எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 17, 2007

211. சிதம்பரமும், நானும்

போன மாதம் சிதம்பரம், கடலூர் செல்லும்போது நாங்கள் அரசுப் பேருந்தில்
தான் பயணம் செய்தோம். அப்போது என்னமோ எனக்குள்ளே ஒரு இனம்
தெரியாத கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ப நாங்கள் சென்ற பேருந்தானது சிதம்பரத்தை நெருங்கும் சமயம், புவனகிரிக்குச் சற்று முன்னால் விபத்துக்கு உள்ளானது. இறை அருளால் எவருக்கும் அடியோ, அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை, எனினும் எனக்கு அரசுப் பேருந்தின்
வேகமும்,ஆட்டமும் கொஞ்சம் பயமாகவே இருந்தது. தரமற்ற சாலைகள் முதல் காரணம், பராமரிப்பு அற்ற வாகனங்கள் இரண்டாவது காரணம், இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த காரணம் என்று இது ஒரு தொடர்கதை தானே தவிர நம் நாட்டில், அதுவும் தமிழ் நாட்டில் இதற்கு ஒரு முடிவு என்னமோ கிடையாது.

சிதம்பரம் பல முறை போய் வந்திருக்கிறேன். இது ஒன்றும் முதல் முறை
இல்லை. நடராஜர் தரிசனம் மிக அருகாமையில் கண்டு களித்திருக்கிறேன்.
இம்முறை என்னுடைய கணவரின் குருவும், அங்கே சேவை செய்யும் தீட்சிதர்களில் ஒருத்தருமான திரு ராமலிங்க தீட்சிதர் அவர்களிடம் மஹாபாரதத்தில் திரெளபதி ஐந்து பேரை மணந்து கொண்டதைப் பற்றிய
என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு கேட்டேன். வியாசர் என்ன
சொன்னார் என்று தக்க பதில் அனுப்புவதாய்க் கூறி இருக்கிறார்.
காத்திருக்கிறேன்.

அப்படியே தில்லைச் சிதம்பரம் பற்றியும், கோவிலின் வழிபாடு பற்றியும்,
தீட்சிதர்களின் வரலாறு பற்றியும் அவர் ஆய்வு செய்த புத்தகம் ஒன்றும்
அன்பளிப்பாய்க் கொடுத்திருக்கிறார். படிக்க வேண்டும். படித்ததும் நான் அறிந்து கொண்ட உண்மைகளை எழுத வேண்டும் என்ற ஆவலுடன் நானே காத்துக் கொண்டிருக்கிறேன்.

தில்லைச் சிதம்பரத்திலே "தேவாரப் பாடல்கள்" காலம் காலமாய் ஓதப் பட்டு வருகிறது. தினமும் காலையில் நடராஜருக்குத் தினசரிக் கணக்கு ஒப்பிக்கும் பழக்கம் ஒன்று உண்டு. அதற்குப் பின் பூஜைகள் நடந்து முடியும் வேளையில், முதலில் தேவாரம் ஓதும் "பரம்பரை ஓதுவார்கள்" அதற்கென உள்ள இடத்தில் இருந்து கொண்டு தேவாரம் ஓதியதும், பின் மறுபடி
வேதம் ஓதுவார்கள். அதற்குப் பின் பூஜை மறுபடி, பின் மறுபடி தேவாரம், பின்
வேதம், பின் பூஜை என்று தொடர்ந்து ஒரு மணி நேரம் செய்த பின் தீப ஆராதனை காட்டி ஓதுவார்களுக்கு அந்த ஆராதனையை முதலில் காட்டியதும் பின் வந்திருக்கும் பக்தர்களுக்குக் காட்டுவார்கள். தேவாரம் வைத்துப் பாதுகாத்த அறை "தேவார அறை" என்ற பெயரிலே இன்னும் இருக்கிறது. தினமும் இருமுறை அங்கே தேவாரம் ஓதப் படுகிறது. நான் பலமுறை போனபோது இந்தப்பூஜையில் கலந்து கொண்டு இதைத்
தரிசிக்கும் பேறு பெற்றிருக்கிறேன்.

பெரிய புராணத்தில் நந்தனார் சரித்திரத்தில் ஒரு இடத்தில் கூட நந்தனாரை வேதியர் கோவிலுக்குச் செல்லக் கூடாது எனத் தடுத்ததாய் வரவில்லை என வாரியார் ஸ்வாமிகள் கூறுவார்கள். அது பின்னால் வந்த கதை எனவும் கூறுவார்கள். அதுபோல்தான் சிதம்பரத்தில் தேவாரப் பாடல் தடை செய்யப் படுகிறது என்பதும். இது போல் நிறையக் கதைகள் உலவுகின்றன. அகலிகை கல்லாய் மாறினாள் என்பதும் ஒரு கதை தான் இல்லையா? உண்மையில் கெளதமர் அகலிகையை "நீ யார் கண்ணிலும் படாமல் ஒரு தூசியைப் போல் இரு" என்றுதான் சொல்கிறார் என்பதாய் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

கம்பரும் இதை ஒட்டியே எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன். பார்க்க வேண்டும், என்ன எழுதி இருக்கார்னு. புராணங்களின் தமிழ் மூலமும், இதிகாசங்களின் தமிழ் மூலமும் சற்றுப் பொறுமையுடன் படித்து அறிந்து
கொண்டோமானால் இவ்விதத் தவறுகள் நேராது. போகட்டும். இப்படியாக நாங்கள் சிதம்பரம் போய்ப் பின் கடலூர் போய் நடேசனின் விருந்தோம்பலில் திளைத்து விட்டு வந்தோம். நடேசனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. நண்பர்களையும் விடாமல், உறவையும் விடாமல் எல்லாரையும் அரவணைத்துப் போகும் பாங்கும், மறக்கவே முடியாதது. அவர் மனதுக்கு இசைந்த வண்ணம் நடக்கும் மனைவி கிடைத்ததும் அவர் செய்த அதிர்ஷ்டம் தான்.

கடலூரில் இருந்து திரும்பும்போது பஸ் கிடைக்காமல் வரிசையில் நின்று முன் பதிவு மாதிரி டோக்கன் போட்டுக் கொண்டு ஸ்பெஷல் பஸ்ஸில் வந்தோம். பேருந்தின் ஆட்டமும், வேகமும் மறுபடி கதிகலங்கச் செய்தது. ஆகவே திருநெல்வேலி போகும்போது பேருந்து வேண்டாம் என முடிவெடுத்தோம். ஆனால் முதலில் கும்பகோணம் போய்விட்டுப்
பின்தான் போக வேண்டும். கும்பகோணம் வரைப் பேருந்து தான். தனியார்ப்
பேருந்தில் போகலாம் என முடிவு எடுத்துப் போனால் அதுவும் இம்மாதிரித்தான் போனது. அப்புறம் தான் புரிந்தது, இது தரமற்ற சாலைகளின் குறைபாட்டால் நேர்கிறது என. என்ன செய்ய? நாம் இருப்பது இந்தியா, அதுவும் தமிழ்நாடு. என்ன செய்ய முடியும்? கும்பகோணம் ஒரு மாதிரியாகப் போய்ச் சேர்ந்தோம்.

கும்பகோணத்திலும் சுற்று வட்டாரக் கிராமங்களிலும் பார்த்த இடமெல்லாம்
திரெளபதி அம்மன் கோவில். எங்கே இருக்கிறதுன்னு யாரோ கேட்டாங்களே?
ரிஷி ரவீந்திரனோ ஒரு வேளை? வந்து பாருங்க, தெருவுக்கு ஒரு கோவில்
திரெளபதி அம்மன் கோவிலா இருக்கு.

ஹிஹிஹி, பிரயாணம் விவரம் ரொம்பவே வந்துடுச்சோ, பழக்க தோஷம். இனிமேல் குறைச்சுக்கிறேன். என்னோட அவதியை உங்க கிட்டே எல்லாம் சொல்லி ஆத்திக்காம வேறே யார் கிட்டே சொல்றது? அதான்!! :D

அப்புறம் இந்தத் தலைப்பு ஒரு கவர்ச்சிக்காகக் கொடுத்திருக்கேன். அப்படியாவது போணி ஆகட்டும்னு தான். பி.சி.யோட எனக்குச் சந்திப்பு ஏற்பட்டதுன்னு நினைச்சு வரவங்க இருப்பாங்க இல்லை அதான்!! ஹிஹிஹி!

22 comments:

  1. மிகமோசமான சாலை என்பது தமிழகத்தின் தலையெழுத்து.


    கும்பகோணத்தின் சிறப்பு - மகாமகம் மட்டுமல்ல, அந்த ஊரை சுற்றிலும் நவக்கிரங்களின் கோயில்கள் உள்ளன.
    திருமங்கலகுடியிலுள்ள சூரிய நாராயண கோயிலும், திருநாகேஸ்வரத்திலுள்ள ராகுபகவான் கோயிலும் தனிசிறப்பு வாய்ந்தவை.

    கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள ஆடுதுறையும் ஒரு தனி சிறப்பு பெற்றதுதான். அங்குதான் இந்த பின்னூட்டமிட்ட (சென்)ஷி பிறந்தான்.

    :)))

    //தெருவுக்கு ஒரு கோவில்
    திரெளபதி அம்மன் கோவிலா இருக்கு//

    ஆடுதுறையிலும் திரௌபதி அம்மன் கோயில் உண்டு.

    சென்ஷி

    ReplyDelete
  2. மேடம்,
    தலைப்பை வைத்துதான் நானும் படிக்கவந்தேன். ஆக ராமலிங்க தீட்ஷிதர் புத்தகத்தில் இருந்து நல்ல விஷயங்கள் எங்களுக்கு கிடைக்கப்போகிறது!! அப்புறம் நம்ம மயிலடுதுறை ரோடு பள பளன்னு அசத்துமே. அதையும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  3. அதெல்லாம் நீங்க எந்த சிதம்பரத்தைச் சொல்லறீங்கன்னு தெரியாதா? பிசி வந்து சந்திச்சா, அவரு இல்ல பதிவு போடணும்!

    நல்ல வேளை அடி ஒண்ணும் படலையே. சிதம்பரம் பத்தின உங்க கட்டுரைகளுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. சென்ஷி, உங்களோட முந்தைய பின்னூட்டத்தைக் காணோம். மன்னிச்சிடுங்க, வேறே ஏதாவது பதிவிலே போய் ஒளிஞ்சிட்டு இருக்கோ என்னமோ? இப்படித்தான் ஒரு பின்னூட்டம் கமெண்ட்ஸ் பெட்டியிலேயே இருந்துட்டு வரவே மாட்டேன்னு ஒரே அடம் பிடிக்குது. இந்தப் பொற்கொடி என்னன்னா ஏன் என்னோட கமெண்டைப் போடலைன்னு ஒரே போர்க்கொடி பிடிக்க ஆரம்பிச்சாச்சு!
    அப்புறம் நவக்ரஹக் கோயில் எல்லாமே போயிட்டு வந்துட்டேன். என்ன எழுத நேரம் வரலை. ஆடுதுறையில் இறங்கிக் கூட (அதாவது ரெயிலில் போனால்) எங்க ஊர் பரவக்கரைக்குப் போகலாம். அங்கே தான் குலதெய்வமான மாரியம்மனுக்குப் பூஜை செய்யப் போனோம். ம்ம்ம், இந்தத் திரெளபதி அம்மன் கோயில் தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தது? அது தான் இப்போ நான் போகிற இடம் எல்லாம் கேட்டுட்டு இருக்கேன், யாருக்கும் இன்னும் பதில் தெரியலை. ஹிஹிஹி, பதிவு இல்லை, பின்னூட்டப் பதில் தான். சற்றே பெரிய பின்னூட்டப் பதில்.

    ReplyDelete
  5. அபி அப்பா, கைப்புள்ள பதிவிலே உங்களை அடிக்கடி பார்க்கிறேன். நீங்க என்ன கோலங்கள் அபி அப்பாவா? அது என்னங்க இப்படிப் பொண்ணு கஷ்டப் படறப்போ பார்த்துட்டுச் சும்மாவே இருக்கீங்க? சும்மா ஒரு 3 கோடி தானே? அள்ளி வீசக் கூடாது? :D
    வாங்க சார், முதல் வருகைக்கு நன்றி. இந்த முறை மயிலாடுதுறைப் பக்கம் போகலை. போனமுறை போனேன். திருநள்ளாறு, திருமீயச்சூர் எல்லாம் போகும்போது அப்படித்தான் போனேன். இருந்தாலும் காரைக்கால் ரோடு மாதிரி வராது. பாண்டிச்சேரி அரசு இங்கே விட அவங்க ஊரிலே நல்ல ரோடு போட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  6. இ.கொ. பி.சி. சந்திச்சா அவர் வந்து எங்கே பதிவு போடுவார்? இப்போ நாம போடற பதிவுக்கு எல்லாம் சேர்த்து சேவை வரி விதிச்சுட்டுப் போயிடுவார். :D
    அடி எல்லாம் ஒண்ணும் படலை. சொல்லப் போனால் எனக்கு ஒரு மாதிரியா ஏதோ ஆகப் போகுதுன்னு எச்சரிக்கை மணி அடிச்சுட்டே இருந்ததாலே ஜாக்கிரதையாவே இருந்தேன். ஒரு சின்னப் பொண்ணு மட்டும் நின்னுட்டு வந்தது அப்படியே குப்புற விழுந்து காலில் அடிபட்டு வீங்கி விட்டது. அதுவும் சுளுக்கு மாதிரித் தான். இருந்தாலும் அன்று ஒரு மிகப் பெரிய விபத்தாக மாறி இருக்க வேண்டியது, தப்பிச்சது.

    ReplyDelete
  7. நாங்கள் சென்ற பேருந்தானது சிதம்பரத்தை நெருங்கும் சமயம், புவனகிரிக்குச் சற்று முன்னால் விபத்துக்கு உள்ளானது. இறை அருளால் எவருக்கும் அடியோ, அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை

    புவனகிரியில்தான் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்த ஊர்.அவர்தான் உங்களை காப்பாற்றினார்.

    சிதம்பரத்தை பற்றிய நல்ல தகவல் கொடுத்துள்ளீர்கள்.மேலும் எதிர்பார்கிறோம்.

    ReplyDelete
  8. //முதல் காரணம், பராமரிப்பு அற்ற வாகனங்கள் இரண்டாவது காரணம், இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த காரணம் என்று இது ஒரு தொடர்கதை தானே தவிர நம் நாட்டில், அதுவும் தமிழ் நாட்டில் //

    மேடம், பலமுறை என் பயணங்கள் அரசு பேருந்துகளின் சத்தங்களின் தாலாட்டிலே தான் நடந்து இருக்கின்றன. சட்டைகள் கறுப்பாக எல்லாம் ஆனதுண்டு, தூக்கத்தில் அந்த கம்பிகளில் சாய்ந்ததிலே. ஆனால் இப்போது பெரும்பாலான பேருந்துகள் பரவாயில்லை என்று நினைக்கிறேன்..

    ஆனால் உங்கள் கூற்று ரொம்பச் சரியானது மேடம்..

    ReplyDelete
  9. //அப்புறம் இந்தத் தலைப்பு ஒரு கவர்ச்சிக்காகக் கொடுத்திருக்கேன். அப்படியாவது போணி ஆகட்டும்னு தான். பி.சி.யோட எனக்குச் சந்திப்பு ஏற்பட்டதுன்னு நினைச்சு வரவங்க இருப்பாங்க இல்லை அதான்!! ஹிஹிஹி!//

    நான் ஏமாறவில்லை மேடம், நீங்க பி.சியை சந்திச்ச பதிவுன்னு..

    ஆன்மீகப் பதிவுகளா போட்டுகிட்டு இருந்ததால சிதம்பரம் கோயில் பற்றித் தான் என்று நினைத்தேன்... ஹிஹிஹி

    ReplyDelete
  10. வாங்க சார், பங்களூர் எல்லாம் போயிட்டு "ஆப்பு அம்பி"யின் அன்பான உபசரிப்பிலே ஒரு சுற்றுப் பூரிச்சிருப்பீங்கன்னு நம்பறேன். அப்புறம் நீங்க கூட சிதம்பரம் பத்தி எழுதப்போறதாச் சொன்னீங்களே? ஆரம்பிச்சாச்சா? நேத்துப்பாருங்க, கூகிளில் போய் உங்க ப்ளாக் பேரோட இன்னும் சிலரோட ப்ளாக் பேரையும் கொடுத்தேனோ இல்லையோ, வெளியே போன்னு விரட்டிடுச்சு. என்ன செய்யறதுன்னு ரொம்பவே மனசு நொந்து போய் வெளியே வந்துட்டேன். இன்னிக்கு மறுபடி பார்க்கிறேன். ஊர் சுத்திப் பழக்கம் ஆயிடுச்சா, வெளியே மத்தவங்க வலைவீட்டுக்கு விஜயம் செய்ய முடியாமக் கஷ்டமாத் தான் இருக்கு.

    ReplyDelete
  11. கார்த்திக், நாங்களும் அநேகமாய் "மாநரகப்பேருந்து" "அரசுப் விரைவுப் பேருந்து" என்றுதான் பயணம் செய்வோம். சமீப காலமாய்த் தான் மாநரகப் பேருந்துகளின் கூட்டம் காரணமாய் என்னுடைய உடல்நிலையை உத்தேசித்துப் போவது இல்லை. வெளி ஊர்களுக்குப் போனால் எப்போவாவது உடனே திரும்புவது என்றால் மட்டுமே வண்டி வாடகைக்கு எடுத்துட்டுப் போவோம். இம்மாதிரிப் பயணங்களில் பேருந்துகளிலோ, ரெயிலிலோதான் பயணம். கும்பகோணத்திற்கு இப்போது ரெயில் இல்லையே? அதான் பேருந்துப் பயணம். நீங்க நினைக்கிற மாதிரி பேருந்துப் பயணம் ஒன்றும் அவ்வளவு செளகரியமாய் இல்லை. வேகம் அதிகம், ஆனால் அதைத் தாங்கும் சக்தி வாய்ந்த சாலைகள் இல்லை. விபத்தின் முக்கிய காரணமே அது தான்.

    ReplyDelete
  12. ஹிஹிஹி, கார்த்திக், என்ன இருந்தாலும் நீங்க கட்சி வளர்த்த தொண்டர் இல்லையா? கண்டு பிடிப்பீங்கன்னு தெரியும். (வேறே வழி? பேசாமல் அசடு வழிய வேண்டியது தான்.). :-)

    ReplyDelete
  13. >>>> போனமுறை திருநள்ளாறு, திருமீயச்சூர் எல்லாம் போகும்போது அப்படித்தான் போனேன். இருந்தாலும் காரைக்கால்

    வணக்கம்.

    எனக்கும் இந்த கடவுள், கோவில் சமாச்சாரங்களுக்கும் வெகு, வெகு தூரம். ஆயினும் ( நன்றி-வாரக்கடைசி) ஆறுதலாய் அமர்ந்து கொண்டு
    படித்திராத பதிவுகளாய் படிக்க வேண்டுமென உங்கள் பதிவைத் திறந்தேன், மன நெகிழ்வையடைந்தேன் - திருமீயச்சூர் என்ற ஊர் பெயரைப்
    பார்த்தவுடன்.

    நான் 1/2 திருமீயச்சூர். இருப்பினும் என் சொந்த மண்ணாய் அதைத்தான் நினைக்க முடிகிறது. திருமீயச்சூரில் எங்கள் குடும்பத்திற்கென பெருமாள் கோவிலுண்டு. பெயர் வீற்றிருந்த பெருமாள் கோவில். அங்கு போனீர்களா..

    நன்றி எங்களூர் பெயரை இணையத்தில் வெளிவர செய்தமைக்கு !

    ReplyDelete
  14. பரவக்கரையா நீங்க!! பக்கத்துல ஆத்து கரைல "வெள்ளை வேம்பு மாரியம்மன்" கோயில் பாத்ததுண்டா? ஒரு வேப்பிலை மரம் முழுவதும் வெள்ளை நிற இலைகள் மட்டுமே. அதுதான் அம்பாள். அற்புதமான பவர். அந்த ஏரியா உள்ள போயிட்டாலே உடம்புக்குள் மெல்லிதாக அதிர்வை உணர்வீர்கள். யாரும் கோயிலுக்குள் இல்லாத காலை 11.30 க்கு அவயாம்பாள் சந்நிதியில் நாம் தனியே இருக்கும் போது உணரும் அதே உணர்வு கிடைக்கும்.
    மயிலடுதுறை to குடந்தை வழியில் திருவாலங்காடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஆறு நோக்கி 1.5 கி.மீ நடந்தோம்னா அவ வருவா!!!

    ReplyDelete
  15. மேடம், சமீபத்தில்தான் உங்கள் பதிவுகள் படித்தேன். ரம்மியம். நான் ரசிக்கும் இது போன்ற வெள்ளை வேம்புவை யாரிடமாவது சொன்னால் அடுத்து கிட்ட வர யோசிப்பாங்க அல்லது தண்ணி போட்டுட்டு ஆத்தாங்கரைக்கு போனா கிர்ன்னுதான் இருக்கும் என்பார்கள். அதனால் நான் அபிஅம்மா,அபிபாப்பா மூவர் மட்டுமே கூட்டனி. புளியோதரை கட்டிகிட்டு நாங்க 3 பேரும் போவோம். பாப்பா அம்பாள சுத்தி சுத்தி வந்து அது உயரத்துக்கு உள்ள இலை எல்லாம் தின்னுடும். நாங்கள் படிகட்டில் ஒக்காந்து நல்ல விஷயங்களை அருமையாக பகிற்ந்துப்போம். அடுத்த முறை போனால் கண்டிப்பா போய்வாங்க!!!

    ReplyDelete
  16. அடே அப்பா, எத்தனை பேருக்குச் சொந்த ஊர்ப் பாசம் பிச்சுட்டுப் போகுது?
    @வாசன், நீங்க சொன்ன எல்லாக் கோவிலுக்கும் போயிட்டு வந்தோம். அது ஆச்சு ஒரு 6 மாசம் முன்னாலே. திருக்கைலைப் பயணத்துக்கு முன்னாலேயே போயிட்டு வந்தோம். சொந்த ஊர்ப் பெருமாள், சொந்தமான பெருமாள், நல்லாப் பார்த்துக்குங்க, எங்க ஊர் (பரவக்கரைப்) பெருமாளைப் பார்த்தாலே கண்ணீர் விட்டு அழத் தோணுது. என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் தான் அரசு எடுத்துக்கிட்டது இந்தக் கோயிலை, அது வரை பரம்பரை தர்மகர்த்தா எங்க மாமனார் வீடு தான். ஊரை விட்டு நாங்களும் வந்துட்டோம். பெருமாளும் அநாதை ஆகிவிட்டார். அவரோட இடமும் கொஞ்சம் கொஞ்சமாப் பறி போயிட்டு இருக்கு. இந்த மாதிரியான சமயத்தில் தான் ஒரு சாதாரண மனிதராய்ப் பிறந்து விட்டதுக்கு நொந்துக்க வேண்டி இருக்கு.

    ReplyDelete
  17. பட்ஜெட் பார்த்தா தான் தெரியும் உங்க சந்திப்பு எப்படின்னு!!!!

    ReplyDelete
  18. அபி அப்பா, வெள்ளை வேம்பைப் பத்தின உங்களோட பின்னூட்டத்துக்கு நான் கொடுத்த பதில் பின்னூட்டம் நீங்க சொன்ன மாதிரி "கிர்ர்னு" தலை சுத்தி எங்கேயோ போயிருக்கு. அப்புறம் இந்த வெள்ளை வேம்பு மாரியம்மனைப் பத்தி எங்க மாமியார் கிட்டே கேட்டுச் சொல்றேன். அவங்க தான் இதைப் பத்தி அடிக்கடி சொல்வாங்க.

    @ மனசு, உங்க வீட்டிலே வருமானவரி அதிகாரிகள் சோதனைபோட வரப் போறாங்க. பட்ஜெட் வருமுன்னே உங்களுக்கு யார் "லீக்" செய்தது? :D

    ReplyDelete
  19. ம்ம்ம்...
    என்ன தலைவி ஒரே சிவபுராணமா இருக்கு...
    நான் இந்த கோவிலுக்கெல்லாம் போனதே இல்லை (எல்லாத்துக்கும் நேரம் வரவேண்டும்)


    உங்க பயண அனுபவம் அருமையா எழுதியிருக்கிங்க :)))

    \\அப்புறம் இந்தத் தலைப்பு ஒரு கவர்ச்சிக்காகக் கொடுத்திருக்கேன். அப்படியாவது போணி ஆகட்டும்னு தான். பி.சி.யோட எனக்குச் சந்திப்பு ஏற்பட்டதுன்னு நினைச்சு வரவங்க இருப்பாங்க இல்லை அதான்!! ஹிஹிஹி!\\

    ஹிஹிஹி...நானும் கார்த்திக் போலதான் நினைத்தேன்...

    ReplyDelete
  20. புகுந்த வீட்டுப்பக்க சமாச்சாரங்கள் என்பதால் பவ்வியமாய் படிக்க மட்டும் செய்கிறேன் :-)
    இப்படிக்கு,
    மாயவரத்து மருமகள்

    ReplyDelete
  21. வாங்க கோபி நாத், என்ன ஒரு பத்து நூறு பின்னூட்டமாவது வந்தால் ஆறுதல், அதான், அப்புறம் நான் என்ன தலைவி(வலி)? நடுவே நடுவே தொண்டர்களையும் சமாதானப் படுத்த வேண்டி இருக்கு இல்லையா?
    சிவராத்திரியை ஒட்டி எழுத ஆரம்பிச்சேனா, சிவ புராணமா வருது போல் இருக்கு.

    @மாயவரத்து மருமகள், புகுந்த வீட்டைப் பத்தி எழுதறதினாலேயாவது இந்தப் பக்கம் வந்தீங்களே? நல்வரவு, உங்க புகுந்த வீட்டுப் பாசத்துக்கு ஒரு 3 cheers.
    hip hip hoorray!
    hip hip hoorray!
    hip hip hoorray!

    ReplyDelete
  22. @உஷா, நீங்க வந்ததுக்கும் சேர்த்துத் தான்.

    ReplyDelete