எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 19, 2015

ஒத்தக்கல் மண்டபத்தில் ஏன் நமஸ்கரிக்க முடியாது?

இந்தத் திருவாங்கூர் நிலப்பகுதியின் இறைவனாக இன்றளவும் ஶ்ரீபத்மநாபரே இருந்து வருகிறார். மூலவர் வீற்றிருக்கும் விமானத்தை ஹேமகூட விமானம் என்கின்றனர். தென்புறமாக யோகநரசிம்மரும் இருக்கார். இவருக்கு எதிரே இருக்கும் ஆஞ்சிக்குச் சார்த்தும் வெண்ணெய் எத்தனை நாட்கள் ஆனாலும் உருகுவதில்லை என்கின்றனர். நாங்க கிழக்கே போய் முக்கிய கோபுரத்தைப் பார்க்க ஆசை தான். ஆனால் கோயிலில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய்ப் போக முடியவில்லை. பிரகாரத்தை அப்பிரதக்ஷிணமாகவே சுற்றிக் கொண்டு மீண்டும் "தெக்கே நட" வாயிலுக்கே வந்து சேர்ந்தோம்.

ஆனால்  தூரத்தில் இருந்து பார்த்தவரை  கிழக்கு வாயிலில்  கோபுரம் திராவிடக் கட்டிடக் கலை மரபில் ஏழு அடுக்குக் கோபுரமாகக் காணப்பட்டாலும் கேரள, கர்நாடக பாணியில் அகலமாகவும் காணப்படுகிறது. தமிழ்நாட்டுக் கோயில் கோபுரங்களைப் போல் கீழே அகலமாகவும் மெல்ல மெல்ல அதற்கேற்ற அகல நீளத்திலும் இல்லாமல் அகலவாட்டத்தில் சட்டெனப் பாதியில் முடிந்தாற்போல் இருக்கிறது.

அனந்த பத்மநாபர் கோயில் க்கான பட முடிவு

படம் நன்றி: விக்கி காமன்ஸ்

இங்கு இறைவனுக்கு வலம்புரிச் சங்கு முத்திரையாக இருந்ததால் மகாராஜா நாட்டை சாசனம் பண்ணியதில் இருந்து வலம்புரிச் சங்கே அரச முத்திரையாகவும் இருந்து வந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் சில வருடங்கள் கேரள அரசின் முத்திரையாகவும் இருந்திருக்கிறது. இந்தக் கிழக்கு வாயிலி இருந்து நீண்டதொரு தாழ்வாரம் கருங்கல்லில் செதுக்கிய தூண்களோடும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளோடும் காணப்படுகிறது. ஆனால் படங்கள் எடுக்க முடியாது என்பது தான் வருத்தம். :(  தாழ்வாரம்/பிரகாரம்  நேரே கருவறைக்கு வந்து முடிகிறது . கோயிலின் கொடிமரமும் அங்கே தான் காண முடிகிறது.

உண்மையில் ஶ்ரீபத்மநாப சுவாமி முழுதும் தங்கத்தால் ஆனவர் என்கின்றனர். முகலாயப் படையெடுப்பின் போது விக்ரஹம் களவு போகாமல் தடுக்கவே கடு சர்க்கரை யோகம் என்னும் வெளிப்பூச்சுப் பூசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் இறைவனின் கிரீடம், குண்டலங்கள், சாளக்கிராம மாலை மற்றும் பூணூல் ஆகியவை தங்கத்தால் ஆனதே என்கின்றனர். நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் சுத்தமான தங்கம் என்கின்றனர். முதல் பாகத்தில் ஆதிசேஷன் மேல்  பள்ளி கொண்டிருக்கும் இறைவனின் இடக்கையில் தாமரைப்பூ ஒன்று காணப்படுகிறது. அதை முகர்ந்து வாசம் பிடிப்பது போல் ஆதிசேஷன் முகம் காணப்படுகிறது. வலக்கரத்தால் சிவலிங்கத்தைப் பாதுகாப்பது போல் வைத்திருக்கிறார்.  இங்கே நாம் பரமசிவனைப் பார்ப்பதாக ஐதீகம். அடுத்த வாயிலில் இரு பக்கமும் ஶ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்க நாபிக்கமலத்திலிருந்து பிரமன் வெளிப்படுகிறான்.  இங்கே நமக்கு பிரமனைப் பார்ப்பதாக ஐதீகம். இந்த நடு பாகத்தில் தான் உற்சவ மூர்த்தியும் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காணப்படுகின்றனர். பின்னர் அடுத்த கடைசி பாகத்தில் திருவடி சேவை. இறைவனின் திருவடி சேவைக்கு முக்கியத்துவம் உண்டு. நாம் கடைசியில் சரணாகதி அடைவது பகவானின் திருவடியில் என்பதால் இந்தத் திருவடிகளே மகாவிஷ்ணுவாக, நாம் சாக்ஷாத் விஷ்ணுவையே பார்ப்பதாக ஐதிகம் என்பதோடு திருவடி சேவை முக்தியைக் கொடுக்கும் என்றும் சொல்கின்றனர்.

சுவாமியின் கருவறை அமைந்திருக்கும் இடத்தையே ஒற்றைக்கல் மண்டபம் என்கின்றனர். இந்த மண்டபத்தில் தான் பக்தர்கள் யாரும் கீழே விழுந்து நமஸ்கரிக்கக் கூடாது. நாங்கள் சென்ற நேரம் அறிவிப்பெல்லாம் செய்யலை என்றாலும் சீக்கிரம் பார்க்கணும் என்ற அவசரத்தில் அது மனதில் தோன்றவே இல்லை; ஆகவே ஒத்தக்கல் மண்டபம்னு ஒண்ணு தனியா இருக்குனு நினைச்சிருந்தேன்.  வெளியே வந்ததும் தான் நினைவுக்கு வந்தது என்பதே உண்மை. அதன் பின்னர் தான் அறிவிப்புப் பலகை மூலம் கருவறை இருக்கும் மண்டபமே ஒத்தக்கல் மண்டபம் என்பது புரிந்தது.  நாங்கள் மேலே ஏறித்தான் பார்த்தோம்.  இங்கே விழுந்து நமஸ்கரிகும் அதிகாரம், உரிமை யாவும் திருவாங்கூர் மகாராஜாவுக்கே உரியது. அவர் ஒருவரே அங்கே விழுந்து நமஸ்கரிக்கலாம். அப்படி யாரானும் தெரிந்தோ, தெரியாமலோ நமஸ்கரித்தாலோ,அவர்கள் கோயிலுக்குச் சொந்தமானவர்களாகக் கருதப்படுகின்றனர். அங்கே வைக்கும் எந்தப் பொருளும் பத்மநாப சுவாமிக்கே சொந்தம் ஆகிவிடும். திருவாங்கூர் மகாராஜாவும் தன்னை ஒரு ராஜாவாக நினைத்துக்கொள்ளாமல் பத்மநாப தாசராகவே நினைத்துக் கொள்ளப்படுகிறார். இறைவனுக்கு அபிஷேஹங்கள் கிடையாது. மலர்களால் அர்ச்சிக்கின்றனர். அபிஷேஹம் செய்வதற்கு எல்லாம் வேறுபட்ட விக்ரஹங்களே பயன்படுத்தப்படுகின்றன. நிர்மால்யமான மலர்களையும் மறுநாள் களையும்போது மென்மையான மயில் இறகை வைத்தே களைகின்றனர்.

(தொடரும்)

15 comments:

  1. ஒத்தக்கல் மண்டபம் பற்றிய தகவல்கள் வியப்பை அளித்தது அம்மா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் இவற்றை எல்லாம் ஆலய தரிசனம் என்னும் தொடராக ஆனந்த விகடனில் "பரணீதரன்" எழுதினப்போவே படிச்சிருக்கேன். புதுசு என்றால் இப்போத் திரு ஜேகே அவர்கள் சொல்வது தான். இங்கே தஞ்சைப் பெருவுடையார் கோயில் பத்தித் தான் ஆட்சியில் இருப்பவர்கள் போக மாட்டாங்கனு கேள்வி. திருவனந்தபுரத்துக்கும் அதே ராசி என்பது தெரியாது. :)

      Delete
  2. Please see my comments on yesterday's blog. And publish photos also.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஃபோட்டோக்கள் கிடைத்தவரை போடுகிறேன் ஐயா. உங்கள் நேற்றைய கருத்தைப் படிச்சு அதுக்கு பதிலும் கொடுத்துட்டேனே!

      Delete
  3. பொதுவாக கேரள கோவில்களில் கருவறைக்கும் நமஸ்கார மண்டபத்துக்கும் இடையில் ஒரு வெட்டவெளியான இடைவெளி ஒன்று இருக்கும். கருவறையை மட்டும் தனியாக பிரதட்சிணம் வரலாம். மண்டபத்தை சுற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் இங்கு மட்டும் நமது சிதம்பரம் கோவிலில் உள்ளது போன்று கருவறையும் நமஸ்கார மண்டபமும் சேர்ந்து ஒரு பீடத்தின் மேல் அமைந்திருக்கும்.

    சிறிது காலம் முன்பு (40 வருடம் முன்பு) கிழக்கு வாசல் ராஜாவிற்கு உரியதாகக் கருதப்பட்டு ராஜா வரும்போது மட்டுமே திறக்கப்படும். பொதுமக்கள் தெற்கு வடக்கு வாயில்கள் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.மேற்கு வாயில் நம்பிகளுக்கு உரியதாக இருந்தது.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பல பழமையான கோயில்களில் கருவறை தனியாக இருக்கும். சிதம்பரம் போன்ற கோயில்கள் விதிவிலக்கு. அதிலே இதுவும் ஒன்று.

      ஆமாம், நீங்க சொல்லி இருக்கிறாப்போல் கிழக்கு வாசல் வழியாகப் போகக் கூடாதா என்று தான் நினைச்சேன். ஆனால் எப்படி இருந்தாலும் எங்களுக்குத் தெக்கே நட தான் பக்கம். ஆகவே வந்த வழியிலேயே போயிட்டோம். :)

      Delete
  4. //அதற்கேற்ற அகல நீளத்திலும் இல்லாமல் அகலவாட்டத்தில் சட்டெனப் பாதியில் முடிந்தாற்போல் இருக்கிறது.//

    எனக்கும் இதே போலத்தான் தோன்றும். ஏதோ பாதியிலேயே நிறுத்தி விட்டாற்போல!

    //அப்படி யாரானும் தெரிந்தோ, தெரியாமலோ நமஸ்கரித்தாலோ,அவர்கள் கோயிலுக்குச் சொந்தமானவர்களாகக் கருதப்படுகின்றனர். அங்கே வைக்கும் எந்தப் பொருளும் பத்மநாப சுவாமிக்கே சொந்தம் ஆகிவிடும்.//

    இது மாதிரி ஏதாவது நடந்து மனிதர்கள் கோவிலுக்கு சொந்தமாகி இருக்கிறார்களா? ஏதோ ஒரு படத்தில் விவேக் இதை வைத்து ஒரு காமெடி செய்திருப்பார். ஆனால் அது அம்மன் படம்/கோவில்.

    ReplyDelete
    Replies
    1. ஒத்தக்கல் மண்டபத்தில் நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியைப் பற்றி பரணீதரன் எழுதிப் படிச்சிருக்கேன். ஆனால் சரியாக நினைவில் வரவில்லை. அவை எல்லாம் திரும்பப் படிச்சால் தான் தெரியும். :) காலடி, குருவாயூர் போனது கூட எழுதி இருந்தார். காலடிக்கு அருகே உள்ள கனகதாரா ஸ்தோத்திரத்தினால் சுவர்ண மழை பொழிந்த வீட்டினரைச் சந்தித்துப் பேசிப் படங்கள் கூட வந்திருக்கு. :)

      Delete
  5. வல்லிசிம்ஹன் has left a new comment on your post "ஒத்தக்கல் மண்டபத்தில் ஏன் நமஸ்கரிக்க முடியாது?":

    அற்புதமான பதிவு கீதா.கோவில் கோபுரம் இப்படி அமைய ஏதாவது காரணம் இருக்கிமோ?

    ReplyDelete
    Replies
    1. வல்லி சிம்ஹனோட கருத்துப் பதிவு ஏனோ பப்ளிஷ் பண்ண முடியலை என்பதால் காப்பி, பேஸ்ட் பண்ணிப் போட்டிருக்கேன். :)

      Delete
    2. நன்றி வல்லி. கோபுரம் ஏன் இப்படி இருக்குனு தெரியலை. யாருக்கும் காரணம் சொல்லத் தெரியலை! :)

      Delete
    3. Amma

      After the "Thiruppadithaanam" by Maharaja Marthanda Varma The kingdom became the property of Sri Ananda Padmanabhan. Raja became just a CEO (Like Ambani is CEO of Reliance while majority of shares are held by Public). All revenue and expenditure were accounted on daily basis and the accounts were submitted daily by Raja in the morning. Raja took a salary for his needs.

      All offerings to Sri Anandu were HIS property and none of that was touched by the Raja even for Anandu's needs. That is how this much wealth was accumulated from 17th century. There is a record of Raja borrowing from Anandu and repaying it with interest after some time.
      During the reign of one Raja ( I don't exactly recall his name) it was decided that a Raja Gopuram is to be built with Public funding, and Raja also contributed to that. Architects from Tamilnadu were employed. But funds were insufficient. Donatiions were hard to come by. Therefore it was decided to finish the Godapuram at that particular stage and it is unique in style and appearance. Have you not noticed that just before the Tamilnadu style Gopuram another "Nadapura" or "Kottiyambalam" in Kerala style is added.

      I have some more information on the story of opening of underground vaults etc.

      You may think I am living near the Temple.I am living away and it has been 35 years since I had visited the temple.

      Jayakumar

      Delete
    4. மேல் அதிகத் தகவல்களுக்கு நன்றி ஐயா. தாங்கள் எங்கே இருந்தாலும் நினைவுகள் எல்லாம் திருவனந்தபுரத்திலேயே இருப்பதையும் புரிந்து கொண்டேன். உங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொடுங்கள்.

      Delete
  6. ஒத்தக்கல் மண்டபம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete