2-ம் உலகப் போர் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. ஜப்பான் இந்தியாவிற்குள் வந்து நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. ஜப்பானிய அரசின் ஆதரவுடனும், அவர்களின் பண உதவியுடனும் போஸும் தன்னுடைய இந்திய தேசீயப் படையின் வீரத்தைக் காட்ட ஆரம்பித்தார். சிப்பாய்களுக்கு இரெண்டே இரண்டு சொற்கள் தான் சொன்னார். ஒன்று "டெல்லி சலோ!" (டெல்லிக்குப் போ) இரண்டாவது "ஜெய்ஹிந்த்" (இதைத் தான் பின்னால் காங்கிரஸ் ஸ்வீகரித்துக் கொண்டது.) இந்த வார்த்தைகளினால் உற்சாகம் அடைந்த வீரர்கள் பர்மா வழி டெல்லிக்குள் நுழையத் தயார் ஆனார்கள். முதலில் அவர்கள் வழியில் இருந்த அந்தமான், நிகோபார் தீவுகளைப் பிடித்து பிரிட்டி்ஷாரிடம் இருந்து விடுவித்தார்கள். அதற்கு ்ஷஹீத், ஸ்வராஜ் தீவுகள் எனப் பெயர் மாற்றம் செய்யப் படுகிறது. அங்கே உள்ள உள்நாட்டு மக்களைப் பார்க்க முடியாமல் போஸ் தடுக்கப் படுகிறார். பின் அங்கிருந்து பர்மா வந்தடைந்து 18 மார்ச் 1944-ல் மணிப்பூரில் உள்ள மோய்ரங் என்னும் ஊரில் முதன் முதல் மூவர்ணக் கொடி அரசு சார்பில் ஏற்றப் படுகிறது. பின்னர் கொஹிமாவையும், இம்பாலையும் ஜப்பானிய, பர்மியப் படைகளுடன் சேர்ந்து இந்திய தேசீயப் படையும் முற்றுகை இடுகிறது. அந்த முற்றுகையில் கலந்து கொண்ட இந்திய தேசீயப் படையின் யுனிட்டுகளின் பெயர் என்ன தெரியுமா? ஒன்று "காந்தி யூனிட்" இன்னொன்ற்ய் "நேரு யூனிட்".
அப்போது பக்கத்தில் வங்காளத்தில் கடுமையான பஞ்சம். மக்கள் உணவின்றித் தவித்தனர். ஆங்கில அரசால் சமாளிக்க முடியவில்லை. தன் சொந்தத் தாய்நாட்டின் அவலம் தாங்க முடியாமல் போஸ் அவர்கள் பர்மாவில் இருந்து வானொலி மூலம் செய்தி விடுக்கிறார்."பர்மாவில்் இருந்து பர்மிய அரிசி அனுப்புவதாய்". ஆனால் ஆங்கில அரசு அதை ஏற்கவில்லை. இங்கிலாந்தில் இருந்த அரசும் போஸின் கூற்றை ஏற்கவில்லை. விளம்பரத்துக்காகச் செய்யும் தந்திரம் என போஸ் விமரிசிக்கப் பட்டார். ஏற்கெனவே ஹிட்லருடன் சேர்ந்ததில் அவர் ஃபாஸிஸ்ட் எனவும், ஜப்பான் பிரதமர் "டோஜோ" வின் ஆதரவு இருந்ததால் "டோஜோவின் கைக்குலி" என்றும், தேசத்தை விற்று விட்டார் எனவும் விமரிசிக்கப் பட்டிருந்தார்.
அந்தச் சமயம் பார்த்துத் திடீரென மழைக்காலமும் ஆரம்பிக்கிறது. பல்வேறு தொற்று நோய்களாலும் சிப்பாய்கள் பீடிக்கப் படுகிறார்கள். அதிகமாய் மழை பெய்யும் அந்தப் பகுதியில் வேகமாய் முன்னேற முடியவில்லை. சரியான மருத்துவ உதவியும் கொடுக்க முடியவில்லை. ஜப்பான் வேறே அப்போது தளர்ந்து போய் விட்டது. அவர்கள் மெதுவாய்ப் பின்வாங்க ஆரம்பித்தனர். யுத்ததின் அதிகச் செலவினாலும் அவர்களின் தோல்வியினாலும் போஸுக்கு எதிர்பார்த்தபடி பண உதவி செய்ய முடியவில்லை. போஸ் அப்போது ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப் பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் தன் பக்கம் சேருவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் இங்கே சரியான உதவி கிடைக்காமல் இந்திய தேசீய ராணுவமே பின் வாங்க நேரிட்டது. தன்னுடைய அரசு மக்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என்று போஸ் நினைத்ததற்கு மாறாய் கட்டாயமாய் வரி வசூலிக்க வேண்டி வந்தது, அப்போதைய மலேசியா, சிங்கப்பூரில் இருந்த அவர் அரசுக்கு. ஜூலை மாதம் 4-ம் தேதி 1944-ம் வருடம் பர்மாவில் இந்திய தேசீயப் படை வீரர்களிடம் போஸ் நேரடியாக வீர முழக்கம் இடுகிறார். "வீரர்களே! உங்கள் குரு்தியைத் தாருங்கள். நான் பதிலுக்கு சுதந்திரம் வாங்கித் தருகிறேன்." என்று சொல்கிறார்.
ஜப்பான் பின்வாங்கிச் சென்றதும் வேறு வழியில்லாமல் சோவியத் ர்ஷ்யாவின் உதவியை நாடுகிறார். வருடம் 1945 மாதம் ஆகஸ்ட் தேதி 17. தாய்பேய்க்குச் செல்ல ஒரு விமானம் தயாராய் இருப்பதாய்ச் செய்தி வருகிறது. போஸ் தனக்கு செக்ரட்டரியாய் இருந்த திரு சஹாயிடமும், தன்னுடைய பப்ளிசிடி மந்திரியாக இருந்த திரு எஸ்.ஏ. ஐயரிடமும் சொல்லி விட்டு இன்னும் இரண்டு லெஃப்டினன்ட் கர்னல்களுடன் விமானம் ஏறப் போகிறார். அது தான் இந்திய தேசீயப் படையைச் சேர்ந்தவர்கள் கடைசியாய் போஸைப் பார்த்தது. சில நாட்கள் கழித்து எஸ்.ஏ. ஐயருக்கு ஜப்பான் அரசு போஸ் சென்ற விமானம் நொறுங்கி விழுந்ததாயும் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றும் சொல்கிறது. ஆகஸ்ட் 18 இது நடந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ஆகஸ்ட் 17 அன்று கிளம்பிய விமானம் எப்படி ஆகஸ்ட் 18 அன்று நொறுங்கி இருக்கும்? யாருமே யோசிக்கவில்லையா? உண்மையில் விமான விபத்து நடந்ததா? சுபா்ஷ் என்ன ஆனார்? உலக நாடுகளின் பார்வையில் நாளை!
இந்தியா சுதந்திரம் பெற்ற உடன் cabinet minister ஆக நமக்கு பல நன்மைகளை செய்திருக்க கூடியவர். அகினியின் ஜுவாலைகளால் விழுங்கப்பட்டார். அவரைப் பற்றிய நினைவுகளை மீண்டும் உயித்தெழுப்பிய உங்களுக்கு நன்றி மேடம்.
ReplyDelete\\உலக நாடுகளின் பார்வையில் நாளை!\\
ReplyDeleteஅட்டகாசமாக எழுதிக்கிட்டு இருக்கீங்க தலைவி ;)
நாளை இன்னும் ஆவலுடன்
சரி.......நானும், மணி பிரகாஷ் அவர்களும் இன்னும் பலரும் பாரதியை பற்றி எழுத சொல்லி கேட்டுயிருந்தோமே.....அது எப்போது வெளிவரும் தலைவி :))
ReplyDeleteGood Question !!!!
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteதொடர்ந்து படித்து வருகின்றேன்
தலைவி எல்லாரும் ஆர்வமா படிச்சுகிட்டு வர்றாங்க.. . பார்க்கவே சந்தோசமா இருக்கு..
ReplyDelete//சரி.......நானும், மணி பிரகாஷ் அவர்களும் இன்னும் பலரும் பாரதியை பற்றி எழுத சொல்லி கேட்டுயிருந்தோமே.....அது எப்போது வெளிவரும் தலைவி :))//
ReplyDeleteகோபி, நானே கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன்..
ரிப்பிட்டே.. அநேகமாய் போஸிற்கு அப்புறம் பாரதிதான்...