எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 20, 2007

மெளன ராகங்கள்

முதல்லே புலி ரொம்பக் கோபத்தோடக் கொலைவெறியோட இருக்கிறதா வேதா சொன்னதாலே இந்தப் பதிவு புலிக்கு சமர்ப்பணம். புலி, இந்தப் பதிவிலே ஏதானும் தப்பா இருந்தா மெதுவா பின்னூட்டம் கொடுத்துக் கேளுங்க. தெரிஞ்ச பதிலையோ தெரியாட்டி ஏதோ பொய்யோ சொல்லிச் சமாளிச்சுப்பேன். பிராண்டற வேலை வேண்டாம்.
***************************************************************************************

பாரத மணித் திருநாட்டில் திரு அவதாரம் செய்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். (ஹிஹிஹி, நானும் ஒரு தலைவி தான்.) அதிலே நமக்குத் தெரிந்த பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பணி ஆற்றிய எத்தனையோ தலைவர்களில் நம் அனைவராலும் "நேதாஜி" என்று அன்புடன் அழைக்கப் படும் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களில் முக்கியமானவர். சமீபத்தில் நம் இந்தியாவில் தகவல்கள் பெறும் சட்டம் ஏற்படுத்தப் பட்டதும் ஒருவர் திரு நேதாஜி பற்றிய தகவல்கள் அவருக்கு மிக அவசரமாய்த் தேவைப் பட்டதால் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தை நாட அமைச்சகம் கையை விரித்து விட்டது. "நேதாஜியா? யார் அவர்? எங்கே இருந்தார்? சுதந்திரப் போராட்ட வீரரா? அப்படி ஒண்ணும் எங்க கிட்டே தகவல் இல்லையே?"னு சொல்லி விட்டது. சொன்னவர் யாரோ படிக்காதவர் இல்லை. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் பொறுப்பான பதவி வகிப்பவர். ஒரு மாதம் முன்னால் இதைத் தின்சரிப் பத்திரிகைகளி படிச்சதில் இருந்தே மனம் கொதிப்படைந்தது. இன்றைய நாட்களில் விளம்பரம் எதுக்கும் தேவைப் படுகிறது. ஆனால் திரு நேதாஜி நாட்டின் நலத்தையும், அதன் விடுதலையையும், மக்களின் சுதந்திரத்தையும் மட்டுமே முதன்மையாக நினைத்தவர். அதற்காகப் பதவியைத் துறக்கவும் சித்தமாய் இருந்ததோடு துறந்தும் காட்டியவர். மக்கள் தலைவர். அவரைப் பின்பற்றிய அநேகரில் தமிழ்நாட்டவர் தான் அதிகம். ஆனால் இன்றய தலைமுறை அதிகம் அவரை அறிந்திருக்கவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரிஸா மாநிலம் கட்டாக் ஜில்லாவில் 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி திரு ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி போஸுக்கும் 6வது மகனாய்ப் பிறந்தார் திரு சுபா்ஷ் சந்திர போஸ் அவர்கல். அவருக்குப் பின் 2 குழந்தைகள் பிறந்தன அவர் பெற்றோருக்கு. 8 குழந்தைகளில் ஒருவரான போஸுக்கு வீட்டில் அவ்வளவாய்க் கவனிப்பு இல்லை என்றாலும் தந்தை படிக்க அனுப்பியது கல்கத்தாவில் உள்ள பிரசித்தியான ஆங்கிலேயப் பள்ளிக்கு. எல்லாக் குழந்தைகளையும் அங்கே அனுப்பிப் படிக்க வைத்த அவர் தந்தை போஸையும் அங்கே அனுப்பி வைத்தார். மிகவும் நன்றாய்ப் படித்து வந்த போஸ் அவர்கள் இந்தியர்களின் குழந்தைகள் அந்தப் பள்ளியில் நடத்தப் பட்ட விதத்தில் மேலும் மனம் வருந்தினார். படிப்பு முடிந்ததும் அவர் தந்தை அவரை மேல்படிப்புக்காகவும் அந்தக் கால கட்டத்தில் மிகவும் உயர் படிப்பெனக் கருதப் பட்ட ஐசிஎஸ் தேர்வு எழுதவும் போஸ் அவர்களை 1920-ல் இங்கிலாந்துக்குஅனுப்பினார். மனமே இல்லாமல் சென்ற போஸ் அவர்கள் 8 மாதங்களிலேயே ஐசிஎஸ்ஸில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றதோடு அல்லாமல் அங்கேயே நல்ல வேலையிலும் அமர்ந்தார். மேலதிகாரியின் நடத்தையில் மனம் வெறுத்துப் போய் போஸ் வெலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார்.

சுதந்திரப் போராட்டம் காந்தியைத் தலைவராகக் கொண்டு வேகம் பிடித்திருந்த அந்தக் கால கட்டத்தில் தாய்நாடு திரும்பிய போஸ் அவர்கள் முதலில் இளைஞர் காங்கிரஸ் காரியதரிசியாக இருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவருக்குத் "தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்" அவர்களுடன் நல்லுறவு ஏற்படவே இருவரும் கல்கத்தா முனிசிபல் தேர்தல்களில் தங்கள் உழைப்பினால் வெற்றி பெற்றனர். மேயராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட சி.ஆர். தாஸ் சிலநாட்களில் இறந்து விட்டார். காந்தியின் தலைமையில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியக் காரியக் கமிட்டியின் காரியதரிசியாக 1927-ல் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு காந்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேகம் நிறைந்த போஸ் அவர்களுக்கு காந்தியின் மென்மையான அணுகுமுறையும், நிதானமான போக்கும் பிடிக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்தப் போரட்டங்களில் பலமுறை சிறைக்குச் சென்றார் போஸ். என்றாலும் அவர் மனம் உறுதிப் பட்டது. சற்றும் மனம் சலிக்க வில்லை.

1931-ம் ஆண்டு முதன் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸ் அவர்கள் தவிர்க்க முடியாமல் 2 ஆண்டுகளில் ஐரோப்பா சென்றார். ஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து உழைத்தார். 1938-ல் இரண்டாம் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு ஆதரவு நிறையவே இருந்தது. அவரின் அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது. அவரின் சொற்பொழிவோ என்றால் கேட்கவே வேண்டாம். அனைவரையும் சுண்டி இழுத்தது. கவியரசர் ரவீந்திர நாத் தாகூர் போஸ் காங்கிரஸ் தலைவர் ஆனதைத் தன்னுடைய சாந்தி நிகேதனில் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் என்றால் மற்ற சாதாரண மக்களைப் பற்றிச்சொல்லவா வேண்டும்?

மீதி கட்டாயமாய் நாளை வரும். இது தொடர்ந்து வெளி வர முயற்சி செய்கிறேன். அது வரை வேறு போஸ்ட வராது.

25 comments:

  1. இந்த லின்க் பாருங்க...சதயாவும் நேதாஜி பத்தி எழுதி இருக்கார்...

    http://sathyapriyan.blogspot.com/2007/01/blog-post.html

    ReplyDelete
  2. கண்டிப்பா தொடர்ச்சியா எழுதுங்க. எனக்கு அவர ரொம்ப பிடிக்கும் எந்த அளவுக்கு அஹிம்சையைப் பிடிக்குமோ அதே அளவுக்கு இவரின் கொள்கைகளும் பிடிக்கும். இரண்டும் வேறு வேறு துருவங்களாயினும், ஆழ்ந்து கவனித்தால் இரண்டும் ஒன்றே என்பது என்னுடைய எண்ணம். தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  3. //மீதி கட்டாயமாய் நாளை வரும். இது தொடர்ந்து வெளி வர முயற்சி செய்கிறேன். அது வரை வேறு போஸ்ட வராது.//

    சே.. என்ன ஒரு கடமை உணர்வு.

    நேதாஜி பற்றிய பதிவா? மெதுவா வீட்டுல உட்கார்ந்து படிக்கிறேன் மேடம்

    ReplyDelete
  4. என்னங்க தலைப்பு இது... சுபாஸ் மெளன ராகம் கிடையாதுங்க.... அனைவரையும் அதிர வைத்த இன்னும் அதிர வைத்து கொண்டு இருக்கும் ராகம். சாக வரம் பெற்ற ராகம்

    ReplyDelete
  5. //ஒரு மாதம் முன்னால் இதைத் தின்சரிப் பத்திரிகைகளி படிச்சதில் இருந்தே மனம் கொதிப்படைந்தது. //

    இந்த பிரச்சனை ரொம்ப நாளாகவே ந்டந்துக்கிட்டு இருக்கு. அவர் மாயமாக மறைந்த காலத்தில் இருந்து...

    போஸ் பற்றின செய்திகள் அதிகம் வெளிவராமல் காங். ரொம்ப ஜாக்கிரதையாக நடந்து வந்து இருக்கிறது. அதற்க்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம், இன்னும் சொல்ல போனால் நேருவுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  6. //ஆனால் இன்றய தலைமுறை அதிகம் அவரை அறிந்திருக்கவில்லை. //

    இருக்காங்க, ஏகப்பட்ட பேர் இருக்காங்க.ஒரு பெரும் கூட்டமே இருக்கு, ஆனா வர போகும் தலைமுறையை நினைத்தால் தான் பயமா இருக்கு. வரலாற்றில் போஸ் பெயரை ரொம்ப சமாத்தியமாக அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
  7. //அவரைப் பின்பற்றிய அநேகரில் தமிழ்நாட்டவர் தான் அதிகம்.//

    தமிழ்நாட்டவர்களும் அதிகம் என்று சொல்லாம்..... இரண்டாவது இடம் தான் நமக்கு....

    ReplyDelete
  8. //முதல்லே புலி ரொம்பக் கோபத்தோடக் கொலைவெறியோட இருக்கிறதா வேதா சொன்னதாலே இந்தப் பதிவு புலிக்கு சமர்ப்பணம்.//

    சே... என்னங்க இது. நேதாஜிய பற்றி ஒரு பதிவு போட்டு விட்டு சமர்ப்பணம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு, அவருக்கு இந்த நாடே சமர்ப்பணம்....

    ReplyDelete
  9. //இளைய தலைமுறைக்கு இவரை பற்றி அதிகம் தெரியவில்லை//

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எங்களுக்கு தெரியும்.

    என்ன எங்களுக்கு தான் தெரியும்!னு தம்பட்டம் அடிச்சுக்க மாட்டோம்.

    மற்றபடி நல்ல பதிவு. உருப்படியா இதையாவது தொடர்ந்து எழுதுங்க. :)

    thanks for the link syam.

    ReplyDelete
  10. தேதாஜி ஒன்னும் மெளன ராகம் இல்லை.
    கணீரென ஒலிக்கும் ரீதி கெவுளை.

    அப்படினு ஒரு ராகம் இருக்கு தெரியுமா உங்களுக்கு?

    TRC சார் கிட்ட கேளுங்க தெரியும். :)

    ReplyDelete
  11. ரொம்ப அருமையான பதிவு தலைவி ;-)

    ஒரு மாபெரும் தலைவரை பற்றி மீண்டும் படிக்கும் வாய்ப்பை தந்ததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. \\மீதி கட்டாயமாய் நாளை வரும். இது தொடர்ந்து வெளி வர முயற்சி செய்கிறேன். அது வரை வேறு போஸ்ட வராது.\\

    கண்டிப்பாக எழுதுங்கள்....ஆனா தலைப்பு தான் கொஞ்சம் இடிக்கிற மாதிரி தெரியுது..... நேதாஜின்னே வச்சிருக்கலாம்.

    ReplyDelete
  13. சுட்டி அளித்தமைக்கு நன்றி Syam. நேதாஜியைப் போன்று இருட்டடிப்பு செய்யப்பட்ட தலைவர் யாரும் இல்லை. அதன் ஆதங்கமே அப்பதிவு. காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்களை பற்றி அறிந்த அளவிற்கு நேதாஜியை நாம் அறியவில்லை. அதே போன்று முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை பற்றி அறிந்த அளவிற்கு நமது நாடு சந்தித்த பிற போர்களை பற்றியும் நாம் அறிந்திருக்கவில்லை.

    அதனால் இந்திய நாடு சுதந்திரத்திற்கு பிறகு சந்தித்த போர்களை பற்றி தொடராக எழுதுகிறேன். விருப்ப முள்ளவர்கள் படிக்கலாம்.

    கீதா மேடம் உங்க பதிவுல விளம்பரம் குடுத்ததுக்கு காசு கேக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.

    ReplyDelete
  14. kashta kaalam! thalaiv(al)i nu solradhu seriya thaan irukku!

    andha azhagu postla naan ponniyin selvan avanga magan irandhadha mattum than solraanga, kanavarai pathi edhumm solalai nu sonnen. idhai kooda purinjukka theriyama enna pechu?? :-) avanga ezhuthai pathi naan endha vimarsanamum seiyala!

    ReplyDelete
  15. indha post pulikku samarpanam enbadhaal naan attendance mattume pottukiren :-) podhuma vishayam puriyadha en paatiye?? :D

    ReplyDelete
  16. ada puli naatukke samarpanam panniduchu :-)

    adutha pagudhi aavaludan edhirpaarka padugiradhu!

    ReplyDelete
  17. நன்றி மேடம்ம்... பதிவினை இட்டதுக்கு..

    ReplyDelete
  18. //தமிழ்நாட்டவர்களும் அதிகம் என்று சொல்லாம்..... இரண்டாவது இடம் தான் நமக்கு.... //

    அப்படினா முதல்ல யாருங்க புலி...


    ...இத படிச்சப்ப போஸ் படத்தில பார்த்த ஒரு சீன் நியாபகம் வந்தது..


    போஸ் அவர்கள், சிங்கப்பூரில் குழுக்களை ஒருங்கிணைத்து இந்தியா நோக்கி பயணம் செய்ய ஆரம்பிப்பார்.

    அப்போது அந்த வழியாக ஒரு பெண்மிதி வண்டியினை தள்ளி கொண்டு சென்று இருக்கும் போது அந்த கூட்டத்தினை பார்ர்த்து,அதில் நானும் இதில் பங்கு பெறவேண்டும் என்று தமிழில் சொல்லி கூட்டத்தில் ஒருவளாய் ..

    அந்த பெண்ணின் தேர்வு சரியானதாய் இருக்கும்.(தமிழ் சாடை அப்படியே.)

    ReplyDelete
  19. நேதாஜியின் உயரிய குணமே, அவர் காந்தியின் கொள்கையின் மீது வேறுபட்டு இருந்தாலும் அவரை மதித்தே, அவரை வணங்கியே எல்லா செயல்களையும் செய்தார்...

    ReplyDelete
  20. @சியாம்.தாங்க்ஸ் for the info..

    தலைவி.. மேற்கண்ட சத்யாவின் பதிவிலும் உங்கள் பதிவிலும் சில கருத்துகள் முரணாய் உள்ளது.. கொஞ்சம் விளக்கவும்...


    அவர் எத்தனாவது குழந்தை. அவர் இங்கிலாந்தில் இருந்து திரும்பியது என்று...

    ReplyDelete
  21. ஹை ஐ யாம் தி பர்ஸ்ட்டு :-)

    ReplyDelete
  22. கீதா, நேதாஜியைப் பற்றி இவ்வளவு விவரம் சொல்வதற்கு மிகவும் நன்றி.

    இப்படியாவது மௌனமாக மறைந்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  23. Replies
    1. தொடர்ச்சி நிறைய இருக்கு. அதிலும் முக்கியமாய்க் கடற்படையை காந்தி ஏமாற்றியது உள்பட

      Delete