வல்லி எழுதின சுந்தரகாண்டம் பத்திய பதிவிலே "சூடாமணி கொடுக்கும் படலம்" பற்றி எழுதிட்டு அவங்க அது என்ன ஆபரணம் தெரியலைன்னு சொல்லி இருந்தாங்க. மதுரையம்பதி சொன்னது ஓரளவு சரின்னாலும், அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு! :D எப்போ வாங்கிக் கொடுத்தேன்? அவரும் அதைப் பார்த்திருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ராமாயணம் புத்தகத்தைப் புரட்டினேன். அம்பி, எல்லாம் ஸ்டாக் கொண்டு வந்திருக்கேன் கையோடு. இங்கே வந்து பதில் சொல்லலாம்னு தான் முன்னாடி பேசாமல் இருந்தேன். புரியுதா?
வால்மீகி, கம்பர், துளசிதாசர் எல்லாருமே "சூடாமணி" பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அது யார் சீதைக்குக் கொடுத்தது? அது என்ன ஆபரணாம் என்று விவரிப்பது வால்மீகிதான். முதலில் கம்பரைப் பார்ப்போம்.
"சூடையின்மணி கண்மணி ஒப்பது, தொல்நாள்
ஆடையின் கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன்ுயிர் நல்கினை, நல்லோய்!
கோடி என்று கொடுத்தனள், மெய்ப்புகழ் கொண்டாள்!"
என்னுடைய கண்ணின் மணி போன்ற இந்த ஆபரணத்தை என் புடவையில் முடிந்து வைத்திருந்ததை உன்னிடம் தருகிறேன்." என்கிறாள். அது தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணம் என்று சொன்னாலும் அது எந்த மாதிரி என்பது வால்மீகியில் தெரிகிறது.
"சூடா" என்றால் சம்ஸ்கிருதத்தில் "உச்சி முடி" என்று அர்த்தம் ஆகும். உச்சி முடியின் மீது அணிகின்ற இந்த ஆபரணம் ஒரு சங்கிலியில் கோர்க்கப் பட்டிருக்கும். அதன் முடிவில் ஒரு பதக்கம் போன்ற அமைப்பு இருக்கும். அந்தப் பதக்கம் போன்ற அமைப்புப் பெண்களின் "ச்ரீமந்தம்" என்று சொல்லப் படும் உச்சிப் பொட்டு வைக்கும் இடத்தில் வந்து முடியும். இது தாய்வழிச் சீதனமாய்க் கொடுக்கப் படுகிறது. அதுவும் சீதையின் வார்த்தைகளின் மூலமே வால்மீகி சொல்கிறார்.
சீதை அனுமனிடம் சொல்வதாய் வால்மீகி சொல்கிறார்:
"இந்த நகையைப் பார்த்ததுமே ராமருக்கு நீ என்னைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறாய் என்பது புரியும். ராமருக்கு என் நினைவு மட்டும் இல்லாமல் தன் தந்தையாகிய தசரத மஹாராஜாவின் நினைவும், என் தாயாரின் நினைவும் கட்டாயம் வரும். ஏனெனில் இது தசரத ராஜாவின் முன்னிலையில் என் தாயார் எனக்குப் பரிசாகக் கொடுத்தது.!" இது வால்மீகி வாக்கு. துளசிதாசர் சூடாமணி என்னும் தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணத்தைச் சீதை கொடுத்தாள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.
டிஸ்கி: பொதுவாகவே வட இந்தியாவில் அநேகக் குடும்பங்களில் இன்றும் திருமணத்தின் போது இத்தகைய ஆபரணங்களைத் தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண்கள் அணிவது உண்டு. அங்கே இதற்கு மங்கலசூத்திரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப் படும்.
ஆமாம் கீதா. வால்மீகியில் (தமிழ் உரை) படித்ததைக் கம்பரில் எழுத வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
ReplyDeleteநல்ல விளக்கமாகச் சொல்லி இரூக்கிறீர்கள்..
அப்போ இது நெத்திசுட்டிதானா?
ராக்கொடி இல்லை?
//அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு! :D எப்போ வாங்கிக் கொடுத்தேன்? //
ReplyDeleteநீங்க தான் ஜாம்பவான் காலத்துலேந்து இருக்கீங்களே, அதான் ஒரு வேளை நீங்க பாத்திருப்பீங்களோ?னு நினைச்சேன்.
அதுக்காக உங்களை கரடி!னு எல்லாம் ஒன்னும் சொல்லலை. :)
அருமையான விளக்கம். பாத்தீங்களா! ரொம்ப நாளுக்கு அப்புறமா உருப்படியான பதிவு போட முடிஞ்சது என்னால. :p
எல்லாம் சரி, அது எப்படிங்க, வராத ஆளுக்கு எல்லாம் பின்னுட்டத்துல பதில் குடுக்கறீங்க? வல்லி மேடம் கூட கேட்டு இருக்காங்க பாருங்க! :)
ஓ, அப்படின்னா ஜெடை பில்லை என்பது ராக்கொடியா?....சொல்வது லாஜிக்கலாகவும் ஓத்து வருகிறது, ஏனெனில், முகத்தின் முன் தொங்கும் ஆபரணம் எப்போதும் அழகுக்கு அழகு சேர்க்கவும், அட்ராக்ட் செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறதல்லவா?
ReplyDeleteவல்லி அது ராக்கொடியும் இல்லை, மெள்லி சொல்றப்பலேயும் இல்லை. நெற்றி உச்சியில் ஆரம்பித்து நெற்றிப் பொட்டு வரை வரும் ஒரு ஆபரணம்.அநேகமாய் வட இந்தியாவில் தான் இதை அணிவார்கள். சிலர் குடும்ப வழக்கப் படியும் முன் நெற்றியில் தொங்கும் பதக்கங்களைச் செய்து அணிவதுண்டு. தற்காலத்தில் அநேகமாய் மறைந்து வருகிறது என்றே சொல்லலாம்.
ReplyDeleteஅம்பி, உங்களுக்குத் தான் கல்யாண ஜோரிலே தெரியலைன்னா நானும் அப்படியா? எல்லாம் வந்தவங்களுக்குத் தான் பின்னூட்டம் போட்டிருக்கேன். அப்புறம் என்னவோ கடையை மூடப் போறவங்களுகு நான் எப்படி எழுதினா என்ன வந்தது? அது சரி நீங்க யாரு? புதுசா இருக்கு?
ReplyDeleteஆமாம் வேதா, சுந்தரகாண்டத்திலேயே வருகிறது சீதை அனுமனிடம் சொல்வதாய்.
ReplyDeleteராக்கொடின்னா உச்சந்தலையில் மட்டும் வைப்பாங்க மதுரையம்பதி! இது உச்சியில் ஆரம்பித்து நெற்றிப் பொட்டு வைக்கும் இடம் வரை வரும்.
ReplyDeleteஇந்த பதிவுக்கு அட்டென்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போறேங்க மேடம்
ReplyDeleteஅப்போ இது நெத்திசுட்டிதானா?
ReplyDeleteI was thinking the other way "ராக்கொடி" nu.
Maami, போஸ்ட் மேலே போஸ்ட் போட்டு இருக்கீங்க. இப்போ நாங்க தமிழ் fonts சரி வரதில்லை சொன்னதை ஒப்புக்கிறீங்களா?Some times it works..sometimes not.
I have read all your posts now.:D
ada adhukulla adutha post 10 commentum vangiyacha? :-)
ReplyDeleteappo adhu netri chutti maadhiriya?
ReplyDeleteada valli skm ellarum ketrukangle! apo adhu netri chuttiye thaan :-)
ReplyDeleteneenga kooda paati veetu seedhanama adhai enakku tharalame?? :D
இது ஏதோ பெண்கள் அணிகலன்கள் பற்றிய டாப்பிக் போல. அப்ப இதுக்கு அட்டென்டன்ஸ் தான் மேடம்..
ReplyDeleteஎப்போ நாங்க உங்களுக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பை பத்தி சொல்லப்போறீங்க, மேடம்
எஸ்.கே.எம், வாங்க வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க! ம்ம்ம்ம்ம், உங்க அருமைத் தம்பியோட வ்லைக்கு மட்டும் தான் போவீங்கன்னு நினைச்சேன். சரி, ஃபான்ட் இங்கே இல்லாததுக்குக் காரணமே வேறே. இந்த கணினியின் அட்மினிஸ்ட்ரேட்டர் ரைட்ஸ் ஒத்துக்க மாட்டேங்குது. சரி, இவங்களைத் தொந்திரவு செய்ய வேணாம்னு இருந்துட்டேன். இ-கலப்பையக் கொண்டே வர முடியலை. அதாலே தலையிலே போடணும் போல் இருக்கு, அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் தலையிலே தான், ஹிஹிஹி!
ReplyDeleteம்ம்ம்ம், கார்த்திக், பெண்கள் அணியும் ஆபரணம்னா கட்டாயம் இப்போவே நீங்க தெரிஞ்சு வச்சுக்க வேணாமா? அப்புறமா உங்க தங்கமணிக்கு வாங்கிக் கொடுக்கும்போது முழிப்பீங்க. நம்ம சூடான் புலியைப் பாருங்க, உகாண்டா போயிட்டு பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கு!!!!! :))))))))))
ReplyDeleteபோர்க்கொடி பாட்டி, என்ன ரொம்பவே துள்ளல் ஜாஸ்தியா இருக்கு? பாயிண்டர்ஸ் படிச்சு முடிச்சாச்சா? ரங்கமணிக்கு மெயில் கொடுக்கிறேன், பத்திரம். :P
ReplyDelete