எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 02, 2007

திரும்பிப் பார்க்கிறேன்

இன்னிக்கோட நான் தமிழில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிறது. ஒண்ணும் பெருசாக் கிழிக்கலைன்னாக் கூட ஏதோ ஓரளவு சிலரின் கவனத்தையாவது என்னோட எழுத்துப் பெற்றிருக்கிறது. ஆரம்பிச்சது என்னவோ 2005 நவம்பரில் என்றாலும் சிலநாள் எதுவும் எழுதாமலும், அப்புறம் ஆங்கிலத்தில் மிகவே குறைவாகவும் எழுதினேன். என்ன தமிழ்ப் புலமையைப் பார்த்து நீங்க எல்லாம் பிரமிச்சுப் போற மாதிரி ஆங்கிலப் புலமையையும் பார்த்து பிரமிச்சுடுவீங்களோன்ற பயத்தில் தான் தொடரவில்லை!!!! அப்போ முதன்முதல் என்னோட பின்னூட்டங்களைப் பிரசுரித்து எனக்கு ஆதரவு கொடுத்து வந்தவர்கள் திரு டோண்டு அவர்களும், கைப்புள்ளயும் தான். அப்புறமாய்ப் பினாத்தலும், பிதற்றலும், தருமியும் ஆதரவு கொடுத்தார்கள். இதில் பினாத்தலுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதே போல் தருமி அவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் இருவரும் என்னுடைய கருத்துக்களைப் பிரசுரித்ததோடு அல்லாமல் எனக்குப் பதிலும் கொடுத்து வந்தார்கள். சிபியோடு கருத்து வேறுபாடு என்று எதுவும் இல்லை. அவ்ருடைய "அமானுஷ்ய வாசகி"யைப் படித்து அவரோட பதிவுக்குப் போக ஆரம்பித்தேன். "குமாரகாவியம்" எழுத ஆரம்பித்தார். அப்போ எல்லாம் சிபி ஒரு சமயத்தில் நான் பின்னூட்டம் கொடுக்க இன்னும் வரலையே என்று கேட்டுப் பிதற்றிக் கொண்டிருந்தார். எல்லாம் நேரம்!!!! எனக்குத் தான்!!! ஹிஹிஹி!! வேறே என்ன? இப்போ அவர் எங்கேயோ! நான் எங்கேயோ! தமிழ் எழுத ஆரம்பிச்சதும் முதல் வாழ்த்துக் கைப்புள்ளயிடம் இருந்தும், முதல் கிண்டல் அம்பியிடம் இருந்தும் வந்தது. அன்றில் இருந்து இன்று வரை தன் பணியை சற்றும் மாற்றமில்லாமல் செய்து வருகிறார் அம்பி!!!!! கைப்புள்ள நடு நடுவில் காணாமல் போய்ப் பின்னர் வந்தார். இப்போவும் கொஞ்ச நாளாய்க் காணாமல்தான் இருக்கிறார். வந்துட்டாரா தெரியலை. நான் எழுத ஆரம்பிச்ச அதே சமயம் ஆரம்பிச்சார் வல்லியும். அப்போ எல்லாம் கொஞ்ச நாள் வல்லியும், நானுமே பின்னூட்டம் கொடுத்துக் கொண்டிருந்தோம். அம்பி திடீர் என சொல்லிக்கொள்ளாமல் (வழக்கம் போல்) கல்லிடை போக நாங்கள் இருவரும் எங்கள் இருவர் பின்னூட்டத்தைத் தவிர அம்பி கொடுக்கும் பின்னூட்டம் இல்லாமல் என்ன ஆச்சோ என்று கவலைப்பட்டு அம்பியோட பதிவுக்குப் போய்க் கண்டுபிடிச்சோம் அம்பி ஊரில் இல்லை என. அம்பி மூலம் பழக்கம் ஆன வேதா, அப்புறம் நானாய்த் தேடிக் கண்டு பிடிச்ச கார்த்திக் என்று எனக்கு நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள்.

இதுக்கு நடுவில் நான் வழக்கம் போல் சுற்றுலா போக வல்லியின் பதிவுகளின் போக்கும், அவர் என்னோட பதிவுக்கு வருவதும் மாற்றம் காண ஆரம்பித்தது. அவர் வழி தனி வழி என்று ஆகி அவர் சில பல மாற்றங்களுடன் இன்று எழுதி வருகிறார் ஒரே மாதிரியான சீரான தரத்துடன்.எனக்கு அப்புறம் ஆரம்பிச்ச நாகை சிவா ஆரம்பம் முதலே நல்ல நட்புடன்
பழகி வருகிறார். என்னோட எழுத்தில் மாற்றம் வருவதற்கும், ஓரளவு கிண்டலுடன் நான் எழுதுவதற்கும் சூப்பர் சுப்ராவும், வெ.பா.வடிக்கலாம் வா. ஜீவ்ஸும் காரணம். இதில் சூப்பர் சுப்ரா தான் என்னோட பார்வையின் கோணத்தை மாற்ற முயன்றார். ஓரளவுக்கு நான் மாற்றிக் கொண்டேன். ஓரளவு என்று இங்கே நான் குறிப்பிடுவதின் காரணம் என்னால் இன்னும் முழுதாய் மாறமுடியவில்லை. தப்பு என் மீது தானே தவிர, அவர் மீது இல்லை. அப்போ என்னோட 50-வது பதிவில் மதுமிதாவுக்கு நான் எழுதிய பதிவில் குறிப்பிட்ட கடைசி வரி "நான் சாதனை மனுஷி இல்லை" என்பது. அதைக் குறிப்பிட்டு மீண்டும் அந்தப் பதிவுக்கு அவர் ஒரு பின்னூட்டம் தற்சமயம் மகளிர் தினத்தை ஒட்டிக் கொடுத்ததில் இருந்து அவர் எங்கேயோ இருந்து என்னோட எழுத்தைப் படித்து வருகிறார் என்றும் புரிந்தது. இம்மாதிரியான ஊக்கங்களுக்கு நான் யாருக்கும் எதுவும் செய்யவில்லை. என்றாலும் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்கள்.

75-பதிவுகள் போட்டு முடித்த சமயம் என்னோட தவறினால் பதிவுகள் காணாமல் போனதும், திரு மஞ்சூர் ராஜா அதைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்ததும், அப்போது என்னுடன் சேர்ந்து என்னோட கணவர் என்னை விட ரொம்பக் கவலைப்பட்டு மஞ்சூருடன் ஆன்லைனில் தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை நான் சொல்லச் சொல்லக் கொடுத்தும் (அப்போது வேறு முக்கியமான வீட்டு வேலை எனக்கு இருந்தது) அவரிடமிருந்து தகவல்கள் பெற்றும் உதவினார். இப்போவும் நான் எழுதும் சில முக்கியமான பதிவுகள் பற்றியும் அதற்கு வரும் பின்னூட்டங்கள் பற்றியும்,நான் கொடுக்கும் பதில்கள் பற்றியும் என் கணவர் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

பதிவுகள் காணாமல் போன அந்த சமயத்தில் இருந்து நாகை சிவா ரொம்பவே உதவி செய்ய ஆரம்பித்தார். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, நாகை சிவா ரொம்பவே உதவி செய்தார். தாய்நாடு வந்ததும் நான் சொன்ன எனக்கு செளகரியப்பட்ட தேதியில் எங்க வீட்டுக்கு வந்து விட்டும் போனார். அதற்கு முன்னாலேயே முத்தமிழில் இருந்து திரு காழியூராரும், பாசிட்டிவ் ராமாவும் வந்தார்கள் நல்ல கொட்டும் மழைக்காலத்தில். சிவா வந்துவிட்டுப் போனதும் முத்தமிழில் இருந்து ஜெயந்தியும், அவர் பெற்றோரும், ஜெயந்தியின் பையனும் வந்தனர். பின்னர் திரு கண்ணபிரான் ஒரு பெரிய பதிவர் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்து பார்த்துவிட்டுப் பின் அது நான், கண்ணபிரான், பாலராஜன்கீதா, திரு தி.ரா.ச. மட்டும் சந்தித்துப் பார்த்துக் கொண்ட சிறிய ஓர் சந்திப்பாய் ஆனது. வேதாவிற்கும் அன்று வரமுடியவில்லை.



இந்த ப்ளாக்கர் எனக்குக் கொடுக்கிற தொந்திரவு மாதிரி வேறே ஏதும் கொடுக்காது. அவ்வளவு தொந்திரவு கொடுக்கிறது. அப்படியும் நான் ஏதோ ஓரளவு எழுதிக் கிழிக்கிறேன்னா அதற்கு ராம் போன்றவர்களும் காரணம். அவரோட வேலைத் தொந்திரவுகளுக்கு இடையிலும் அவர் என்னோட ப்ளாகைப் புது ப்ளாகருக்கு மாற்றிக் கொடுத்தார். அதற்காக அவர் ஓர் இரவு கண்விழிக்க வேண்டி இருந்திருக்கிறது. அவர் எனக்காக உழைத்துக் கொண்டிருந்த சமயம் நான் என்னமோ நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். அதுவும் தவிர தமிழ்மணம் மறுமொழி மட்டுறுத்தல் நிலவரத்திலும் என்னுடைய பதிவுகள் பெயர் தெரியுமாறு செய்திருக்கிறார். இவரைத் தவிர, நான் இல்லாத சமயங்களில் என்னோட ப்ளாகுக்கு மறைமுகமாய்க் காவல் செய்தும், எனக்காகப் பதிவுகளைச் சிலசமயம் இல்லை, பல சமயங்களில் பப்ளிஷ் செய்தும், பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்தும், நான் போடும் பூதாகாரமான ஃபோட்டோக்களை ஒழுங்கு படுத்தியும், பலவிதங்களில் உதவி செய்து வந்து கொண்டிருக்கும் உ.பி.ச.வின் உதவியும் கட்டாயம் என்னால் மறக்கவே முடியாது. ஹிஹிஹி, யார் அந்த உ.பி.ச? கண்டுபிடிக்கிறவங்களுக்கு அவங்களே சொந்த செலவில் வந்து பின்னூட்டம் கொடுப்பாங்க. இப்போக் கூடப் பாருங்க, போன பதிவில் நீங்க எல்லாரும் என்னடா பின்னூட்டங்கள் வந்திருக்கு? பதிலே இல்லைனு நினைப்பீங்க! பப்ளிஷ் செஞ்சது அவங்கதான். பதில் கொடுக்க நேரம் இல்லை எனக்கு. அதனால் பதில் கொடுக்கலை. ஆகவே இது என் தனி ஒருத்தியின் சாதனைன்னு சொல்லவே முடியாது. எல்லாருமாய்ச் சேர்ந்து செய்த கூட்டுச் சாதனைன்னுதான் சொல்லணும். ஏனெனில் நான் எழுதறதை விட முக்கியம் அது பப்ளிஷ் ஆகிறது. அவ்வளவு கஷ்டம் பப்ளிஷ் பண்ணுவதற்கு ஆகிறது. அப்புறம் இன்னொரு முக்கியமான பதிவு இப்போ எழுதிட்டு நான் போகணும். அதனால் இதை இத்தோடு முடிச்சுக்கறேன். அப்புறம் யு.எஸ். வந்ததும் எல்லாருக்கும் பெரிய "ஆப்பா" வச்சுடலாம். வர்ட்டா????

6 comments:

  1. ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  2. கீதா

    //இன்னிக்கோட நான் தமிழில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிறது.//

    வாழ்த்துக்கள்! மேலும் உங்க பணி தொடரவேண்டும்.

    //ஒண்ணும் பெருசாக் கிழிக்கலைன்னாக் கூட ஏதோ ஓரளவு சிலரின் கவனத்தையாவது என்னோட எழுத்துப் பெற்றிருக்கிறது.//
    இதை தன்னடக்கம் என்றும் சொல்லலாம்

    ReplyDelete
  3. வாழ்க உங்களது பதிவுத்தொண்டு, அதாவது உங்களது பதிவுகளுக்கு தொண்டு புரிபவர்கள் வாழ்க....

    ReplyDelete
  4. \இன்னிக்கோட நான் தமிழில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிறது. \\

    வாழ்த்துக்கள் தலைவி ;-)))
    அருமையாக கொசுவத்தியை சுத்தியிருக்கீங்க

    ReplyDelete
  5. கீதா, வாழ்த்துக்கள். உ.பி.ச யாரு. வேதாவா?
    தி.ரா.ச?

    என்னோட வருஷம் ஐந்தாம் தேதினு நினைக்கிறேன்.
    எனக்கு இன்னும் மறுமொழி மட்டுறுத்தல் செய்ய முடியவில்லை.
    அதாவது நிலவரம் காட்ட முடியவில்லை.
    எல்லாமே பிரமாண்ட பிரச்சினைகளாகத் தெரிகிறது:-)
    உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள். உன் நண்பனைச் சொல் ,உன்னை யார் என்று நான் சொல்லுகிறேன் என்பார்கள். எங்களையெல்லாம் கௌரவித்துவிட்டீர்கள். ரொம்ப நன்றிப்பா.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் மேடம்.. நல்லாவே திரும்பி பாத்திருக்கீங்க

    ReplyDelete