எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 17, 2015

சாளக்கிராமங்களால் ஆன அனந்தபத்மநாபர்!

ஹிஹிஹி! ரங்குவையே திரும்பத் திரும்ப எழுதறேன்னு நேயர் ஒருத்தர் குறைப் பட்டிருக்கார். :) அனந்துவைப் பார்த்தது குறித்துச் சொல்லிட்டேன். இனிமேல் தலபுராணம் தான் சொல்லணும். நடுவில் திடீரெனக் கோயிலுக்குப் போக நேரவே கோயிலில் பார்த்ததையும், கேட்டதையும் பகிர்ந்து கொண்டேன். அனந்தபத்மநாபர் சந்நிதியிலிருந்து வெளியே வந்த நாங்கள் அந்த சந்நிதியின் பின்புறம் இருந்த கிருஷ்ணர் சந்நிதிக்குப் போனோம். அங்கே கிருஷ்ணனை அற்புதமாக தரிசனம் செய்தோம். அங்கேயும் வாழை இலைப் பிரசாதம் கிடைத்தது. சந்நிதியின் முன்னர் ஆஞ்சி காணப்படுகிறார்.  இந்தக் கோயில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரின் மங்களாசாசனப் பாடல்கள்  சில கீழே:

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரம் புகுதும் இன்றே –10-2-1-

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்தபுர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓராயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே –10-2-2-

ஊரும் புட்கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அம் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே –10-2-3-

ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் பழமையான இந்தக் கோயில் பத்தாம் நூற்றாண்டிற்கும் முன்னரே இருந்திருப்பதாகச் சான்றுகள் கூறுகின்றன. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட இந்தக் கோயிலின் மூலவர் அனந்தபத்மநாபர் பெரிய திருமேனி. கிடந்த கோலம். பதினெட்டு அடி நீளம். ஶ்ரீரங்க ரங்கநாதரை விடப் பெரியவர் என்று சொல்கின்றனர்.  திவ்யதேசங்களில் 76 ஆவது திவ்ய தேசம் எனப்படுகிறது. கிட்டத்தட்டப் பனிரண்டாயிரம் சாளக்கிராமங்களால் இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.   இலுப்ப மரத்தில் ஆரம்பத்தில்செய்யப் பட்டிருந்த இந்த விக்ரஹம் 1686 ஆம் ஆண்டில், தீப்பிடித்துத்திடீரென எரியவே விக்ரஹம் பழுதுபட்டது. அதன் பின்னர் கடுசர்க்கர யோகம் என்னும் கலவையால் 12,000 சாளக்கிராமக் கற்களை இணைத்து இந்த விக்ரஹம் உருவாக்கப்பட்டது. நாம் இப்போது தரிசிப்பது இந்த மூலவரையே ஆகும்.

தலபுராணம் வருமாறு:

வில்வமங்கலத்து சாமியார் என்பவர் தினம் தினம் நாராயணனுக்குச்  செய்யும் பூஜை சமயத்தில் சாக்ஷாத் நாராயணனே ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து சாமியாருக்குத் தொல்லை கொடுத்து வந்தார்.  சாமியாரின் மீது ஏறித் தலையில் உட்கார்ந்து கொள்வதும், பூக்களைக் கிள்ளிப் போடுவதும், பூஜைக்கு வைத்திருக்கும் நீரில் சிறுநீர் கழிப்பதுமாக இருந்த வந்தான் அந்தச் சிறுவன்.  தொந்திரவு அளவு கடந்து போகவே ஒரு நாள் சாமியார் கோபத்துடன் சிறுவனை அப்பால் பிடித்துத் தள்ளிவிடுகிறார்.  அப்போது குழந்தை வடிவில் வந்த கண்ணனோ, அவர் பக்தியிலும் துறவறத்திலும் முதல் ஸ்தானம் வகிக்க வேண்டிய பொறுமை அவரிடம் இல்லாததைச் சுட்டிக்காட்டித் தாம் அவரைச் சோதிக்கவே வந்ததாய்க் கூறி, இனித் தன்னை இங்கே காணமுடியாது என்றும் அனந்தன் காட்டிற்கு வருமாறும் கூறி மறைகிறான்.

அனந்தன் காடா? அது எங்கிருக்கிறது? சாமியாருக்குக்கவலை பீறிட்டது. அனந்தன் காட்டைத் தேடிக் கொண்டு கிளம்பினார்.
[Image1]

எங்கு சுற்றினாலும் அனந்தன் காட்டை மட்டும் கண்டே பிடிக்கமுடியவில்லை. சோர்ந்து போன சாமியார் ஒரு வீட்டின் திண்ணையில் அமர அங்கே கணவன், மனைவிக்குள் சண்டை மூண்டிருந்தது.  கணவன், மனைவியை அனந்தன்காட்டிற்குக் கொண்டு சென்று விட்டுவிடுவதாக மிரட்டிக் கொண்டிருக்க ,அதைக்கேட்டு மகிழ்ந்த சாமியார் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அந்தக் கணவனைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பினார். வழியெல்லாம் கல்லும் முள்ளுமாகக் குத்தக் காட்டையும் அதில் அனந்தன் குடி கொண்டிருக்கும் இடத்தையும் தேடினார் சாமியார்.

அப்போது சற்று தூரத்தில் இருந்த இலுப்பை மரத்தடியில் பகவான் தான் பார்த்த குழந்தை வடிவில் இல்லாமல் மிகப் பெரிய வடிவில் அனந்தனாகிய பாம்பின் மேல் படுத்துக் கொண்டு ஶ்ரீதேவி, பூதேவி சமேதராய்க் காட்சி அளித்தார்.  மகிழ்ந்த சாமியார் பகவானை வணங்க முயற்சித்தார். ஆனால் மிகப் பெரிய அளவில் பெருமாள் காட்சி அளித்ததால் அவரால் முழு சொரூபத்தையும் நன்கு காணமுடியவில்லை. பிரதக்ஷிணமும் வர முடியவில்லை. பகவானை வணங்க அவரும் சாமியாரின் கையில் இருந்த தண்டத்தின்  அளவில் மூன்று மடங்காகத் தன்னைச் சுருக்கிக் கொண்டார். ஆனாலும் அவரை இப்போதும் மூன்று பகுதிகளாகவே பார்க்க முடிந்தது. இது பிரம்ம, விஷ்ணு, சிவன் ஐக்கிய சொரூபம் என்றும் இப்படியே பக்தர்கள் வரும் காலத்திலும் தம்மைத் தரிசிக்கலாம் என்றும் பகவான் அனுக்ரஹம் செய்ததாக ஐதீகம்.

முதலில் நாம் பார்ப்பது திருமுகமும் வலக்கையும். வலக்கை விரல்களால் சிவலிங்கத்தின் தலையைத் தொட்டுக்கொண்டிருக்கும் கோலத்தில் பகவான் காட்சி அளிப்பார்.  இங்கே பகவானே சிவபூஜை செய்வதாக சைவர்களின் ஐதீகம். வைணவர்களோ சிவன் பகவானைக் கீழே அமர்ந்து பூஜிப்பதாகச் சொல்கின்றனர். ஆனால்  இந்தக் கோயிலில் நடைமுறைப்படி நாம் முதலில் தரிசிப்பது சிவனை என்கின்றனர். நடு வாயில் வழியாகக் காண்பது நாபியில் இருந்து கிளம்பும்  கமலத்தில் உறையும் பிரமனை. ஆகையால் இந்த வாயில் வழியாக பிரமனைத் தரிசிக்கிறோம். கடைசியாகத் திருவடி சேவை. மஹாவிஷ்ணுவின் தரிசனங்களில் முக்கியமானது திருவடி சேவையே. திருவடி சேவையின் மூலம் முக்தி கிடைப்பதாக ஐதீகம். ஆகவே கடைசி வாயில் வழியாக விஷ்ணுவையே தரிசித்து முக்தியும் பெற வேண்டுகிறோம். இதுவே அனந்த பத்மநாபரைத் தரிசிக்கும் முறை.


வில்வமங்கல சாமியாரும் அப்படியே பகவானை வணங்கினார். அவரை மீண்டும் சீண்ட நினைத்த பகவான் தனக்குப் பசிப்பதாகக் கூறினார். இதுவும் அவன் திருவிளையாடலே என எண்ணிய சாமியார் காட்டில் கிடைத்த மாமரத்தின் மாங்காயைக் கொஞ்சம் உப்புச் சேர்த்துத் தேங்காய்ச் சிரட்டையில் வைத்து பகவானுக்கு அர்ப்பணம் செய்தார். பின்னர் திருவிதாங்கூர் மகாராஜாவுக்குத் தகவலைத் தெரிவிக்க மன்னன் எட்டு மடங்களில் இருந்து தக்க பிராமணர்களை அழைத்துக் கொண்டு அங்கே வர அங்கே சுவாமி காணப்படவில்லை. ஆனாலும் மன்னன் அங்கே அவருக்கு ஒரு கோயில் கட்டி இலுப்ப மரத்தில் விக்ரஹம் செய்து அங்கே பிரதிஷ்டை பண்ணி அனந்தபத்மநாபர் என்னும் திருநாமமும் சூட்டி மகிழ்கிறான்.

:தொடரும்)


படம், நன்றி தினமலர்ப் பக்கம்

27 comments:

  1. தகவல்கள் அருமை! சகோதரி! ஏற்கனவே அறிந்திருந்தாலும், அந்த ஊர் மக்களை விட அங்கு வந்து தரிசிப்பவர்களுக்குத்தான் நிறைய தகவல்களும் கதைகளும் தெரிந்திருக்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் இல்லை ஐயா! எல்லாம் தேடிப் பிடித்துத் தெரிந்து கொள்வது தான். :)

      Delete
  2. தலபுராணம் அறிந்தேன் அம்மா... நன்றி... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. கோயிலின் தலபுராணம் அருமை.
    நான் பிறந்த ஊர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, நீங்கள் பிறந்த ஊரா? நல்லது. நீண்டநாட்கள் கழித்து வருகை தந்தமைக்கும் நன்றி.

      Delete
  4. அற்பதமான வரலாறு. எட்டு வயதில் பாரத்தது. அந்த பிரம்மாண்டம் இன்னும் கண்ணிட் நிற்கிறது. பாசுரமும் புராணமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, அட? எட்டு வயசிலேயே பார்த்திருக்கீங்களா? நான் ரொம்ப லேட்! ஆனாலும் இப்போ வாய்ப்புக் கிடைச்சதால் போனேன். இல்லைனா அவ்வளவு சுறுசுறுனு கிளம்பி இருக்க மாட்டேன்! :)

      Delete
  5. அனந்துவின் சரிதம் அருமை! சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அனந்து ஜாலியாப் படுத்துட்டு இருக்கார். நன்றி சுரேஷ்!

      Delete
  6. சபாஷ் ! தலபுராணம் இப்படித்தான் சொல்லப் படணும்... அனந்தன் அருளட்டும். பல நாள் கழித்து வருவதால், மீதிப் பதிவுகளையும் படிக்கிறேன் . வாழ்க வாழ்க !!

    ReplyDelete
    Replies
    1. மோகன் ஜி, உங்கள் வாயால் பாராட்டு என்பது மகிழ்ச்சியையும், கூச்சத்தையும் ஒருங்கே தருகிறது, உங்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன் கூடிய எழுத்துக்கு முன்னால் நானெல்லாம் ஒண்ணுமே இல்லை!

      Delete
  7. தலபுராணம் - ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டுமொரு முறை படித்து மகிழ்ந்தேன்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. சரிதம் ஓகே. ஆனால் ஸ்ரீரங்கனின் சொத்தும் அப சொத்தில் அடக்கமா? அப்படி ஏதும் தகவல் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம் அப்படி எதுவும் கேள்விப்படலை!

      Delete
  9. சிறந்த பக்தித் தகவல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம்

      Delete
  10. கீதாம்மா ஒன்னு பார்த்தீங்களோ. கேரளா திவ்ய தேசத்தில் உள்ள விஷ்ணு கோவில்களில் தாயார் சன்னதி என்று தனியாக ஒன்று இருக்காது.

    பெண் தெய்வங்கள் என்றால் பகவதி தான் பிரதானம். பகவதி கோவில்களில் சிவன் அல்லது விஷ்ணு காண முடியாது.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தம்பி, தாயார் சந்நிதி உண்டா என்று கூடக் கேட்டேன். கருவறையிலேயே ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகத் தானே இருக்கார். உற்சவரும் அப்படியே காட்சி அளிக்கிறார்.

      Delete
  11. மஹாவிஷ்ணுவின் தரிசனங்களில் முக்கியமானது திருவடி சேவையே திருவடி சேவையின் மூலம் முக்தி கிடைப்பதாக ஐதீகம்// ஆம்! சரிதான்.

    அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
    கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
    செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல்நோக்குதியேல்
    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்// உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் கூட பள்ளிக் கட்டில் கீழ் காலடியில் இருப்பதால் தான் அவர் கண் மலரும் போது ஆண்டாளும் அவரது தோழிகளின் மீது அந்தக் கண் செங்கதிர் போல படும் போது பாவங்கள் எல்லாம் அகலுவதாய் பாடியிருக்கிறார் அரங்கனின் மீது மையல் கொண்டு. அரசர் அபிமான அந்த வரிகளில் ஆண்டாள் சொல்லுவது....இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது அதாவது....பாரதப் போரின் போது கிருஷ்ணரிடம் யார் முதலில் வந்து உதவு கேட்கின்றார்களோ அவர்களுக்குத்தான் தான் உதவுவேன் என்று சொல்லியிருக்க, கிருஷ்ணனின் உதவி நாடி பாண்டவரும், கௌரவரும் சென்ற போது முதலில் சென்றவன் துரியோதனன் அவன் கிருஷ்ணனின் தலைக்கருகில், அவர் கண் மலர வேண்டி நின்கின்றான். அதற்கப்புறம் வரும் அருச்சுனன் அவரது காலடியில் வணங்கி உட்கார்ந்துகொண்டிருக்கின்றான். கிருஷ்ணர் கண் மலரும் நேரம் முதலில் பார்ப்பது அருச்சுனனை. அவர் அருச்சுனனிடம் வினவ, அருச்சுனன் தான் வந்த காரணத்தைக் கூற, துரியோதனன் தான் தான் முதலில் வந்ததாகச் சொல்ல, கிருஷ்ணரோ தான் முதலில் அருச்சுனனைத்தான் பார்த்தேன் எனவே அவனுக்குத்தான் முதலில் சாய்ஸ் என்று சொல்ல....இந்தத் தத்துவம் பாதமலர் தொழுவது அங்கும் சொல்லப்படுகின்றது.

    என்றாலும் மஹாவிஷ்ணுவைத் தொழுவது என்று சொல்லப்பட்டாலும் எல்லா கடவுளருக்கும் இது பொருந்தும் என்றே தோன்றுகின்றது இல்லையா சகோதரி.??!! எல்லா இறைபாடல்களிலும், நின் தாள் போற்றி. நாதன் தாள் போற்றி, பாதக்கமலம் போற்றி, பொற்றாமரை அடி போற்றி என்றுதான் பாடப்படுகின்றது. நாம் பெரியவர்களின் பாதம் தொட்டு வணங்குவதும் இதன் அடிப்படையில் தான் இல்லையா...

    ReplyDelete
    Replies
    1. திருவடி குறித்த அருமையான விளக்கத்துக்கு நன்றி துளசிதரன்/கீதா.

      Delete
  12. உங்கள் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யம். குறிப்பாக துளசிதரன், கீதா அவர்களின் பின்னோட்டம். தாள் வணங்குவதுதான் சரணாகதி இல்லையா?
    இரண்டு வருடங்களுக்கு முன் கேரளா திவ்ய தேச யாத்திரையின் போது சேவித்துவிட்டு வந்தோம். பெருமாள் சந்நிதியில் கூட்டமே இல்லை ஆனாலும் 'நட' நட' என்று விரட்டுகிறார்கள். நான் சும்மா இல்லாமல் 'ரொம்ப தூரத்திலேருந்து வருன்னு. நட இல்லா' என்று சொல்லி சற்று நேரம் நின்று சேவித்துவிட்டு வந்தேன்! ஞாபகமாக அந்த போலீஸ்கார அம்மணிக்கு 'நன்னி' சொல்லிவிட்டு சிநேகிதமாக சிரித்துவிட்டு வந்தேன். இனி எப்போது போவோமா, இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அப்படி விரட்டல்லாம் இல்லை என்பதோடு நாங்க போனது காலை ஏழுமணிக்குள்ளாக என்பதால் கூட்டமும் இல்லை. காவல்துறை ஆட்களும் இல்லை. நேரம் ஆனால் கூட்டம் வருமோனு நினைச்சேன். ஆனாலும் என் தம்பியெல்லாம் காலை பத்தரைக்குத் தான் போய்ப் பார்த்ததாகச் சொன்னார். அவ்வளவெல்லாம் கூட்டம் இல்லை என்றே சொன்னார்.

      Delete
  13. அருமை. அதுவும் அந்த தேங்காச் சிரட்டையில் மாங்கா எனக்குப் புதுசு:-))))

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி, உங்களுக்குக் கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி! :))) ஆனால் இது பல ஆண்டுகளாய்க் கேள்விப் பட்டது.

      Delete
  14. ஆஹா இப்பத்தான் நம்ம டிபார்மென்ட் வருது.

    ஆழ்வாரின் மங்களாசாசனப் பாடல்,

    கெடுமிட ராய வெல்லாம்

    என்னும் விருத்தத்தின் கடைசி வரியைச் சரிபாருங்கள்.

    தடமுடை வயல் அனந்த புரநகரிப் புகுது மின்றே. என்று இருக்க வேண்டுமோ? :)

    தொடர்கிறேன்.

    ReplyDelete