தாகூரின் "கீதாஞ்சலி"யை நாம் மொழிபெயர்க்கும்போதே சந்தேகம் தான். எத்தனை பேர் சரியாப் புரிஞ்சுப்பாங்கன்னு! இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்யலாம்னு செய்தேன். ஆனால் நேற்று மொழிபெயர்ப்பின் போது எனக்குக் கொஞ்சம் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வரிகளில்:
"மேரே கீத் நே உதார் டாலே ஹைம்! உஸே சுந்தர் வேஷ் அவுர் சஜ்ஜித் ஹோனே கா கர்வ நகி ஹை! கஹனே ஹமாரா சந்யோக் நஹி ஹோனே தேதே, வே தும்ஹாரே அவுர் மேரே பீச் மே ஆ ஜாதேஹை! உன்கி ஜங்கார் ஸே தும்ஹாரி தீமி ஆவாஜ் தப் ஜாதி ஹை!"
இதை மொழி பெயர்க்கும்போது கொஞ்சம் தடுமாறியே போனேன். வார்த்தைகள் உண்மையாகவே தகுந்த விதத்தில் வெளிப்படவில்லை.என்றாலோ அல்லது கொஞ்சம் மாறினாலும் அற்புதமான இந்தக் கவிதைத் தொகுப்பின் அர்த்தமே மாறிப் போய் ஒரு காதல் கவிதையாக அடையாளம் காட்டப் படும். தாகூரின் நோக்கமோ, அவரின் இறை உணர்வும், அதைக் கண்டு உணர்ந்த அவர் தன் சொல் வலிமையால் அதை வெளிப்படுத்திய விதமும் கேவலப் பட்டுப் போயிருக்கும். ஆகவே கூடியவரை தக்க வார்த்தைகளைப் போட்டு எழுத நினைத்த என்னால் எழுத முடியாமல் போய் ஏதோ ஒப்பேற்றினேன். இருந்தாலும் திருப்தி இல்லாமல் பதிவை வெளியிடுவதும், திரும்ப வாபஸ் வாங்குவதும், பின்னூட்டத்தில் விளக்கம் எழுதுவதுமாய் இருந்தேன். அப்போதுதான் முத்தமிழ்க் குழுமத்தில் போட்டதுக்கு, வேந்தர் "சம்மந்தம் இல்லமல் இருக்கிறதே?" எனக் கேட்டு எழுதிய விமரிசனத்தையும், அதற்கு திரு வீஎஸ்கே அவர்கள் என் சார்பில் கொடுத்த விளக்கமும் பார்த்தேன். இனி ஒண்ணும் செய்ய முடியாது எனத் தோன்ற இந்தப் பதிவை ப்ளாகிலும் பப்ளிஷ் பண்ணி விட்டேன். திரு வீஎஸ்கே அவர்களைக் கலாய்த்தும் ஒரு பதில் எழுதி விட்டுத் தான்! :P இது எனக்காகப் போட்டிருக்கேன்! இப்போ அம்பி கேட்ட கேள்வி என்னை அறைகிறாப் போல் இருக்கிறது.
திரு வீஎஸ்கே அவர்கள் என்னைச் சரியான நேரத்தில் காப்பாற்றி இருக்கிறார் என்றாலும் அப்போது அதை நான் உணராமலே இருந்தேன். இருந்தாலும் சரியாக வெளிப்படுத்தாமல் போனது என் மனதை வாள் போல் அறுத்துக் கொண்டே இருந்தது. இன்று அவர் எனக்கு மன்னிப்புக் கேட்டு எழுதியதைப் பார்ததும் ரொம்பவே வெட்கமாயும், வருத்தமாயும் இருக்கிறது. உண்மையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்க அவர் கேட்டதில் இருந்து "பெரியவங்க பெரியவங்க தான்!" என்ற எண்ணமும் என் அல்ப புத்தியும் வெளிப்படையாக ஆனது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ அம்பியின் கேள்விக்கு வருவோமா? அம்பி கேட்டது: " நிஜமாவே தெரியாம தான் கேக்கறேன்: இந்த கீதாஞ்சலியே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எலிசபத் ராணி மற்றும் அவர் கணவர் (பிரபு) இவர்களைப் புகழ்ந்து பாடப் பட்ட ஒரு பாடல் தொகுப்புனு சொல்றாங்களே உண்மையா? உங்க மொழி பெயர்ப்பும் அதே மாதிரி தான் இருக்கு. தனிப் பதிவாகவே விளக்கவும். கண்ணபிரான் கூட ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க!"
இதைப் பார்த்ததும் முதலில் எனக்குக் கோபம் தான் வந்தது. அம்பியைத் திட்டித் தான் பின்னூட்டம் போட நினைத்தேன். ஆனால் அப்போது தான் திரு வீஎஸ்கே நினைவு வந்தார். தப்பு என் பேரில் இருக்க அவர் என்ன்னிடம் மன்னிப்புக் கேட்டிருக்கையில் அம்பி நிஜமாவே சரித்திர அறிவு கூட இல்லாமல் எழுதி இருக்கும் போது திருத்தணும், அது தான் சரின்னு முடிவு செய்தேன். அது என்னனு இன்னொரு பதிவா எழுதறேனே!
No comments:
Post a Comment