ஜெர்மன் போன போஸ் சும்மா இருக்கவில்லை. தலைவர்களின் ஆதரவை இந்தியாவிற்காகத் திரட்டுகிறார். ஹிட்லரையும் அவரின் ஜனநாயகப் படுகொலையையும், யூதர்களை அவர் நடத்திய விதத்தையும் பகிரங்கமாய் விமரிசிக்கிறார். இந்த முயற்சியில் சில காலம் தலை மறைவாயிருக்கிறார். மறுபடியும் பிரிட்டி்ஷாரின் பிரசாரம் போஸ் இற்ந்து விட்டதாய். அப்போது ஜெர்மன் வானொலியின் உதவியுடன் முதன் முதல் வெளி வருகிறது "ஆசாத் ஹிந்து ரேடியோ." மார்ச் 25 1942-ல் ரேடியோ பெர்லினில் இருந்து, "ஜெய்ஹிந்த்! நான் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்.!" என்று ஆரம்பித்து அவர் கொடுக்கும் பேச்சு உலகம் பூராவும் சென்றடைந்ததோடல்லாமல் இந்தியர் உள்ளத்தில் கிளர்ச்சியும் ஏற்படுத்துகிறது. பெர்லினிலும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த யுத்தக் கைதிகளை ஒன்று திரட்டி 4,500 சிப்பாய்களுடன் படை திரட்டுகிறார். அங்கேயே Free India Centre ஆரம்பிக்கிறார்.
இந்தியாவைத் தம் படையுடன் சென்று அடைந்து மீட்க வேண்டும் என்ற ஆசையில் போஸ் இந்தியா வந்தடைய வழி வகுக்கிறார். ரஷியா அப்போது ஹிட்லருடன் நேசம் கொண்டிருந்ததால் இந்தியாவுக்குத் தரை வழி ர்ஷியா சென்று ஆப்கன் போய் நுழையத் திட்டம் போடுகிறார். என்ன காரணத்தாலோ ஹிட்லர் இந்த வழியை ஆதரிக்கவில்லை. அவருக்குத் தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்வது தான் முதல் வேலையாய் இருந்தது. இருந்தாலும் போஸ் அங்கிருந்து செல்ல விரும்பியதால் ஓர் நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல உதவுகிறார். இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வழியில் ஜப்பானில் இருந்து வந்த மாற்று நீர் மூழ்கிக் கப்பலில் மாறிக் கொள்கிறார் போஸ் கடலுக்கடியிலேயே இவை நடைபெறுவதாய்ச் சொல்கிறார்கள். ஜப்பானில் அவருக்கு அவர் நினைத்த ஆதரவு கிடைக்கிறது. அங்கிருந்து அவர் அப்போது ஜப்பான் வசம் இருந்த சிங்கப்பூர் வருகிறார். சிங்கப்பூரில் அப்போதே நிறைய இந்தியர்கள் ஒரு படை திரட்டி இருந்தார்கள் திரு ராஷ் பிஹாரி போஸ் தலைமையில்.
உண்மையில் இந்தப் படையைத் தேர்ந்தெடுத்தது திரு மோஹன் சிங் என்பவர். சிங்கப்பூரிலிருந்த யுத்தக் கைதிகளை ஜப்பானிய அரசின் உதவியுடன் விடுவித்து ஒன்று சேர்த்து இந்தியாவிற்குச் செல்ல முடிவுடன் ஏற்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் இவரின் நண்பர் ஒருவர் பிரிட்டி்ஷாருக்கு உதவி செய்கிறதோ என ஜப்பான் அரசுக்குச் சந்தேகம் வர இவர் படைத் தலைமையை விட்டு விட்டுப் படையையும் தன்னிடம் இருந்து ராஷ் பிஹார் போஸிடம் ஒப்படைக்க, அவரோ சரியான தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம் அப்போது. போஸ் அங்கே போய்ச் சேர்ந்தார். 1943 ஜூலையில் சிங்கப்பூரில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையை ஏற்றுக் கொள்வதாய் உறுதியுடன் 85,000 வாலிபர்கள் அந்தப் படையில் இணைந்தனர். இதற்குத் தான் இந்திய தேசீயப் படை என்று பெயரிடப் பட்டது. ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தப் படையில் பெண்கள் தனிப் படையாக அணி வகுத்தனர், திருமதி ல்ஷ்மி என்னும் தமிழ்நாட்டுப் பெண்ணின் தலைமையில். (அவர் சில வருடங்கள் முன்வரை உயிருடன் இருந்தார். சுதந்திரப் பொன்விழா ஆண்டில் பேட்டி வந்திருக்கிறது என நினைக்கிறேன்.)
முதல் முறையாகத் தனியான அரசு நிர்மாணிக்கப் பட்டு மூவர்ணக் கொடி ஏற்றப் பட்டது. நிதியையும் தனியாகக் கையாள முடிவு செய்தனர். தனியாக நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. சட்டங்களும், விதிமுறைகளும் ஏற்படுத்தப் பட்டன. இந்த அரசை 9 நாடுகள் அங்கீகரித்தன. அவை ஜெர்மன், ஜப்பான், இத்தாலி, க்ரோவே்ஷியா, Wang Jing WEir Govt. in Nanjung, தாய்லாந்து, பர்மா, மஞுகோ மற்றும் பிலிப்பைன்ஸ். அப்போது ரஷியா இந்த அரசை ஆதரிக்க வில்லை எனவே பலரும் நினைத்தனர். ஆனால் சமீபத்தில் வெளியிடப் பட்ட செல அரசுக் குறிப்புக்களில் இருந்து அதுவும் ஆதரித்திருக்கிறது.
//
ReplyDeleteஇருந்தாலும் போஸ் அங்கிருந்து செல்ல விரும்பியதால் ஓர் நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல உதவுகிறார். இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வழியில் ஜப்பானில் இருந்து வந்த மாற்று நீர் மூழ்கிக் கப்பலில் மாறிக் கொள்கிறார் போஸ் கடலுக்கடியிலேயே இவை நடைபெறுவதாய்ச் சொல்கிறார்கள்.
//
இதைப் பற்றி நான் எனது பதிவில் ஒருவருக்கு எழுதிய பின்னூட்டம் கீதா மேடம். இங்கே பதிவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.
அவர் ஜெர்மணியிலிருந்து ஜப்பான் சென்றதை நான் பின்வரும் இரு வரிகளில் அடக்கி விட்டேன்.
"ஜெர்மணியின் U-180 மற்றும் ஜப்பானின் I-29 ஆகிய இரு நீர் முழுகிக் கப்பல்களில் பயனம் செய்து சிங்கப்பூர் சென்றடைந்தார் நேதாஜி."
ஆனால், உண்மையில் அந்த பயனம் மட்டுமே ஒரு புத்தகம் எழுத தேவையான அளவு சாகசங்கள் நிறைந்தது. பயனம் முழுவதும் கடல் கொந்தளித்தது. அதனால் இரு நாட்கள் தாமதம் ஏற்பட்டது.
I-29 உடன் சென்ற I-34 கப்பல், வான் வழி தாக்குதலால் தகர்க்கப்பட்டது. மேலும் பாதுகாப்பிற்காக வந்த Ju-88c என்ற கப்பலும் தகர்க்கப்பட்டது. பல தாக்குதல்களை தாண்டி சிங்கப்பூர் சென்றடைந்தது.
Nice info both from geetha madam and sathyapriyan.
ReplyDeletenext part pls.
நீங்க அந்த தேசிய படையில் சேரலையா? அப்பவே உங்களுக்கு ஒரு 25 வயசு இருக்குமே!
ReplyDeleteபந்திக்கு முந்து! படைக்கு பிந்து!னு இருந்துடீங்களா?
details are too good. Most of the informations are new to me. a BIG THANKS for these posts.
ReplyDelete// சிங்கப்பூரில் அப்போதே நிறைய இந்தியர்கள் ஒரு படை திரட்டி இருந்தார்கள் திரு ராஷ் பிஹாரி போஸ் தலைமையில்//
ReplyDeleteவெளியில் தெரியாமல் போய்விட்ட ஒரு தலைவரின் வாழ்க்கையை படம் பிடித்து காடியிருக்கிறீர்கள் மேடம்.. இப்படி சுதந்திரதிற்காக பல பேர் உழைத்தும் அந்த பேரெல்லாம் காந்திக்கு மட்டுமே சென்றது விந்தை.. எல்லாம் பத்திரிகைகளும் ஊடங்களும் செய்த சதியாக இருக்குமோ..
ஒன்றுமில்லாதவரை பெரியதாக காட்டும் இன்றைய ஊடகங்கள் போல..?
சத்யா, வரலாற்றில் இப்படி பட்டையை கிளப்புறீங்களே
ReplyDeleteமேடம், தமிழ்நாட்டில் போஸின் தாக்கம் எப்படி இருந்தது.. இந்தியன் படத்தில் கொஞ்சம் தெரிந்துகொண்டது (அது கடுகைவிடச் சிறிய அளவு தான்) அப்போது உங்கள் வயதையொத்த நண்பர்களிடம் இவரின் கருத்துக்கு ஆதரவு எப்படி இருந்தது? உங்கள் சொந்த அனுபவங்களையும் சுற்றியுள்ளவர்களின் அனுபவங்களையும் சொன்னால் இன்னும் சுவையாக இருக்குமே
ReplyDeleteஇன்னும் போஸ் பற்றிய உங்களது பதிவின் தலைப்புகளை வரிசை படுத்தவில்லையே மேடம்
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்., கார்த்திக், நான் சுதந்திரம் வந்து பல வருடங்களுக்குப் பின் தான் பிறந்தேன். அம்பி (:P ஆப்பு, உங்களுக்குப் பெரிய ஆப்பு காத்துட்டு இருக்கு. க்ர்ர்ர்ர்ர்)சொன்னதை உண்மை என்று அப்பாவியாய் (அமெரிக்கா வந்தும் இன்னும் அப்பாவியாய் இருக்கீங்களே?) நினைத்துக் கொண்டு கேட்கிறீங்களே? என் வயதொத்த நண்பர்களைப் பற்றி எனக்கு அவ்வளவாய்த் தெரியாது. பள்ளியில் போஸ் ஒரு பாடமாயும், அவர் இறந்துவிட்டார் என்பதும் தான் தெரிந்து கொண்டேன். பள்ளி தாண்டித் தெரிந்து கொண்ட விவரங்கள் இவை. அது பத்தி அப்புறமா எழுதறேன்.
ReplyDelete