யு.எஸ். வந்ததில் இருந்தே தமிழ் எழுதறதுக்கு ஜி3 பண்ண வேண்டியதாப் போச்சு. இ-கலப்பையை, டவுன்லோட் செய்யணும்னு "க்ளிக்"கினால் அது என்னவோ இது சோதனைக்கான டவுன்லோடுதான், உனக்கு வேணும்னா யு.எஸ்.டாலரில் உன்னோட சொத்தை எழுதிக் கொடுன்னு கேட்குது. சரி, நம்ம ஹெட்லெட்டர் தான் தெரியுமேன்னு, நெருப்பு நரியைப் போட்டு எழுத ஆரம்பிச்சா தமிழா அது? தமிழா, தமிழான்னு பாடக் கூட முடியலை. அவ்வளவு மோசம். எல்லாம் இரண்டிரண்டாத் தெரிய ஆரம்பிச்சது. கண்ணாடி தான் சரியில்லையோனு பார்த்தா வீட்டில் எல்லாரும், என்னை அதிசயமாப் பார்த்து, எப்போதில் இருந்து உருது கத்துக்கிட்டுப் படிக்க ஆரம்பிச்சேன்னு கேட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது, தப்பு நம்ம பேரில் இல்லைனு, அப்போதான் கை கொடுத்த தெய்வமாய் திரு விஎஸ்கே அவர்கள் உதவினார். அதில் இருந்து ஜி3 தான் பண்ணிட்டு இருக்கேன். இங்கே ஹூஸ்டன் வந்தும் அதே தான். ஆனால் அதில் என்ன கஷ்டம்னால் இந்த மடிக்கணினிக்கு ஞாபக சக்தி ரொம்பவே அதிகமாப் போயிடுச்சு.
நேத்திக்கு ஒரு கமென்ட் கொடுத்திருப்பேன்: "இது என்ன அநியாயம்?" அப்படின்னு. அது யாருக்குக் கொடுக்கணுமோ அவங்களுக்குப் போட்டும் இருப்பேன். அதுக்குப் பின் வேறே ஏதாவது எழுதி, மத்தவங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கணும்னாலோ, அல்லது புதிசாய்ப் பதிவாய் எழுதி ஜி3 பண்ணனும்னாலோ, அது ஜி3 ஆகறதே இல்லை. அதுக்குப் பதிலா நான் போட்ட, "இது என்ன அநியாயம்?"ங்கிற பின்னூட்டமே ஒட்டிக்கிட்டு வந்து எல்லா இடத்திலும் விழுதே! இது ஒரு உதாரணத்துக்குத் தான். சில சமயம் சிலர் பதிவுகளில் பின்னூட்டம் கொடுக்கப் போய் என்னோட பதிவுகளே அங்கே ஜி3 ஆயி அதுக்கப்புறம் அதை டெலீட் செய்ய நான் படற கஷ்டம் எல்லாம் எழுதலை. அது தனியா வச்சுக்குவோம். இப்போ இதுக்கு என்ன செய்யறது? திரும்ப "RESET" கொடுன்னு சொல்ல வேண்டாம். பலமுறை "RESET" கொடுத்தும் இப்படித்தான் வருது. இன்னிக்குக் கணினியில் உட்கார்ந்ததில் இருந்து நேத்திக்கு எழுதிய கீதாஞ்சலி பதிவே எல்லாப் பக்கத்திலும் ஜி3 ஆயிட்டே இருந்தது. அதை மாத்த ரொம்பக் கஷ்டப் பட்டேன். முன் அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஹிஹிஹி ஜி3, உங்களுக்கு ஓசியிலே ஒரு நல்ல விளம்பரம்.
கீதா கவலைப்படாதீங்க. நல்லவங்களை கடவுள் இப்படித்தான் அடிக்கடி சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் :-)
ReplyDeleteஎழுதியதை எழுத்துரு மாற்றி பிளாக்கரில் ஏற்றினால் ஐஞ்சே நிமிஷத்தில் வேலை முடிந்துவிடும். உங்களுக்கு மட்டும் ஏதோ புதுசு
புதுசா சோதனைகள் வருது. ஒரு தடவை மீண்டும் முதல் வரியைப் படிச்சிடுங்க.
@உஷா,
ReplyDeleteஆஹா,ஆஹா,ஆஹா, நேத்திக்குத் தான் துர்கா சொன்னாங்க, "நீங்க ரொம்ப நல்லவங்கனு" இன்னிக்கு நீங்க, இன்னும் 2 பேர் பாக்கி! :))))))
அது சரி, உங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சோதனை வரதில்லை? ம்ம்ம்ம்ம்., சேச்சே, ரொம்பவே நம்பிக்கையோட இருந்தேன். தலைப்புக் காலை வாரிட்டு இருந்தப்போ நீங்க, அபி அப்பா, முத்துலட்சுமி எல்லாருமே கை கொடுத்தீங்க! இப்போ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்.,.,.,., :D
அதென்ன G3 ?
ReplyDelete//ramachandranusha(உஷா) said...
கீதா கவலைப்படாதீங்க. நல்லவங்களை கடவுள் இப்படித்தான் அடிக்கடி சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் :-)//
உண்மையான உஷாதானே ?
அதெல்லாம் பயம் இல்லை மணியன். நான் முன் ஜாக்கிரதை முத்தக்கா, சோதனை செய்யாமல் பதில் கொடுக்க மாட்டேன். :D
ReplyDeleteஅப்புறம் இந்த ஜி3 அப்படின்னு சொன்னா காப்பி, பேஸ்ட், காப்பி, பேஸ்ட்னு நீட்டி முழக்கறதை விட இப்படி சுலபமாச் சொல்லலாம்னு ப்ளாக் யூனியனிலே தீர்மானம் போட்டிருக்காங்க. அதை உலகுக்கு அறிவித்து விட்டேன்! அவ்வளவு தான்! ஜி3-க்கும் செலவில்லாமல் ஒரு விளம்பரம். யார் கொடுப்பாங்க? :P
ReplyDeleteநான் தான் நானேதான். புஃரோபலையில் கூட மாற்றிவிட்டேனே பார்க்கவில்லையா? புதியவர்கள் பெயரை ராமசந்திரன் அனுஷான்னு நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் இந்த ஏற்பாடு,
ReplyDeleteஅதெல்லாம் சோதனை போடாமல் பதில் கொடுக்க மாட்டேன் உஷா, நல்லாவே தெரியும், நீங்க தான்னு, சும்மா மணியனுக்குத் தமாஷாகப் பதில் கொடுத்தேன்!
ReplyDeleteஎழுதியதை எழுத்துரு மாற்றி பிளாக்கரில் ஏற்றினால் ஐஞ்சே நிமிஷத்தில் வேலை //
ReplyDeleteIthu Ennappaa.
englishla ezhuthittuth thamizhukku maththa mudiyuma.
piriyalaiye.
don't worry Geetha. sodhanai mel sodhanai vanthaal thaan naama pudam potta thangamaavom.:)))
//ஹிஹிஹி ஜி3, உங்களுக்கு ஓசியிலே ஒரு நல்ல விளம்பரம். //
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதுல உள்குத்து எக்கச்சக்கமா இருக்கும் போல இருக்கே..
@மணியன்,
//அதென்ன G3 ?//
ஏதோ சொந்தமா மொக்க போட்டு மக்கள கொல்ல வேணாமேன்னு சுட்ட மேட்டரா என் ப்ளாக்ல போட்டேன்.. அதன் பலன் G3 = சுடறது, காப்பி/பேஸ்ட் -னு புது அகராதி போட்டுபுட்டாய்ங்க மக்கள்ஸ் :)
@வல்லி, நான் அந்த சிரமம் எல்லாம் படறதில்லை. எப்போவுமே நமக்கு ஜி3 தான் உற்ற தோழி! சமயத்தில் ஆஃப்லைனிலே எழுதியும் வச்சுக்கலாம். அதனால் ஜி3யே நம்ம சாய்ஸ்! ஹிஹிஹி, ஜி3, சந்தோஷமா?
ReplyDeleteஜி3, வாங்க, வாங்க, உங்களை வரவழைக்க இப்படி விளம்பரம் எல்லாம் கொடுக்க வேண்டி ஆயிடுச்சு நம்ம நிலைமை! ஏதுடா, ஒரு தலைவியா இருக்காங்களே, நாமளே கண்டுக்குவோம்னு இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P
அது சரி, என்னோட சோதனைக்கு யாரும் ஆலோசனையே தரலையே? தொழில் நுட்ப நிபுணர்கள் எல்லாம் எங்கே? இந்த மாதிரி ஒட்டிட்டு வரதை எப்படிக் "கட்" பண்ணுறது?
ReplyDelete@ஆப்பு அம்பி, நீங்க தான் சரியான ஆள்! உங்களுக்குத் தான் எல்லாரையும் கட் பண்ணத் தெரியுமே! இதுவும் கட்டாயம் தெரிஞ்சிருக்கணுமே! :P
\\கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅப்புறம் இந்த ஜி3 அப்படின்னு சொன்னா காப்பி, பேஸ்ட், காப்பி, பேஸ்ட்னு நீட்டி முழக்கறதை விட இப்படி சுலபமாச் சொல்லலாம்னு ப்ளாக் யூனியனிலே தீர்மானம் போட்டிருக்காங்க. அதை உலகுக்கு அறிவித்து விட்டேன்! அவ்வளவு தான்! ஜி3-க்கும் செலவில்லாமல் ஒரு விளம்பரம். யார் கொடுப்பாங்க? :P \\
g3க்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!!! இந்த அறிய தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி தலைவி ;)
\\கீதா சாம்பசிவம் said...
ReplyDelete@உஷா,
ஆஹா,ஆஹா,ஆஹா, நேத்திக்குத் தான் துர்கா சொன்னாங்க, "நீங்க ரொம்ப நல்லவங்கனு" இன்னிக்கு நீங்க, இன்னும் 2 பேர் பாக்கி! :)))))\\
சீக்கிரம் சொல்லிட்டுங்கப்பா...இல்லைன்னா
"நான் ரொம்ப நல்லவங்க"ன்னு ஒரு பதிவு வரும் :)