எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 19, 2007

புதிய முயற்சி- ஆனால் சொந்தம் இல்லை.

"இறைவா, நீ என்னை சற்றும் இளைப்பாறாத ஒரு பயணியாகப் படைத்துள்ளாய்!
என்னுடைய இந்த அழியக் கூடிய உடலை நீ கோடிக் கோடி முறைகள் அழித்தாலும்,
திரும்பவும் கோடி கோடி முறைகள் படைத்தும் விடுகிறாயே?

நீ இந்த நர உடலை ஒரு புல்லாங்குழலாக மாற்றி மலைகளின் சிகரங்களிலேயும்,
கணவாய்களின், ஆழத்திலேயும் எடுத்துச் சென்று தினம் தினம் ஒரு புதிய உதய கீதம் இசைக்கிறாய்.

உன்னுடைய கரங்களின் தொடுகையால் நான் ஆனந்தம் அடைகிறேன்.
என்னுடைய இளம் இதயமும் அதனால் விம்மிப் பெருமிதம் அடைகிறது.
என் இருதயத்தில் இருந்து கவிதையாகிய ஊற்றுப் பெருக்கெடுக்கிறது.

என்னுடைய இந்த அல்பமான இதயமாகிய பையில் நீ அற்புதமான தன்னம்பிக்கை தரும் பரிசுகளால் நிரப்பி விடுகிறாய். நீ எத்தனை முறை இவ்வாறு செய்தாயோ?
ஆனால் யுகங்கள் கழிந்து போயும், இது முடிவடையவில்லை.
என்னுடைய இதயம் ஆகிற பையோ இன்னும் காலியாக உனக்காகக் காத்திருக்கிறது.

7 comments:

  1. சொந்தமோ இரவலோ நல்லா இருக்கு

    ReplyDelete
  2. \\"புதிய முயற்சி- ஆனால் சொந்தம் இல்லை." \\

    நல்லா இருக்கு தலைவி ;)

    ReplyDelete
  3. @தி.ரா.ச. வாங்க சார், உங்க பாராட்டுக்கு நன்றி.

    @கோபிநாத், நன்றி.

    @வேதா, நீங்கள் கண்டுபிடிச்சது சரியே. ஆனால் ஹிந்தியில் இருந்து தமிழாக்கம் செய்து பார்க்கிறேன். என்னிடம் தமிழ் மொழிபெயர்ப்புக் கிடையாது. :(((((

    ReplyDelete
  4. @வேதா, நன்றி, கீதாஞ்சலியின் உள்ளார்ந்த ஜீவனை என்னால் வெளிக்கொணர முடியும்னு நம்பிக் கொண்டு ஆரம்பித்துள்ளேன். என் முயற்சி வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
  5. இதைத்தான் கண்ணதாசன் கொஞ்சம் மாற்றி புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அந்த புருஷோத்தமன் புகழைப் பாடுங்களே என்று பாடினாரோ.

    நல்ல கற்பூர வாசனை அடிக்கிறது எனக்கு. அம்பிக்கு அடிக்காது

    ReplyDelete
  6. இனி எதிலிருந்து எடுத்து எழுதினாலும்,இல்லை மொழிபெயர்த்து
    எழுதினாலும் மூலத்தின் பெயரைப்
    போட்டுவிடுதல், அதைப் படைத்தவர்க்கு நாம் செய்யும்
    மரியாதையாகும்.

    ReplyDelete
  7. I am sorry Jeevi, I made you to think like this. I was about to publish his name and photo in the coming editions. Delayed because I want to know, if anybody is aware of his writings. That is all. Sorry for the English. The copy&paste in Tamil is not working properly. :((((

    ReplyDelete