"மகா பாரதக் குட்டு" என்ற வார்த்தையை முதன் முதல் "தெய்வத்தின் குரல்" புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் தான் பார்த்தேன். இது நாம் பிள்ளையாருக்குக் குட்டிக் கொள்ளும் குட்டு என்று சொல்ல முடியாது. இது வேறே இதை "GHUDDU" என்று உச்சரிக்க வேண்டும். இந்த உச்சரிப்பினால் அர்த்தமே மாறி விடுகிறது. யாரையாவது பார்த்து உன்னோட விஷயம் வெளியிலே தெரிஞ்சு போச்சுன்னு சொல்றதுக்கு நாம் பொதுவாய், "உன் குட்டு உடைஞ்சு போச்சு" என்போம் அல்லவா? இந்த அர்த்தம் தான் அதுக்கு. இதுக்கும் மகாபாரதத்துக்கும் என்ன சம்மந்தம்? இதோ சொல்றேன்.
பொதுவாய்க் கவிதைகளையோ, அல்லது செய்யுளையோ பதம் பிரித்துப் பார்த்து அர்த்தம் எழுதச் சொல்லுவார்கள். நம் வலை உலகத் திருப்புகழ் மணியான திரு விஎஸ்கே மிகவும் அனாயாசமாய் இவ்வாறு திருப்புகழின் பதம் பிரித்து அர்த்தம் சொல்லுவதைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கேன். அதே மாதிரி முத்தமிழில் ஒருத்தர் இருக்கார். நாயன்மார்களுக்குச் சேவை செய்து கொண்டு, அந்தாதியும், திருப்புகழின் சந்தத்திலேயே கவியும், சிலேடைக்கவிகள் எழுதிக் கொண்டும், எந்த வார்த்தைக்காவது நமக்கு அர்த்தம் தெரியலைன்னால் இவரைக் கேட்டால் போதும், அர்த்தம் சொல்லுவதோடு அதற்கான சுட்டியும் கொடுத்து விடுவார். இவரைப் பார்த்துப் பொறாமைப் பட்டால் நடக்கிற வேலை இல்லைனு விட்டுட்டேன். தமிழிலேயே இம்மாதிரி பதம் பிரிக்கும்போது அர்த்தங்கள் மாறி வரும்போது வடமொழியில் கேட்கணுமா? அங்கேயும் உச்சரிப்பிலும் அர்த்தம் மாறும், பதம் பிரிக்கும்போதும் அர்த்தம் மாறுகிறது. அது தான் எப்படின்னு பார்க்கப் போகிறோம். இது நான் ஆராய்ந்து பதம் பிரித்து, வேலை மெனக்கெட்டு செய்யவில்லை. மகாஸ்வாமிகள் எடுத்துக் காட்டி உள்ளார். அதை நான் இங்கே எடுத்துக் கையாள்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இருக்குன்னு பெருமையாத் தான் இருக்கு.
மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்லப் பிள்ளையார் எழுதி வந்தார்னு நாம் எல்லாரும் அறிந்து வச்சிருப்போம். நடுவிலே பேசக் கூடாதுன்னு விதி வேறே. அதையும் ஒத்துக் கொண்டார் பிள்ளையார். வியாசர் சொல்லும் வேகத்துக்குக் குறையாமல் எழுத வேண்டும். சரி, தலை ஆடியது பிள்ளையாருக்கு. இந்தப் பிள்ளையார் பொல்லாதவாராச்சே. தன் தந்தத்தை உடைத்துக் கொண்டு எழுத ஆரம்பிச்சவரோட வேகத்துக்கு வியாசரால் ஈடு கொடுக்க முடியவில்லை. பார்த்தார் வியாசர்! என்னடா இது, இவர் வேகத்துக்கு நாம் சொல்ல முடியலைனால் சரியா வராதேன்னு நினைச்சுப் பிள்ளையாரிடம் அர்த்தமும் புரிஞ்சுக்கணும்னு இன்னொரு நிபந்தனை போட்டார். பிரணவஸ்வரூபமே பிள்ளையாராக வந்திருக்கும்போது, அதனிடம் ஆணையாவது, ஆனையாவது! இந்த ஆனை அதுக்கும் தலையை ஆட்டியது. வாய் திறக்கவில்லையே! மூச்! வியாசர் நடு நடுவில் சிக்கலான பதங்கள் உள்ள ஸ்லோகங்களாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார். அதில் ஒரு ஸ்லோகமும், அதன் மேலோட்டமான அர்த்தமும் பார்ப்போமா?
"நதீஜலம் கேசவநாரி:கேது:நகாஹ்வயோ நாம நகாரிஸூனு:
ஏஷாங்கநாவேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:"
மேலோட்டமாய் இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தைப் பார்த்தோமென்றால்,
"நதீஜலம்=ஆற்றுத் தண்ணீர்,
கேசவநாரி கேது:= கேசவனுடைய ஸ்த்ரீயின் அடையாளம்
நக= மலை அல்லது மரம் நகாஹவ்யோ நாம=நகம் என்று (அதாவது மரம் அல்லது மலை) பேர் உள்ளவன்
நகாரிஸூனு:=மேற்சொன்ன இந்த நகத்தின் விரோதியின் பிள்ளை
ஏஷாங்கனா வேஷதர கிரீடி= கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண் வேஷக் காரன்
ஜித்வா= ஜெயித்து
வயம்= நாங்கள்
நேஷ்யதி= கொண்டு போகிறான்
சாத்ய (ச, அத்ய)= ச= மேலும், அத்ய= இப்போது
காவ:=பசுக்கள்.
கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண்வேஷக் காரன் ஆற்றுத் தண்ணீர். கேசவனுடைய ஸ்திரீயின் அடையாளம், மலை அல்லது மரம் என்ற பேர் உள்ளவன். மலை அல்லது மரத்துக்கு விரோதியின் பிள்ளை. நாங்கள் ஜெயித்து மேலும் பசுக்கள் கொண்டு போகிறான்." அர்த்தம் புரியுதா? தலை சுத்துதா? இந்த ஸ்லோகம் பிறந்த நிகழ்ச்சியும், இந்த ஸ்லோகத்தைச் சொன்னவராக வியாசர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதையும், இந்த ஸ்லோகத்தைக் கேட்டவரும், அதன் காரணமும் உண்மையான அர்த்தமும் நாளைக்குப் பார்ப்போமா?
டிஸ்கி: எல்லாருக்கும் புரியணும்னு கொஞ்சம் எளிமையாத் தான் தர முயற்சி செய்திருக்கேன். புரியாதவங்க மன்னிக்கவும். புரியாத இடத்தில் தெரிந்த விளக்கம் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
நல்லது....நாளைக்கு பார்க்கிறேன்... :-)
ReplyDeleteமொத்தமாகவே தலையை சுத்தும் போது...புரியாத இடம் வேறு இருக்கா??:-))
ReplyDeleteசரி,அடுத்த பதிவுக்கு வரேன்.
அர்த்தம் சொன்னாட்டுப் படிக்கிறேன்.
ReplyDeleteநல்ல சுவையா எழுதறீங்க கீதா.
இப்படிச் சுவாரஸ்யமான இடத்திலாநிறுத்திட்டா என்ன செய்யறது:)))
வடமொழி..?
ReplyDeleteதமிழே (எனக்கு) திண்டாட்டம்..
அதுல இது வேறயா...
வேண்டவே வேண்டாம்மப்பா..
( இதில் உள்குத்து எதுவும் இல்லை என்று நான் சொன்னதாக யாரும் கருதினால் அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்..அப்பாடி ஏதோ நம்மால ஆனது.. )
மதுரையம்பதி, அதான் உடனேயே பர்த்திருப்பீங்களே! :)))
ReplyDelete@வடுவூர், வாங்க, வாங்க இந்தப் பக்கம் எல்லாம் கூட நினைப்பு இருக்கா? :P இஷனு சொன்னாத் தான் சாதாரணமா வருவீங்க! :P
@வல்லி, அர்த்தமும் பொட்டாச்சு, மெதுவாப் பாருங்க!
@abcdefgh, இது உங்களுக்குப் புரியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே! :P