முதலில் நேற்றுப் பின்னூட்டம் போட்டவர்களுக்குச் சில விஷயங்கள் புரியவில்லை எனத் தெரிகிறது. போஸ் காங்கிரஸில் இருந்து விலகியதும் ஃப்ார்வர்டு ப்ளாக் கட்சி ஆரம்பித்ததை எழுத இருந்தேன். பொற்கொடி போஸ் ஏன் பகத்சிங் தூக்கிலிடப் பட்டபோது சும்மா இருந்தார் எனக் கேட்கவே அவளுக்குப் பதில் கூறும் விதத்தில் எழுதிய அந்தப் பதிவுகளில் வருஷமும், தேதிகளும் குறிப்பிடாததால் தொடர்பு இல்லை எனத் தோன்றுகிறது. பல முறை சிறையில் அடைக்கப் பட்ட போஸ் 1930-ல் நாடு கடத்தப்பட்டு ஐரோப்பா செல்கிறார். அதற்குப் பின்னர் வந்த நாட்களில் தான் பகத்சிங், சுக்தேவ் போன்றோரின் தூக்குத் தண்டனை நிறைவேறுகிறது. இந்த இளைஞர்களைப் பொறுத்த வரை கடைசி வரை நாட்டு விடுதலையை உயிர் முச்சாய்க் கொண்டிருந்தாலும் காந்தி இவர்களை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை என்பதும் நிஜம். வரலாற்று உண்மை. அபி அப்பா சொன்னது போல் நான் சொல்லாதது எத்தனையோ இருக்கிறது. அப்புறம் போஸ் 2-ம் உலக யுத்தம் ஆரம்பித்ததும் தான் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கிறார். யுத்தம் ஆரம்பிக்கும் சிலநாட்கள் முன்தான் ஃபார்வர்டு ப்ளாக் கட்சி ஆரம்பிக்கப் படுகிறது. 40களின் ஆரம்பத்திலும் போராட்டம் நடத்துகிறார், பின்னர் 41-லும் தான் ஜனவரி மாதம் 26-ம் தேதி தப்பிச்செல்கிறார். ஓரளவு வரிசையாய்த் தான் எழுதுகிறேன். சிலவற்றை நினைவில் இருந்தும், தேதி, மாதங்கள் போன்றவற்றைக் குறித்துக் கொண்டும் எழுதுவதால் முன்னும் பின்னுமாய் இருக்கிறது. கூடிய வரை ஒழுங்கு செய்கிறேன்.
மணிப்ரகாஷுக்கு,
இங்கிலாந்து பார்லிமென்டில் உள்ள இரு சபைகளில் கன்சர்வேட்டிவ் சபை அந்த நாட்டுப் பிரபுக்கள், இளவரசர்கள், பெரும்பணக்காரர்கள் நிறைந்தது. இவர்கள் தான் முன்னால் முடிவெடுக்கும் நிலையில் இருந்தனர். காலப் போக்கில் மாறிப் பின்னர் "ஆலிவர் க்ராம்வெல்" என்று எண்ணுகிறேன். இவர் அரசியலில் புகுந்ததும் அப்போதிருந்த அரசனைக் (King Charles?1வது சார்லஸா 2வதா என்பதும் நினைவில் இல்லை.சரியாய் நினைவில்லை.) கழுத்து வெட்டிக் கொலை செய்து விட்டு அவர் பிரதமாரய் வந்த போது தான் மன்னராட்சி என்பது பேருக்கு இருக்க ஆரம்பித்தது. அப்போது ஏற்பட்டது தான் சாமானியர்களுக்கான லேபர் கட்சி. இந்தக் க்ராம்வெல் ஒரு கசாப்புக் கடைக்காரரின் பிள்ளை என்பதால் ஆடு, மாட்டை அறுக்கிற மாதிரி மன்னரை அறுத்துவிட்டார் என்று பேசிக் கொள்வார்கள் என்பதாய்ப் படித்திருக்கிறேன். அவரைப் பிரபுக்களும், மன்னரும் " butcher boy" என்றே அழைப்பார்கள் என்றும் படித்திருக்கிறேன். நம் நாட்டில் மாறி மாறி வந்து அரசாளும் அரசியல் கட்சிகள் போல இவையும் மாறி மாறி வரும். இந்தப் பிரபுக்கள் கட்சிக்கும் அதன் உறுப்பினர்கள் ஆன பிரபுக்களுக்கும் இந்தியா என்றாலே பிச்சைக்கார நாடு என்ற எண்ணம். இத்தகைய பிரபுக்களில் ஒருவரான சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராய் இருக்கும் சமயம் தான் 2-ம் உலகப் போர் வந்தது. சர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் கடைசி வரை இந்தியா சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார். இது மாதிரி பல பேர் இருந்திருக்கிறார்கள். சரித்திரப் பாடம் பிடிக்காதோ உங்களுக்கு? :D
*************************************************************************************
//இந்த இளைஞர்களைப் பொறுத்த வரை கடைசி வரை நாட்டு விடுதலையை உயிர் முச்சாய்க் கொண்டிருந்தாலும் காந்தி இவர்களை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை என்பதும் நிஜம். வரலாற்று உண்மை/
ReplyDeleteதங்களது பதிவெல்லாம் படித்து முடித்த போது, (இன்னும் இருக்கிறது நிறைய) காந்தியின் இமேஜ் பொல பொலவென மனசில் உடைந்து சுக்கு நூறாகியது நிஜம்ங்க மேடம்..
/பொற்கொடி போஸ் ஏன் பகத்சிங் தூக்கிலிடப் பட்டபோது சும்மா இருந்தார் எனக் கேட்கவே //
ReplyDeleteபொற்கொடி, இப்படியெல்லாம் உசுப்பேத்திவிடலாமா மேடமை
//சரித்திரப் பாடம் பிடிக்காதோ உங்களுக்கு? //
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிக்குமே மேடம்..