எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 20, 2007

214. தமிழைக் காப்பாற்றிய தாத்தா

நேற்றுத் "தமிழ்த் தாத்தா" உ.வே.சாமிநாத ஐயரவர்களின் பிறந்த நாள். தமிழுக்கு அவர் செய்த தொண்டு மிகச் சிறந்தது. இன்றைக்கு நாம் படித்து விவாதிக்கும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியும் இன்னும் எண்ணற்ற தமிழ் நூல்களையும் தேடிக் கண்டு பிடித்துத் தன்
சொந்த செலவிலே தமிழிலே புத்தகங்களாக அச்சிட்டுப் பதிப்பித்தவர்.
இதற்காக அவர் ஊர், ஊராக அலைந்து, திரிந்து சுவடிகளையும், ஏடுகளையும்
சேகரம் செய்தார். சிலர் கொடுப்பார்கள். சிலர் கொடுக்க மாட்டார்கள், ஏளனம்
செய்வர். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன் வாழ்நாள் பூராவும் தமிழைப் பற்றியும், தமிழ்மொழிக் காப்பியங்களைப் புதுப்பிப்பது தவிர வேறு சிந்தனை ஏதும் இன்றி இருந்தவர் இவர். இவருடைய ஆசிரியர் மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். தரும புரம் ஆதீனத்தின் மஹாவித்வான் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் அந்த ஆதினத்திலேயே உ.வே.சாமிநாத ஐயரும், திருப்பனந்தாள் காசி மடத்தின் தலைவராய் இருந்த "குமாரசாமித் தம்பிரானும்" படித்தார்கள். ஐயரவர்களே எழுதிய "நினைவு மஞ்சரி"யில் இருந்து சில பகுதிகள் இப்போது எழுதுகிறேன்.

படிப்புக்குப் பின் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் வேலையில் சேர்ந்த தமிழ்த்தாத்தா அவர்கள் தன் வருமானம் எல்லாவற்றையும் தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் செலவிட்டார். இவ்வாறு இவர் சிலப்பதிகாரப் பதிப்புக்கு அப்புறம் "சீவக சிந்தாமணி"யை முதன் முதல் 1891
-ம் ஆண்டு பதிப்பித்தார். அப்போது பிரான்ஸில் இருந்து இவருக்கு 1891-ம்
ஆண்டு ஒரு கடிதம் வருகிறது. விலாசம் தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதப்
பட்டிருக்கிறது. வியப்புடன் கடிதத்தைப் பிரிக்கிறார் ஐயரவர்கள். அதிலே
"வின்ஸோன்" என்னும் பேராசிரியர் ஒருவர் ஐயரவர்களின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அது என்ன என்றால்:

"சிந்தாமணியாம் சிறப்புடைய காப்பியமே
பொன்றாதின் மாலை பொருந்தி வரக்- கண்டேன்
சிலப்பதிகாரமுதற் சீர் நூல்கள் நான்கும்
அளித்தலாம் என்மர் அறைந்து."

(கூடியவரை அந்தப் பழைய தமிழைப் பிரித்துப் பொருள் புரியுமாறு எழுதி
உள்ளேன்.)அந்த வின்சோன் எழுதி இருக்கிற தமிழ் எப்படினு புரியுதா பாருங்கள்! :D

"நீர் 1887-ம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்றும் நீர் செய்த வுலகோர்க்குப் பெரியவுபகார
மறிந்தோமென்றும், இன்னும் பழைய புத்தகங்க ளச்சிற் பதிப்பித்தற்
குரியவாயுண்டென்றும் உமக்கு நாமெழுதெவேண்டுமென் றெண்ணிக்கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களிகூர்ந்து வாழ்வோ மெப்போதென்றால் சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையாபதி யென்னும் வேறு நாற்பெருங்காப்பியங்கள் பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம்!"

"சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ம்
வருஷத்தில் அதின் முதற் காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்
றறிகின்றோ மானா லிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்த ரெல்லோருங் கேட்போர்."

ஐயரவர்கள் ஆராய்ச்சி செய்யக் கல்லூரியில் பணியாற்றிய நேரம் தவிரத் தன் வீட்டிலேயே மேற்கொண்டார். அதுவும் ஒரு முறை மேற்குறிப்பிட்ட வின்சனின் மாணவர் ஒருவர் ஐயரவர்களைக் காண வந்தபோது வீட்டின் மொட்டை மாடியில் கீற்றினால் ஆன கொட்டகையில் வேலை செய்யும் ஐயரைக் கண்டு வியந்து அவர், "இப்படி மேலே வெயில் அடிக்கும்
இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களே? வேறு நல்ல இடத்தில்
இருந்து கொண்டு செய்யக் கூடாதா? " எனக் கேட்கிறார். அதற்கு ஐயரவர்கள்
கூறுகிறார்:"என் நிலைக்கு இது தான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப் படும் வித்வான்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என் இளமையில் வீட்டுத் திண்ணையிலும், மரத்தடியிலும் இருந்து கொண்டு படித்து வந்த மகாவித்வான்களைக் கண்டிருக்கிறேன்." எனக் கூறுகிறார். இது அவரின் எளிமைக்கு ஒரு சான்றாகும்.

ஹிஹிஹி, மேலே எழுதி இருக்கும் வின்சோனின் கடிதத்தில் உள்ள விஷயங்களைப் படிச்சுப்புரிந்து கொள்ள முயற்சிப்போருக்குப் பின்னூட்டங்கள் நம் தொண்டர் படையால் அளிக்கப் படும். மீதி நாளை கட்டாயம் தொடரும். எதைத் தொடரப் போறேனோ தெரியலை,
கடவுளே, காப்பாத்து!

24 comments:

  1. Hiyaaaaa! நான் தான் பஷ்ட்டு!

    யப்பா! எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காரு ஐயரவர்கள். இப்ப சொல்றேன், இது நல்ல பதிவு!

    அவரும் ஆபிஸ்ல/வீட்டுல உக்காந்து பிளாக் அடிச்சுண்டு இருந்தா நமக்கு இந்த அரிய நூல்கள் எல்லாம் கிடைச்சு இருக்குமா?

    சரி ஒரு சந்தேகம், அவருக்கு வந்த லெட்டர் எப்படி உங்க கிட்ட வந்தது? ஆக தமிழ் தாத்தா உங்க கிளாஸ்மெட்டு. உங்க வயசு மட்டும் 16, இல்லையா?

    ReplyDelete
  2. இந்தமாதிரியெல்லாம் கஷ்டப்பட்டு வெளிக்கொணர்ந்த தமிழ் இன்று அரசியல்வாதிகளால் எப்படி உபயோகமாகிறது......மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது

    ReplyDelete
  3. வாவ். உ.வே.சா பற்றிய அருமையான நினைவுறல் பதிவு மேடம்! இந்த மாதிரி தன்னலமற்று தமிழுக்கு சேவை செய்பவர்கள் மிகச் சிலரே!

    ReplyDelete
  4. நல்ல பதிவு...

    அவருடைய எளிமையையும், தமிழ் பற்றையையும் உங்களின் மூலம் தெரிந்துக் கொண்டேன்...மிக்க நன்றி..

    ReplyDelete
  5. எல்லாரும் சொல்றாங்கனு நானும் சொல்றேன்...நல்ல பதிவுதான்...(நண்டு சாப்பிடர ஊருக்கு போன நடு துண்டு எனக்குனு சொல்லனும்) :-)

    ReplyDelete
  6. Vanakkam,

    Good post.

    Not too long ago I finished reading u.ve.sa's autobiography.
    Excellent reading...even though long..not at all boring.

    Your post gives a wrong impression that he spent his entire life savings on searching & publishing but on the contrary he receieved support from rich donors and he lived a descent life (bought his own home in chennai, etc.).
    In no way, I am minimizing his huge effort...but lets not create myths.

    ReplyDelete
  7. தமிழ் தாத்தாவின் அருளால் நாம் தமிழின் பெருமைகளை அறிந்து கொண்டோம்.

    நல்ல நினைவுறுத்தல் பதிவு...

    நன்றி தலைவி அவர்களே. எப்படி இப்படி எல்லா பிறந்த நாளையும் நியாபகம் வைச்சு எழுதுகிறீர்கள்...

    சின்ன சந்தேகம்.. நீங்க உண்மையான தொண்டர்களோட பிறந்த நாள் எல்லாம் நியாபகம் வைச்சுப்பீங்களா தலைவி...

    (என்னோட பிறந்த நாள பத்தி நான் கேட்க வரவில்லை)

    ReplyDelete
  8. @மதுரையம்பதி.
    //வெளிக்கொணர்ந்த தமிழ் இன்று அரசியல்வாதிகளால் எப்படி உபயோகமாகிறது//

    அவர்கள் அப்படித்தான்... இனி ஒருபோதும் அவர்களை நினைத்து வருந்தி ஒன்றும் ஆக போவதில்லை...அவர்கள் திருந்த போவதும் இல்லை..

    கவலை படாதீர்கள்..நாமே இனி எல்லாம். தமிழை பேனும் முயற்சிகளை நாமே செய்வோம்..

    ReplyDelete
  9. //சரி ஒரு சந்தேகம், அவருக்கு வந்த லெட்டர் எப்படி உங்க கிட்ட வந்தது? ஆக தமிழ் தாத்தா உங்க கிளாஸ்மெட்டு. உங்க வயசு மட்டும் 16, இல்லையா///

    அம்பி..இது பாயிண்டு.இது டவுட்டு..

    சுமார்ட்பா நீ...

    ReplyDelete
  10. MK, an urgent answer for you only because of your questionable comment. I did not complete fully about his efforts, just started and there are yet to come. I am not hiding the facts and the house at Thiruvanmiyur bought by his son only. Please wait till I complete. No myths in this because it all were real happenings.

    ReplyDelete
  11. கீதா அம்மா,

    தமிழ்த் தாத்தா உ வே சா அய்யா அவர்கள், சரி.தமிழ் தந்தை தாடிக்காரர்.இடிக்குதே.தாத்தாவுக்கு தெரியாம தமிழ்த் தாய் இசகு பிசகா செஞ்சிருக்க வாணாம்னு தோணுதம்மா.

    பாலா

    ReplyDelete
  12. மேடம், எனக்கு மட்டும் இப்புடி ஒரு தாத்தா இருந்திருந்தா தமிழ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்யவே மாட்டேன். இப்ப பாருங்க என் பதிவுல வந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக், ஸ்பெல்லிங் மிஸ்டேக்ன்னு கும்முறாங்க!!!

    மத்தபடி பதிவ பத்தி சொல்லனும்னா "நச்"

    ReplyDelete
  13. அம்பி, ப்ர்ஸ்டா வந்தா உடனே ஒண்ணும் கிடைக்காது இங்கே, அப்புறம் உங்களைப் போல் ஆணி பிடுங்கலை தமிழ்த் தாத்தா,
    கல்லிடையில் உங்க அம்மா நீங்க, தமிழ்த்தாத்தா, மற்ற உங்க சிநேகிதர்களோடு எடுத்துக் கொண்ட போட்டோ கொடுத்திருக்காங்க. பப்ளிஷ் பண்ண வேண்டாம்னு பார்க்கிறேன்,எப்படி வசதி? !!!!!!!

    ReplyDelete
  14. மதுரையம்பதி,
    தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளால்தான் தமிழ் காப்பாற்றப் படுவதாய் ஒரு பொய்த் திரை தொங்குகிறது. என்ன செய்ய முடியும்?:(
    அப்புறம் போன பதிவிலே சொன்னதுக்குப் பதில் இங்கேயே கொடுக்கிறேன்.
    ஹிஹிஹி, உங்களைப் போய்க் கோவிச்சுக்குவேனா? நீங்க தான் கட்-அவுட், போஸ்டர் எல்லாம் கர்நாடகாவில் கலவர சமயத்திலே கூட ராணுவத் துணையோடு போட்ட பெருந்தகை ஆச்சே? (ம.சா. இல்லாட்டி இவர் ஒருத்தர் வந்துட்டு இருக்கார், அதுவும் போயிடுமே!, அதான் கொஞ்சறாங்க!)
    ஹிஹிஹி, மதுரையம்பதி, அடைப்புக்குறிக்குள்ளே என்னோட மனசாட்சி பேசினது, கொஞ்சம் சத்தமா வெளியிலே வந்துடுச்சு, அப்போ அப்போ இப்படித்தான் பேசி மானத்தை வாங்கும். நீங்க கண்டுக்காதீங்க! அனுகூலச் சத்துரு அது! :D

    ReplyDelete
  15. @கார்த்திக்,&
    @கோபிநாத், உங்களைப் போன்ற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உங்களோட கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. ச்யாம், வி.வி.சி. எங்கே போனாலும் நீங்க சொல்ற இந்தக் கொஞ்சம் கூட அலட்டல் இல்லாத வெளிப்படையான பேச்சுக்கு ஒரு வாழ்க! வளர்க!

    ஹிஹிஹி, மணிப்ரகாஷ், தலைவிகள்தான் பிறந்த நாள் கொண்டாடுவாங்க, தொண்டர்களுமா?:D
    (உங்க பிறந்த நாளைச் சொல்லுங்க, கலக்குவோம் எல்லாருமாச் சேர்ந்து)

    ReplyDelete
  17. மணிப்ரகாஷ், அம்பி ஒண்ணும் ஸ்மார்ட் இல்லை, அவரும், தமிழ்த்தாத்தாவும் சேர்ந்து எடுத்த போட்டோ இப்போ என் கையிலே! ஞாபகம் இருக்கட்டும்! அம்பிக்கு! :P

    ReplyDelete
  18. பாலா, விளையாட்டா இருந்தாலும் உங்க கேள்வியின் அர்த்தம் புரியுது.

    அபி அப்பா, நீங்க நிறையப் புத்தகம் படிப்பீர்கள்தானே? அப்போ தப்பு வராது. தவிர, தட்டச்சு செய்யும்போது பழக்கம் இல்லாத காரணத்தாலும் தவறு வரும். போகப் போகச் சரியாகும்.

    ReplyDelete
  19. நாளை தாத்தாவின் நினைவு நாள்.

    ReplyDelete
  20. உண்மையாகவே நல்ல முயற்சி எடுத்துச் சொல்லி இருக்கீங்க கீதா.
    உ.வெ.சாமிநாத, தமிழ்த்தாத்தாவைக் கொண்டாட நாம் இருக்கோம்.
    கவலை வேண்டாம்.

    ReplyDelete
  21. மேடம்,

    மிக நல்ல செய்திகளைத் தாங்கி வந்திருக்கும் பதிவு.

    ஆனால், பின்னூட்டங்களில், "அவர் மட்டும் பிளாக் தட்டிக் கொண்டிருந்தால் தமிழ் வளர்த்திருக்க முடியுமா?" என்றும்,
    "இன்று அரசியல்வாதிகளால் தான் தமிழ் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது போன்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது" என்கிற தங்கள் வரிகளும் வருத்தம் அளிக்கின்றன.

    நம் முன்னோர்கள் நடந்து போனார்கள்; சைக்கிளில் போனார்கள் என்பதற்காக நாம் காரிலும் விமானத்திலும் போவதை ஆடம்பரமாக நினைக்க வேண்டியதில்லை. அவர்கள் அமைத்துக் கொடுத்த அஸ்திவாரத்தை மறக்காமல் நன்றியுடன் இருப்பது மட்டுமே நம் வாழ்வைச் செப்பனிடும்.

    தமிழ்த்தாத்தா சேகரித்துக் காப்பாற்றிக் கொடுத்தது அப்படியே மீண்டும் காணாமல் போயிருக்குமே மேடம். பாரதி, வஉசி போன்ற தலைவர்கள் சுதந்தரப் போராட்டத்திற்கு இடையேயும் திராவிடத் தலைவர்களும் ராஜாஜி போன்றோரும் தம் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடையேயும் தமிழைக் காப்பாற்றி வைக்கச் செய்திருக்கும் பணிகளைக் குறைத்து மதிப்பிடுவது சரியில்லை என்று நினைக்கிறேன்.

    இவ்வளவு ஏன், தொலைக்காட்சிகளின் மத்தியில் மக்கள் தொலைக்காட்சி தமிழைக் காப்பாற்றி நிலை நிறுத்த செய்து வரும் பணிகளைக் குறைத்து விட முடியுமா?

    பதிவுலகில் KRS, ராகவன், குமரன் செய்து வரும் தமிழ்ச் சேவைகளை 'பிளாக் எழுதுகிறார்கள்' என்கிற அலட்சிய வார்த்தைகளில் தள்ளி விடமுடியுமா?

    பாராட்டுவதில் கூட மிகைப்பட உணர்ச்சி வசப்படுவது அரசியல் உலகில் மட்டும் இருக்கட்டுமே!

    கடைசியாக, // உ.வெ.சாமிநாத, தமிழ்த்தாத்தாவைக் கொண்டாட நாம் இருக்கோம்.
    கவலை வேண்டாம். // என்கிற வல்லி சிம்ஹன் மேடத்தின் பின்னூட்டத்தில் ஐயர் என்கிற வார்த்தையைப் பிரயத்தனப்பட்டு தவிர்த்திருப்பது புன்னகையை வரவழைத்தது.

    ReplyDelete
  22. உவேசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சிறிது சிறிதாக இது போன்ற இடுகைகளின் மூலமே படித்து வருகிறேன் கீதா அம்மா. மொத்தமாக முழுவதுமாக அவர் வரலாற்றைப் படிக்க வேண்டும். அதற்கும் நேரம் வரும்.

    அந்தக் கடிதம் எனக்கு முழுக்க முழுக்கப் புரிந்தது என்று நான் பொய் சொன்னால் நீங்கள் நம்பாமலா இருக்கப் போகிறீர்கள்? :-)

    ***
    //கடைசியாக, // உ.வெ.சாமிநாத, தமிழ்த்தாத்தாவைக் கொண்டாட நாம் இருக்கோம்.
    கவலை வேண்டாம். // என்கிற வல்லி சிம்ஹன் மேடத்தின் பின்னூட்டத்தில் ஐயர் என்கிற வார்த்தையைப் பிரயத்தனப்பட்டு தவிர்த்திருப்பது புன்னகையை வரவழைத்தது.
    //

    அதெப்படிங்க இரத்னேஷ். வல்லியம்மாவோட பின்னூட்டத்தில் ஐயர் என்ற வார்த்தை பிரயத்தனப்பட்டு தவிர்க்கப்பட்டிருப்பது உங்க்ளுக்கு மட்டும் தெரிந்தது. 'நாம்' என்று அவர் சொன்னது நீங்கள் பட்டியல் இட்ட மூன்று பதிவர்களையும் உள்ளடக்கிய நாமாக இருக்கலாமே? அந்த மூவரும் கூட நீங்கள் 'கண்டுபிடித்த' ஐயர் என்ற சொல்லில் அடக்கமா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் பழமொழி நினைவுக்கு வருகிறது நீங்கள் எழுதிய பின்னூட்டத்தின் கடைசி வரியைப் படித்தால். :-)

    ReplyDelete
  23. நல்லதொரு பதிவு
    'கலைமகள்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த, வாகீச கலாநிதி
    கி.வா.ஜ. அவர்கள்,தமிழ்த்தாத்தா
    உ.வே.சா. அவர்களிடம் தமிழ் கற்ற
    தலைமாணாக்கர்களில் ஒருவர் என்ப்து கூடுதல் செய்தி.

    ReplyDelete
  24. தளராது சுற்றி தமிழ் நூல் கண்டெடுத்த நல்முத்து! அவர் நூல் தேடிய பாடுகளை பல்வேறு கட்டுரைகளில் படித்து சிலிர்த்துப் போயிருக்கிறேன். அவரோட பிறந்த நாளை மறக்காம நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete