தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த எங்கள் மின் தமிழ்க் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான சுபாஷிணி அவர்கள் நேற்று இங்கிலாந்தில் கணினி மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.அதற்காகக் குழும நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பட்டாபிஷேஹ மலர் தயாரிக்க எண்ணி அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் எங்கள் அடுத்தடுத்த பயணங்களினால் எனக்கு இந்த மலருக்குப் பங்களிப்புக் கொடுக்க மறந்தே போனது. இப்போது மலரைப் பார்த்ததும் தான் நினைவிலேயே வந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது. என் பங்களிப்பெல்லாம் இல்லாமலேயே மலர் சிறப்பாக வந்துள்ளது. அதை இங்கே உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கீதா சாம்பசிவம்.
***************************************************************************************************************************************
நண்பர்களே,
முனைவர் பட்டம் பெற்ற நமது சுபாவிற்கு வாழ்த்துகள்.
அவரது பட்டமளிப்பு நாளில் அவரைப் பாராட்டி ...
அவரது பட்டமளிப்பு நாளிலேயே வெளியிடப்படுவதில் அவரது நண்பர்களாகிய நாம் மகிழ்ச்சி அடைகிறோம்
மீண்டும் சுபாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
சுபாவின் பட்டமளிப்பு விழா படங்களுடன்...
அவரது இளமைக்காலப் படங்களும், கட்டுரை, கதை, வாழ்த்துக் கவிதைகள் நிறைந்த மலரை படித்து, நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்
வாழ்த்துகளும் பாராட்டுகளும் சுபா
மலரைத் தொகுத்துத் தயாரித்ததும் அட்டைப்படத் தேர்வு அனைத்தும் திருமதி தேமொழி!
மிகவும் மகிழ்ச்சி...
ReplyDeleteவாழ்த்துகள்...
வாங்க டிடி, நன்றி.
Deleteஎப்க்கிருந்தாலும் வாழ்த்துகிறேன் உங்களோடு சேர்ந்து. இவரைப் பற்றியும் உங்கள் மின் குழுமம் பற்றியும் எழுதலாமே. .
ReplyDeleteநிறைய எழுதி இருக்கேன் ஐயா. வலைச்சரத்தில் கூட நான் ஆசிரியர் பொறுப்பிலும், ரஞ்சனி நாராயணன் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தபோது அறிமுகம் செய்திருக்கோம்.
Deleteபாராட்டப்பட வேண்டிய சேவை. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteஉண்மை ஶ்ரீராம், அயலகத்தில் (மலேசியாவில்) பிறந்து வளர்ந்து இளம் வயதில் இருந்தே தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் எனக் கற்றுத் தேர்ந்து கூடவே இசையும் நாட்டியமும் பயின்று இன்று கணினித் துறையிலும் முனைவர் பட்டம் பெற்று, தமிழுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு சுபா செய்யும் சேவை அளப்பரிய ஒன்று.
Deleteவாழ்த்துகள்! உங்கள் குழு பற்றி அறிந்து கொள்கின்றோம்....மிக்க நன்றி சகோதரி...
ReplyDeleteமிக்க நன்றி துளசிதரன்/கீதா.
Deleteபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா!..இங்கும் சுபாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்!..உங்கள் பங்களிப்பு, நேரப் பற்றாக்குறையால் இடம் பெறாமல் போனது வருத்தமே!..ஆயினும், மின் தமிழ் குழுமத்திற்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் தாங்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது!...
ReplyDeleteநேரப் பற்றாக்குறை மட்டுமில்லை. மறதியும் காரணம். அதிலும் திருவனந்தபுரம்/நாகர்கோயில் சென்று திரும்பி வந்ததில் இருந்து உடல்நலக்கேடு வேறே! எல்லாமும் சேர்ந்து கொண்டது. அதனால் இதைக் குறித்து மறந்தே போனேன். :(
Deleteவாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteவாழ்த்துகள் சுபா. விவரங்கள் படித்து ஸந்தோஷம். அன்புடன்
ReplyDeleteநன்றி காமாட்சி அம்மா.
Deleteபாதி நாட்கள் ஊரில் இருப்பதில்லை. அதனால் குழு மடல்கள் நிறைய சேர்ந்துவிட்டன. படிக்கப்படாமலேயே இருக்கின்றன எல்லாம்.
ReplyDeleteசுபாவின் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. தமிழ் மக்கள், தமிழ் உலகம் இவருக்கு ரொம்ப ரொம்ப கடமைப் பட்டிருக்கிறது. இவரது பெருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. சுபாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். பட்டாபிஷேக மலரைத் தொகுத்து அளித்த திருமதி தேன்மொழிக்கும் பாராட்டுக்கள்!
ஆமாம், ரஞ்சனி. தமிழ்நாடும், தமிழர்கள் அனைவருமே சுபாவுக்கு ரொம்பக் கடமைப் பட்டிருக்கிறோம். அயராத பணி! சிறப்பாக வளர வேண்டும். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
Delete