எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Tuesday, August 21, 2007
தவறுகளுக்கு மன்னிக்கவும்!
என் பிரபுவே, உன்னுடைய கீதம் மிகவும் அற்புதமாய் உள்ளது. நான் வியப்பினால் வாய்திறவாமல், எப்போதும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
உன் கீதத்தால், இந்த மூவுலகும் பிரகாசிக்கிறது. உன்னுடைய சங்கீதத்தின் ஜீவநாதம் ஒரு மாபெரும் அலையைப் போல் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பிரவாஹமாய்ப் பெருகுகிறது. இந்தப் புனிதமான பிரவாகம் சற்றும் தடை இல்லாமல் தீவிர கதியில் ஓடுகிறது.
என்னுடைய இதயமோ உன்னுடைய சங்கீதத்தில் மூழ்கி ஆனந்தமய நிலையை அடைய ஆசைப் படுகிறது, ஆனால்,
வார்த்தைகள் எனக்குள் தெளிவாக வரவில்லையே! நான் எப்படிச் சொல்வேன்?
என் உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியாமல், என்னுள்ளே தழுதழுக்கிறேன்.
என் இதய நாதனே, உன்னுடைய இந்த இதய சங்கீதத்தின் நாதத்தால், அதன் அற்புதத்தால், அதன் எண்ணற்ற துவாரங்களால் என்னுடைய இதயத்தை மூடி விட்டாய்! என் இதயம் என்னிடம் இல்லை!
Subscribe to:
Post Comments (Atom)
என்ன ஆச்சு? ஒழுங்கா தானே இருந்தீங்க? மேலே பரணில் இருந்து ஏதவது டப்பா தலையில விழுந்து.... சரி, நான் ஒன்னும் கேக்கலை. :)))
ReplyDeleteGeetha,
ReplyDeleteTagore photo nallaa irukku. avar yen mannikkaNum.
enna Acchu.
puriyalai.:(((((
கீதாஞ்சலியை மொழிபெயர்த்து எழுதிட்டு இருக்கேன் இல்லையா? அதனால் அவர் படத்தைப் போட்டேன் வல்லி, அவ்வளவுதான்!
ReplyDelete@அம்பி, இப்படியா புகை விடறது? :P
தாகூர்ன்னு லேபிள் கொடுத்தீங்கன்னா வசதியா இருக்கும் என்னைப் போல் கூகிள் ரீடரில் வாசிப்பவர்களுக்கு. செய்வீங்களா?
ReplyDeleteதொண்டு தொடரட்டும்!
@காட்டாறு, இதோ உடனேயே செயல் படுத்தறேன். பூக்கடைக்கு விளம்பரமான்னு நினைச்சேன்! :))))))
ReplyDelete\\கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteகீதாஞ்சலியை மொழிபெயர்த்து எழுதிட்டு இருக்கேன் இல்லையா? அதனால் அவர் படத்தைப் போட்டேன் வல்லி, அவ்வளவுதான்!
\\
ஆஹா...தலைவி இப்ப தாகூரா!!! கலக்குங்க ;)
மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது :)
அருமையான வரிகள்.
ReplyDeleteநன்றிங்கோவ்.
ReplyDeleteஅருமையான வரிகள்!
ReplyDeleteபாராட்டுக்கள்! வாழ்த்துக்களும் கூட!
வார்த்தைகள் எனக்குள் தெளிவாக வரவில்லையே! நான் எப்படிச் சொல்வேன்
ReplyDeleteNo u r able to tell correctly.Trnslation is good and impressive
@வேதா, உங்களைப் போன்ற கவிதாயினியின் பாராட்டுக் கிடைக்கிறதினாலே என் எழுத்தின் மீதே எனக்கு நம்பிக்கை அதிகம் ஆகிறது.
ReplyDelete@கோபிநாத், உங்கள் பாராட்டுக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. இது ஒரு சின்ன முயற்சிதான். கடைசி வரை இதே பாராட்டைப் பெற நான் எத்தனை முயல வேண்டும் என்றும் புரிகிறது.
@அரை பிளேடு, இப்படிப் பொதுவா அருமையான வரிகள்னு சொன்னால் என்ன அர்த்தம்? பேருதான் அரைனு பார்த்தால் பின்னூட்டமும் கால் பிளேடு கூட இல்லை? :P
@சிபி, நீங்க பாராட்டினால் உண்மையாவே எனக்குத் திறமை கொஞ்சமாவது இருக்குனு நினைக்கிறேன்.
@தி.ரா.ச.சார், நிஜமாவே உங்க பாராட்டுக்குப் பதில் எழுத வார்த்தையே வரலை!