என்னன்னு சொல்றது? இந்த அம்பிக்குப் புரியவே இல்லைனு சொல்ல முடியாது. ஆனால் வேணும்னு சாட்சி கேட்கிறார். கடவுள் இருக்கிறதுக்குச் சாட்சி கேட்கிறார். ஆமாம், அப்படித் தான் சொல்லணும். சூரியன் உதிக்கிறது எப்படி? அம்பி, விஞ்ஞான பூர்வமாய்ப் பதில் சொல்லாதீங்க. சந்திரன் உதிப்பது எப்படி? பருவங்கள் அந்த அந்தச் சமயத்தில் மாறிக் கொண்டே இருப்பது எப்படி? பூக்கள் மலருவது எப்படி? பூக்களில், அதுவும் சில பூக்களில் தேனும், சில பூக்களில் ஒன்றுமே இல்லாமலும், சில பூக்கள் ரம்மியமான மணமும், சில பூக்களில் மணம் மனதைக் கவரும் விதம், தலை கிறுகிறுத்துப் போகும்படியும் இருப்பது எப்படி? வண்ணக்கலவை பூக்களுக்கு வந்தது எப்படி?மரங்கள் ஏன் காலத்தில் காய்க்கின்றன? பழுக்கின்றன? அதுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? சாட்சி என்ன? சொல்ல முடியுமா? வசந்தம் ஏன் வருகிறது? பட்டாம்பூச்சிகள் ஏன் பறக்கின்றன? தும்பிகள் ஏன் தேனைக் குடிக்கின்றன? தேன் சிட்டுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வலுவான குரல்? குயில் ஏன் கோடையில் மட்டும் கூவுகிறது? காக்கையின் கூட்டில் குயில் ஏன் முட்டை இடுகிறது? கிளிகள் மட்டும் ஏன் 100 வருஷங்களுக்கு மேல் வாழ்கின்றன? சில மிருகங்கள் சாதுவாயும், சில முரடாயும் ஏன் இருக்கின்றன? சாதுவான மிருகங்கள் வலிமை வாய்ந்த மிருகங்களால் ஏன் கொல்லப் படுகின்றன?
மழை ஏன் பெய்கிறது? மழைத் துளியைப் பார்த்தால் மனம் ஏன் ஆனந்தம் அடைகிறது? காற்று இல்லாமல் நம்மால் ஏன் இருக்க முடியாது? ஏன் மூச்சு விடுகிறோம்? அம்பி, எந்தப் பயனை எதிர்பார்த்து இவை எல்லாம் நடக்கிறது, சொல்லி வைத்தால் போல் அந்த அந்தக் கால கட்டத்தில், யார் சொல்லிக் கொடுக்கிறார்கள்? அல்லது உங்கள் டாமேஜர் போல் ஆர்டர் போடுகிறார்கள்? காற்றுத் தான், பிராணவாயு இருப்பதால் தான் மூச்சு விடுகிறோம். அதைக் கண்ணால் கண்டிருக்கிறீர்களா? என்ன நிறம், என்ன உயரம், குணம், மணம் எல்லாம். எப்படி இருக்கும்னு சாட்சியோடு நிரூபிக்க முடியுமா? பார்க்காமலேயே உங்கள் மனதில் காதல் எப்படி வந்ததோ? அதுக்கு என்ன சாட்சி வைத்துக் கொண்டீர்கள், உங்கள் மனதைத் தவிர? மனதுக்கு மனமே சாட்சி இல்லையா? நீங்கள் உங்கள் காதலை உணர்ந்தாப் போல் உங்கள் மனைவியும் உணர்ந்ததால் தானே அது வெற்றியடைந்தது? அது போல் இறைவனை உணர்ந்தால் உங்களாலும் இதை உணர முடியும். இதுக்கு சாட்சி, சம்மன், கோர்ட், தீர்ப்பு எதுவும் வேணாம். பக்குவம் வேணும், இறைவனிடம் வேண்டிப் பெறும் மனது வேண்டும். அவனிடம் பரிபூர்ண நம்பிக்கை வைத்துச் சரணாகதி அடைய வேண்டும். முடியும் இடைவிடாத முயற்சியால். சாட்சி வைத்துக் கொண்டு தானே மூச்சு விடுகிறீர்கள்? இறைவனை மனதில் உணர்ந்தவர்கள் தங்கள் அனுபவத்தை வார்த்தைகளால் வடிப்பதே, நாமும் அதைக் கண்டு உணர வேண்டும் என்பதற்குத் தான். நம்மால் நிச்சயமாய் உணர முடியாது என்றால் சாட்சியா கேட்பது? தாகூர் நோபல் பரிசுக்காக எழுதவில்லை, அவர் மனச் சாந்திக்காக எழுதினார். அதை உணர்ந்து படிப்பதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.
அப்புறம் என்னமோ பீட்டர் விட்டிருக்கீங்களே, இங்கிலிபீஸில், எத்தனை முறை சொல்லி இருப்பீங்க ஐ.ஏ.எஸ்.பரிட்சை கொடுத்ததை? சும்மாச்சும்மாச் சொல்லிட்டே இருந்தால் என்ன அர்த்தம்? அதான் ஊத்திக்கிச்சு இல்லை? அப்புறம் என்ன? உங்க சரித்திர அறிவு நல்லாத் தெரியுதே, யார், எப்போ ஆண்டாங்கனு கரெக்டாச் சொல்றதிலே இருந்து! :P .பிரிட்டிஷ் மன்னர் குலம் எப்போ இந்தியாவுக்கு வந்ததிலேன்னு இருக்கிறதாலே உங்களோட தடுமாற்றம் அதிலேதான் இருந்ததுன்னாலே அதை மட்டும் குறிப்பாச் சொன்னேன். சேர, சோழ, பாண்டியர்களையோ, மொகலாயர்களையோ, குப்தர்களையோ, மகத நாட்டைப் பத்தியோ, சாணக்கியரைப் பத்தியோ சிந்து சமவெளி பத்தியோ இப்போ எழுதலை. :P. அப்புறம் வேதாவுக்கும், எனக்குமோ அல்லது அபி அப்பாவுக்கும், எனக்குமோ சிண்டு முடியப் பார்த்து உங்க நாரத வேலையை ஆரம்பிக்க வேண்டாம். உங்களால் முடியாது. அவங்க உங்களை உளவு பார்த்து என் கிட்டே வந்து சொல்லிடுவாங்க. :P என்னோட எழுத்தின் போக்கை மாத்திட்டதா நினைக்க வேண்டாம். முடிஞ்சா முயற்சி செய்து பாருங்க.
கடைசியா மதுரையில் நடந்த திருவிளையாடல்களைச் சொல்லி இருக்கீங்க. வன்னி, கிணறு, லிங்கம் சாட்சிக்கு வந்ததுன்னா அது வேறே விஷயம். உணர்வுகள் சம்மந்தமே இல்லை. நிகழ்வுகள் சம்மந்தம். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. அதை முதலில் புரிஞ்சுக்க முயலவும். சம்மந்தம் இல்லாமல் கேட்க வேண்டாம்.
அம்பிக்குப் பதில் சொல்ல வேணாம்னு தான் இருந்தேன், ஆனால் அம்பி நான் பயந்துட்டேன்னு உடனே பெருமை அடிச்சுப்பார். அதான் பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்., டைம் வேஸ்ட், ஒரு 2 நாள் கழிச்சு வரேன்.
ReplyDeleteஇப்படி ஒவ்வோரு தடவையும் பஷ்ட்டு கமண்டை நீங்களே போட்டு பொங்கல், புளியோதரையை அமுக்குவதை நான் முதலில் வண்மையாக கண்டிக்கிறேன். :))
ReplyDeleteச்சும்மா கவிதையை மொழி பெயற்கிறேன் பேர்வழி!னு பதிவு போட்டு இருந்த உங்களை மீண்டும் அல்லது வழக்கம் போல மொக்கை போட வைக்கனும்!னு தான் லேசா கிண்டி விட்டேன். (கிண்டறத்துக்கு இது என்ன கேசரியா?னு கேக்கப்படாது!) :p
ReplyDeleteசுருக்கமா சொல்லனும்னா "நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம் அவ்வையே!(வயதில் தான்)
:))))
சண்டை ஒத்து நைனா...........
ReplyDeleteசமாதானங்காப் போத்தே மஞ்சிதி:-))))
What is happening here????
ReplyDeletestaright out war?
anal paRakkum vivaadham.
thodarungaL:)))
NAKKIRAR vs Sokkanaa?
good going Geetha.(
same to Ambi)
neengale eduku engappan kudurukulla illenu solrenga?
ReplyDeleteஹா,ஹா, அம்பி, முதலில் உங்களுக்குப் பொங்கலோ, புளியோதரையோ போய்ச் சேரக் கூடாதுனு தான் நம்ம "எண்ணங்கள்!" பிரியுதா?
ReplyDeleteஅப்புறம், ஹிஹிஹிஹிஹி, டாங்ஸு, டாங்ஸு, என்ன "அவ்வை"னு சொன்னதுக்கு. அவ்வை தானே இளம் வயதிலேயே [இள்ளையாரிடம் முதுமையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். எனக்கும் பிள்ளையார் தான் பெஸ்ட் ஃப்ரன்டு. அதனாலே நானும் அப்படித்தான்னு இப்போ புரிஞ்சிருக்குமே! :))))))))
@வேதா, அதெல்லாம் அம்பி என்ன சொன்னாலும் பின், ஊசி, கத்தி எதுவும் வாங்கப் போகிறதில்லை.
ReplyDelete@துளசி, இது சண்டை இல்லைனு தலைப்பிலேயே பொடெனெ? லேபெலில் தானே "அறிக்கைப் போர்"னு கொட்த்தேன்? :P
@வல்லி, அம்பியோட சமாதானமாப் போகிறதாவது? அன்னிக்கு சூரியன் மேற்கிலே கூட உதிக்க மாட்டான், தெற்கு, வடக்குனு போய் ஒளிஞ்சுப்பான். நாம் எல்லாரும் சந்திர மண்டலத்துக்குப் போயிடுவோம்.
@டிடி, டுடி, டைடி, என்னங்க பேரு இது? நான் வச்சிருக்கிறது டிடி தான். அதிலேயே ஹிந்தி அர்த்தம் "அக்கா"னு வருது இல்லை? அதனாலே! ஹிஹிஹி, அதெல்லாம் எங்கப்பாவைக் குதிருக்குள்ளே தள்ள முடியாதுங்கோஓஒவ்! ஸோ, நிஜமாவே எங்கப்பா குதிருக்குள் இல்லையே! :P
என்ன அறிக்கை போர் இவ்வளவு ஆவேசமா இருக்கு..... என் நண்பனிடம் நானும் இது போல் தான் வாதிடுவேன்.... அவன் சொல்வான்... "அது தான் இயற்கை.. கடவுளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை".
ReplyDeleteஏப்பா ஆண்டிய ரொம்ப கஷ்ட்டப்படுத்தறதா நீ நினைக்கிறாய், ஆனா பாரு அவங்க அதை ஒரு பதிவாக்கி எல்லோரையும் படுத்தறாங்க....ஏன்?...ஏன்? ஏன் இப்படி?
ReplyDeletehttp://nilavunanban.blogspot.com/2007/08/blog-post_30.html
ReplyDelete