எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 10, 2007

சிகாகோவில் மக்கள் வெள்ளம்!!!!!!!!!

ஃப்ராங்க்பர்ட்டில் சிகாகோ செல்லும் விமானத்தில் ஏறினோம். ஹா ஹா, நொம்பவே சந்தோ்ஷமாய் இருந்தது. எங்க இரண்டு பேருக்கும் மட்டும் இரட்டை இருக்கை கொண்டது கொடுத்திருந்தாங்க. விமானப் பயணம் செய்யறவங்களுக்குப் புரியும் மூணு இருக்கையிலும், நாலு இருக்கையிலும் உட்கார்ந்து போவதின் சிரமம். அப்புறமாய்க் கொஞ்ச நேரத்தில் கொறிக்கவும் ஜூஸும் சாப்பிட்டு முடித்தச் சிறிது நேரத்தில் சாப்பாடு வந்தது,. பிரித்தால் 2 வரு்ஷம் முன்னாலே யு.எஸ். போகும்போது என்ன சாஅப்பாடு கொடுத்தாங்களோ அதே மெனுதான். எனக்கு ஒரே சந்தேகம் அதே சாப்பாட்டைப் பத்திரமா வச்சிருந்து கொடுக்கறாங்களோன்னு. அதே ஃப்ரைடு ரைஸ், அதே கீரை, அதே காலிஃப்ளவர் சப்கஜி, அதே கேக், அதே ஸ்ட்ராபெரிப்் பழம், இத்யாதி, இத்யாதி. விமானப் பணிப்பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டுடலாமானு நினைச்சேன். இந்தச் சாஅப்பாடு இரண்டு வரு்ஷத்துக்கு முன்னாலே கொடுத்த அதே சாப்பாடான்னு. ஏற்கெனவே என்னை அல்பம்னு நினைச்சிருப்பா, ஹிஹிஹி ஜூஸ் இரண்டு முறை குடிச்சேன் அதுக்கு. அதனாலே இப்போ ஒண்ணும் வேணாம்னு விட்டுட்டேன்.

விமானம் போஓஓஓஓஓஒய்க் கொண்டேஏஏஏஏஏஏஏஎ இருந்தது. காலை 9.00 மணிக்குக் கிளம்பினோம். ஹிஹிஹி, அதே காலை 11-45-க்கு சிகாகோ வந்துட்டேமே!!!!, வரும் வழியில் ஜன்னல் வழியாப் பார்த்துட்டே வந்தேன். ஒரே மேகக் கூட்டம். போற்க்கொடி விட்ட பெருமூச்சு வேறே கேட்டுட்டே இருந்தது. ஜன்னலைத் திறந்து வச்சுக்கலாமான்னு நினைச்சேன். :D. கூடாதுன்னுட்டாங்க. அதனாலே என்னை வரவேற்க வச்சிருந்த விண்ணை முட்டும் லங்கார வளைவுகளையும், போஸ்டர் ஒட்டிட்டு இருந்த ச்யாமையும் பார்க்கவே முடியலை. சிகாகோ வந்ததும் விமானம் இரங்க ப்லளாட்பாரம் கிடைக்காமல் சுத்திக்கிட்டே இருந்தோம். கீஈஈஈஈஈஈஇழேஏஏஏஏஏஎ த"தண்டர் லேக்" தெரிஞ்சதா? நம்ம ஊர் வழக்கப் படி நதி, ஆறு பார்த்தால் காசு போடணுமே, இங்கே போடமுடியலையேன்னு நினைச்சேன்.

ஹிஹிஹி, என்ன பட்டிக்காடுன்னு பார்க்கறீங்க போல் இருக்கு> அப்ப்புறமா மெதுவா விமானப் பைலட் விமானத்தில் நான் பயணம் செய்வதைசச் சொல்லிக் கீழே இறங்க அனுமதி கேட்கவே உடனேயே அனுமதி கிடைத்தது. கீழே இறங்கினோம். ஒரே பட்டாச்சுச் சத்தனம், ஒரே வாழ்த்தொலி, நான் சொல்லாமல் வச்சிருந்தும் எப்படியோ தெரிஞ்சுட்டு வந்துட்டாங்க. ஒரே கூட்டம், கீழேயேஎ இறங்க முடியலை. மெதுவா எப்படியோக் கீழே இறங்கி ஒருத்தருக்கும் தெரியாமல் வந்தால் எங்க சாமானைத் தூக்கிட்டு எங்களை மெம்பிஸ் விமானத்தில் ஏற்றி விட ஆள் தயாராக் காத்துட்டு இருந்தார். அப்பாடின்னு நிம்மதியா அவர் கிட்டேச் சாமான்களை ஒப்படைச்சோம். அவர் எங்க கூடவே வந்து சாமான்களை மெம்பிஸ் செல்லும் விமானப் பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு எங்களை அங்கே வேறு டெர்மினல் போகும் ரெயிலில் ஏற்றி விட்டார். நாங்கள் போகும் 3-வது டெர்மினல் வந்து கீழே இறங்கி மேலேஎ ஏறி, செக்யூரிட்டி எல்லாம் முடிச்சு போக வேண்டிய வாயிலுக்கு வந்து சேர்ந்தோம். அதுக்குள்ளே ஒரேயடியா நடுங்கிப் போயிட்டோம். என்னன்னு கேட்கறீங்களா? நாளைக்குத் தான் எழுதுவேன்.

14 comments:

  1. என்ன கீதா மேடம், ஜெட்லாக் எல்லாம் முடிந்து திரும்ப பார்ம்க்கு வந்துட்ட மாதிரி இருக்கு?.

    ReplyDelete
  2. குளிர் தாக்கி இருக்குமே?
    நல்வரவு கீதா.

    ReplyDelete
  3. வேற என்ன எங்க ஊர்ல மொக்கை போட வந்துருகீங்களா?னு மக்கள் ஜாமான் செட்டோட ஆட்டோல வந்து இருப்பாங்க. :p

    அல்லது, வயசாயிடுச்சு இல்ல, சாதாரண சீதோஷ்ணமே குளிரா தெரிஞ்சு இருக்கும். :)

    இன்னும் தமிழ் தடுவுதே!

    ReplyDelete
  4. மேடம், இன்னும் உங்க பதிவுகள்ல தமிழ் குழறுதே..இல்ல நெருப்பு நரில தான் நல்லாத் தெரியுமா.. என்னங்க மேடம் நம்ம பக்கம் வரவே இல்லை.. ஹிஹிஹி..இந்த தடவை நான் முந்திகிட்டு கேட்டுட்டேன் பாத்தீங்களா இந்த கேள்வியை

    ReplyDelete
  5. பாத்தீங்களா.. நம்ம வரவேற்பை பாத்து நீங்களே அசந்துட்டீங்க போல, மேடம்

    ReplyDelete
  6. //எங்க இரண்டு பேருக்கும் மட்டும் இரட்டை இருக்கை கொண்டது கொடுத்திருந்தாங்க//

    சும்மா எதுக்கு பிரச்சனைனுதான்...தனியா இருக்கர மாதிரி சீட் இருந்தா அதுல உக்கார வெச்சு இருப்பாங்க :-)

    ReplyDelete
  7. //அதுக்குள்ளே ஒரேயடியா நடுங்கிப் போயிட்டோம். என்னன்னு கேட்கறீங்களா//

    ஏன் சொட்டர் கொண்டு வரலயா :-)

    ReplyDelete
  8. இமயமலையிலெயே நடுங்கலெ... இங்கே நடுங்கினீங்கன்னு நீங்க சொன்ன நாங்க நம்பணுமாக்கும்....

    ReplyDelete
  9. //நம்ம ஊர் வழக்கப் படி நதி, ஆறு பார்த்தால் காசு போடணுமே, இங்கே போடமுடியலையேன்னு நினைச்சேன்.//

    இதுவரைக்கும் இந்தியாவில் நதி, ஆறு அப்படீன்ற ரெண்டும் பொருளில் ஒண்ணுதான்னு நான் நினைச்சேன்...

    பூ, புஷ்பம்ன்னு உதயகீதம் படத்தில் கவுண்டமணி குழம்புனமாதிரி குழம்பிட்டேன்... தெளிவாக்க தயவுசெய்து இன்னும் தெளிவாக விளக்கவும் :-))

    சிகாகோ ஜீன்ஸ்ன்னு ஊரைத்தெரிஞ்சிக்கிட்டேன் படத்தில் பாண்டியராஜன் செய்த பேஷன் மாதிரி ஜீன்ஸைக் கிழிச்சுவிட்டுக்குற பேஷன் இருக்கா நிஜமான சிகாகோவில் :-))
    என்னோட இந்த சந்தேகத்தையும் தெளிவாக்கிடுங்க

    ReplyDelete
  10. varuga varuga..


    :)

    ReplyDelete
  11. ஒரு 12 நாள் முன்னாடி சிகாகோ வந்திருந்தீங்கன்னா சிகாகோவுக்கு விடுமுறைக்குப் போன ஒரு வி.ஐ.பி-யைப் பார்த்திருக்கலாம். விட்டுட்டீங்களே! ;-)

    ReplyDelete
  12. //தனியா இருக்கர மாதிரி சீட் இருந்தா அதுல உக்கார வெச்சு இருப்பாங்க :-)//


    இருக்கே. அதுலே விமானப்பணிப்பெண் உக்காந்துக்குவாங்க(-:

    ReplyDelete
  13. சேதுக்கரசி நான் இங்கெயே ஐந்து மாதமா இருக்கேன்.
    கீதா வரும்போது எந்த வி.ஐ.பி வந்தாரோ. என்னிட்ட சொல்லலியே:-)

    ReplyDelete
  14. வல்லிம்மா அது வேற யாருமில்ல.. நான் தான்.. ஹிஹி

    ReplyDelete