எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 30, 2006

78. பாரதி கண்ட புதுமைப்பெண்

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ!"

புதுமைப் பெண்ணைப் பற்றிய பாரதியின் கற்பனை இது. ஆனால் இன்றைய பெண்ணோ என்றால்? எப்படி இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நாள் (இது டோண்டு சார் சொல்ற சமீபம் இல்லை. நிஜமாவே ஒரு 2 நாள் முன்பான சமீபம்) தற்செயலாக ஒரு மெகா சீரியல் பார்க்க நேர்ந்தது. நான் மெகா சீரியல் பார்க்க நேர்ந்த கதை அப்புறம். ஆனால் அந்த சீரியலில் ஒரு பெண் யாருக்கோ பெண் பார்க்கப் போகிறாள். அது யாருக்கு என்றால் அவள் கணவனுக்காம். அவளுக்குக் குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொல்லி விட்டதால் கணவனின் சந்தோஷத்துக்காக அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறாளாம். அவளே போய்ப் பெண் பார்த்துக் கணவனையும் பார்க்கச் சொல்லுகிறாள். அந்தக் கணவனோ "நான் உனக்குத் துரோகம் செய்ய மாட்டேன். உனக்குக் குழந்தை பிறக்காது என்றால் பரவாயில்லை. மனசில் நீ இருக்கையில் வேறு ஒருத்தியோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியாது." என்கிறான். அவன் இந்த மாதிரிச் சொன்ன பிறகும் கூட அவளுக்குப் புரியவில்லையா? என்ன? கணவனின் சந்தோஷம் தன்னுடன் வாழ்வதுதான் என்று, அவன் சொல்லச் சொல்ல அவள் மீண்டும் மீண்டும் அவனை வற்புறுத்துகிறாள். கணவனின் உண்மையான சந்தோஷம் முதல் மனைவியுடன் தான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகும் வற்புறுத்துகிறார்கள். என்ன மாதிரிப் பெண் இவள் என்று எரிச்சல் தான் வந்தது. கணவனைச் சந்தோஷப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு அவனுக்கு அவள் செய்யப்போகும் காரியத்தினால் கிடைக்கப் போகும் நன்மைதான் என்ன? ஒன்றுமே இல்லை. மூன்று பேரின் வாழ்க்கை நரகமாகப் போகிறது..

அது தான் போயிற்று என்றால் இன்னொரு சீரியல் பார்த்தால் அது வேறே ஒரு பாடம் சொல்லுகிறது. இத்தனைக்கும் அது பிரசித்தி பெற்ற "ஏவிஎம்" காரர்களின் தயாரிப்பு. அதில் ஒரு பெண் சொல்கிறாள், மற்றொரு பெண்ணிடம், அந்த மற்றொரு பெண்தான் கதாநாயகி என்று நினைக்கிறேன். "எனக்குக் கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.நானும் என் கணவரும் சோதனைக்குழாய் முறைக் குழந்தைக்கு முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் தெரிய வந்தது என் கணவருக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதும், அவள் கரு உண்டாகி இருப்பதும். அந்தப் பெண்ணையே என் கணவருக்குத் திருமணம் செய்து வைத்தேன். இப்போது அவளுக்குக் குழந்தை பிறந்து அது என்னை "அம்மா" என்று கூப்பிடுகிறது." என்று தான் தன் கணவருக்கு மறு மணம் செய்வித்ததை ஒரு சந்தோஷத்தோடு நியாயப்படுத்திப் பேசுகிறாள். ஒழுக்கம் என்பது இவர்களுக்கு என்ன விலை, எங்கே கிடைக்கும் என்ற அளவில் போய்விட்டது. இப்போது எல்லாம் குழந்தை இல்லை என்றால் யாரும் இடிந்து போய் விடுவது இல்லை. ஒன்று தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது வேறு வழிகளில் மனத்தைச் செலுத்தி அமைதி தேடுகிறார்கள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இதை நியாயப்படுத்தி இரண்டு சீரியல்கள். அதிலும் "ஏவிஎம்" மாதிரித் தயாரிப்பாளர்கள் எடுக்கும் சீரியலில் இந்த மாதிரி வருகிறது என்றால் ஆச்சரியமாக இருந்தது. அதை அதிகம் பார்ப்பதும் பெண்கள் தான். பார்த்து ரசிப்பவர்கள் மனதில் இந்த போதனை பசுமரத்தாணியாகப் பதிந்தால்? எங்கே போகிறது நம் கலாசாரம்?.

இது தான் போச்சு என்றால் கணவனையே கொன்ற இரண்டு பெண்களை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டுமாம். ஒருத்தியின் கணவனுக்கு வயது அதிகம், இன்னொருத்தியை வற்புறுத்தி இருக்கிறார்கள் என்பது மனித நேயக்காரர்கள் பேசும் பேச்சு. கணவனைப் பிடிக்கவில்லை என்றால் வக்கீல் மனைவிக்கு விவாகரத்துக் கேட்டால் கிடைக்காதா? இரண்டு குழந்தைகள் பிறந்துப் பத்து வருஷம் வரை கணவனுக்கும் தனக்கும் உள்ள வயசு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதா? அப்படி ஒன்றும் படிக்காத பெண் போலவும் இல்லை. இன்னொரு பெண்ணோ நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர். அவர் நினைத்தால் திருமணத்தையே தடுத்திருக்க முடியும். போலீஸிடம் என் வீட்டில் வற்புறுத்துகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம். அல்லது காதலனுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அவளுடைய காதல் வாழ்வுடன் எந்த வகையிலும் சம்மந்தப்படாத ஒரு அப்பாவியைக் கொன்று விட்டு இப்போது பத்திரிகைகள் எல்லாம் இதற்கு மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு பார்க்கச் சொல்லுகின்றன. அந்த அப்பாவியைக் கொல்லும்போது அவர்கள் இருவருக்கும் எந்த மனிதாபிமானம் இருந்தது? ஏன் அவர்கள் இருவரும் மனிதர்கள் இல்லையா? அந்தப் பையனின் தாய், தந்தை எப்படித் துடிப்பார்கள்? இது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா?

"சாத்திரங்கள் பலபல கற்பராம்!
என்ன சாத்திரம் கற்றார்கள். கள்ளக்காதல் என்ற புதிய சாத்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

"சவுரியங்கள் பலபல செய்வராம்."
முறையில்லாக் காதலனுடன் வாழ சவுரியங்கள் பலசெய்து கொள்கிறார்கள்.

"மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்"
தங்கள் வாழ்வின் கடந்தகாலத்தை அழிக்கிறார்கள்.

"மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம்."
எந்த மூட நம்பிக்கையை அழித்தார்கள்? அதற்குப் பதில் கட்டிய கணவனை அழித்தார்கள்.

"காத்து மானிடர் செய்கை அனைத்தையும்
கடவுளர்க்கினிதாகச் சமைப்பராம்."
கடவுளே! கடவுளே! எந்தக் கடவுளுக்கு இனிது இவர்கள் செய்தது?

"ஏத்தி ஆண்மக்கள் போற்றி வாழ்வராம்:
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!"
எந்த ஆணும் இனிமேல் கல்யாணம் என்றால் யோசிக்கும்படிச் செய்து விட்டார்கள். செய்தித்தாளைத் திறந்தால் தினமும் இந்த மாதிரி செய்திதான். எந்த இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்பது? பெண்ணின் பெருமையைக் குலைக்கிறார்களே!எல்லாரும் இப்படி இல்லை, வாஸ்தவம்தான். ஆனால் பெண்களுக்கு ஒரு சிறுமை ஏற்படுவது பெண்களால்தான். எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கிறது. நிச்சயம் பாரதி இன்று இருந்தால் தற்கொலை பண்ணிக்கொண்டுச் செத்திருப்பார். கடவுள் காப்பாற்றட்டும் பெண்களை.

18 comments:

 1. உண்மை தாங்க. இந்த சிரியல் போற போக்கே சரியில்லை. இதுனால் எனக்கு எங்க அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.
  எதாவது ஒரு சிரியல் நல்ல விசயத்தை சொல்லுதா.... சே...சே....இதை எங்க அம்மாவும் ஒத்துப்பாங்க, இருந்தாலும் விடாமல் பார்ப்பார்க்கள். என்னவோ போங்க....

  ReplyDelete
 2. கீதா மேடம் நல்ல இருக்கு உங்களின் இப்பதிவு.சீரியல் அக்கப்போர்களில் இருந்து நம் மக்கள் எப்பொழுது தான் விடிவுப்பெற போகிறார்களா தெரியவில்லை.

  ReplyDelete
 3. //ஆனால் பெண்களுக்கு ஒரு சிறுமை ஏற்படுவது பெண்களால்தான்//
  ரொம்ப உண்மைங்க, ஆனா யாரும் ஏத்துக்கதான் மாட்டேங்கிறாங்க. இனிமே யாராவது மறுத்து பேசினா உங்கள உதாரணம் காட்டிடலாம்..


  இதை ஒத்துகிட்ட கீதாவையே "பாரதி கண்ட புதுமைப்பெண்" கீதா அப்படிங்கிற பட்டத்தையும் விவசாயிகள் சார்பா அளிக்கிறேன்

  ReplyDelete
 4. உண்மை தான்,
  தொலைக்காட்சி தொடர் மட்டுமல்ல திரைப்படங்களும் அப்படி தான் இருக்கு, கொலை செய்யும் கதாநாயகன், கதாநாயகிக்கு அவன் மீது காதல்.........
  அதுவும் ஏதோ ஒன்று என்றால் பரவாயில்லை, எல்லாம் அதே போல்..
  "என்ன கொடுமை சரவணா இது"

  ReplyDelete
 5. //கணவனின் சந்தோஷத்துக்காக அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறாளாம். //
  கணவனின் சந்தோஷம் தான் தன் சந்தோஷம் என்பதை 'ப்ராணநாதா' காலத்து கருத்தை முன் வைத்து கொடுமைப் படுத்துகிறார்கள். நிஜமாகவே குழந்தை இல்லாத தம்பதியினரின் குடும்பத்தில் இது எத்தகைய பிரச்னை உண்டு பண்ணும்? சமூகம் எப்படிப் போனால் என்ன? எங்களுக்கு வேண்டியது, டி.ஆர்.பி ரேட்டிங்கும், மூளையற்று போய் இந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும் பல பெண்களின் கண்ணீரும் தான் என்று இவர்கள் நினைப்பது தான் கொடுமை.

  ReplyDelete
 6. நல்ல கருத்து செறிவுள்ள பதிவு!
  இந்த மெகா சீரியல் எல்லாத்தையும் தடை செய்யனும்.
  மக்கள் நேரத்தை விழுங்கும் சாத்தான்கள்.

  ReplyDelete
 7. சிவா,
  இந்த மெகா சீரியல் நல்ல வேளையா என்னைக் கவரலை. நான் பார்த்த சீரியல் பத்தி ஒரு 4 நாள் கழிச்சு ஒரு பதிவு போடறேன், பாருங்க.

  ReplyDelete
 8. ரொம்ப நன்றி, ராம்,முதல்முறை வந்ததுக்கும் பாராட்டுத் தெரிவிச்சதுக்கும்.

  ReplyDelete
 9. வாங்க விவசாயி,
  இன்னிக்கு என்ன இந்தப்பக்கம்? விவசாய வேலை ஒண்ணும் இல்லையா? நான் சொன்னதுக்கு அப்புறமாவது வந்தீங்களே. முடிஞ்சப்போ வாங்க.
  அப்புறம் அந்த ஃபோட்டோ (வ.வா.ச.)போடற விஷயம் என்ன ஆச்சு? என் ஃபோட்டோ எப்படி வரும்னு பார்க்க ஆவலா இருக்கேன்.

  ReplyDelete
 10. சின்னக்குட்டி,
  தமிழ்லே வெளுத்து வாங்குறீங்க? நீங்களா உதவி கேட்டீங்க?
  அது சரி, யாருங்க அந்த சரவணன்? உங்க வீட்டுக்காரரா? எல்லாத்துக்கும் அவரைக் கூப்பிடறீங்களே?

  ReplyDelete
 11. உண்மையில் நம்ம பெண்களுக்குத் தன்மானம் என்று ஒன்று இருக்கிறதா,சந்தேகம் தான் வேதா. பெண்கள் இதை எல்லாம் பார்ப்பதை என்று நிறுத்தப் போகிறார்களோ?

  ReplyDelete
 12. என்ன அம்பி, உங்க பதிவுலே என்ன பண்ணப் போறீங்க? நாளைக்கு வந்து பார்ப்பேன், பதிவு போடணும், ஆமாம்.

  ReplyDelete
 13. கரீட்டா சொன்னீங்க...இந்த மெகா சீரியல்கள் எல்லாம் கேன தனமா இருக்கு...இருந்தாலும் அது பார்காமயும் இருக்க முடியல.... :-)

  ReplyDelete
 14. ஏன் பார்க்கறீங்க? பார்க்காதீங்க.

  ReplyDelete
 15. நன்றாக உள்ளது உங்கள் அலசல்.


  சிரியல் பாத்துதான் டோன்டு சாரும் பதிவெழுதுகிறார் என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை

  ReplyDelete
 16. மின்னல்,
  சீரியல் பார்த்து டோண்டு சார் பதிவு எழுதுகிறாரா? இது என்ன புதுக் கதை?

  ReplyDelete
 17. ஐயோ, இப்படி புறளி கிளக்காதீங்க

  ReplyDelete
 18. கீதா அக்கா! உங்க அளவுக்கு இல்லாட்டியும் ஒன்ன மட்டும் சொல்லிக்கிறேன்.

  ரசிகர்கள் எல்லாம் குழந்தை மாதிரி. என்ன தந்தாலும் எடுத்துப்பாங்க. ஆனா இயக்குனர்கள் தான் நல்லதை தரனும்.

  குழந்தை விஷத்தைப்பார்தாலும் கேட்க்கும், ஆனா என்ன கொடுக்கனும் இந்த serial எடுக்கிறவங்க தான் தெரிஞ்க்கனும். பணம் கொட்டுது என கண்டதையும் எடுக்கக்கூடாது.

  - ஸ்ரீதர்

  ReplyDelete