நாளை சிவராத்திரி. முதலில் சிவராத்திரி
என்றால் என்ன? சிவபெருமான் லிங்க
வடிவாகத் தோன்றிய காலம் தான்
லிங்கோற்பவ காலம் என்று சொல்லப்
படுகிறது. அந்த லிங்கோற்பவம் நடந்த
நேரம் இரவு 11-30 மணிக்கு மேல் 1-00
மணி வரையாகும். லிங்கோற்பவம் நடந்த
தலம் திருஅண்ணாமலை ஆகும்.
சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் எல்லா
ஞான நூல்களிலும், முக்கியமாகத் திருமூலர்
திருமந்திரத்திலும் சொல்லி இருக்கிறார்கள்.
சம்ஸ்கிருதத்தில் ஸ்காந்த புராணம் என்னும்
கந்த புராணத்திலும் சொல்லப்
பட்டிருக்கிறது. அது என்ன என்றால்
வழிபாடு மூன்று வகைப்படுத்தப்
பட்டிருக்கிறது. அவை உருவ வழிபாடு.
இப்போது நாம் செய்து வருவது உருவ
வழிபாடு ஆகும். இன்னொன்று அருவுருவ
வழிபாடு. மற்றது அருவ வழிபாடு ஆகும்.
அருவ வழிபாடு என்பது உருவமற்ற
பரம்பொருளைக் குறிக்கிறது என்று நம்
எல்லாருக்கும் நன்கு தெரியும்.
"பார்க்கும் பொருளெல்லாம்
பரம்பொருளாகப் பார்ப்பது" என்பதும்
அருவ வழிபாட்டைச் சேர்ந்தது ஆகும்.
எல்லாமே இறைவன் என்ற நிலையை
ஞானிகளும், மஹான்களும் தான் அடைய
முடியும் என்பதால் நம்மைப் போன்ற
சாமானிய மனிதருக்காக ஏற்பட்டது உருவ
வழிபாடு. இரண்டுக்கும் இடைப்பட்டது
அருவுருவ வழிபாடு. இதில் உருவம்
இருக்கும். ஆனால் அவயங்கள்
இருக்காது. அருவமாக இருக்கும். இந்த
அருவுருவ வழிபாட்டைக் குறிப்பது தான்
சிவலிங்கத்தை நாம் வழிபடுவது ஆகும்.
இதை எப்படிச் சொல்வது என்றால்
இவ்வுலகாகிய பூமியைப் பெண்ணாக
எடுத்துக் கொண்டால் ஆகாயம் என்பது
அதனுடன் இணைந்த ஆணாகும். அது
போல் லிங்கம் இருக்கும் பீடம்
ஆவுடையாள் எனப்படும் அம்பிகை
என்றால் லிங்கமாகிய பாணம்
சர்வேஸ்வரன் ஆகிறான்.
ஆகாயத்தை நாம் தினமும் பார்க்கிறோம்.
அதன் வடிவம் என்ன? நம்மால் சொல்ல
முடியாது. வடிவம் புலப்படுவதும் இல்லை.
ஆனால் கவிழ்த்து வைக்கப் பட்ட
மரக்காலைப் போல் இருக்கும் இந்த
ஆகாயத்துக்கு இது தான் உருவம் என
நாம் நினைத்துக் கொள்கிறோம். இவ்வுலகம்
பூராவும், அனைத்துமே இந்த ஆகாயம்
என்னும் கூரையின் கீழ் தான்
இருக்கின்றன, நாம் உட்பட. இந்த அண்ட
லிங்கமாகிய ஆகாயத்துக்கு அபிஷேஹம்
செய்ய ஏற்பட்டவை தான் கடல் கள்.
ஆகாய லிங்கம் எவ்வளவு பெரிதோ
அத்தனைக்கும் தேவைப்படும் அளவு நீர்
நிறைந்த சமுத்திரங்கள் இருக்கின்றன.
அபிஷேஹம் முடிந்த ஆகாய லிங்கத்திற்கு
நட்சத்திரங்களே பூக்களாகவும்,
மாலைகளாகவும் ஆகின்றன. ஆடையோ
எனில் எட்டுத் திக்குகளாம். இதைத் தான்
திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லி
இருக்கிறார். (எனக்குத் திருமந்திரம்
பூராவும் தெரியாது. சிவராத்திரி
மஹிமையில் படித்தது பற்றித் தான்
எழுதுகிறேன்.) சைவத் திருமுறைகளில்
பத்தாவது திருமுறை எனப்படும் திரு
மந்திரத்தில் திருமூலர் சொல்கிறார்.
"தரை உற்ற சக்தி, தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே."
என்று லிங்கத்தின் அருவுருவத்தை
வர்ணிக்கிறார். திருமூலர் சிவனை நேரில்
கண்டவர் எனக் கூறுவார்கள். 63
நாயன்மாரிலும் ஒருத்தராகப் போற்றப்
படுகிறவர். இவரது காலத்தைப் பற்றிய
தகவல்கள் சற்று முரணாக இருக்கின்றது.
திருமூலரின் வாக்குப்படி நாம் அனைவரும்
இருப்பது ஒரே கூரையின் கீழ்.
பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின்
அடிமுடியைத் தேடியதும், பிரளய காலம்
முடிந்து இரவு நேரத்தில் 4 ஜாமமும்
அம்பிகை இறைவனைப்பூசித்ததும்
சிவராத்திரி எனச் சொல்லப் படும் மாசி
மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று தான்.
பொதுவான நியதிப்படி பகல் பொழுது
ஈசனுக்கும், இரவுப் பொழுது
அம்பிகைக்கும் உரியது. சிவராத்திரி அன்று
மட்டும் அம்பிகை தனக்கு உரிய இரவை
ஈசனுக்கு அளித்து அவர் பெயரால்
வழங்கச் செய்கிறாள். சிவம் வேறு அறிவு
வேறு அல்ல என்பார்கள். அறிவே சிவம்.
நம்முடைய அறிவால் அறிந்து கொண்ட
சிவனைப் போற்றித் துதிப்போம்.
"தென்னாடுடைய சிவனே போற்றி,
போற்றி!!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
போற்றி!!"
அரிய தத்துவங்கள் பலவற்றை அனைவரும் அறியும் வண்ணம் அழகு தமிழில் விளக்கிய உங்களுக்கு நன்றி.
ReplyDeleteநமசிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
சிவபெருமான் க்ருபை வேண்டும் - அவன் திருவடி தொழ வேண்டும் வேறென்ன வேண்டும்..
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்.
ஆகிரா
நமசிவாய வாழ்க!
ReplyDeleteநாதன் தாள் வாழ்க!
நல்ல பதிவு, குறிப்பாக ஆகாய லிங்கம் பற்றிய விவரங்கள் அருமை.
மொக்கை போடாம நீங்க கூட திருந்தியாச்சா? :)
எஸ்.கே.சார், ரொம்பவே நன்றி, உங்க கருத்துக்கும், நன்றிக்கும்.
ReplyDelete@ஆகிரா, உங்களோட முந்தைய பின்னூட்டத்தைத் (ஒரு வாரம் முன் கொடுத்தது) தேடித்தேடி அலுத்துப் போச்சு. எங்கே போய் மாட்டிட்டு இருக்கோ தெரியலை! ரொம்பவே நன்றி,வந்ததுக்கு.
@ஆப்பு அம்பி, அதான் நான் பலமுறை சொல்லிட்டேனே, என்னோட ஆன்மீகப் பக்கத்தைத் தனியாப் பிரிச்சுப் பக்கத்திலேயே எழுதிட்டு வரேனே, ஒருமுறை கூட அங்கே வரலை, வந்துப் பின்னூட்டம் கொடுக்கிறது என்னவோ மொக்கைனு சொல்ற இந்தப் பக்கத்தில் தான். இதிலே மொக்கை ஸ்பெஷலிஸ்ட் ஆன நீங்க என்னை மொக்கைனு சொல்லறீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹிஹிஹி, எஸ்.கே.எம். உங்களுக்காகத் தான் இந்த க்ர்ர்ர்ர்ர்ர்ர் போட்டிருக்கேன். பிடிச்சிருக்கா?
அருமையான பதிவு தலைவி...
ReplyDeleteவிளக்கங்கள் எல்லாம் ரொம்ப நல்லா புரிகிற மாதிரி உள்ளது.
எனக்கு தெரிஞ்சதெல்லாம் சிவராத்திரி அன்றைக்கு டிவியில் ரெண்டு படம் போடுவாங்க அவ்வளவு தான்..
உங்க பதிவின் மூலம் பல விஷயங்கள் தெரிந்தது...
நன்றி தலைவி நன்றி
சிவ ராத்திரியை ஒட்டி நல்ல பதிவுங்க மேடம்
ReplyDeleteஆமா என்ன மேடம், நம்ம பக்கம் ஆளேயே காணோம்
Om Nama Shivaye! Om Nama Shivaye! Romba nalla sollureenga madam. Periya vishayathe nalla break panni user-friendly thareenga!! Well done...
ReplyDeleteThevaram pathi konjam eluthunga madam....I really want to know about it.
anyhow Happy Shivarathri!
அருமை அருமை நல்ல விஷ்யங்களை எளிதாகச்சொல்லுகிறீர்கள்/
ReplyDeleteநேயத்தை நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பருக்கும் மன்னன்னடிபோற்றி.
என் பேரனுடைய பெயர் நிமலன்
வாங்க கோபிநாத், இளைய தலைமுறை, (ஹிஹிஹி, என்னைச் சொல்லிக்கிறேன்) தெரிஞ்சுக்கிறதுக்காக இந்த விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக் கொடுக்கணும்னு ஒரு ஆசை. புரிஞ்சுக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்கன்னு இப்போத் தான் தெரியுது. ரொம்பவே நன்றி.
ReplyDeleteகார்த்திக், இன்னிக்கு என்ன பதிவு போட்டிருக்கீங்க? அது எப்படிங்க ஆஃபீஸ் வேலையும் பார்த்துட்டு பதிவும் போட்டுட்டு? தூங்கவே மாட்டீங்களா? ரொம்பவே ஃபாஸ்டா இருக்கீங்க!
ReplyDeleteசூடான பூனை! (தமிழிலே எப்படி இருக்கு? பேரை மாத்திடுவீங்கன்னு நினைக்கிறேன். :D) தேவாரம் பத்தி எழுத என்னோட வாழ்நாள் போதுமான்னு தெரியலையே? ரொம்பப் பெரிய ஆசைகள் எல்லாம் வச்சிருக்கீங்க!
ReplyDelete@தி.ரா.ச. சார், அம்பி ஒரு வழியா விட்டாரா உங்களை? அதான் பின்னூட்டம் வந்திருக்கு. :D
அரியதொரு தத்துவத்தை எளிதாக விளக்கியிருக்கிறீர்கள். 'வெளிதானே அளப்பருநன் மேனியாக" விளங்குபவனல்லவா அவன்?
ReplyDelete