ஊத்துக்காட்டில் இருந்து திருக்கருகாவூர் சென்றோம். சாலை ரொம்பவே மோசம். ரொம்பக் குறுகல் மட்டும் இல்லாமல் செப்பனிடப் படாத சாலைகள். சில இடங்களில் இப்போது தான் சாலை போட ஆரம்பித்து உள்ளார்கள். ஆகவே சற்றுச் சுற்றிக் கொண்டு போக வேண்டி இருந்தது. வயல்களில் நெல் அறுப்புக்குத் தயாராக இருந்தது. சற்றே காய்ந்த வயல்கள். சில இடங்களில் பயறு, உளுந்து தெளிப்பு நடந்து கொண்டிருந்தது. தஞ்சை ஜில்லாவில்
தை மாதம் அறுப்பு முடிந்தால் பிறகு தண்ணீர் வந்தால் தான் நடவு வேலை
பார்க்க முடிகிறது. இதுவே மதுரைப் பக்கம் பெரியாறுப் பாசனம் என்றாலோ,
திருநெல்வேலிப் பக்கம் தாமிரபரணிப் பாசனம் என்றாலோ மூன்று போகமும்
நெல் போடுவார்கள். இப்போ மதுரைப்பக்கம் மூன்று போகம் போட
முடிவதில்லை என என் உறவினர் சொல்கிறார்கள். திருநெல்வேலியில் இன்று வரை மூன்று போகமும் நெல் போடுகிறார்கள். மதுரைப்பக்கம்
தானியங்கள் போடவென்றே "புஞ்சைக்காடு" தனியாக ஒதுக்கப் பட்டிருக்கும். இங்கே மாதிரி நன்செய் வயல்களிலேயே போட மாட்டார்கள். அது பத்தி இந்தப்பதிவு இல்லை. :D
திருக்கருகாவூர் கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே உள்ளது. கோவில் மிகப் பழமை வாய்ந்த கோவில் என்கிறார்கள். பல முனிவர்களும், ரிஷிகளும் பூஜித்து வந்திருக்கிறார்கள். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதல் தலமாகவும் உள்ளது. இங்கே தல விருட்சம் முல்லை. முல்லைவனமாக இருந்த இடத்தில்
இறைவன் சுயம்புவாகப் புற்று மண்ணினால் லிங்க வடிவாய்த் தானாக ஏற்பட்டான் என்றும், முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டிருந்த காரணத்தால் இறைவனின் திருநாமம், "முல்லைவன நாதர்" எனவும்
கூறுகிறார்கள். முல்லைக்கொடி சுற்றிய அடையாளம் லிங்கத் திருமேனியில்
இன்னும் காணப்படுகிறதாயும் சொல்கிறார்கள். அலங்காரம் செய்திருந்ததால் நம்மால் பார்க்க முடிவதில்லை. இறைவனுக்கு அபிஷேஹம் செய்வது கிடையாது. அபிஷேஹப்பிரியரான சிவனுக்கு இங்கே அபிஷேஹத்திற்குப் பதில் புனுகு சாத்துகிறார்கள். இந்தப் புனுகு சார்த்துதல் பக்தர்களின் வேண்டுகோள் படியும் நிறைவேற்றப் படுகிறது. புனுகு சார்த்த முறைப்படி கோவிலில் பணம் கட்டிவிட்டால் நாம் சொல்லும் நாள் அன்று புனுகு சார்த்திப்பிரசாதம் அனுப்புவார்கள், அல்லது நாமே அங்கே போய் புனுகு
சார்த்தச் சொல்லியும் தரிசிக்கலாம். இறைவியின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை" அல்லது "கரு காத்த நாயகி" ஆகும். இவள் காலடியில் வந்து வேண்டிக் கொண்டால் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவம் நல்லபடியாக முடியும் எனவும், இங்கே வந்து வேண்டிக் கொள்பவர்களுக்குக் குழந்தை பிறக்கும் எனவும் ஐதீகம் இருக்கிறது. இறைவன் சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் நடுவே அருமைப்புதல்வன் ஆன "கந்தன்" சன்னதி உள்ளது. தன்னிரு மனைவியருடன் காட்சி அளிக்கிறான் தமிழ்க்கடவுள் ஆன கந்த
வேள். ஆகவே இந்தக் கோவில் "சோமாஸ்கந்த" வடிவிலும் இருக்கிறபடியால் மேலும் சிறப்பு வாய்ந்தது. "சோ" எனப்படும் சிவஸ்வரூபமும், "ஸ்கந்தன்" எனப்படும் கந்த ஸ்வரூபமும், "உமா" எனப்படும் சக்தி ஸ்வரூபமும்
ஒருங்கே இணைந்த இந்தக் கோவிலில் தரிசிப்பவர்களுக்குப் பிள்ளை
இல்லாதவர்க்குப் புத்திரப் பேற்றையும், கருவைக் காத்தருளுகிற அம்பிகையின் அருளும் கிடைக்கிறது. சத்தாகிய சிவனும், சித்தாகிய அம்பாளும், ஆனந்தமாகிய ஆறுமுகனும் இணைந்து நமக்கெல்லாம்
சச்சிதானந்தனாக அருள் பாலிக்கிறார்கள். அப்பர், சுந்தரர், திருஞானசம்மந்தர்
ஆகியோர் இந்த இறைவனைத் துதித்து இயற்றிய சில பாடல்கள் தேவாரத்திலும், திருத்தாண்டவத்திலும் உள்ளன. இனி இந்தக் கோயிலின் தல வரலாறு, நாளை காண்போமா?
ஆம், அந்த ரோடு ரொம்பவே படுத்தும்.....
ReplyDeletevery interesting.Maami, yella pathivum padikiren.Comment podalai nu kovichukaadheenga.Please.:)
ReplyDeleteகீதா மேடம், இந்த சாலைகள் பற்றியே நான் ஒரு தனி பதிவு போடணும் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆன உங்களோட முதல் பாரா என்ன எழுத தூண்டிருச்சு..
ReplyDeleteஇம்.. புதிது புதியதாய் தலங்களை சொல்றீங்க.. போக முடியலைனாலும் உங்களோட வரிகள் நம்மள அப்படியே ஒரு உலா வரவிட்டது.
மறைந்த சங்கீத மேதை திரு மதுரை சோமசுந்தரம், திருக்கருகாவூர் மாப்பிள்ளை ஆவார்.
ReplyDeleteஇறைவியின் சன்னிதானம் 2 வருடங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீபிரியாவினால் மிகுந்த பொருட்செலவில் புதிப்பிக்கப்பட்டது.
மற்றும் ஒரு எதேச்சையான செய்தி. உங்கள் திருக்கருகாவூர் பற்றிய பதிவை படிக்கும் அதே நாளில் திருக்கருகாவூரில் வாழும் என் சித்தப்பாவிற்கு 80வது பிறந்த நாள், சென்னையில் கொண்டாடப்பட்டது.
உங்கள் கும்பகோணம் பயணத்தின் போது, திருமியச்சூர் (பேரளம் அருகில்) சென்றீர்களா? இறைவி லலிதா திரிபுரசுந்தரி இறைவன் மேகநாதருடன் உறையும் இடம். வாக்வாசினிகள் (தேவதைகள்) லலிதா சகஸ்ரநாமத்தை இங்கேதான் இயற்றியதாக ஐதீகம். இறைவி லலிதா திரிபுரசுந்தரிக்கு வேறு எங்கும் கோவில் இல்லை என்பார்கள்.
பொதுவாவேத் தஞ்சை ஜில்லா(பழைய) பூராவும் இந்தப் பிரச்னைதான் மதுரையம்பதி!
ReplyDelete@எஸ்.கே.எம். கோபம் எதுக்கு? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்க வீட்டுக்குப் போயிட்டுப் பேச முடியாமத் திரும்பிட்டேன், அதான் வருத்தம். வேறே ஒண்ணும் இல்லை.
எழுதுங்க, கார்த்திக், உங்களோட எழுத்துப் பலராலும் கவனிக்கப் படுகிறது. அதனால் நீங்க எழுதினா அதன் தாக்கம் இன்னும் கொஞ்சம் ஆக்கபூர்வமா இருக்கும்.
ReplyDelete@பாலா, மதுரை சோமு, மதுரையில நாங்க குடி இருந்த எங்க மேல ஆவணி மூலவீதி வீட்டுக்குப் பின்னாலே தான் இருந்தார். அவர் பிரபலம் அடையறதுக்கு முன்னாலே இருந்தே எங்க அப்பா, அம்மாவிற்கு நல்லாவே தெரியும். அவரோட அசுரத் தனமான சாதகங்களைக் கேட்டிருக்கிறேன்.
அப்புறம் திருமீயச்சூர் போயிட்டு வந்து அது பத்திப் பதிவும் போட்டிருக்கேன். ஆர்க்கைவிஸில் தேடணும். பார்த்துச் சொல்றேன், எந்த மாசம்னு, அநேகமாய் ஆகஸ்ட் 2006-ல் எழுதி இருப்பேன்.அப்புறமா வந்தது எல்லாம் கைலைப் பயணத் தொடர். அதிலே வேறு ஏதும் எழுதவில்லை.
பாலா, உங்களோட பதிவுக்குப் போனேன், உங்க சித்தப்பாவோட ஆசீர்வாதங்களை உங்க மூலமாய்ப் பெற்றுக் கொள்கிறேன். அது சரி, உங்க வயசு 250, சித்தப்பாவுக்கு 80 தானா? நீங்க பிறந்து 170 வருடம் கழிச்சுப் பிறந்த சித்தப்பாவா? :D
ReplyDeleteஉலா வரும் ஒளிக்கதிர் நல்லா இருக்கு. மற்ற பதிவுகளையும் படிச்சாச்சு! ஆனா ஒரு பின்னூட்டம் தான் குடுப்பேன். :)
ReplyDelete//yella pathivum padikiren.Comment podalai nu kovichukaadheenga.Please//
@SKM, அதேல்லாம் ஒன்னும் கோச்சுக்க மாட்டங்க. ஏதாவது பிரச்சனைனா என் பெயரை அல்லது பொற்கொடி பெயரை சொல்லுங்க. கப்சிப் ஆயிடுவாங்க! :D
//அது சரி, உங்க வயசு 250, சித்தப்பாவுக்கு 80 தானா? நீங்க பிறந்து 170 வருடம் கழிச்சுப் பிறந்த சித்தப்பாவா? //
@geetha madam, வயசை பத்தி நாம வாயே தொறக்ககூடாது! அப்புறம் நான், veda, syam, karthik, maniprakash, latha, porkodi, SKM, TRC sir etc... ellarum நிறைய பேச வேண்டி இருக்கும்! :)
//geetha madam, வயசை பத்தி நாம வாயே தொறக்ககூடாது! அப்புறம் நான், veda, syam, karthik, maniprakash, latha, porkodi, SKM, TRC sir etc... ellarum நிறைய பேச வேண்டி இருக்கும்! :) //
ReplyDeleteஆமாம் ஆமாம். அம்பி சொன்ன சரியாத்தான் இருக்கும்.
:))
//geetha madam, வயசை பத்தி நாம வாயே தொறக்ககூடாது! அப்புறம் நான், veda, syam, karthik, maniprakash, latha, porkodi, SKM, TRC sir etc... ellarum நிறைய பேச வேண்டி இருக்கும்! :) //
ReplyDeleteஆமாம் ஆமாம். அம்பி சொன்ன சரியாத்தான் இருக்கும்.
:))
மேடம் நானும் திருக்கருக்காவூர் போயிட்டு வந்த அனுபவத்தை எழுதியிருக்கேன்.
ReplyDeleteதிருத்தல வலம் 01
("குமர காவியத்தைப்" பத்தி நானும் சொல்ல மாட்டேனே!)