எப்படியோ 262 போஸ்ட் நானும் போட்டிருக்கேன். உருப்படியாப் பார்த்தாக் கொஞ்சம் தான் இருக்கும். இதிலே சங்கிலித் தொடர் வேறே நிறைய வந்திருக்கு. முதன் முதல் வலைப்பக்கம் ஆரம்பிச்சப்போ கூடச்சங்கிலித் தொடர் ஓடிட்டுத் தான் இருந்தது. அப்போ நான் புதுசுன்னாலே யாரும் என்னைக் கூப்பிடலை. அப்புறமா வேதா(ள்)வும், கார்த்திக்கும், வல்லி சிம்ஹனும் கூப்பிட்டாங்க. இப்போக் கண்ணபிரான் ரவிசங்கர் KRS. அழகைப் பத்தி எழுதக் கூப்பிட்டிருக்கார். கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் முயற்சி செய்யறேன். உண்மையான அழகு என்பது உள்ளத்தில் இருந்து வரும். இதுக்கு நிறமோ, உருவமோ தேவை இல்லை. உள்ளொளி பரவினால் முகம் அழகு கொடுக்கும். அந்த விதத்தில் அழகு என்று மனிதர்களில் சொல்ல வேண்டுமானால்
ஸ்வாமி விவேகானந்தர்: கம்பீரமாய்க் கையைக் கட்டிக் கொண்டு இவர் இருக்கும் படங்களைப் பார்த்தால் அதைப்பார்த்துத் தான் இன்று நிறையப் பேர் கை கட்டிக் கொள்கிறார்களோன்னு தெரியும். சிகாகோ வந்து இறங்கியதும் முதலில் நினைவு வந்தது இவர் தான். இவரால் தான் நம் நாடும், அதன் பெருமையும் உலகு அறிந்தது. இவரோட கம்பீரமே ஒரு அழகு தான். நிறைய எழுத வேணாம்னு சுருக்கமா எழுதறேன்.
மஹாகவி பாரதி: என்னை ரொம்பவே பாதித்தவர். திரும்பத் திரும்பப் படிப்பேன். எங்கே போனாலும் என்னோட ஸ்லோகப் புத்தகங்களோட இவரின் கவிதைப் புத்தகமும், திருக்குறளும் கட்டாயம் இருக்கும். என் கணவ்ர் கேலி செய்வார், "இது என்ன ரட்சையா?" என்று. கிட்டத் தட்ட அப்படித்தான். பாரதியுடன் என்னோட பக்திக்கு என் ஆசிரியர்களும் ஒரு காரணம். சொல், செயல், எழுத்து, உணர்ச்சி, எண்ணங்கள் எல்லாமே அழகு நிறைந்ததால் மிகச் சிறந்த சக்தி உபாசகரான இவரும் ஒரு அழகு தான்.
திரு ஜே.கே. இவர் முகம் பார்க்கப் பார்க்க வசீகரமானது. "தன்"னை உணர்ந்தவர். மிகச் சிறந்த அத்வைதிகளில் ஒருவர். பேசுவது கேட்டால் நாத்திகர் போல் இருக்கும். ஆனால் பழுத்த ஆன்மீகவாதி.
திருமதி எம்.எஸ். இவரைப் பற்றி ஏற்கெனவே கண்ணன் எழுதி விட்டார். இன்னும் 2 முக்கியமான பெண்மணிகள் இருக்கிறார்கள். அவங்களை நான் பார்த்தது கூடக் கிடையாது. என்றாலும் இவங்களும் அழகுதான்.
பொன்னியின் செல்வன்: இவங்க ஒரு பெண்மணி. இவங்களோட பையன் யாஹூவில் உள்ள "பொன்னியின் செல்வன்" குழுமத்தில் சேர்ந்து விவாதங்களில் கலந்து கொள்வாராம். இந்த இளைஞர் திடீரென ஒரு விபத்தில் இறந்து போகத் திகைத்துப் போன இந்தத் தாய், தன் மகன் உபயோகித்து வந்த இந்தப் "பொன்னியின் செல்வன்" என்ற பெயரிலேயே மகன் போல் எழுதி வருகிறார். இறந்து போனவரின் நண்பர்களுக்கு முதலில் ஆச்சரியமாய் இருந்திருக்கு. பின் அந்தத் தாய் விளக்கி இருக்கிறார். இவரைப் பற்றி முதலில் மரபூரார் ஜெ.சி. எழுதி இருந்தார். அம்மா என்று தலைப்பில் ஒரு போட்டிக்கு. தேன் கூடு நடத்தியது என நினைக்கிறேன். நானும் போய் வாக்குக் கொடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. என்றாலும் இந்தத் தாயை என்னால் மறக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு முறை திரு தி.ரா.ச. அவர்கள் பதிவில் தன் மகனை இழந்தது பற்றிக் குறிப்பிட்டுப் பின்னூட்டம் இட்டிருந்தார். இவங்க மனதை விட அழகு உண்டோ?
திருமதி லலிதா: இவங்களும் வாழ்க்கையில் முதுமையான காலகட்டத்தில் சோகத்தைச் சுமந்தவர் தான். இவரும், இவர் கணவரும், மகனுடன் பங்களூர் சென்று கொண்டிருந்த போது விபத்தில் இவர் கண்ணெதிரேயே இவர் மகனும், கணவரும் இறந்து போனார்கள். செய்வதறியாது திகைத்த இந்தப் பெண்மணி தன் 70-வது வயதில் கன்னடம் கற்றுத் தேர்ந்து, இன்று கன்னடத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து கன்னடத்துக்கும் இலக்கியங்களை மொழி பெயர்க்கிறார். என் உள் மனதிலே ஒரு சந்தேகம் உண்டு. இந்தப் பொன்னியின் செல்வன் எழுதும் தாயும், இவரும் ஒருவரோ என. புரியவில்லை. என்றாலும் இவர் மனமும் மிக மிக அழகானது. இவர் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
இப்போ எங்க ஊர மதுரை ்தான் அழகு, எங்க மீனாட்சி தான் அழகு,அவளோடப் பட்டாபி்ஷேஹக் காட்சி அழகு, அவள் திக்விஜயம் செய்வது அழகு, அவள் கல்யாணக் கோலம் தான் அழகு, அவள் பவனி வரும் பூப்பல்லக்கின் மல்லிகை வாசனை இங்கே கூட வருது. அது அழகு, அந்தத் தேர் அழகு, அழகர் அழகு. அவர் பவனி வரும் குதிரை வாகனம் அழகு, கருட வாகனம் அழகு, அழகர் மலை அழகு, பரங்குன்றம் அழகு, நாகமலை அழகு, யானைமலை அழகு, வைகை அழகு. அதுவும் வைகையின் தனிச் சிறப்பே அது கடலில் கலக்காது என்பது தான். ராமநாதபுரம் அருகே உள்ள கூடல் என்னும் ஊரில் உள்ள ஒரு ஏரியில் கலக்கிறது வைகை. இவள் போல் தான் பாண்டிய நாட்டுப் பெண்களும். அவங்களும் அழகுதான். மொத்தத்தில் மதுரையே அழகு, அதன் சுந்தரத் தமிழும் அழகு.
கீதாம்மா, அழகா அழகோட அழகை சொல்லிட்டீங்க. அப்படியே அழகா மூணு பேரை கூப்பிடவும் கூப்பிடுங்க பார்க்கலாம்.
ReplyDeleteஇல்லை இ.கொ. நான் யாரையும் கூப்பிடலை. சிலருக்கு முடியும், சிலருக்கு முடியாது. தவிர முக்கியமா எல்லாருமே எழுதி இருக்காங்க. ம்ம்ம்ம்ம், பார்க்கலாம்.
ReplyDeleteஅருமையான அழகு(கள்)
ReplyDeleteரொம்ப ரசித்தேன் கீதா.
விவேகாவும் பாரதியும் உங்கள் ரட்சைகளா? - ஆகா கொடுத்து வைத்தவர் நீங்க, கீதாம்மா!
ReplyDelete//பொன்னியின் செல்வன்//
ஆம் - அழகோ அழகு! இவங்க மனசு!
//திருமதி லலிதா//
கன்னடம்-தமிழ் நல்லுறவா? ஆகா, இதுவும் அழகு தானே!
//இப்போ எங்க ஊர மதுரை ்தான் அழகு, எங்க மீனாட்சி தான் அழகு,அவளோடப் பட்டாபி்ஷேஹக் காட்சி அழகு, அவள் திக்விஜயம் செய்வது அழகு.....//
ReplyDeleteவரப் போகும் சித்திரைத் திருவிழாவிற்கு அமெரிக்காவில் இருந்தே வெள்ளோட்டம் நடத்தி விட்டீர்களே! சூப்பர்!! :-))
கீதா! 262 போஸ்ட்டா?வாவ்! அதுல கால்வாசிகூட நான் தேறல..அதுக்கே முதல் சபாஷ்.அப்றோம் அழகான இந்தப்பதிவுக்கு..சங்கம் வளர்த்த தமிழ் பாண்டியநாட்டில்தானே. அழகே மதுரம்! மதுரமாய் இருக்கிறது உங்க பதிவு,வாழ்த்துகள்!
ReplyDeleteஷைலஜா
//சிகாகோ வந்து இறங்கியதும் முதலில் நினைவு வந்தது இவர் தான். //
ReplyDeleteஅருமை அருமை மேடம்!
உண்மையில் அவர் கைகட்டி நிற்கும் அழகை கண்டாலே, அப்படி ஒரு கம்பீரம்..
இவரின் கம்பீரம் அழகில் அழகு!
/இப்போ எங்க ஊர மதுரை ்தான் அழகு//
ReplyDeleteஎனக்கும் பிடிச்ச ஊர் இது தாங்க மேடம்.. நான் ஆறு வருடங்கள் படித்த இடமல்லவா?
அருமையான செலக்ட் செய்த அழகே, அழகு....
ReplyDeleteஅமாம், இன்னுமொரு முக்கியமான அழகு இந்த பதிவு, அது யாதெனில், இது மொக்கையாக இல்லாமலலிருப்பதே....ஹிஹிஹி..
ஆனாலும், மதுரைக்காரனென்ற முறையில், உங்களது இந்த பதிவிற்கு ஒரு ++
துளசி, ரொம்ப நன்றி வந்ததுக்கும் பாராட்டுக்கும்.
ReplyDelete@கண்ணன், உண்மையிலேயே அந்த இரு தாய்களின் மன உறுதியைப் போல் அழகு வேறு ஏதும் இல்லைனு எனக்குத் தோணுகிறது.
அப்புறம் ஒவ்வொரு வருடமும் சித்திரை பிறந்தால் என் மனமெல்லாம் மதுரையில் தான் இருக்கும். இந்த வருடமும் அப்படியே. :D
@ஷைலஜா, உங்களோட பல்வேறு வேலைகளுக்கு இடையில் நீங்க பதிவு எழுதறதே பெரிய வஷயம். உங்க கவிதைகளை முத்தமிழில் படிச்சுட்டு வரேன். ஒரே பிரமிப்பா இருக்கு. வாழத்து எல்லாம் சொல்ற அளவு எனக்குத் தகுதி இல்லை. ரொம்பவே நன்றி.
மதுரையம்பதி, நறநறநற, அம்பியோட காத்து அடிக்கிறாப்பலே இருக்கு. :P
ReplyDeleteஅப்புறம் உங்க கிட்டே இருக்கிற தகவல்களை முடிஞ்சா மெயில் பண்ணுங்க. ரொம்பவே நன்றி.
நெகிழ்வான அழகு கீதாக்கா
ReplyDeleteகீதா, மதுரையை அப்படியே கண்ணில கொண்டுவந்திட்டீங்க.
ReplyDeleteஅதுவே தனி அழகு.
எங்க பசுமலையை விட்டுட்டீங்க.!!
இத்தனை அழகா எழுத்ததான் நீங்க தாமதமா வர ஏற்பாடு செய்தோம்.:-)
வீவேகானந்தரோட கண் தீர்க்கமும்,
பாரதியோட மீசை கம்பீரமும்
மனதில் இணைந்துவிட்டது உங்க பதிவினாலே.
அழகரைப் பார்க்க இப்பவே போகணும் போல இருக்கு.
அடடே.... மொக்கை மட்டும் தான் அழகா(?!?) எழுதுவீங்கன்னு நெனச்சேன்.... அருமையா அழகை எழுதியிருக்கீங்க. இங்கே நான் இருக்கும் இடத்தில கூட பாரதியார் கோவிலில் விவேகானந்தரின் ப்ரம்மாண்டமான சிலை வைத்திருக்காங்க. பாரதியார் (கோவில்) + விவேகானந்தர்..... காம்பினேஷன், நீங்க சொன்ன அழகுல இருந்தனால, எனக்கு உடனே எழுதனும்னு தோணினது.
ReplyDeletewonderful Maami.
ReplyDeleteUnga range_la kandippa yosikka mudiyadhu.very nice.Very beautifully said.
unga pauthaandu yenna special saidheenga?
நல்ல அழகான பதிவு. கண்ணன் போட்ட மாதிரி அழகான முகங்களை மட்டும் தான் போட்டு உள்ளீர்கள்.
ReplyDeleteஅனைவரும் அழகு தான்....
thalavi , ippa ellam ennoda pinnuttathukku neenga pathil solarathu illa...
ReplyDelete:(((((((
பாரதியின் கண்கள்
விவேகானந்தரின் கம்பீரம்
அழகுக்கு அர்த்தம்..
அப்புறம் எல்லா அழகையும் சொல்லிட்டீங்க அழகா....
ponniyin selvanum lalitha avargalum oruthar illai nu thaan ninaikiren. magan irandhadhai pathi mattum thaane ezhudaranga, so onnu illai polarku.
ReplyDeleteellame azhagu! nalla velai neenga than azhagu nu mokkai podama irundhingle! ;-)
@Porkodi:
ReplyDelete//nalla velai neenga than azhagu nu mokkai podama irundhingle! ;-)//
Vendam! Maamiyai overa kal varina nan unmai solla vendiyadhaayidum.
Maami, matha posts ,unga aanmeega posts yellam rendu Naalil padichuduven.
ReplyDeleteதேவ், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. சங்கத்து சார்பில் மத்த எல்லார் கிட்டேயும் சொல்லி புலிக்கு வாழ்த்துச் சொல்லச் சொல்லுங்க. :)))))))) இல்லைனா புலி பிராண்டிடுமாம். சொல்லிட்டுப் போயிருக்கு. :P
ReplyDelete@வல்லி, வாங்க, நீங்க சொன்ன பக்கம் போய்ப் படம் எல்லாம் பார்த்தேன். சேமிக்கலை, வந்துட்டேன். அப்புறமாப் பார்த்துக்கலாம்னு. ரொம்ப நன்றி. அழகு எதிலே தான் இல்லை?
காட்டாறு, என்ன எப்படி இருக்கு? என்னை மாதிரி ஒரு தலைவி(வலி)யைப் போய்க் கிண்டல் செய்ய ஆரம்பிச்சுட்டீங்களா? ஓக்கே ஜோதியில் ஐக்கியம் ஆயிட்டீங்க. நறநறநறநற
ReplyDelete@எஸ்கேஎம், அது என்ன என்னோட ரேஞ்சு? புதுசா இருக்கு? ஏதோ எனக்குத் தோணிச்சு எழுதினேன். கீழே பாருங்க போர்க்கொடிப் பாட்டி, அவங்க பையனைப் பத்தித் தானே எழுதறாங்கன்னு வி்ஷயமே புரியாமல் பேசிட்டு இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@புலி, என்ன இருந்தாலும் அந்த உகாண்டா பொண்ணு ஃபோட்டோ அனுப்பிச்சீங்களே அந்த அழகு வராது இல்லையா? :P
ReplyDelete@மணிப்ரகா்ஷ், உங்க பின்னூட்டக் கேள்விக்குப் பதிலா ஒரு பதிவே போட்டு இருக்கேன், வந்து பார்க்கக் கூடாது? க்ர்ர்ர்ர்ர்ர்ர், புலி வேறே பாயத் தயாரா இருக்கு. இப்படி மாட்டி விடறீங்களே?
போர்க்கொடி, என்ன துள்ளல் அடங்கலை போல் இருக்கு? பாயிண்டர்ஸ் என்ன ஆச்சு? அப்புறம் ஒரு விஷயம் அவங்க இரண்டு பேரும் பையன் இறந்த சோகத்தையும் தாண்டிச் சிந்திக்கறாங்க.அதைப் புரிஞ்சுக்கத் தெரியலை. ம்ம்ம், ஏதோ சொல்வாங்க, எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனைன்னு, அதான் உங்க அண்ணாச்சி மாதிரியே தானே தங்கச்சியும் இருக்கணும். சேம் ப்ளட்ப்பா இரண்டும். :P
ReplyDelete@எஸ்கே.எம், டாங்ஸு, டாங்ஸு, டாங்ஸு, போர்க்கொடிக்கு நிஜமாவே ஒரு போடு போடணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர். இந்த க்ர்ர்ர்ர்ர்ர் போர்க்கொடிக்கு, உங்களுக்கு இல்லை.
மெதுவாப் படிங்க எஸ்கேஎம்.
ReplyDelete