எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 15, 2015

ஆண்டாளம்மாவிடம் ஒரு தாவா!

சுபாவின் பட்டாபிஷேஹ மலர்ப் பதிவுக்கு நிறையப் பார்வையாளர்கள் இருந்திருப்பதும் நிறைய ஜி+இல் பகிரப்பட்டதும் மகிழ்ச்சியைத் தந்தது.  இங்கே நான்கைந்து நாட்களாக (அதுக்கு முன்னே உடம்பு சரியில்லை; ஆகவே எழுத முடியலை! இப்போ இது. நொ.சா.நொ.சா.னு சொல்றது காதிலே கேட்குது) மின் தடை அதிகமாக இருப்பதால் இணையத்துக்கே வர முடியலை. மடிக்கணினியில் எழுதி வைச்சுண்டாலும் அதுக்கும் சார்ஜ் செய்ய மின்சாரம் வேணுமே! இன்வெர்டரில் எவ்வளவு தான் ஓட்டுவது!! காலை பத்தரை மணிக்குள்ளாக அவசரம் அவசரமாக எல்லாத்தையும் முடிச்சால் மாலை ஆறரை மணிக்கு மின்சாரம் வரச்சே ஒருஅரை மணி நேரம் கணினியில் உட்காரலாம். அதுக்கு மேலே முடியறதில்லை. வேலை இருக்கும்.

எல்லோரையும் போல் நான் ராக்கோழி இல்லை. ரொம்ப ஜாஸ்தியாப் போனால் ஒன்பதரைக்குள் படுத்துடுவேன். ஆகையால்  இரவிலும் உட்கார முடியாது. கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாசத்துக்கு இப்படி இருக்கும் என இன்றைய தினசரியில் செய்தியாக வந்திருக்கிறது. உயர் மின் அழுத்தக் கம்பிகளுக்கு மாற்றம் செய்து புதுப்பிக்கும் வேலை நடப்பதால் ஶ்ரீரங்கம், சமயபுரம் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படும் எனத் தகவல் வந்திருக்கிறது.

வேலை நடப்பதால் சாரம் கட்டியதும் தெரிகிறது. எடிட் செய்யலை. அப்படியே போட்டுட்டேன். :) மன்னிக்கவும்.

இன்னிக்கு ரங்குவைப் பார்க்கப்போனோம். திங்களன்று போக இருந்தோம். எதிர்பாராத் தடங்கல் வந்துவிட்டதால் இன்னிக்குப் போகலாம்னு காலையிலேயே தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.  அதோட அனந்துவையும், கேஷுவையும் பார்த்தது குறித்து ரங்குவுக்கும் தெரிவிக்கணுமே! கொஞ்சம் சீக்கிரமாகப் போனால் மூத்த குடிமக்கள் கூட்டமாய் வருவதற்குள்ளாகப்போயிடலாம்னு என்னோட எண்ணம். சரினு இரண்டே முக்காலுக்கே கிளம்பிட்டோம். அங்கே உள் ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளம்மாவிடம் ஒரு வழக்குத் தீர்க்க வேண்டி இருந்தது. அந்த சந்நிதிக்கு 4 மணிக்குத் தான் பட்டாசாரியார் வருவார். நாம பெருமாளையும், தாயாரையும் பார்த்துவிட்டு இங்கே வருவதற்குச் சரியாக இருக்கும்னு நினைச்சு உள்ளே போனோம்.

போகும்போதே உள்ளே இருந்து சாரிசாரியாக மக்கள் வெளியேறுவதைப் பார்த்தால் கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. ஆனால் இலவச தரிசனம் பகுதியில் தான் கூட்டமே காணப்பட்டது. 50 ரூ டிக்கெட், 250 ரூ டிக்கெட்டிற்குக் கூட்டமே இல்லை. 50 ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டு நேரே குலசேகரன்படி வாயிலண்டை போக முடிந்தது. பின்னர் சுற்றி வந்து உள்ளே போகையிலேயே நம்பெருமாள் பட்டையாகப் பெரிய நீலக் கல் நாமத்தோடு தோன்றினார். அவர் முகத்தையே நாமம் மறைத்தது.  அதற்கு மாறாகப் பெரிய ரங்குவோ நெற்றியில் நாமம் ஏதும் இல்லாமல் உடுத்திய ஒரே மேலாடையுடன் கால் வரை மூடிய வண்ணம் தைலக்காப்புத் தெரியப் படுத்திருந்தார். இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாசம் இப்படி இருக்கணும் அவருக்கு. பாவம்!  ஆகவே திருவடி தரிசனம் கிடையாது. இருந்தாலும் உள்ளே போகையிலேயே யாகபேரரையும் நினைவாகப் பார்த்துக் கொண்டேன்.  உள்ளேயே கருவறையிலேயே துளசிப் பிரசாதமும் கிடைத்தது. தீர்த்தம் வழக்கம்போல் வெளியே. பின்னர் அங்கிருந்து வந்து தங்க கோபுரம் தரிசித்துக் கொண்டு மெதுவாக வெளியே தாயார் சந்நிதி செல்ல பாட்டரி காருக்குக் காத்திருந்தால் வரவே இல்லை. சரினு நடந்து போக ஆரம்பித்தோம்.

தன்வந்திரி சந்நிதியும் ஐந்து குழி, மூணுவாசல் பிரபலமான லக்ஷ்மிநாராயணப்பெருமாள் சந்நிதியும் தாண்டி தாயார் சந்நிதி மண்டபம் போனால் பாட்டரி கார் அந்த வழியாக வடக்கு வாசலில் இருந்து சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குப் போய்க் கொண்டிருந்தது.  சரியாப் போச்சுனு நினைச்சு தரிசனத்துக்குப் போனோம்.  தாயார் சந்நிதியிலும் திவ்ய தரிசனம் முடிஞ்சு சடாரி சாதித்துக் கொண்டு மஞ்சள் பிரசாதம் பெற்றுக் கொண்டு திரும்ப வந்து பாட்டரி காருக்குக் காத்திருந்தால் அது ஆர்யபடாள் வாயிலருகே இருக்கும்னு சொன்னாங்க. ஆகவே மறுபடி தன்வந்திரி சந்நிதிக்கே போய் ஏறிக்கோங்கனு சொல்லவே அங்கே வந்தும் பார்த்தோம் இன்னிக்கு நடராஜா சர்வீஸ்தான் எனத் தலையிலே எழுதி இருந்ததால் அது வரவே இல்லை. பொதுவாக இரண்டு பாட்டரி கார் உண்டு. ஒரு பாட்டரி கார் ஆர்யபடாள் வாயிலில் இருந்து தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள புஷ்கரணி அருகே வரை செல்லும். இன்னொன்று சக்கரத்தாழ்வார் சந்நிதியிலிருந்து உள்ளே நந்தவனம் வழியாகத் தாயார் சந்நிதிக்கு மிக அருகே உள்ள பூமண்டபம் வரை செல்லும். இப்போ ஒன்றே மாறி மாறி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

இதுவே இத்தனை நாட்கள் வராமல் இருந்துட்டு இப்போ அம்மா மீண்டும் முதல்வர் ஆனதுக்குப் பின்னர் தான் ஓட ஆரம்பிச்சிருக்கு! எத்தனை நாட்களோ!  அப்புறமாத் தாயார் சந்நிதியிலிருந்து நடந்தே வந்து கோயில் அலுவலகம் பக்கம் இருக்கும் உள் ஆண்டாள் (ரங்கவிலாச மண்டபத்தில்) சந்நிதிக்கு வந்தால் பட்டாசாரியார் வரவே இல்லை. காத்திருந்தோம்.


நாலேகால், நாலரை போல பட்டாசாரியார் வரவே அவரோடு சென்றோம்.  ஆண்டாளம்மா இன்னிக்கு ராமர் இருக்கும் இடத்தில் இருந்தாள். அவளிடம் என் வழக்கைச் சொல்லி என்னதான் மனசிலே நினைச்சுட்டு இருக்கேனு ஒரு கேள்வியைப் போட்டேன்.  பட்டாசாரியார் பசிக்கு மிளகு அவல் பிரசாதம் கொடுத்தார். இன்னிக்கு அமாவாசை என்பதால் மற்றப் பிரசாதங்கள் இல்லை போல! பசிக்கு தேவார்மிதமாக இருந்தது. ஆண்டாள் சந்நிதி இருக்கும் மண்டபத்துக்கு எதிரே ஒரு சின்ன கோபுரம்! வேணுகோபாலர் குடியிருக்காராம். கோபுரத்தின் மதில் சுவர் பூராவும் அழகு அழகான சிற்பங்கள். ஆனால் அவற்றில் பலவற்றின் கால் ஒடிக்கப்பட்டும், வீணை வாசிக்கும் பெண்ணின் கரமும், வீணையும் உடைக்கப்பட்டும், வேணுகோபாலர் வலக்கால் ஒடிக்கப்பட்டும் காணப்பட்டார். அந்த நிலையிலும் அழகில் அள்ளிய சிற்பங்களில் ஒன்றிரண்டை மட்டும் படம் எடுத்துக் கொண்டேன். அவை கீழே பார்வைக்கு. எதிர்பாராமல் வரும் கூட்டம் காரணமாகக் காமிராவே எடுத்துப் போவதில்லை. கைபேசியில் எடுத்த படங்களே! கோபுரத்தைப் படம் எடுக்க மறந்துட்டேன். அந்த மண்டபமே ரங்க விலாச மண்டபம் வரை வருகிறது. அங்கே ஒரு தூணில் தரையை ஒட்டி இருக்கும் பிள்ளையாருக்கு (????) எல்லோரும் சிதறுகாய் உடைக்கின்றனர் என்பதையும் இன்றே பார்த்தேன். பிள்ளையாரைப் படம் எடுக்கலாம்னா அங்கே ஒரே கூட்டமாக இருந்தது என்பதோடு தேங்காய் உடைபடும்போது மேலே விழுமோனு பயம் வேறே.

ஆண்டாள் சந்நிதிக்கு எதிரிலுள்ள வேணுகோபால சந்நிதிப் படங்கள் கீழே!



கால் உடைக்கப்பட்ட வேணுகோபாலர் பரிதாபமாக! இந்தச் சிற்பங்கள் யாரை என்ன செய்தன? :(

மண்டபத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு அழகான பெண்ணின் சிற்பம். கோயிலின் மதில் சுவர் முழுவதுமே சின்னச் சின்ன மண்டபங்கள் போல் செதுக்கப்பட்டு அவற்றின் நடுவே வேணுகோபாலர், சுற்றிலும் ஆடும் கோபியர் என வடித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். நின்று நிதானமாகப் பார்க்கணும் தான். ஆனால் நேரம் ஆயிடுச்சு. காலை பதினோரு மணிக்கே சாப்பிட்ட ரங்க்ஸுக்குப் பசி வந்துடுச்சு. ஆகவே அங்கே நேரம் செலவிட மனம் வரலை. சில படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டோம்.


கீழே இன்னொரு வேணுகோபாலன். மேலே கால் உடைக்கப்பட்ட சிற்பத்துக்குக் கீழேயே அஸ்திவாரத்துக்குக் கொஞ்சம் மேலே இது காணப்படுகிறது.



வீணையின் குடம் மட்டும் தெரிகிறது. மற்றவையும் பெண்ணின் வலக்கையின் ஒரு பாகமும் உடைக்கப்பட்டு இருக்கிறது. கண்ணில் நீர் வர வைத்த சிற்பங்கள் இவை!

இதை எழுதும்போதே இரண்டு முறை மின்சாரம் போயிட்டு இப்போத் தான் வந்திருக்கு. :)

18 comments:

  1. அடடா....மறுபடி மின்சாரப் ப்ரச்னையா? உங்கள் உடம்பு சரியாகி விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இரண்டு நாட்களாக உடல்நிலை பரவாயில்லை. சிற்பங்கள் குறித்து ஒண்ணுமே சொல்லலையே! பாவம் அந்தச் சிற்பங்கள்! உடைபட்டுக் கொண்டு காணப்படுகின்றன. :(

      Delete
    2. ஆமாம் இல்லை? மொபைலில் பார்ப்பதால் சிறிதாக தெரிந்தது. மற்றபடி ரசித்தேன்.

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படங்கள் எனக்குப் பெரிதாகவே தெரிகின்றன. :)

      Delete
  2. நாலரைக்கு கோயில் தரிசனம் பார்த்துவிட்டு மின்சாரம் தடைபட்டும் தன்னம்பிக்கையோடு இத்தனை விவரமாய் பதிவு எழுதும் தங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்! இங்கு இரண்டொரு நாளாய் மின்சாரம் போய் போய் வருகின்றது! நேற்று முழுக்க இல்லை! இரவு 7.30க்கு வந்தது. விருந்தினர் வேறு! ரொம்ப கஷ்டமாகிவிட்டது. சிற்பங்களை உடைத்தது நம்ம ஊர் வால்பசங்களா இல்லை... அன்னிய படையெடுப்பிலா? நம்ம ஊர் பசங்கள் என்றால் எவ்வளவு அசட்டையாக விட்டிருக்கிறார்கள்? வருந்தத் தக்கது! கண்டிக்கத் தக்கது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, சுரேஷ், நேத்திக்கு இந்தப் பதிவு எழுதும் வேலை மட்டும் தான். மத்தியானமெல்லாம் கணினியில் அமர முடியலை. இங்கேயும் மின் தடை நிறையவே இருக்கு. வந்தால் சாயந்திரம் ஆறரைக்கு மேல் தான் வருது. சிற்பங்கள் எப்போ உடைக்கப்பட்டதுனு தெரியலை. அந்த மண்டபத்தில் திருப்பணி வேலை நடக்குது. அவங்களுக்கு விபரம் தெரியலை.

      Delete
  3. உடைந்தவற்றை சரி செய்யவும் நேரம் வரும்... விரைவில் வரட்டும்... (("அம்மா" பார்வை பட வேண்டுமோ...?))

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம் டிடி. கல் சிற்பங்களைச் சரி செய்வது ரொம்பக் கஷ்டம். அம்மா பார்வை இங்கெல்லாம் பட்டிருக்குமா? சந்தேகமே!

      Delete
  4. அந்த மண்டபத்தில் இருக்கும் பல சிற்பங்கள் இப்படித்தான் பாழ்பட்டு இருக்கின்றன. அதை செப்பனிட முடியாது என்று விட்டு விட்டார்கள் போலும். பார்க்கும்போதே மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதனாலேயே நான் அங்கே புகைப்படங்கள் எடுக்கவில்லை....

    கோவில் கும்பாபிஷேகம் சாக்கு வைத்தாவது இவற்றை சரி செய்வார்களா என பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. முழுசும் பார்க்கலை வெங்கட். கிளம்பிட்டோம். இதைச் சரி செய்ய முடியுமானு சந்தேகம் தான். :(

      Delete
  5. ஒரு வார்த்தை போட்டு வைங்கோ. பட்டாசார்யாருடன் பாட்டரி காரும் வரணும்னு. இந்த மின் தடையெல்லாம் கையாலாகதா வாரிய கோளாறு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க "இ" சார்! இங்கே உயர் மின் அழுத்தக் கம்பிகளாக அனைத்து இணைப்புக்களையும் மாத்தறாங்களாம். அதனால் அடிக்கடி தடை நேரும் எனச் சொல்கிறார்கள். நேத்திக்கு மின்சாரம் இருந்தது. இன்னிக்கு என்னனு தெரியலை! :)

      Delete
  6. அம்மா

    அது என்னங்க துலுக்க நாச்சியார் போல (தப்பா எடுத்துக்காதீங்க) எப்போதும் ரங்க்ஸ் நம்பெருமாள் தரிசனமே கதி என்று அதைப் பற்றியே எழுதுகிறீர்கள். திருவனந்தபுரம் திருவட்டாறு பத்மநாபபுரம் கன்யாகுமரி பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி விட்டு எழுதவே இல்லை.

    எங்களூர் (நான் திருவனந்தபுரத்தில் இருப்பவன்) அனந்த பத்மநாபன் பெரிய செல்வந்தர். அதுவும் இல்லாமல் முழுதும் நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சாலக்ராமத்தில் செய்யப்பட்டவர். எப்போதும் தங்க கவசத்துடன் இருப்பவர்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நல்லவேளையா உங்களுக்காவது நினைப்பு இருக்கே! இப்படித் தான் கொளஞ்சியப்பரையும் பாதியிலே விட்டிருக்கேன். யாரும் கண்டுக்கலை. சில சமயங்களில் அப்படி நேர்ந்துவிடுகிறது. ரங்க்ஸ் என்றால் நம்ம மறுபாதியைச் சொல்றேன். பெரிய ரங்கு, ரங்கு என்றால் தான் ஶ்ரீரங்கம் ரங்கநாதர்! :) நான் ரங்க்ஸே கதி என இருப்பதில் தப்பு ஒண்ணும் இல்லையே! அனந்துவையும் குறித்து எழுதத் தான் போறேன். ஆனால் அவர் செல்வந்தர் என்பதற்காக அல்ல. :)

      Delete
  7. சிற்பங்கள் அழகோ அழகு ம்ம்ம் பராமரிக்கப்பட்டிருந்தால் இன்னும் எத்தனை அழகாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,பராமரிப்பு இருந்திருந்தால்......... :(

      Delete
  8. ஆண்டாளம்மாவிற்கு நீங்கள் சொல்வதற்கு முன்னாலேயே உங்கள் உள்ளக்கிடக்கை தெரியும், இல்லையா?
    சிற்பங்கள் உடைந்திருப்பது மனதிற்கு வேதனையை அளிக்கிறது.
    ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பணி என்று பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது என்று செய்திகள் வருகின்றன. த்வஜஸ்தம்பத்தின் அருகில் மேலே இருக்கும் அனுமன் சந்நிதியையே இல்லாமல் செய்துவிட்டார்கள் போலிருக்கிறதே! கல்வெட்டுக்களில் இருக்கும் சின்னங்களையும் அழிப்பதாக கேள்விப்படுகிறேன்.
    கேட்பாரே இல்லையா என்று மனம் பதைக்கிறது. பெருமாள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார், அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை போலும்!

    ReplyDelete
    Replies
    1. அனுமன் சந்நிதி! எங்கே சொல்கிறீர்கள்னு புரியலை. ஆர்யபடாள் வாயிலுக்கெதிரே இருக்கும் ஆஞ்சி அங்கே தான் இருக்கார். எப்போவும் போல் கூட்டம் கூடுது. அதைத் தவிரவும் உள்ளேயே இருக்காரா? அடுத்த முறை போறச்சே கொஞ்சம் நல்லாக் கவனிக்கணுமோ? போகும்போது தரிசனம் கிடைக்கணுமேனு அவசரம், திரும்பும்போது பார்க்கணும்னு நினைச்சது எல்லாம் மறந்திருக்கும்.:(

      Delete