எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 14, 2007

208. தொந்தி விளாகம் தெரு, கல்லிடைக்குறிச்சி!!!!!

ரொம்ப நாளாக் கல்லிடைக்குறிச்சியிலே போய் அப்பளாம் வாங்கிட்டு வரணும்னு ஆசை. நிறையச் சாப்பிட்டிருக்கேன், மதுரையிலே இருக்கிறப்போ. இருந்தாலும் அப்பளம் தயார் செய்யும் இடம் போய் வாங்கிட்டு வந்ஹு சாப்பிட்டால் அதன் ருசியே தனி இல்லையா? இப்போ அதுக்குச் சந்தர்ப்பம் வந்தது. போயிட்டு வந்தேன். அப்பளாம் மட்டும் வாங்கலை, கூடவே நிறையக் கோவில்களுக்கும் போயிட்டு வந்தேன். அப்புறம் அம்பா சமுத்திரம் போய் அங்கே கெளரிசங்கர் ஹோட்டலில் தயிர் வடை (ரொம்பவே நல்லா இருந்தது) சாப்பிட்டுட்டு வந்தேன். திண்டுக்கல்லில் ரெயில் நின்னப்போ இறங்கி வெள்ளங்கோடும் போயிட்டு அப்படியே சிறுமலையிலும் பயணம் செய்யணும்னு ஆசைதான். மதுரையிலும் போய் எல்லாரையும் பார்க்க ஆசை. 2 முறையாவே மதுரை போக முடியலை. மதுரையில் நிறையவே இருக்காங்க பார்க்க. ஆனால் போகிறப்போ டிக்கெட்டும் சரி, திரும்பறப்போ டிக்கெட்டும் சரி, கடைசியா நாங்க இறங்க வேண்டிய இடத்துக்கு வாங்கிட்டோம். அடுத்த பயணம் போறப்போ நிச்சயம் அங்கே எல்லாம் போயிட்டு சிறுமலைப்பழமும் வாங்கிட்டு வரணும். நான் போயிட்டு வந்ததைப் பத்திச் சீக்கிரமாவே எழுதறேன்.

41 comments:

 1. ஹிஹிஹி, அம்பி, இது எப்படி இருக்கு? ரொம்பவே மிரட்டினீங்க இல்லை? இப்போ உங்க குடுமி என் கையிலே, ஹா ஹா ஹா ஹா!!!!!! :D

  ReplyDelete
 2. //சிறுமலைப்பழமும் வாங்கிட்டு வரணும்//

  சிறுமலை பழமெல்லாம் இப்போது கிடையாது சகோதரி!
  எல்லாம் விருப்பாச்சி மலைப் பழம்தான் சந்தைகளில்!

  ReplyDelete
 3. எப்படி இருந்தது எங்க ஊரு? விபரமாச் சொல்லுங்க. ஐயாம் தி வெயிட்டிங்.

  ReplyDelete
 4. //கல்லிடைக்குறிச்சியிலே போய் அப்பளாம் வாங்கிட்டு வரணும்னு ஆசை//

  appalam vaangittu vanthatha mattum posta potta ungalukku nallathu. :p

  munnadiye solli irunthaa varaverpu ellam thadapudallaa senju irupom illa! hope U met my parents. :)

  //ரொம்பவே மிரட்டினீங்க இல்லை? இப்போ உங்க குடுமி என் கையிலே ஹா ஹா ஹா ஹா!!//
  enna ithu p.s.veerappa sirippu! ethoo villathanam pannitu vanthu irukara maathiri irukke! :)

  ReplyDelete
 5. அட வந்துட்டீங்களா? அம்பி கதிகலங்கறதைப் பார்த்தா பயங்கரமா பத்த வச்சுட்டீங்க போல:)

  ReplyDelete
 6. இத்தனை நாள் தலைவியா இருந்த நீங்க இன்னிக்கு அம்பிக்கு வில்லியாகிட்டீங்க போல?

  என்ன அம்பியோட அப்பா-அம்மா கிட்ட பத்தவெச்சிங்க?....அதச் சொல்லுங்க....பாவம் அம்பி ரொம்ப டென்ஷனா இருக்கறமாதிரி தெரியரது....

  ReplyDelete
 7. வணக்கம் தலைவி! அதியமான் இந்தப் பக்கமா வந்தாரா?

  அப்புறம் அப்பளம் எப்படி இருந்துச்சு. ஊரு எப்படி இருந்துச்சு?

  ReplyDelete
 8. அம்பி அலற்றதைப் பார்த்த விஷயம் ரொம்பவே சீரியஸ் மாதிரித்தான் இருக்கு!

  போனோமா, அப்பளம் வாங்கினோமா, நாலு கோவில் பார்த்தோமான்னு இல்லாம, ஏங்க இப்படியெல்லாம்!

  என்னமோ போங்க!

  நீ ஒண்ணுத்துக்கும் கலங்காதே அம்பி!

  நாங்கள்ல்லாம் எதுக்கு இருக்கோம்!

  :))

  ReplyDelete
 9. மேடம், நிச்சயம எங்க ஊர் சிறுமலை காற்றாவது உங்களுக்கு கிடைத்திருக்கும், ரயிலில் பயணிக்கும் போது..

  மேடம், அது வெள்ளங்கோடு இல்ல, வெள்ளோடு (ஆமா..என் ஊரைத் தானே சொன்னீங்க..ஹிஹி)

  அந்தப் பக்கம் போறதா சொல்லி இருந்தா ரயிலல் வழி மறிச்சு தாரை தப்பட்டையோட ஒரு பெரிய வரவேற்பை தந்திருக்கலாமே, மேடம்

  ReplyDelete
 10. /ரொம்பவே மிரட்டினீங்க இல்லை? இப்போ உங்க குடுமி என் கையிலே//

  பெரிய லெவலில் தான் கொளுத்தி போட்டிருப்பீங்க போல, மேடம்..

  என்னன்னு சொல்லுங்க.

  ReplyDelete
 11. //திண்டுக்கல்லில் ரெயில் நின்னப்போ இறங்கி வெள்ளங்கோடும் போயிட்டு அப்படியே சிறுமலையிலும் பயணம் செய்யணும்னு ஆசைதான்//

  தலைவியே.. திண்டுக்கல்லா..

  சொல்லவே இல்லா.. ம்ம் ..எப்படி இருக்கிறது என் ஊர்..

  திண்டுக்கல்லிலும் குளிராம். அம்மா சொன்னார்கள்.. இப்போது எப்படி இருக்கிறது.


  இரயில் நிலையம் எப்படி இருக்கிறது..


  கேட்கவே சந்தோசம்..ம்ம் சீக்கிரம் ஊருக்கு போய், வண்டி எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும்...

  ReplyDelete
 12. epdiyo kashtapattu padichutten! meedhiya ezhudi vainga IE sari pannitu padikren :) avlo dooram poittu engannan veetukku poliya??

  ReplyDelete
 13. enna naan thaan sariya padikaliya?! :-/

  ReplyDelete
 14. என்ன இங்க ஒரே சத்தமா இருக்கு.....

  வீட்டு அட்ரஸ் கொடுத்த அம்பி குடுமிய புடிச்சு வெச்சு மிரட்ராங்க இல்ல அப்புறம் எந்த தெரியத்துல எல்லாரும் எங்க வீட்டுக்கு போகலியா, எங்க அண்ணன் வீட்டுக்கு போகலியானு கேக்கரீங்க.... தலைவலி... சே...சே... தலைவிய பத்தி இன்னும் தெரிஞ்சுக்கல போல இருக்கு.... கீதா மேடம் நீங்க யாருனு கொஞ்சம் காமிங்க. :-))

  ReplyDelete
 15. வாங்க sp.Vr.சுப்பையா, முதல் முறை வந்திருக்கீங்க, மலைப்பழம் வாங்கிட்டு வந்திருக்கலாமே? :D விருப்பாச்சி உங்க ஊரா? கார்த்திக் பதிவுகளில் உங்களோட பின்னூட்டங்களைச் சந்திச்சிருக்கேன். வந்ததுக்கு நன்றி.

  ReplyDelete
 16. இ.கொ. ஊர்ப்பாசம் ரொம்பவே பிச்சுக்கிட்டுப் போகுது? ம்ம்ம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நிறையவே எழுதறேன்.

  @ஆப்பு அம்பி, என்ன எங்கே எங்கே இருந்தெல்லாம் சிபாரிசு பிடிச்சுட்டு வரீங்களாக்கும்? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது இங்கே, ஹா ஹா ஹா ஹா ஹா,. உங்க குடுமி என் கையிலே இப்போ!!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!!!!!!! (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)

  ReplyDelete
 17. அட, வேதா(ள்), வாங்க கொ.ப.செ. நீங்க போய் மேற்பார்வை பார்த்துட்டு வந்த அதே முல்லைப் பெரியாறு விஷயமாத் தான் நான் போய்ப் பேசிட்டு வந்திருக்கேன். நீங்க செஞ்ச முன்னேற்பாடுகளுக்கு நன்றி.
  அப்புறம் என்ன மெதுவா அம்பி பக்கம் சாயறாப்பலே தெரியுது? கொ.ப.செ. பதவி நீடிக்கணும், பார்த்து! :D

  ஹிஹிஹி, மதுரையம்பதி, மதுரைக்கும் போகத் தான் ஆசை. நீங்க என்ன சொக்கப்ப நாயக்கன் தெருவா? அங்கே எங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருந்தார். இப்போ தெரியலை.
  அப்புறம் அம்பிக்கு இப்போதைக்கு நான் வில்லி தான். ஹா ஹா ஹா ஹா, என்ன விஷயம் சொன்னேன்னு சொல்லவே மாட்டேனே!!!!!!! :D

  ReplyDelete
 18. கைப்புள்ள, அதியமான் எங்கே வந்தார்? அதான் ஆஃப்பீஸ்லே வேலை எல்லாம் செய்யச் சொல்றாங்கன்னு சொன்னீங்களே? இது என்ன நியாயம்னு தெரியலை, நீங்க பாட்டுக்கு ஏதோ ஆஃபீஸ் வந்தோமா, பதிவு எழுதினோமா, பின்னூட்டம் கொடுத்தோமான்னு இருந்தா, இப்போ பாருங்க! :D :D

  அப்புறம் ஊரும் நல்லா இருந்தது. அம்பியோட அம்மா சொன்னதும் சரி, நான் பத்த வச்சதும் சரி, நல்லாவே இருக்கு. ஹா ஹா ஹா ஹா!!!!!!!:D

  ReplyDelete
 19. எஸ்.கே. சார், இந்த அம்பி என்னை மிரட்டும்போது எங்கே போனீங்க? என்ன சார் இது? இப்போ வந்து ரொம்பவே சப்போர்ட் செய்யறீங்க? என்ன கொடுத்தார்? :D :D

  @கார்த்திக், உங்க ஊரைத் தான் சொன்னேன். வெள்ளோடு என்பது தான் தட்டச்சு செய்யும்போது வெள்ளங்கோடுன்னு வந்திருக்கு. நமக்குத் தான் திருப்பிப் பார்க்கிற வழக்கமே இல்லையே, :D அப்படியே போட்டுட்டேன்.
  ஹிஹிஹி, அப்புறம் அம்பியைப் பத்திக் கொளுத்திப் போட்டது எல்லாம் சபையிலே வச்சுச் சொல்ல முடியுமா? அது மட்டும் ரகசியம். ஹா ஹா ஹா ஹா!!!!!!!!!!!!!

  ReplyDelete
 20. மணிப்ரகாஷ்,
  காந்திகிராமம் போகும்போதில் இருந்தே திண்டுக்கல் காத்து சில்லென இருக்குமே, ஊரும் நல்லாத் தான் இருக்கு, பழங்களும் நல்லாத் தான் இருக்கு. முக்கியமா இப்போ சீசனே இல்லாதப்போ வந்த பலாப் பழம் ரொம்பவே அருமை!

  ReplyDelete
 21. போர்க்கொடி, கல்யாணம் ஆகி 4 மாதத்துக்கு மேலே ஆச்சு, இன்னுமா மயக்கம் தெளியலை? உங்க அண்ணன், பாசமலர், தங்கைக்கு ஓர் கீதம் இசைத்தவர் வீட்டுக்குப் போனேனே, போனேனே, வரும் பாருங்க. இருந்தாலும் கொஞ்சம் மயக்கத்தில் இருப்பதால் சரியாப் படிக்கலை தான்.
  அப்புறம் எனக்கு எறும்பு மெயிலில் ஒரு பாட்டி படம் வந்திருக்கு, ஒரு சின்னப் பையனோட, அது யாருனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், இல்லையா? :D

  ReplyDelete
 22. நன்மனம், நன்மனம்,நன்மனம், இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை, நன்மனம்னு பேரை வச்சிட்டு, இப்படியா எல்லாரும் பேசி வச்சுட்டு அம்பிக்கு சப்போர்ட் செய்யறது? அப்புறம், உங்க விலாசமும் கொடுங்க, உங்க வீட்டுக்குப் போய் பத்த வச்சுட்டு வரேன், ஹிஹிஹி, அடுப்பைப் பத்த வைக்கிறேன்னு சொல்றேன். :-)

  ReplyDelete
 23. போர்க்கொடி,காணோம்னு சொன்ன பின்னூட்டமும் இன்னும் சிலவும் எங்கேயோ போய் ஒளிஞ்சிட்டு இருக்கே? அப்புறம் சில பின்னூட்டங்கள் பப்ளிஷ் பண்ணினதுக்கு அப்புறமும் போக மாட்டேன்னு அடம் பிடிக்குதே! ஹிஹிஹி, இந்த மாதிரி அனுபவம் எல்லாம் யாருக்காவது வந்திருக்கா? கொஞ்சம் சொல்லுங்களேன், மண்டை வெடிச்சுடும் போல் இருக்கு. :D

  ReplyDelete
 24. ஆஹா! நமக்கு சப்போர்ட் நிறைய இருக்கு போலிருக்கு. வேதா(ள்) கூட கட்சி மாறியாச்சு!னு உங்களுக்கு இப்போ தான் தெரியுமா?

  எங்க அம்மாவுக்கு போன் போட்டு எல்லா மேட்டரையும் வாங்கிட்டேனே.

  ReplyDelete
 25. உ.பி.ச. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் சரி பண்ணிட்டேன். ஹிஹிஹி, இந்த முறை நீங்க சொன்னதாலே ப்ளாக்கருக்குக் கொஞ்சம் பயம் வந்திருக்கு போல் இருக்கு, வாலைச் சுருட்டிட்டுப் பேசாமல் இருந்தது. இல்லாட்டி இது ஆடுற ஆட்டத்திலே பதிவே காணாமல் போயிருக்கும். ரொம்பவே டாங்ஸு, டாங்ஸு, வர்ட்டா?

  ReplyDelete
 26. ஹா ஹா ஹா, அம்பி, உங்க அம்மாவும் நானும் தனியாப் பேசினதைச் சொல்லி இருக்க மாட்டாங்களே!~!!! அங்கே தான் இருக்கு விஷயமே, அதை என்னிக்குமே சொல்ல மாட்டாங்களே!!!!! சப்போர்ட் என்ன ரிப்போர்ட்? ம்ஹும், இந்த மாதிரி எத்தனை பேர் வந்தாலும் ஒரு கை என்ன 2, 3, 4 கூடப் பார்க்க மாட்டேன்?

  ReplyDelete
 27. என்னது அம்பிக்கு நான் சப்போர்ட்டா? இப்டியெல்லாம் யாராவது சொன்னா அது எப்டி நீங்க நம்பலாம் அப்புறம் என்ன நீங்க தலைவி?

  @அம்பி,
  இப்டியெல்லாம் சொன்னா தலை(வலி)வி ஆப்பு வைக்கறத நிறுத்திடுவாங்களா என்ன?(ஹிஹி ஏதோ என்னால முடிஞ்சது)

  ReplyDelete
 28. ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, அம்பி, இதோ பாருங்க, இங்கே பாருங்க, வேதா(ள்)ன்னா வேதா(ள்) தான். கொ.ப.செ. ன்னு நிரூபிச்சுட்டாங்க. இனி ஒருத்தர் ஒருத்தரா பின் வாங்கி என் பக்கம் வருவாங்க பாருங்க.
  @வேதா(ள்), டாங்ஸு, டாங்ஸு.

  ReplyDelete
 29. எனக்குத் தெரிஞ்சு போச்சு!

  நீங்க அம்பி வீட்டுக்குப் போயிருந்தப்ப, அம்பி சின்ன வயசுல குடுமி வெச்சுகிட்டு இருந்த ஃபோட்டோவை நிங்க லபக்குன்னு அபேஸ் பண்ணி வந்துட்டீங்க!

  இப்ப அம்பி குடுமி உங்க கையுல!

  சரியா!
  :))))

  ReplyDelete
 30. veerappa kadai romba nalaikku apparama sathamaa irukku! kallidaikurichila edho kalavaramame? apdiya thalaivaliye?

  ReplyDelete
 31. ennadhu 4 maasama? paati nu solradhu sariya thaan irukku, thedhi kizhamai neram kaalam kooda teriala! 2 masam thaan agaradhu, edho paati pavam namala paakama thavichu iruppangle nu photo anupinna, idhu tevai thaan.

  skm manni pondra mukiya urupinargale naan kutti ponnu nu certify paniyachu, paati enna sonna enna inime?? :))

  ReplyDelete
 32. // பொற்கொடி said...
  ennadhu 4 maasama? paati nu solradhu sariya thaan irukku, thedhi kizhamai neram kaalam kooda teriala! 2 masam thaan agaradhu, //

  ஆமாம் உங்களுக்கு 2 மாதம் :-))
  அவருக்கு 2 மாதம் - மொத்தம் 4 மாதம் ஆகிறது அல்லவா ?

  தலைவி சார்பாக ஒரு சப்பைக்கட்டு
  :-))) :-(((

  ReplyDelete
 33. அம்பி குடிமி ஏற்கனவே அமெரிக்க போயாச்சு உங்க கையிலே இருக்குன்னு உதார்ல்லாம் விடவேணாம்.வேண்டாம் எங்க அம்பியைப்பத்தி எடாகூடாம நினைச்சாலே போதும் அவ்வளவுதான்.ஏற்கனவே ஒருத்தருக்கு கை துக்க முடியலே. ஞாபகம் இருக்கட்டும் அம்பி நீ கவலைப்படாதே.

  ReplyDelete
 34. எஸ்.கே.சார், என்ன பாசம் பிச்சுட்டுப் போகுது அம்பி மேலே? ம்ஹும் வேணாம், அப்புறம் தொண்டர் படை வந்து கலக்கிடுவாங்க, உங்க பதிவிலே பின்னூட்ட மழையாலே! நீங்க ஒருத்தர் ஒருத்தரா பதில் சொல்லவே ஒரு வாரம் ஆயிடும். :D

  ReplyDelete
 35. போர்க்கொடி, என்னது எஸ்.கே.எம். மன்னியா? அதான் நாத்தனார் வேலையைக் காட்டறாப்புலயா? விடிஞ்சது. எஸ்.கே.எம்முக்கும் எனக்கும் உள்ள பாசத்தைப் பத்திப் பிரியா கிட்டே கேளுங்க, சொல்வாங்க, அப்போ பிரியாவுக்குப் புல்லரிக்க ஆரம்பிச்சது, இன்னும் சொறிஞ்சுட்டேத் தான் பதிவு எழுத முடியுதாம். :D

  ReplyDelete
 36. @போர்க்கொடி,அப்புறம் நவம்பரிலே கல்யாணமா? டிசம்பரிலேயா? நவம்பர்னு நினைச்சுட்டு 4 மாசம்னு சொன்னேன். சரி, இப்போ என்ன மூன்று மாசமாகப் போகுது இல்லை?

  ReplyDelete
 37. தி.ரா.ச. சார், என்னதான் நீங்க அம்பி பக்கம் பேசினாலும், என்னோட தொண்டர்களும், மற்றக் குண்டர்களும் என் பக்கம்தான் பேசுவாங்க, பாருங்க, எஸ்.கே.எம்.,வேதா(ள்), கார்த்திக், மணிப்ரகாஷ் இவங்க 4 பேர் கிட்டேயும் சொன்னால் போதும் பின்னூட்ட மழையாலே திணற அடிச்சுடுவாங்க. அப்புறம் எல்லாருக்கும் பதில் சொல்லணும். ஹிஹிஹி, நமக்குத் தான் வரலை. உங்களுக்காவது வரட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணம் தான்.
  அப்புறம் அது என்ன சார்? மஹா பெரியவாளைப் பத்தி எழுதிட்டுக் கதவை இறுக்கி மூடி வச்சிருக்கீங்க. அம்பி செய்யற "டகால்டி" வேலை எல்லாம் செஞ்சும் திறக்கவே இல்லை. கொஞ்சம் பெரிய பின்னூட்டமாப் போச்சோ? ரொம்ப நாள் கழிச்சு அம்பி பெர்மிஷன் கொடுத்து வந்திருக்கீங்க, கலைஞர் வீரமணி கிட்டே கேட்டுட்டு வந்தாப்பலே! :D

  ReplyDelete
 38. ஹிஹிஹி, தி.ரா.ச. சார், இப்போத் தான் துக்ளக் படிச்சுட்டு வந்தேன். அதனோட தாக்கம் தான் போன பின்னூட்டப் பதிலில் வந்திருக்கு. வேறே ஒண்ணும் இல்லை. :D ஹிஹிஹி அ.வ.சி.

  ReplyDelete
 39. ஹை லதா, வாங்க வாங்க, உங்க பின்னூட்டம் அன்னிக்கு எங்கேயோ போயிருந்தது. காணோமேன்னு நினைச்சுட்டே மத்தவங்களுக்குப் பதில் கொடுத்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு ஆதரவு தெரிவிச்சதுக்கு. அதிலே பாருங்க, நீங்க வந்து ஒரு 2 வயசைக் குறைச்சாலும் குறைச்சீங்க, இந்த ப்ளாக்கரிலே என்னோட பிறந்த தேதியைக் கூட ஏத்துக்க மாட்டேன்னு ஒரே அடம். ஹிஹிஹி, ரொம்ப ரொம்ப டாங்ஸு, டாங்ஸு ரொம்ப நாளாச் சொல்லணும்னு இருந்தேன்.

  ReplyDelete
 40. நான் அனுப்பியிருந்த முந்தைய பின்னூட்டம் :
  ===================================
  அன்புள்ள அம்பி, உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் சொல்லுங்கள். எங்களிடம் ஆட்டோ மற்றும் சுமோ உள்ளன.
  :-)
  ===================================
  என் முந்தைய பின்னூட்டம் ஏன் வரவில்லை என்று இப்போதுதான் புரியுது. தலைவி அன்னப்பறவை மாதிரி ஆகிட்டாங்க, செலக்டிவ் ..........
  :-(((

  ReplyDelete
 41. லதா, ஏற்கெனவே கைலை, மானசரோவர் போயிட்டு இப்போ இந்தத் தருமமிகு சென்னை வெயிலில் தகிச்சுட்டு இருந்த எனக்கு உங்களோட "அன்னப்பறவை" உபமானம் ரொம்பவே குளிர்ச்சி அடையச் செய்தது.

  ஹிஹிஹி, இதிலேயும் பாருங்க உங்க 2 விமரிசனத்திலே நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டு நான் ஒரு அன்னப் பறவைதான்னு நிரூபிச்சுட்டேன், ஹா ஹா ஹா ஹா ஹா ஹா? சிரிப்பு போதுமா? :D

  ReplyDelete