் கோயில் போயிட்டு வியாழன், வெள்ளி இருநாட்கள் நாகர் கோயில், கன்யாகுமரி போய்ச் சுத்திப் பார்க்கணும்னு திட்டம் போட்டிருந்தோம். திட்டம் போட்டபடி நிறைவேறவில்லை. கன்யாகுமரி ஏற்கெனவே பார்த்திருக்கோம். சுசீந்திரமும் பார்த்திருக்கோம். என்றாலும் திருவட்டாறு, திற்பரப்பு, பேச்சிப்பாறை, நாகர்கோயில் நாகரம்மன் கோயில் ஆகிய இடங்களுக்கெல்லாம் போயிட்டு அங்கே பிரபலமாயிருக்கும் தெரிசனங்கோப்பு ("த"ரிசனங்கோப்பு என்றால் உள்ளூர் மக்கள் நம்மைத் திருத்தறாங்க, "தெ"ரிசனங்கோப்புனு)க்கும் போய்ப் பார்க்கணும்னு ஒரு ஆசை இருந்தது. கிளம்பும் முன்னர் தான் தெரிசனங்கோப்பு வரை மழை கொட்டோ கொட்டுனு கொட்டி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடினதை எல்லாம் காட்டி இருக்காங்க.
தம்பி வேறே திங்கட்கிழமை அன்னிக்குத் திருவனந்தபுரத்தில் செம மழை. மழையில் தான் கோயிலுக்கு எல்லாம் போனோம்னு சொன்னாரா! கவலையாகவே இருந்தது. இங்கே ரயில்வே ஸ்டேஷனில் தங்கிக் கொண்டதை அவர்களுக்கு அந்த அர்த்தராத்திரியில் தெரிவிக்கவில்லை. பொதுவாக ரயில்வே தங்குமிடத்தில் தங்கினால் காலைப் பேப்பர் (தமிழ்நாட்டில் தமிழ்ப் பேப்பரா, ஆங்கிலமானு கேட்டுப்பாங்க), மற்றும் காலைக் காஃபி அவங்களே கொடுப்பாங்க. இங்கே ராத்திரியே கேட்டதில் அதெல்லாம் இல்லைனுட்டாங்க. ஆகவே காலை எழுந்ததும் கீழே பக்கத்திலேயே இருந்த காஃபிக் கடையில் காஃபி வாங்கப் போனால் துணியில் வடிகட்டித் தான் தராங்கனு தெரிஞ்சதும், நொந்து நூலாகிப் போய்ப்பின்னர் தேநீரே வாங்கி வந்தார். நல்லவேளையாகச் "சாயா"னு கேட்டிருந்தால் வெறும் தேநீர் பாலில்லாமல் தான் தருவாங்க போல! பால் விட்ட டீ என்று கேட்டு வாங்கி வந்தார்.
தேநீர் குடிச்சுட்டுக் குளிக்கப் போனோம். வெந்நீர் இருப்பதாகவும் சூரிய மின்சக்தியினால் தயாரிக்கப்படுவதால் எப்போதும் வரும் என்றும் சொன்னார்கள். வாளி வாளியாகக் குளிர் நீரைப் பிடித்துக் கொட்டியும் வெந்நீரா? என்று கேட்டது குழாய்! அது போகட்டும் போனு குளிர்ந்த நீரிலேயே குளிச்சுத் தயாரானோம். அதுக்குள்ளே தம்பி தொலைபேச நாங்கள் கிளம்பிவிட்ட விபரம் சொன்னோம். பின்னர் சாமான்களை எல்லாம் பெட்டியில் போட்டுக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டிய பரிசுப் பொருட்கள் மற்றும் கைப்பை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பெட்டியில் போட்டுப் பூட்டி ரயில்வே சாமான்கள் பாதுகாக்கும் அறையில் கொண்டு வைத்து ரசீது பெற்றுக் கொண்டு கிளம்பினோம். திருவனந்தபுரம் ரயில்வே நிலயத்தின் முக்கிய வாயில் வழியாக நாங்கள் செல்லவேண்டிய பாலஸ் கல்யாண மண்டபத்துக்கு 40 ரூபாய் எனத் தம்பி சொல்லி இருந்தார். பக்கவாட்டு வழியே சென்றால் 30 ரூபாயாம். இன்னும் சிலர் இங்கெல்லாம் பேரமே பேச மாட்டார்கள் என்றும் 30 ரூபாய் தான் வாங்குவாங்கனு பாராட்டுப் பத்திரம் அளித்திருந்தார்.
ஆனால் நாங்க வெளியே போகும்போதே ஆட்டோ, டாக்சி எனச் சூழ்ந்து கொண்டனர். ஆட்டோ போதும்னதும் எங்கேனு கேட்டாங்க. பாலஸ் கல்யாண மண்டபம், தெற்கு நடை என்று சொன்னதும் முதலில் புரிஞ்சுக்கலை. பின்னர் ஒரு ஆட்டோக்காரர் புரிந்து கொண்டு "தெக்கே நட" என்று வினவினார். உச்சரிப்பில் உள்ள வித்தியாசம் புரிய ஆமாம் எனத் தலை ஆட்டினோம். 70 ரூபாய் கேட்டார். மயக்கமே வந்தது. வேண்டாம்னு சொல்லிட்டு மேலே போக ஆரம்பிக்கப் பின்னர் அவரே 50 ரூபாய்க்கு வருவதாகச் சொல்ல ஏற்கெனவே 40 ரூ சொல்லி இருக்கிறதாலே 10 ரூ தானே கூட என நினைத்துச் சம்மதித்தோம். பத்தே நிமிடங்களில் பாலஸ் கல்யாண மண்டபம் போயாச்சு. இதுக்கு 50 ரூபாயா என மனம் நொந்தாலும் வேறே வழியில்லையே! எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்கள் தான்! அல்லது நம்ம மூஞ்சியில் ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கோ? ஆமாம், அப்படித் தான் இருக்கணும்.

அப்போ இதுவரை பயணியர் விடுதியைக் காலி பண்ணவில்லை?
ReplyDeleteநேந்திரம்பழ பஜ்ஜி சாப்பிட்டீர்களா?
:)))))
திருவனந்தபுரத்தில் வெளியே எங்கும் சாப்பிடலை ஶ்ரீராம். சைவம்&அசைவம் சேர்ந்த ஓட்டல்கள் தான் அதிகம் என்று முன்னாடியே சொல்லி இருந்தாங்க! அதோடு சஷ்டி அப்த பூர்த்தி முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு உடனே நாகர்கோயிலுக்குக் கிளம்பிட்டோம். திருவனந்தபுரம் ஓட்டல் அறை வாடகை நம்ம பட்ஜெட்டுக்குள் வரலை! :) இன்று விடிகாலை 3 மணிக்கு அறை எடுத்தால் பகல் பனிரண்டு மணியோடு ஒரு நாள் முடிகிறது. அதற்கப்புறமா அடுத்த நாள் ஆரம்பம். அதுக்கு வரி எல்லாம் சேர்த்து ரூ. 3,000/- ஆகிறது என்றார்கள். கட்டுப்படி ஆகாது! :))))
Delete//பின்னர் சாமான்களை எல்லாம் பெட்டியில் போட்டுக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டிய பரிசுப் பொருட்கள் மற்றும் கைப்பை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பெட்டியில் போட்டுப் பூட்டி ரயில்வே சாமான்கள் பாதுகாக்கும் அறையில் கொண்டு வைத்து ரசீது பெற்றுக் கொண்டு கிளம்பினோம். //
Deleteஶ்ரீராம் க்ளோக் ரூமில் சாமான்கள் வைத்தது பற்றி இங்கே எழுதி இருக்கேன் பார்க்கலை போல! :) நேந்திரம்பழ பஜ்ஜி எல்லாம் சாப்பிடலை.
சிறிது அசந்தாலும் ஏமாளிகள் தான் அம்மா...
ReplyDeleteஆமாம், இந்த ஆட்டோ ஓட்டிகளோடு எல்லோருக்கும் பலவித அனுபவங்கள்! :(
DeletePoga munnadi oru varthai sollalamla geethamma naanum nagercoil karan than ....
ReplyDeleteஉங்களைத் தொடர்பு கொள்ள நினைத்தேன். நம்ம ரங்க்ஸ் கிட்டே கூடச் சொல்லி இருந்தேன். ஆனால் நீங்க ஆன்லைனிலேயே இல்லை. எப்படித் தொடர்பு கொள்வது எனப் புரியவில்லை. மெயில் ஐடியும் கிடைக்கலை. அமைதிச்சாரல் (சாந்தி மாரியப்பனை) முகநூலில் தொடர்பு கொண்டு விசாரிச்சேன். அவங்க பதில் தாமதமாக் கிடைச்சது. அதுக்குள்ளே நாங்க போயிட்டு வந்துட்டோம். :))))
Deleteவீட்டை விட்டு வெளியில் வந்தால் சில சௌகரியங்கள் சமரசம் செய்யப்பட வேண்டும். உங்களுக்குத் தெரியாததல்ல இருந்தாலும்.....
ReplyDeleteஇங்கே எந்த சௌகரியங்களையும் எதிர்பார்க்காமலேயே இருந்திருக்கோம். நீங்க எதைச் சொல்றீங்கனு புரியலை. வெந்நீருக்குப் பார்த்ததா? அங்கே எல்லாம் மழை என்பதால் குளிர்ந்த நீரில் குளித்தால் எனக்கு மூட்டு வலி வரும். என் கணவருக்கும் ஒத்துக்காது. காலைக் காஃபி இல்லாமல் தேநீரோடு சமரசம் செய்து கொண்டு தானே இருந்தோம். ஆட்டோ ஓட்டுநர் அதிகப் பணம் கேட்பது தப்பில்லையா? அதுவும் ஊருக்குப் புதிது எனத் தெரிந்து! இதே தூரத்துக்கு நாங்க திரும்பி வரும்போது மீட்டர் போட்ட ஆட்டோவில் 20 ரூபாய் தான் ஆச்சு. அந்த ஆட்டோ ஓட்டுநரும் 20 ரூபாயை வாங்கிக் கொண்டு பேசாமல் போனார். 20 ரூபாய் தூரத்துக்கு 70 ரூபாயும், 50 ரூபாயும் அதிகமாய்த் தெரியலையா?
Deleteஓய்வு விடுதியின் கண்காணிப்பாளர் எங்கள் பெயருக்கு ரசீது எதுவும் தரவில்லை. ஆனால் 24 மணி நேரத்துக்கான முழுப்பணத்தையும் வாங்கிக் கொண்டார். நாங்க தங்கினது சுமார் ஆறரை மணி நேரமே! அதோடு ரயில்வேயே அங்கீகரிச்சிருக்கும் காஃபி, டீ, பேப்பர் போன்றவையும் இல்லை என்றார். இதை நாங்கள் ஒரு புகாராகக் கொடுத்திருக்கலாம் அல்லவா? சமரசம் செய்து கொண்டதால் தான் யாரிடமும் எதுவும் பேசாமல் வந்தோம். இங்கே சொல்வதற்குக் காரணம் பலருக்கும் ரயில்வே பயணியர் ஓய்வு விடுதியைப் பற்றியோ அதன் சௌகரியங்கள் குறித்தோ, வாடகை பற்றியோ எத்தனை நாட்கள் தங்கலாம் என்பது பற்றியோ தெரியாது. தெரியாதவர் தெரிந்து கொள்ள வேண்டியே குறிப்பிடுகிறேன்.
Deleteஆட்டோக்காரர்கள் எங்குமே இப்படித்தான் போல! அவர்களை சொல்லியும் குற்றம் இல்லை! விலைவாசியும் விண்ணை தொட்டுவிட்டது அல்லவா? அரசு நிர்ணயிக்கும் மீட்டர் கட்டணம் கட்டுபடி ஆகாது என்றே தோன்றுகிறது. 6 மணி நேரம் தங்கி எந்த வசதியும் இல்லாமல் மூன்று மடங்கு கட்டணம் 24 மணி நேரத்திற்கு கொடுத்து இருக்கிறீர்கள் இது ஆட்டோக்காரன் செய்ததை விட அநியாயம் அல்லவா? இந்த பணம் அந்த மேனேஜரின் பைக்குத்தானே போகும் ரயில்வேக்கு போகாது அல்லவா?
ReplyDeleteஇரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஐம்பது ரூபாய் அதிகம்னே தெரிகிறது சுரேஷ்! ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்திலும் அப்படித் தான் வாங்குகின்றனர். ரயில்வேயில் வசதி இல்லைனு சொல்ல மாட்டேன். என்ன! வெந்நீர் வரும்னு சொன்னாங்க! வரலை! மற்றபடி அறை வசதியாகவே இருந்தது. ஏசியும் நன்றாகவே வேலை செய்தது. ரயில்வேக்கு எப்படி அந்தப் பணம் போகும்! :(
Deleteநாகர்கோவிலில் எங்கே தங்கினீர்கள் கீத்தாம்மா?
ReplyDeleteஹை! இப்போவே சொல்லுவோமா? இன்னும் திருவனந்தபுரம் அனந்துவையே பார்க்கலையே! அப்புறமாத் தான் சொல்லுவேன்! :))
Deleteஆஹா நாகர்கோவில் போனீர்களா? அட! எனக்குத் தெரியாம போச்சே உங்க பதிவ பார்த்துருக்கணும் நீங்க போறீங்கனு சொல்லிருப்பீங்களே...சே...மர மண்டை நான்...
ReplyDeleteநாகர்கோவில் எங்க ஊராச்சே...நான் பிறந்து வளர்ந்து படிச்சது எல்லாமே...திருவண்பரிசாரம்/திருப்பதிசாரம் தான் எனது கிராமம். ஜஸ்ட் 3 மைல் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி போகும் வழியில்.... தெரிசனங்கோப்பு என்று நீங்கள் அடுத்த பதிவில் சொல்லி இருப்பதை வாசித்தேன்...எங்கள் ஊர் ஆற்றங்கரையிலிருந்து எதிரே பார்க்க தூரத்தில் ரோடே தெரியும்....ப்த்தேரி, பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு செல்லும் ரோடு....எங்கள் ஊர் வழியாகவும் செல்லலாம் என்றாலும் டைரக்ட் பஸ் கிடையாது எங்கள் ஊர் வழியாக....
எங்கள் ஊர் திருவாழ்மார்பனையும் நீங்கள் பார்த்து ஒரு சல்யூட் அடித்திருக்கலாமேனுதான்....இப்படித்தான் துளசி கோபால் அவங்களும் எங்க ஊரை மிஸ் பண்ணினாங்க....
அழகிய கிராமம்....ஆனா இப்பல்லாம் ஊருக்கு போற வழி முக்கா மைல் அப்படினு சொல்ற அந்த பாதை (மெயின் ரோட்டிலிருந்து/ஹைவே லருந்து ஊருக்குப் போற பாதைதான் முக்கா மைல்....ஒரு சைட் சின்ன ஆறு/பெரிய கால்வாய், மறு சைட் பச்சை பசேல் வயல்..ஆனா இப்பல்லாம் காங்க்ரீட்...முன்னாடி கால்வாய் ஒட்டி இருந்த மறு கரை வயல் வெளிதான் ஆனா இப்ப காங்கிரீட் ..அங்கு எனது நண்பர்குடும்பங்கள் தவிர உறவினர் யாரும் இல்லை. என் தம்பியின் வீடு, மாமாவின் வீடு மட்டும் இருக்கின்றது. நாங்கள் நடந்து சென்ற வாய்க்கால், வயல் எல்லாம் கட்டிடங்களாக னிறைந்து விட்டது. முன்பு உடப்பெடுக்கும் இரு மழைக்காலங்களிலும்....நல்ல கால நிலை...இப்போது ஊருக்குப் போக பிடிப்பதில்லை...பச்சை அழிந்து வருவதால்...
மறு முறை போகும் வாய்ப்பு கிடைத்தால் சொல்லுங்கள் அங்கு தங்களுக்கான ஏற்பாடுகள் செய்து தருவேன்.....திருவனந்தபுரமும் எனக்கு மிகவும் பரிச்சயமே. என் உறவினர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் போயிருந்தேன் நிறைய மாறிவிட்டது. அங்கும் வ நிறைய ஃப்ளாட்டுகள் ஆரம்பித்துவிட்டது...போத்தீஸ் கொடிகட்டிப் பறக்கிறது....நிறைய வெஸ்டர்நைஸ்ட் கடைகளும் சென்னையைப் போல் வந்து விட்டன....
கீதா
வாங்க துளசிதரன்/கீதா, நம்ம ரங்க்ஸும் (என் கணவர்) கேட்டார். நாகர்கோயில், க்ன்யாகுமரியில் உனக்குச் சிநேகிதர்களே இல்லையானு! இருக்காங்க ஆனால் எல்லோரும் சென்னை, மும்பைனு வாசம் செய்யறாங்கனு சொன்னேன். மற்றபடி நீங்க கேரளப் பாலக்காடு அல்லது திருச்சூர்ப் பக்கமோனு நினைச்சதால் நாகர் கோயில்னு தெரிஞ்சுக்காமல் இருந்துட்டேன். சொல்லி இருந்திருக்கலாம். நாங்கள் தங்கிய ஹோட்டலில் அறை, சேவை எல்லாம் நன்றாகவே இருந்தது. :)
Delete