ஹிஹிஹி, கவிதை எல்லாம் ஒண்ணும் எழுதப் போறது இல்லை. பயப்படாதீங்க. அப்புறம் ஒரு வி்ஷயம் முடிஞ்சவரை எல்லார் வீட்டுக்கும் வரப் பார்க்கிறேன். சிலர் வீடு திறக்கலை இங்கேயும் வந்து அதே கதை தான். ஹிஹிஹி, காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுங்கிற கதையா இருக்கு. நேத்துப் பாருங்க, திடீர்னு இணையமே வரலை. ஒரே ஆச்சரியமாப் போச்சு! நாம் வந்திருக்கிறது இங்கே உள்ள கேபிள்காரங்களுக்குக் கூடத் தெரிஞ்சு போச்சான்னு! ஒரு வேளை "டாட்டா இன்டிகாம்" காரங்க தகவல் கொடுத்திருப்பாங்களோ என்னவோ? :D அப்புறம் பார்த்தா ஏதோ கேபிள் ப்ராப்ளமாம். டாடா இன்டிகாமுக்கு அண்ணா போல் இருக்கு. அதான் வரலை. ஒரே ஆறுதல் இந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்்ஸில் உள்ள அனைவருக்குமே வரலைங்கிறது தான். அப்புறமாப் போடலாம்னா ஒரே இடி, மின்னல், மழை, மோகினி!!!! கனெக்ஷனையே எடுத்து வைக்க வேண்டியதாப் போச்சு. அதான் எல்லாருக்கும் கொஞ்சம் தாமதமா வந்துப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லலாம்னு.
சித்திரை மாதமும் தமிழ்ப் புத்தாண்டும் சேர்ந்து வரது என்றாலும் பாரதியார் அவர்கள் ஒரு முறை தன்னோட ஒரு கட்டுரையில் அவர் இருந்தப்போவே இந்தத் தமிழ்ப் புத்தாண்டுச் சித்திரை மாதம் கொண்டாடும் தேதி வருடா வருடம் கொஞ்சம் மாறும் என்று குறிப்பிட்டிருப்பார். சம்மந்தப் பட்ட கட்டுரையைப் போட இப்போ அந்தப் புத்தகம என்னிடம் இல்லை. இந்தியாவிலே இருக்கு. இருந்தாலும் நாம் எல்லாரும் இப்போத் தான் கொண்டாடுகிறோம் என்பதால் அதைப் பற்றிச் சில வார்த்தைகள்:
முதலில் அகத்தியர் குமரி வாழ் அம்மனிடம் சொல்வது போன்று அமைந்த பாடலுடன் தொடங்கலாம்.
"முத்தமிழ் போல் முக்கடல் சூழ்
குமரிமுனை வளரும் உத்தமியே!
ச்ரீசக்கரந்தன்னில் உதித்தவளே!
எத்தருணத்திலும் எனைப்
பிரியாமல் எனக்கிரங்கிச்
சித்திரைத் திங்களிலே வந்து
அருள் செய்வாய்! சிவக் கொழுந்தே!"
இம்மாதத்தில் வசந்தம் அதன் உச்சியில் இருக்கும். பூக்களும், பழங்களும் பூத்துக்குலுங்கி, கனிந்து மணம் பரப்பும் காலம் இது. திருமணங்கள் நடத்தப்படும் காலம் இது. அதான் நம்ம அம்பி கூட இந்த மாதக் கடைசியில் திருமணம் வைச்சிட்டு இருக்கார். என்னைக் கூப்பிடலை, வழக்கம் போல். அவங்க அம்மா சொன்னாங்க. :P இந்த மாதத்தில் ஆரம்ப நால் அன்று பஞ்சாங்கம் படிக்கப் படும்.
காலபுருZஅன் என்ரு சொல்லப் படும் கால தேவதையின் ஒவ்வொரு நாளும் கணிக்கப் படுவதே பஞ்சாங்கம். வருடம் என்ரும் சொல்லப் படும் காலத்தின் கை, கால், முகம் போன்ற உறுப்புக்களே பன்னிரண்டு மாதங்கள் ஆகும். இந்த வருடத்துக்கு உரிய ஐந்து அங்கங்களைப் பற்றிக் கூருவதே ப்ஞ்சாங்கம் ஆகும். இந்தச் சமயம் நவக்கிரஹங்களும் விண்ணைச் சுற்றி வந்து நிர்வாகம் செய்கிறார்கள். இந்த வருடத்தின் ஐந்து அங்கங்களைக் குறிக்கும் பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் யாவன: யோகம், திதி, கரணம், வாரம், ந்ட்சத்திரம் ஆகியவை பற்றி விவரிக்கப் படும். இவை கொடுக்கும் பலன்கள்:
"யோகம்" ரோகங்களைப் (வியாதியை) போக்கும்.
"திதி" நன்மையைத் தரும், அதிகரிக்கச் செய்யும்.
"கரணம்" வெற்றியைத் தரும்.
"வாரம்" ஆயுளை வளர்க்கும்.
"நட்சத்திரம்" பாவத்தைப் போக்கும்.
வருடத்தின் முதல் நாள் அன்று பஞ்சாங்கம் படித்துச் சொல்லக் கேட்பது மிகவும் நல்லது என்று ஆன்றோர் வாக்கு. இது கோவில்களிலோ அல்லது சிலர் வீடுகளில் கூடியோ புது வருடப் பஞ்சாங்கதை வைத்துப் பூஜை செய்துவிட்டுப் படிப்பார்கள். அன்றைய தினம் பலவகைகளிலும் தானங்கள் செய்யலாம். அன்னம், நீர், மோர், பழங்கள், காய்கள், குடை, விசிறி, செருப்பு, துணிமணிகள் என்று அவரவர் சக்திக்கு ஏற்பக் கொடுக்கலாம். தமிழ்நாட்டில் மதுரையில் (ஹிஹிஹி, எங்க ஊர் அதைப் பத்தி எழுதலைன்னா எப்படி?) சித்திரை மாதம் தான் மீனாட்சி அம்மையின் திருமணமும், அதை ஒட்டி அழகர் ஆற்றில் இறங்குவதும் நடை பெறும். அழகர் ஆற்றில் இறங்கும் தினத்தன்று காலை அழகருக்கு அலங்காரம் செய்யும் பட்டாச்சாரியார்கள் கண்ணை மூடிக்கொண்டு அழகருக்கான துணிகளைத் தேஎர்ந்தெடுப்பார்கள் என்றும் அதன் வண்ணத்தைப் பொறுத்து அந்த வருடத்தின் பலன்கள் அமையும் என்றும் இன்றளவும் சொல்லப் படுகிறது. சிவப்பு வண்ணத்தைத் தவிர மற்ற வண்ணங்கள் பரவாயில்லை எனவும், பச்சை வண்ணம் மிகச் சிறப்பாகவும் சொல்வது உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுத் திருமணம் ஆன இளந்தம்பதிகளுக்குச் "சித்திரைச் சீர்" என்று சிறப்புச் செய்யும் வழக்கமும் உண்டு.
அண்டை மாநிலமான கேரளாவில் சித்திரை முதல் நாளன்று "விஷுக் கச்னி காணுதல்" என்னும் நிகழ்ச்சி நடைபெறும். முதல்நாள் அன்று இரவே வீட்டுப் பெரியவர்கள் பூஜை அறையில் புதுத் துணிமணிகள், ஆபரணங்கள், காய் கனிகள், பூக்கள் இவற்றால் அழகு செய்து வைத்து எதிரே ஒரு பெரிய நிலைக்கண்ணாடியையும் வைத்திருப்பார்கள். வீட்டுப் பெரியவர்கள் காலையில் முதலில் எழுந்து பூஜை அறையில் ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்குப் பழங்களும் வைத்து நாணயங்களையும் குவியலாக வைத்திருப்பார்கள். வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களை ஒவ்வொருவராய் வரவழைத்துக் கண்ணைத் திறக்கச் செய்து இந்தப் பூ, பழங்கள், ஆடை ஆபரணங்களால் ஆன அலங்காரத்தைக் கண்ணாடி வழி முதலில் பார்க்கச் செய்து பின் அலங்காரத்தையும் காட்டிப் பின் வெற்றிலை பாக்குடன் தங்கள் சக்திக்கு இயன்ற நாணயங்களையும் பரிசளிப்பார்கள். அன்று இந்தப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் மிகவும் முக்கியமான் ஒன்றாய்க் கருதப் படுகிறது. இதை "விஷுக்கனி கை நீட்டம்" என்று சொல்வதுண்டு. இதைத் தவிர நம்ம ஊர் தீபாவளி போல கேரள மாநிலத்தில் வி்ஷு அன்று பட்டாசுகளும் வெடித்துப் புத்தாடை அணிந்தும் கொண்டாடுவது உண்டு.
புது வருஷ ஸ்வீட்டை நானே சாப்பிட்டுக்கறேன். நிறையத் தப்புத் தெரியுது எக்ஸ்ப்ளோரரில் பார்க்கிறப்போ. இங்கே எனக்கு நெருப்பு நரியில் தமிழாத் தெரியறதில்லை. உருது மாதிரி இருக்கு. அதனால் திருத்த முடியலை. தவறுகளுக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteசர்வஜித் வருட வாழ்த்துக்கள் கீதா மாமி. பாம்பு/த்ரிகணித பஞ்சாங்கம் கொண்டு போனீர்களா?....
ReplyDeleteஇன்னுமோரு விஷயம்,
ReplyDeleteஅழகர் ஆற்றில் இறங்கும் அலங்காரத்துக்கு கண்ணெல்லாம் கட்டிக்கொண்டு வஸ்த்ரம் தேர்ந்தெடுப்பது இல்லை. பச்சை/வெண்மை புஷ்பங்களை கட்டிப்போட்டு ஏதேனும் ஒரு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்வது, வரும் வர்ணத்திலமைந்த வஸ்த்ரம்தான் அந்த வருடம் ஆற்றில் இறங்கும் சமையத்தில் பெருமாளுக்கு.
எனக்குத்தெரிந்து பெருமாளுக்குசாய்ஸில் சிவப்பெல்லாம் தருவதில்லை அந்த நாளில்.
பச்சையெனில் சுபிக்ஷம், வெண்மை அமைதியான வருடம். வெண்மையைவிட பச்சை விசேஷம்.
சித்திரைமாதம் பெளர்ணமி நேரம், முத்துரதங்கள் ஊர்வலம் போகும்....
ReplyDeleteஆம், மீனாக்ஷி-சுந்தரேஸ்வரருக்கு தேரும் சித்திரைமாதம் தான்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவி ;-))) கொஞ்சம் ஆணி இருக்கு அப்புறம் வரேன்.
ReplyDeletevayasana kaalathula sweet ellam edhukkku ungluku? inga anupunga!
ReplyDelete:-) iniya sarvajith vazthukkal!
சர்வஜித் புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா!
ReplyDelete//திருமணங்கள் நடத்தப்படும் காலம் இது. அதான் நம்ம அம்பி கூட இந்த மாதக் கடைசியில் திருமணம் வைச்சிட்டு இருக்கார்//
அடடா...அப்போ இது ஜானவசப் பதிவா? :-)))
//வருடத்தின் முதல் நாள் அன்று பஞ்சாங்கம் படித்துச் சொல்லக் கேட்பது மிகவும் நல்லது என்று ஆன்றோர் வாக்கு//
மிக அருமையாகக் குறிப்பிட்டீர்கள்!
பெருமாளே திருமலையில் தினமும் இதைக் கேட்டு விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறார்! பஞ்சாங்க சிரவணம் என்பது பெயர்.
//விஷுக் கனி//
ReplyDelete//எனக்கு நெருப்பு நரியில் தமிழாத் தெரியறதில்லை. உருது மாதிரி இருக்கு//
ஹி ஹி
பள்ளியில் படிக்கும் போது என் நண்பன், கட்டுரை எழுதும் போது,
"விஷுக் கனி விசேஷம்" என்பதற்குப் பதிலாக "விஷக் கனி விசேஷம்" என்று எழுதி வைத்தான்! :-)
ஆசிரியர் அதைப் படித்து விட்டு, "ஆமாண்டா எனக்கு விஷக் கனின்னா உனக்கு அது விசேஷம் தானே" என்று சொல்ல, வகுப்பே கொல்லென்று சிரித்தது! அவனையும் சேர்த்துத் தான்! :-))
எதுக்கு சொல்ல வந்தேன்னா, நெருப்பு நரியில் அப்படி எல்லாம் எழுதாமல், மிகச் சரியாகவே எழுதியுள்ளீர்கள்!
//எதிரே ஒரு பெரிய நிலைக்கண்ணாடியையும் வைத்திருப்பார்கள்.,......வைத்து நாணயங்களையும் குவியலாக வைத்திருப்பார்கள். வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களை ஒவ்வொருவராய் வரவழைத்துக் கண்ணைத் திறக்கச் செய்து ......அலங்காரத்தையும் காட்டிப் பின் வெற்றிலை பாக்குடன் தங்கள் சக்திக்கு இயன்ற நாணயங்களையும் பரிசளிப்பார்கள்//
ReplyDeleteMaami yenga Amma veetula They celebrate Ugadhi like this.South Karnataka people ku ippodhaan Ugadhi. Thangalukkum pudhu varuda vazhththukkal,Maami.
\\ புது வருடப் பஞ்சாங்கதை வைத்துப் பூஜை செய்துவிட்டுப் படிப்பார்கள். \\
ReplyDeleteஇந்த விஷயம் வருடம் தவறாமல் கண்டிப்பாக எங்கள் வீட்டிலும் நடக்கும். ஆனால் நான் அதை எல்லாம் எடுத்து படிப்பது இல்லை ;-))
மதுரையம்பதி, மெயில் வந்ததா? லலிதாம்பாள் சோபனம் அனுப்பி இருந்தேன். அப்புறம் அழகர் பத்தி நீங்க சொல்றது எனக்கும் தெரியும். ஆனால் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் நான் படிச்சதை எழுதினேன். தப்பா, சரியா தெரியாது. புத்தகம் கிடைச்சால் எடுத்துப் போடறேன்.
ReplyDeleteமுக்கியமான புத்தகங்கள் கையிலே எடுத்துட்டுத் தான் வந்திருக்கேன். :D
@கோபிநாத், ஆணி இருக்கும்போது கூடக் கடமை உணர்ச்சி தவறாமல் வந்து அட்டென்டன்ஸ் கொடுத்த உங்களைப் பாராட்ட வார்த்தை களே இல்லை.
ReplyDelete@போர்க்கொடி, என்ன இன்னும் துள்ளல் அடங்கலை போலிருக்கு.:P
திடீர் வரவுக்கு நன்றி கண்ணன். உங்க "சங்கிலி"யை என்னால் முடிஞ்ச வரை இழுத்திருக்கேன். ஆனால் யாரையும் கூப்பிடலை. :D
ReplyDelete@கண்ணன், நெருப்பு நரியிலே எனக்குத் தெரியவே இல்லை. உங்களுக்குச் சரியா இருந்தா சந்தோ்ஷம் தான்.
ReplyDelete@எஸ்.கே.எம். வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போ எல்லாம் இங்கேயும் தலை தெரியுது? :D
@கோபிநாத், மறு வரவுக்கு நன்றி.