எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 21, 2015

அனந்துவுக்கு இருக்கும் மாபெரும் செல்வம்!

அனந்துவுக்குப் பொதுவாகச் சிறப்பு நிவேதனமாக உப்புச் சேர்ந்த மாங்காய் என்று சொன்னாலும் மற்ற நிவேதனங்களையும் ஏற்கிறார். அரிசியாலும் நிவேதனங்கள் செய்யப்படுகின்றன. ஒரு வகைப் பாயாசத்தை நவரத்தினங்களால் இழைத்த தங்கப் பாத்திரத்தில் நிவேதனம் செய்வார்கள் என்பதால் நவரத்தினப் பாயாசம் என்றே அது அழைக்கப்படுகிறது. மேனி துலா பாயசம் எனப்படும் சர்க்கரைப் பொங்கல், ஒற்றைத் துலா பாயசம், உண்ணி அப்பம், மோதகம் போன்றவையும் படைக்கப்படுகின்றன. கேரளக் கோயில்கள் அனைத்திலுமே பாயசம் விசேஷமான நிவேதனமாக இருந்து வருகிறது. 

திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. சில திருவிழாக்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப் படுகிறது. அவற்றில் நவராத்திரி விழா, ஐப்பசித் திருவிழா, பங்குனித் திருவிழா ஆகியவை மிக முக்கியமானது ஆகும். விழா முடிந்து உற்சவர்களை தீர்த்தவாரி செய்து திரும்பக் கோயிலில் கொண்டு சேர்ப்பதை இங்கே ஆறாட்டு விழா என்கின்றனர். இதைத் தவிரவும் லக்ஷ தீபமும் உண்டு. இதற்கெனத் தனியான தீபஸ்தம்பமும் உள்ளது. மொத்தம் லக்ஷம் தீபங்கள் ஏற்றப்படுவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்கின்றனர். ஆனால் இது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் என்றும் கடைசியாகப் போன வருஷம் அதாவது 2014 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடந்ததாகவும் தெரிய வருகிறது.

அடுத்து இந்தக் கோயிலின் முக்கிய விஷயம் இங்குள்ள பாதாள அறைகள். ஆறு பாதாள அறைகள் இங்கு உள்ளன. சுந்தரராஜன் என்பவர் நீதிமன்றத்தில் இந்தப் பாதாள அறைகளைத் திறந்து பார்க்க வேண்டும் என வழக்குத் தொடுக்க அதன் மேல் இந்தக் கோயிலின் பாதாள அறைகள் இரு நீதிபதிகள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினால் திறக்கப்பட்டன. அவற்றில் வில மதிக்க முடியாத செல்வங்கள் காணப்பட்டன.  தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை, வைர, வைடூரியங்கள்,  ஒரு கிலோ எடை கொண்ட தங்க நகைகள், ஆபரணங்கள், முத்துக்கள் என ஒரு லட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள புதையலே கிடைத்திருக்கிறது.

அன்னியப் படையெடுப்பின் போது பாண்டிய நாட்டில்  சுல்தான்களின் ஆட்சி மதுரையில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்த  பாண்டியர்களின் கடைசி வாரிசு விலை மதிக்க முடியாப் பாண்டிய நாட்டுச் செல்வத்தை எல்லாம் அன்னியர் கைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிச் சேர நாட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும்,  அது திருவனந்தபுரம் கோயிலிலேயே பதுக்கப்பட்டதாகவும் அவையே திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியாக இருக்கலாமென்றும் சிலர் சொல்கின்றனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிட்டவில்லை. இந்தப் புதையலை எல்லாம் நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது சிலர் கருத்து. இன்னும் சிலர் மன்னருக்கே சொந்தம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் பத்மநாபரின் இந்த அளப்பரிய செல்வத்தை இத்தனை வருடங்களாக நேர்மையும் பாதுகாத்துக் கொண்டுத் தங்களை பத்மநாப தாசர் என அழைத்துக் கொண்டு வரும் மன்னர் தரப்பிலே இவை பத்மநாபருக்கே உரியதாகும். ஆகவே கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சொத்துக்கள் முறையாக பண்டாரக் கல்லறையிலேயே கிடைத்ததால் கோயிலுக்கும் பத்மநாபருக்கும் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மன்னர் தரப்பிலும், கேரள அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்தைப்பாதுகாக்கவெனச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நாங்கள் தரிசனம் முடிந்து மீண்டும் தெக்கே நட வாயில் வழியாகக் கல்யாண மண்டபம் போய் அடைந்தோம். காலை உணவு தயாராக இருந்தது. அது முடிந்து, சஷ்டி அப்த பூர்த்தியும் சிறப்பாக நடைபெற்றதும் நாங்கள் அங்கிருந்து சிறிது தூரத்தில் இருந்த பழவங்காடிப் பிள்ளையார் கோயிலுக்குக் கிளம்பினோம். ஏற்கெனவே என் தம்பி இந்தக் கோயில் பற்றிச் சொல்லி இருந்தார். மிலிட்டரி பிள்ளையார் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இங்கே பழைய கடைத்தெரு இருந்திருக்கும் என எண்ணுகிறேன். இங்கே ராணுவத்தால் ஒரு பிள்ளையார் கோயில் கட்டப்பட்டு அவர்களாலேயே நிர்வாகமும் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அந்தப் பிள்ளையாரைப் பார்க்கப் போனோம். 

(தொடரும்)


18 comments:

  1. அறிந்த விவரங்கள்தான் ஆனாலும் ஒரு மர்மக்கதை படிக்கும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் தெரிஞ்சது தானேனு முதலில் எழுத யோசனை தான். அப்புறமாப் பரவாயில்லைனு எழுதினேன். :)

      Delete
  2. எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் என நம்புவோம் டிடி.

      Delete
  3. http://sharatsunderrajeev.blogspot.in/

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. சுட்டியைப் பார்த்தேன். தொடராக இருக்கிறது. நிதானமாய்த் தான் படிக்கணும். சுட்டிக்கு நன்றி.

      Delete
  4. இன்னும் ஒரு அறை திறக்கப் படவில்லையாமே. அங்கு இன்னும் நிறையப் பொக்கிஷங்கள் இருக்கலாமாமே.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் ஐயா! அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

      Delete
  5. எத்தனைமுறை படித்தாலும் திருவனந்தபுரம் பாதாள அறைகள் பற்றிய மர்மம் புதிதாகவே இருக்கிறது. அண்ணா கொடுத்திருக்கும் லிங்கில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. நிதானமாகப் படிக்க வேண்டும். அந்த செல்வங்களின் கதி என்ன?

    ReplyDelete
    Replies
    1. பொக்கிஷ அறைச் செல்வங்கள் எல்லாம் அனந்துவுக்கும் கோயிலுக்குமே சொந்தம்னு சொல்லி இருக்காங்க ரஞ்சனி. இன்னும் திறக்கப்டாத அறை பத்தித் தான் தெரியலை.

      Delete
  6. The keys of underground vaults have been handed over by Raja to the District Judge. A five member committee headed by District judge manage the Temple Affairs. A new executive officer was also appointed to oversee the administration. These were due to orders by Supreme Court. Former CAG Vinod Rai (2G spectrum fame) audited the inventory and catalogued the items found so far. Nilavara B has not been opened so far. Rumour is it contains the mortal remains of Narabali.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா இங்கே பதில் அளித்திருக்கார். :)

      Delete
  7. அனந்துவிடம் செல்வம் இருந்தென்ன? பணம் இருந்தால் அது பலருக்கும் பயனளிக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அதைச் சரியான முறையில் கையாளத் தெரிந்தவராக இருக்கணும். இல்லையா?

      Delete
  8. முதலில் அனந்து என்பது புரியவில்லை.

    சூப்பர் சிங்கரில் வருபரோ என்றுதான் நினைத்தேன். பின்புதான் அனந்தபுர விண்ணகரத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்தது.

    பொதுவாகவே பண்டைய இந்தியக் கோயில்கள் எல்லாமே கருவூலங்கள்தான்.

    தென்னிந்தியப் பழங்கோயில்கள் கோட்டை போன்ற அமைப்புடன் அகழி வைத்துக் கட்டப்பட்டிருப்பது அதன் கரூவூலப்பாதுகாப்புக் கருதித்தான்.

    அயலவர் படையெடுப்பு கோயிலை நோக்கிக் குவிய பின்னாளில் இந்த செல்வமே காரணமாயிற்று.

    பின்னாலிருந்து வாசித்துப் போவதால் தொடர்பதிவுகளில் இக்குழப்பம் நேர்கிறது.

    பொறுத்திடுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஊமைக்கனவுகள், சூப்பர் சிங்கரெல்லாம் பார்ப்பதே இல்லை. அதில் அனந்து என்று ஒருத்தர் வருகிறார் என்பதும் தெரியாது. நான் நம்ம உம்மாச்சிகளை எல்லாம் செல்லப் பெயர் வைத்து அழைப்பேன். ஆஞ்சநேயருக்கு ஆஞ்சி, நரசிம்மருக்கு நரசி! இப்படி! :)))))))) பத்மநாபர் என்றால் பத்து!

      Delete