எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 13, 2007

என்னத்தை எழுதறது?

வி்ஷயம் இல்லைனு நினைக்காதீங்க. நிறைய இருக்கிறதாலே தான் என்ன எழுதறது? எதுக்கு முன்னுரிமை கொடுக்கிறதுன்னு ஒரே பிரசனை. இப்போ ஒண்ணொண்ணாப் பார்ப்போம். நான் எழுதிய ஒரு வார்த்தையில் எல்லாருக்கும் ஒரே தத்துவமும், கவிதையுமா வருது. அந்த வார்த்தை ''test" என்னும் வார்த்தை தான். அதைப் பார்த்துப் பாசமலரான அபி அப்பா, அபி அம்மாவையும், அபி பாப்பாவையும் கூட்டி வந்து காட்டிக் கண் கலங்க, அதுக்கு மேலே கொத்தனார் வந்து தத்துவ மழை பொழிய, போறாததுக்கு கோபிநாத் வந்து குறைந்தது 500 பின்னூட்டமாவது போடறேன்னு சொல்ல (ஹிஹிஹி கோபிநாத் மாட்டி விட்டுட்டேனே), அதுக்கு மேலே ஐயனாரும், வெட்டியும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கவிதை மழை பொழிய, சூடான் புலி என்னைப் பார்த்து பயந்து நான் வரலை இந்த விளையாட்டுக்குன்னு ஒதுங்க, எதை எழுதறதுன்னே தெரியாமல் நான் விழிக்க, என்னத்தை எழுதறது?

சரி, அதெல்லாம் போகட்டும்னு இங்கே வந்ததுக்கு டிவிடியில் தமிழ்ப் படம் பார்த்தே தீருவது என்ற சபதத்தினாலும், ஜெட்லாகில் இருந்து தப்பிப்பதற்காகவும் சிலபல திரைப்பட டிவிடிக்கள் வாங்கி வந்ததில் அதில் பருத்திவீரனும் ஒன்றாக இருக்கணுமா? பருத்தி வீரன் பார்த்து அதன் முடிவைப் பார்த்து அழுதவர்கள் பட்டியல் என் கையில் கிடைக்க, என்னோட மறுபாதி நான் வரலை இந்தப் படத்துக்கு என்று ஒதுங்க, நான் மட்டும் தனியாய்ப் பார்த்தேன். என்ன ஆச்சரியம் போங்க! சரியாய்ப் படம் முடிந்து கிளைமாக்ஸ் ஆரம்பிக்கும்போது என்ன நடந்தது தெரியுமா? கார்த்திக்கும், (ஹிஹிஹி, நம்ம கார்த்திக் இல்லை, இது சிவகுமார் பிள்ளை கார்த்திக்) பிரியாமணியும் ஓடிப் போக முடிவு செய்து பேசிக் கொண்டே போவார்கள், போவார்கள், போவார்கள், போவார்கள், போவார்கள், அப்போ வில்லன் ஆட்கள் வந்து வழி மறிப்பார்கள், மறிப்பார்கள், மறிப்பார்கள், மறிப்பார்கள், மறிப்பார்கள். அதுக்கு மேலே என்னங்க ஆச்சு? மண்டையை உடைக்குதே! எல்லாரும் படம் பார்த்துட்டு முடிவைப் பார்த்து அழுதுட்டாங்களாம். இங்கே படம் முடிவே பார்க்காமல் எனக்கு அழுகை வருது, ஏன் எனக்கு இந்த மாதிரி ஒரு டிவிடி அமெரிக்கா வந்து கூடக் கிடைக்கணுமா? குறைந்த பட்சம் இந்த ஒரு படமாவது நான் முழுசாப் பார்க்கக் கூடாதான்னு? பருத்திவீரன் பார்த்துட்டு முடிவு தெரியாமல் அழுத ஒரே நபர் நானாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். என்னத்தை எழுதறது? சொல்லுங்க!

அப்புறமா ஒரு முக்கியமான விஷயம். சூடான் புலி ஏன் சோகமா இருக்குன்னு தெரியுமா? உகாண்டா போய்ப் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கு. அதான் சோகம். புலி, சரியா? நான் எழுதி இருக்கிறது? சரி,இங்கே இப்போ ராத்திரி ஆயிடுச்சு, நான் தூங்கப் போறேன். என்ன எழுதறதுன்னுதான் தெரியலையே? :))))))))))))))))

24 comments:

  1. ஏதோ, போன பதிவு நல்லா இருக்கேன்னு நெனச்ச உடனே , விட்டேனா பார் அப்படின்னு, இப்படி ஒரு மொக்கைப் பதிவா?... :-)

    ReplyDelete
  2. //என்ன எழுதறதுன்னுதான் தெரியலையே? :))))))))))))))))//

    testக்கு பிறகு exam தான்:-))

    ReplyDelete
  3. அப்பாடி பருத்திவீரன் லிஸ்ட்டில் இருந்து கழற்றிவிட்டாச்சு.
    கடைசி பத்தியில் எங்கள் ஊர்காரரை அனாவசியமாக வம்பில் இழுப்பதாக தெரிகிறது.
    தூங்குகிற புலி மீது கல்லெறிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
    :-))

    ReplyDelete
  4. இத மொக்கை!னு வரிசை படுத்தலையா? ;p

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா மேடம், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்!

    ReplyDelete
  6. //சூடான் புலி ஏன் சோகமா இருக்குன்னு தெரியுமா? உகாண்டா போய்ப் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கு.//

    கீதா மேடம் சொல்றது உண்மையா மாப்ஸ்.. விளக்கவும் 20 வார்த்தைகளுக்கு மிகாமல்!

    ReplyDelete
  7. இப்படியே எத்தனை நாளைக்கு என்ன எழுதுறது என்ன எழுதுறதுன்னு சொல்லிகிட்டே இருக்கப்போறீங்க மேடம்.. ஏதாவது எழுதுங்க.. உங்களுக்கு தெரியாததா :-)

    ReplyDelete
  8. அட புலி உகாண்டா புலியோட ஜோடியா?

    ReplyDelete
  9. அட அநியாய ஆபிஸர்களா, இங்க ஆபிஸ்ல தொல்லை தாங்கலனு கொஞ்சம் வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை பார்த்தேன், அதுக்குள்ள இப்படி ஒரு பெரும் புரளிய கிளப்பி விட்டு இருக்கீங்களேப்பா.... என்னத்த சொல்ல.... அது போகட்டும் அப்படியே நான் பொண்ணு பாத்தாக இருந்தாலும் ஏன் சோகமா இருக்கனும்... பெண்கள்னாலே சோகம் என்று சொல்ல வறீங்களா...

    ReplyDelete
  10. //என்னது? அட! புலி சொல்லவேயில்ல..:)//

    நீங்க கேட்கவே இல்ல அதான்.. அட என்னங்க வேதா.... நீங்களும்...

    //ஏதோ கொளுத்தி போட்டுட்டீங்க அது கொழுந்து விட்டு எரிய போகுதா இல்ல அணையப்போகுதான்னு புலி தான் வந்து சொல்லனும்:) //

    அதே தான், நானும் ஒன்னு கொளுத்தி போட்டு இருக்கேன், அதுக்கு அவங்களே பதில் சொல்லட்டும்.

    ReplyDelete
  11. என்னடா இன்னிக்கு நம்மள் பாக்குற எல்லாரும் பொண்ணை பற்றிய கேட்குறாங்களேனு நான் டவுட் ஆனேன், இப்ப கன்பார்ம் ஆயிட்டேன்.... இது சரியா, இது தகுமா... சொல்லுங்க சொல்லுங்கோ

    ReplyDelete
  12. //கடைசி பத்தியில் எங்கள் ஊர்காரரை அனாவசியமாக வம்பில் இழுப்பதாக தெரிகிறது.
    தூங்குகிற புலி மீது கல்லெறிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். //

    பாத்தீங்கள, நம்ம சப்போர்ட்டை.... சும்மா சீண்டி பாக்க வேண்டாம்... சொல்லிட்டேன்.

    ReplyDelete
  13. //கீதா மேடம் சொல்றது உண்மையா மாப்ஸ்.. விளக்கவும் 20 வார்த்தைகளுக்கு மிகாமல்! //

    20 வார்த்தை என்ன இரண்டே வார்த்தையில் இல்ல ஒரே வார்த்தையில் சொல்லாம். ஆனால் அது உனக்கே தெரியுமே மாம்ஸ் அப்புறம் என்ன....

    ReplyDelete
  14. //அட புலி உகாண்டா புலியோட ஜோடியா? //

    பொற்கொடி... யூ டூ...... டூ பேட்...

    என்ன உலகமடா இது...

    ReplyDelete
  15. நானும் அந்த test பதிவ பாக்காம விட்டுடேன்...இல்லனா என்னோட சார்பிலயும் கொஞ்சம் பீல் பண்ணிட்டு போய் இருக்கலாம் :-)

    ReplyDelete
  16. என்ன தான் சொல்லுங்க நானும் ஒரு வருசமா இந்த பதிவுகள படிச்சிட்டு இருக்கேன் ஆனாலும் அந்த test பதிவு மாதிரி ஒரு அருமையான பதிவு வேற எங்கயும் பார்த்து இல்ல..பாக்கவும் முடியாது...என்ன ஒரு கருத்து...என்ன ஒரு சிந்தனை :-)

    ReplyDelete
  17. புத்தாண்டு வாழ்த்துக்கள்...டொனேசன் குடுத்தீங்கன்னா கிளம்பிடுவேன் :-)

    ReplyDelete
  18. //பாத்தாக இருந்தாலும் ஏன் சோகமா இருக்கனும்... பெண்கள்னாலே சோகம் என்று சொல்ல வறீங்களா//

    தலைவி நீங்க மட்டும் தான் கொளுத்தி போடுவீங்களா..

    பாருங்க புலி அத திருப்பி உங்க பக்கம் போட்டுட்டார்...

    பார்க்கலாம்ம்ம் என்ன நடக்குதுனு?

    ReplyDelete
  19. //அதெல்லாம் போகட்டும்னு இங்கே வந்ததுக்கு டிவிடியில் தமிழ்ப் படம் பார்த்தே தீருவது //


    அம்பி: அம்பி நீங்க இத படிச்சுட்டு தமிழ் படத்த பார்க்கத்தான் அமெரிக்க போயிருக்கீங்களா நீங்க, அப்படினு கேள்வி கேட்பீங்கனு நினைச்சேன்.. ஆனா இல்லா.. :(((

    தலைவி: நல்லவேளை..டிடிலதான் பார்ப்பேனு அடம் பிடிக்காம மாறீனிங்களே. அதுவரைக்கும் நல்லது..

    அப்படியே மொழி படம் பாருங்கள்.. நல்ல படம்...வாய்விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யலாம்....

    அப்புறம் நான் இரண்டு நாளைக்கு முன்னாடி BOSE,the forgotten hero அப்படினு நேதாஜிய பத்தி ஒரு படம் பார்த்தேன்..

    அப்ப உங்க நினைப்புதான் வந்தது.நீங்க அந்த படம் பார்க்கவில்லை யென்றால் பார்த்து விட்டு சொல்லுங்கள்.. என்னிடம் ஒரு கேள்வி லிஸ்ட் இருக்கு ,கேட்கனும்...

    ReplyDelete
  20. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)

    ReplyDelete
  21. பருத்திவீரன் முடிவு தெரியலனு வருத்தம் வேறயா? ஐயோ ஐயோ!!
    :-)

    அமீர் நாம பாக்குறதுக்கு ஒரு பருத்திவீரனும், விருது விழாக்கு இன்னொரு பருத்திவீரனும் வெச்சுருக்காரு? இதுல நீங்க எதை பாத்தீங்களோ? ;-)

    ReplyDelete
  22. "என்னத்தை எழுதறது?"

    பின்னுட்டமாக

    ReplyDelete
  23. \\கோபிநாத் வந்து குறைந்தது 500 பின்னூட்டமாவது போடறேன்னு சொல்ல (ஹிஹிஹி கோபிநாத் மாட்டி விட்டுட்டேனே),\\

    அய்யோ....என்ன ஒரு கடமை ;-))) வாழ்க தலைவி

    ReplyDelete