எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 25, 2007

என் கேள்விக்கு என்ன பதில்?

முதலில் சரித்திரம்: பிடிக்கலைனாலும் அம்பி கேட்டிருப்பது எலிசபத் ராணியைப் பத்தி. முதலாம் எலிசபத் ராணி என்றால் 1533-ல் பிறந்து 1558 வரை (இறக்கும் வரை) இங்கிலாந்தின் ராணியாக இருந்தார். இவரைப் பற்றிய தொலக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் வெளி வந்துள்ளது. "கன்னி ராணி" என்று அழைக்கப் பட்டார். அப்போதிருந்த அமெரிக்கக் காமன்வெல்த்தில் இருந்த மாநிலம் ஒன்று இவரின் இந்தப் பெயரில் தான் இன்றுவரை வர்ஜீனியா என அழைக்கப் படுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். தற்போது இருக்கும் 2-ம் எலிசபத் பிறந்ததே 1926-ல் தான். இவர் திருமணம் செய்து கொள்ளும்போது இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதுனு நினைக்கிறேன். இவர் திருமணத்துக்குக் காந்தி பரிசாக கதரினால் கையால் நெய்யப் பட்ட ஒரு மேசை விரிப்போ அல்லது உடுத்தும் உடுப்போ பரிசாகக் கொடுத்தார் எனச் சொல்லப் பட்டது. அதுக்கு முன்னாலேயே தாகூர் 1913 அல்லது 14-ல் நோபல் பரிசு வாங்கி விட்டதாய்க் கேள்விப் பட்டேன். ஆகவே முதலில் அம்பிக்குச் சரித்திரமே தெரியலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே எடுத்த எடுப்பிலே எனக்குக் கோபம் வந்து விட்டது. 41-ல் தாகூர் இறக்கும்போது இந்த 2-ம் எலிசபத் பட்டத்துக்கே வரலை! அவர் 50களில் தான் எப்போவோ பட்டத்துக்கு வந்தார்னு நினைக்கிறேன். இப்போ அடுத்து "கீதாஞ்சலி"யைப் பத்தி.

உண்மையில் "கீதாஞ்சலி"க் கவிதைத் தொகுப்பை ஆன்மாவின் ராகங்கள் எனக் கூறலாம். நம் பக்தி உணர்வில் பலவிதமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் நாயகன், நாயகி பாவமும் ஒன்று. தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு, இறைவனை நாயகனாய்ப் பாவித்துக் கொண்டு எழுதிய அநேகம் கவிதைகள், முக்கியமாய் பக்தி இலக்கியக் கவிதைகள் பல நம் தமிழிலும் உண்டு. கீதாஞ்சலியும் அப்படி ஒரு ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய கவிதைத் தொகுப்பு. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது என்றாலும் அது எல்லாம் பின்னால் தான். முதலில் ஆங்கிலத்தில் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்தவர் "யீட்ஸ்" என்பவர், என்றாலும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு முழுக்க முழுக்க வங்காள மொழியில் தாகூர் எழுதிய எல்லாக் கவிதைகளுமே என்று சொல்ல முடியாது எனவும் ஒரு விமரிசனம் உண்டு.

தன்னுள்ளே உறையும் இறை ஒளியைக் கண்ட பாரதி எப்படிக் குதித்துக் கொண்டு,"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்! அதை ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன், வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் , குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?" என்க் கேட்டதோடு அல்லாமல், "தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்!" என ஆடிப் பாடி குதிக்கவும் செய்தார். அதே போல் தாகூரும் தன்னுள்ளே உறையும் இறைவனைக் கண்டார். தன் ஆன்மா இறைவனுடன் சேரும் நாளுக்ககக் காத்திருந்தார். தேடினார். அலைந்தார். புலம்பினார். அழுதார், சிரித்தார். ஆனந்தம் அடைந்தார். அவரின் பல்வேறு விதமான் உணர்வுக் கலவை இது. பக்தி இலக்கியத்தைச் சேர்ந்தது. தேவாதி தேவனே, என்றும், அரசர்க்கு அரசே என்றும், தலைவருக்கு எல்லாம் தலைவா என்றும், புலவருக்கு எல்லாம் புலவனே என்றும் அவர் அழைத்ததும், உருகித் தவித்ததும் இறைவனை நோக்கி. தன் ஆன்மா இறைவனுடன் ஒன்றாய்க் கலக்கும் நாளுக்காகத் தினம் தினம் அவனுக்காகப் புதிய பாடல்கள் பாடி, அவனை வரவேற்றுத் தொழுது, அழுது, அரற்றித் தன்னையே அவனுக்கு நிவேதனமாகப் படைக்கத் தான் தயாராய் இருப்பதைச் சொல்கிறார். இன்னும் வரலியேனு ஏங்குகிறார். இதைப் புரிந்து கொண்டு அந்த உணர்வோடு ஒன்றிப் போய்ப் படித்தால் கவிதை புரியும், நம்மால் எழுத முடியாவிட்டாலும், மனதில் உணர்வுகள் பொங்கும்!

அடுத்துக் கண்ணபிரான் எழுதியது பத்தி. அம்பி வழக்கம்போல் இதையும் சரியாப் படிக்கலை. (எப்பவும் பூரிக்கட்டையும் தங்கமணியும்னு நினைப்பு இருந்தால் இப்படித் தான் :P) கண்ணபிரான் எழுதி இருந்தது தேசீய கீதத்தைப் பற்றியும் அது வெளியிடும்போது நாட்டில் இருந்த சூழ்நிலை பற்றியும், அதை ஆங்கில அரசு எப்படித் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டது என்பது பற்றியும். அம்பி இன்னொரு முறை கண்ணன் பதிவிலே போய்ப் படிங்க! "விதாதா" எனத் தாகூர் கூப்பிட்டது இறைவனையே, ஒரு போதும் அன்னிய அரசனை அல்ல! இதையும் "யீட்ஸ்" குறிப்பிட்டதாய்க் கண்ணன் எழுதி இருக்கிறார். அம்பி நிஜமாவே நல்லாப் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுங்க ப்ளீஸ்! கண்ணன் எழுதி இருப்பது தற்போது உள்ள எலிசபத் அரசியின் தந்தை ஆன 6-வது ஜார்ஜுக்கும் முன்னர் இருந்த 5-ம் ஜார்ஜ் மன்னர். அவர் இந்தியா வந்திருந்திருக்கிறார்.. அப்போது காங்கிரஸ் மகாசபையில் வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டபோது தாகூரின் "ஜனகணமன" கடவுள் வாழ்த்தாகத் தான் பாடப் பட்டிருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்தி இல்லை! :(((((((

17 comments:

  1. தேவை தான் எனக்கு.
    விக்டோரியா ராணியா?னு கேக்கறத்துக்கு பதில் எலிசபத்தா?னு கேட்டது முதல் தப்பு.

    உங்கள் மொழி பெயற்ப்பை அப்படியே பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தின் துரை மற்றும் ராணிக்கு ஒப்பிட்டு பார்த்தேன். என்ன ஆச்சரியம்? அப்படியே பொருந்துது.

    சரி இதோ தற்கால சினிமா பாடல் ஒன்றை பாருங்கள்:
    உயிரே படத்தில் ரயில் மேலே ஷாருகான் ஆடி பாடி செல்லும்
    "தக தையா தையா" பாடல் தான் அது.

    ஒரு பார்வையிலே என்னை பதிய வைத்தாய்
    சிறு புன்னகையால் என்னை உறைய வைத்தாய்
    அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
    உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்.

    இப்போ ஒரு காதலன் பாடுவதாகவும் எடுத்து கொள்ளலாம். ஒரு பக்தன் உம்மாச்சியை நினைத்து பாடுவதாகவும் எடுத்து கொள்ளலாம் தானே?
    மேலும் தாகூர் கடவுளை நினைத்து தான் பாடினார்! என்பதற்கு ஏதேனும் சாட்சி இருக்கா?
    காந்தியை சுற்றி கோவிந்தா போட்ட கோஷ்டிகளின் பிரிடீஷ் விசுவாசம் பற்றி நீங்களே நேவி புரட்சியில் சொல்லி இருக்கீங்களே! அதே காலத்தில் வேற பிறந்து எல்லாத்தையும் பாத்து இருகீங்க. :)))
    அதனால் தான் என்னை இந்த கீதாஞ்சலி வெகுவாக கவரவில்லை.
    :(((

    ReplyDelete
  2. எப்படியோ என்னை சாக்கா வெச்சு ரெண்டு பதிவு போட்டாச்சு. முக்யமான விஷயம்:
    இந்த பதிலை படிச்சுட்டு, உடனே அம்பி! நன்றாக என்னை பார்! நான் ஜி3 பண்ணீய பாடல் குற்றமா?னு நெற்றிகண்ணை எல்லாம் தொறக்க கூடாது. :)))
    பதிவர்களிடையே விவாதம் இருக்கலாம்! விவகாரம் இருக்க கூடாது!னு கண்ணபிரான் வந்து தீர்ப்பு சொல்லிடுவார். :)))

    ReplyDelete
  3. @அம்பி, நீங்க இருந்த விக்டோரியா காலத்தில் தாகூருக்குப் பரிசு கிடைக்கவில்லை. விக்டோரியாவின் பேரன் ஆன 5-ம் ஜார்ஜ் மன்னன் காலத்தில் தான் இந்தப் பாட்டைப் பற்றிய சர்ச்சைகளும், உங்களைப் போல் இதன் தாத்பரியத்தைப் புரிந்து கொள்ளாதவர்களும் பேசினார்கள். விக்டோரியா இந்தியாவை ஆட்சி செய்த கிட்டத் தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நாட்களிலோ அல்லது அவருக்குப் பின்னர் வந்த 7-ம் எட்வர்ட்? மன்னரோ, பட்டத்துக்கு வந்தப்புறம் இந்தியாவுக்கு வந்ததாய்த் தெரியலை.

    அப்புறம் உங்களுக்குக் "கீதாஞ்சலி" பிடிச்சாலோ அல்லது பிடிக்கலைன்னாலோ அதனால் தாகூருக்குப் பெருமை தான். நஷ்டம் ஒண்ணும் அவருக்கு இல்லை. :P அதனால் ரொம்பவே அலட்டல் வேண்டாம். தமிழிலேயே பக்தி இலக்கியம் தோன்றிய காலத்துப் பக்திப் பாடல்களை மறுபடி ஒருமுறை படித்துப் பாருங்கள். இப்போதைய கவிஞர்கள் அதிலிருந்து வாங்கிக் கொண்டிருக்கும் கடன்கள் புரியும். !

    ReplyDelete
  4. அப்புறம் சாட்சி இருக்கானு கேட்டிருக்கீங்க இல்லை? க்ர்ர்ர்ர்ர்ர்..., பக்திப் பரவசத்தில் மூழ்கியவர்கள் சாட்சி எதுவும் வைத்துக் கொண்டா தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இயல்பாய் ஊற்றில் இருந்து நீர் பொங்குவதைப் போல் அவர்கள் மனம் பொங்கிப் பெருகி வரும் வார்த்தைகள். என்றோ ஒருநாள் பெய்யும் மழைத்துளியைச் சேமித்து வைத்துச் சிப்பி பிறப்பிக்கும் முத்தைப் போல் அவர்கள் ஆழ்மனத்தில் ஊறிக்கிடந்த உணர்வுகள் அது. சாட்சி எல்லாம் தேவை இல்லை.

    ReplyDelete
  5. @வேதா, அம்பி இப்படிக் கொஞ்சம் கூடப் பதிவுகளைப் படிக்காமலேயே சும்மா கமென்டுகளை அள்ளி வீசுவது இப்போ வெளிப்படையா ஆயிடுச்சு இல்லை? :P இது அம்பிக்கு, உங்களுக்கு இல்லை. :)

    ReplyDelete
  6. அம்பிக்குப் பதில் சொல்லும்போது ராணி விக்டோரியா ஆட்சி செலுத்தியது முப்பதுக்கும் மேற்பட்ட வருஷங்களிலோன்னு வந்திருக்கணும். நாட்களிலோ என்று தவறாய்க் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. அப்புறம @அம்பி, ஜி3 பண்ணிப் பாடல்கள் எழுதுவது நீங்கள் மெச்சிக் கொண்டு பாராட்டும் இந்தக் காலப் பாடலாசிரியர்கள் தான். நம்ம பெரியவங்க ஏற்கெனவே தொடாத விஷயம் இல்லை. அப்புறமாய் இன்னொண்ணு, நான் ஜி3 செய்யறது, தமிழிலே தட்டச்சு செய்யும் கட்டுரைகள் தானே தவிர, வேறே எதுவும் இல்லை. கீதாஞ்சலியைக் கூடிய வரை எனக்குத் தெரிஞ்ச எளிமையான பேச்சுத் தமிழில், எனக்குச் செந்தமிழில் அலங்காரமாய் எழுத வாலை :( தெரிஞ்சவரை மொழிபெயர்ப்புத் தான் செய்யறேன். அதான் ஏற்கெனவே சொல்லிட்டேனே, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைன்னு! :P

    ReplyDelete
  8. @ ambi,
    first go and read Indian History thoroughly, it includes British Emperors also. So that you can understand atleast something. :P

    ReplyDelete
  9. தாகூர் காந்தியைச் சுற்றிக் கோவிந்தா போட்ட கோஷ்டியைச் சேரவும் இல்லை. அவர் பிரிட்டிஷ் விசுவாசியும் இல்லை. மறுபடி இதுக்கெல்லாம் பதில் எழுதினால் இன்னொரு பதிவா ஆயிடும்னு தான் பின்னூட்டத்திலேயே பதில் சொல்றேன். எங்கே பார்க்கவா போறீங்க? :P

    ReplyDelete
  10. எச்சூச்மீ! இங்க ஏதும் சண்டை நடக்குதா? எனக்கு என்ன ரோல், அம்பி, நான் உங்க பக்கம் வர்ரேன் இருங்க, ஒரு கை பார்த்திடலாம்:-)

    ReplyDelete
  11. Extremely busy in the market happenings world over but reading every article of yours when time permits. Good work. Keep it up

    ReplyDelete
  12. //ராணி விக்டோரியா ஆட்சி செலுத்தியது முப்பதுக்கும் மேற்பட்ட வருஷங்களிலோன்னு வந்திருக்கணும். நாட்களிலோ என்று தவறாய்க் குறிப்பிட்டிருக்கிறேன்.
    //

    இது மட்டும் தானா? :p

    ReplyDelete
  13. //இயல்பாய் ஊற்றில் இருந்து நீர் பொங்குவதைப் போல் அவர்கள் மனம் பொங்கிப் பெருகி வரும் வார்த்தைகள். என்றோ ஒருநாள் பெய்யும் மழைத்துளியைச் சேமித்து வைத்துச் சிப்பி பிறப்பிக்கும் முத்தைப் போல் அவர்கள் ஆழ்மனத்தில் ஊறிக்கிடந்த உணர்வுகள் அது. சாட்சி எல்லாம் தேவை இல்லை.
    //

    LOL. இப்ப உங்களுக்கு மொக்கையா பொங்கிட்டு வருதே அத மாதிரியா?
    :)))

    திரு நாவுக்கரசரே முதலில் சமணத்தை பெரிசுனு நினைத்து விட்டு, பின் வயத்து வலி வந்ததுக்கு அப்புறம் தான் சைவத்துக்கு வந்தார். அவரை வழிக்கு கொண்டுவர அந்த சிவனே இப்படி டகால்டி பண்ண வேண்டி இருந்தது.
    இவ்ளோ ஏன்? உம்மாச்சி கும்பிட மீனாட்சி கோவிலுக்கு போயிருப்பீங்க இல்ல, (பிரசாதம் வாங்கவும் தான்) அங்கே ஒரு கிணறு, மரம் எல்லாம் கல்யாணத்துக்கு சாட்சி சொல்லி இருக்குமே.

    சுந்தர மூர்த்தி நாயனார் கதை தெரிஞ்சு இருக்குமே உங்களுக்கு. தாத்தா அடிமை சாசனம் எழுதி குடுத்த ஓலை தான் சாட்ச்சி!னு சிவன் நாடகமாடுவாரே.
    So, சாட்சி என்பது மிக முக்யம். :)))

    ReplyDelete
  14. //கொஞ்சம் கூடப் பதிவுகளைப் படிக்காமலேயே சும்மா கமென்டுகளை அள்ளி வீசுவது இப்போ வெளிப்படையா ஆயிடுச்சு இல்லை? :P //

    இதுக்கு வேதாவை நாலு அடி அடிச்சு இருக்கலாம். :))


    //இது அம்பிக்கு, உங்களுக்கு இல்லை.//
    இது தான் அல்டிமேட் காமடி. இன்னுமா வேதா நம்பிட்டு இருக்கீங்க? :p

    ReplyDelete
  15. //first go and read Indian History thoroughly, //

    Thanks for the advice.

    for your info, i cleared IAS taking Indian History as my optional, as it is my altime favourite subject since from my schoolings and no wonder i came district first in social science in the year 1994 (10th std) where there was only one centum in the state itself.
    sorry for blowing my own trumphet. :)))

    //it includes British Emperors also. So that you can understand atleast something//

    what a discovery! it also includes mugal, mourya, gupta, nanda dynastry, sikh, dravidian (which includes chera, chozha, pandiya, pallavas) also. :)))

    who are these british? stupid merchants who came, divided and ruled.

    ReplyDelete
  16. //இங்க ஏதும் சண்டை நடக்குதா? //

    இது தான் அல்டிமேட் காமடி.

    கீதா பாட்டி கூட நான் சண்டை போடுவேனா? :)
    சும்மா தமாசா பேசிட்டு இருக்கோம் அவ்ளோ தான்! :p

    //அம்பி, நான் உங்க பக்கம் வர்ரேன் இருங்க, ஒரு கை பார்த்திடலாம்//

    @abi appa, சரி, விதி யாரை விட்டது? இனி உங்களுக்கு ஒரு தனி பதிவு மண்டகபடி தான். :))

    Geetha paati,ஷ்டார்ட் மீஜிக். :p

    ReplyDelete
  17. ஆண்டாள் பாசுரங்கள் எந்த வகையை சேர்ந்தவை?

    ReplyDelete