எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 07, 2007

அதெல்லாம் மாற மாட்டோம், அப்படியே இருப்போம்!

இன்னிக்கு வேறே யாருமே கிடைக்கலை, இன்னிக்கு என்ன? கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கா? அதனாலே என்னோட மறுபாதியைத் தான் ஒரு வழி பண்ணலாம்னு இந்தப் பதிவு! நிச்சயமாய் அவர் படிக்க மாட்டார்ங்கிற தைரியம் தான்! அமெரிக்கா வந்ததிலே இருந்து கிழக்கும், மேற்குமா இருக்கிற , எப்போதும், என்னை ஒரு "அசடு" என்று நம்பிக்கொண்டிருக்கும் என்னோட மறுபாதிக்குப் பொழுதே போகவில்லை. மெம்பிஸில் இருந்த வரைக்கும், காலை எழுந்ததும் தோட்டம், மாலையில் பிறகு தோட்டம்னு போய்த் தோட்டக்கலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். மிச்ச நேரம் என்ன செய்யறது? அங்கே தமிழ்ப்புத்தகத்துக்கும் வழி இல்லை. விஜய் டி.வியின் மறு ஒளிபரப்பையே எத்தனை நேரம் பார்க்கிறது? அங்கே தான் நான் கை கொடுத்தேன்! கணவனுக்கு உதவிய காரிகை என்ற பெயரும் பெற்றேன். எப்படிங்கிறீங்களா, கீழே படிக்கவும்.

இந்த அமெரிக்காவில் அது அபார்ட்மென்ட் வீடானாலும் சரி, தனி வீடானாலும் சரி, சமையல் அறையில் எல்லாம் "கிட்சன் காபினெட்" என்று சொல்லப் படும் முறையில் உள்ள தனித்தனியான சிறு சிறு அலமாரிகள்தான். அதில் நம்ம ஊர் அரிசிப்பானை எல்லாம் வைக்கவே முடியாது. ஒரு அடி, ஒரு அடி உயரத்தில் 3 தட்டுக்கள் போட்டு மின் அடுப்புக்கு இரு பக்கமும், இரு அலமாரியும், மின் அடுப்புக்கு மேலே உள்ள இடத்தில், மைக்ரோவேவ் அடுப்பும், அதுக்கு மேலே சிம்னியும், அதுக்கும் மேலே இன்னொரு தட்டே இல்லாத அலமாரியும் இருக்கும். கவுன்டர் என்று பொதுவாக அழைக்கப் படும் மேடை மின் அடுப்பைச் சுற்றி இருக்கும். அங்கங்கே மின் இணைப்புக்கள் இருக்கும். இந்த மின் இணைப்புக்களில் மிக்ஸி, ப்ரெட் டோஸ்டர், ரைஸ் குக்கர், காஃபி மேக்கர் போன்றவை வைத்து இடம் மீதி இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். கிரைண்டரை வைக்கணும்னா எதையாவது எடுத்து வச்சுட்டுத் தான் வைக்கணும். அப்புறம், அது பட்டர் ஃப்ளைனால் வாரி அடிச்சுக் கார்பெட் எல்லாம் வீணாகிறது தனிக் கதை! அது அப்புறமா! இந்தக் கவுன்டரின் பக்கம் சுவர் என்று ஒன்று இருந்தால் ஒரு அலமாரி அதிகமாய் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் கவுன்டர் பாதி திறந்து டைனிங் டேபிள் போடும் இடத்தை நோக்கியோ அல்லது, லிவிங் ரூமைப் பாதி தடுத்துக் கொண்டோ இருக்கும். அந்த இடத்தில் என்னத்தை சாமான்கள் வைத்து என்னத்தை சமைக்கிறது? நமக்கா உப்பில் இருந்து, புளிவரை கிலோ, கிலோவாக வாங்கிப் பழக்கம். இங்கே கிடப்பது என்னவோ 225கிராம் பாக்கெட்டுகளில் புளி, சரி தொலையுதுன்னு ஒரு 5,6 பாக்கெட்டுகள் வாங்கலாம். ஆனால் கடுகு பாருங்க ஒரு கிலோவுக்குக் குறைஞ்சு கிடைக்காது! அது மாதிரியே ஏலக்காய், முந்திரிப்பருப்பு எல்லாம் குறைந்த பட்சமா ஒரு கிலோ வாங்கியே தீரணும்.. விசித்திரமான பாக்கிங் இங்கே! சுக்குப் போட்டு வெந்நீர் குடிக்கணும்னு சுக்குக் கேட்டால் என்னோட ஜென்மம் தீர்ந்து பரம்பரைக்கும் கூட வரும்படி சுக்குக் கொடுத்திருக்காங்க! என்னத்தைச் சொல்றது? அப்புறம், அரிசி, பருப்பு, இத்யாதி, இத்யாதி!

எங்கே வைக்கிறது? அதிர்ஷ்டம் இருந்தால் "பான்ட்ரி" எனப்படும் அலமாரி ஒன்று கூடுதலாய் அபார்ட்மென்டில் இருக்கும், தனி வீடுகளில் இவை கண்டிப்பாய் உண்டு, சமையல் அறையிலேயே. கொஞ்சம் அரிசி, பருப்பு வகைகளைக் கண்மறைவாக வைத்துக் கொள்ளலாம். என்ன கஷ்டம் என்றால் இந்த அலமாரிகள் எல்லாம் மூன்று தட்டு என்று சொன்னேன் அல்லவா? மூன்றாவது தட்டு 6 அடி உயரத்தில் இருக்கும். அங்கே என்ன சாமானை வைப்பது? எப்படி எடுப்பது? அதுவும் அடுப்புக்கு மேலே இருக்கும் அலமாரியில் சிலசமயம் முக்கியமான பாத்திரமோ, மளிகைப் பொருளோ இருந்தால் எம்பி, எம்பிக் குதிக்க வேண்டியது தான். அப்புறம் நானாக மனம் நொந்து போய், "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்"னு விட்டுட வேண்டி வரும். இதை எல்லாம் முன்கூட்டியே யோசித்து என்னோட அப்பா! (எவ்வளவு பெரிய தீர்க்க தரிசி அவர்?) எனக்கு 6 அடி உயரத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைத்து விட்டார். இப்போ எவ்வளவு உபயோகமா இருக்கு என்பதோடு எவ்வளவு உபத்திரவம் (நறநறநற) என்பதும் நாளைக்குச் சொல்கிறேன்.

22 comments:

  1. அபார்ட்மென்ட் படம் போட்டேனா? போன இடம் தெரியலை! ப்ளாக் யூனியனா? ஆன்மீகப் பயணமா? மதுரை மாநகரிலா?
    திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி அலுத்தேனே?
    கண்ணே, எனது அருமைப் படமே, எங்கே போனாயோ?
    கண்டவர் விண்டுவிடக் கோருகிறேன்! :P இது எனக்கே எனக்கு!

    ReplyDelete
  2. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு இப்போ ஆம்படையானையேவா....

    (நாங்க எல்லாம் வெஜிடேரியன்ஸ் அப்படின்னு உதார் விடக்கூடாது. )

    ReplyDelete
  3. ம் இவ்வளவுதானா....

    நான் என்னமோ எதோனு பயந்து போயி வந்தேன்..:)

    ReplyDelete
  4. adhuku than en appavum 6 adi mapillai paarthurukkar. adhoda oru mukkali vangikonga, theerndhudhu prachanai. kutti pasanga vandha adhunglukum kutti chair madhiri cute a irukkum!

    pona padhivula sonnadhukku, naan enga ipo unionla kummi adikkaren?? neenga kannu pottu ipolam andha ee-kaaka varradhu illai :-)

    ReplyDelete
  5. நான் ஆறு அடி இல்லாதனாலே எங்க வீட்டுக்காரம்மா ஒரு சின்ன ஸ்டூல் வாங்கி வச்சுருக்காங்க. ஆனா என் பெரிய சுட்டிப் பொண்ணுக்கு, மே......லே இருக்குற கேண்டி எடுக்க எதுவுமே தேவப் படமாட்டெங்குதே!!

    ReplyDelete
  6. நல்ல கதையா இருக்கே! உயரமா இருந்தா இப்படியா வேலை வாங்கறது? :)

    என் தங்கமணியும் டிரில் எடுக்கறா. :(

    ReplyDelete
  7. //நாங்க எல்லாம் வெஜிடேரியன்ஸ் அப்படின்னு உதார் விடக்கூடாது//

    இ.கொ : நரமாமிசம் சாப்பிடுபவர்களை நான் - வெஜ்ஜில் கூட சேர்க்க மாட்டாங்க...ஹிஹிஹி

    ReplyDelete
  8. \\கீதா சாம்பசிவம் said...
    அபார்ட்மென்ட் படம் போட்டேனா? போன இடம் தெரியலை! ப்ளாக் யூனியனா? ஆன்மீகப் பயணமா? மதுரை மாநகரிலா?
    திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி அலுத்தேனே?
    கண்ணே, எனது அருமைப் படமே, எங்கே போனாயோ?
    கண்டவர் விண்டுவிடக் கோருகிறேன்! :P இது எனக்கே எனக்கு! \\

    இந்த பதிவு கூட நன்றாக இருக்கு தலைவி ;-))

    ReplyDelete
  9. ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பிளாக் பக்கங்களுக்கு வர்ற மாதிரி ஆகிடுச்சு மேடம்.. எல்லாம் நண்பர்கள்.. அவர்கள் காலோடு என் கால்களிலும் சக்கரங்களை கட்டி விட்டார்கள்

    ReplyDelete
  10. //அதில் நம்ம ஊர் அரிசிப்பானை எல்லாம் வைக்கவே முடியாது. //

    மேடம், இதெல்லாம் ரொம்பவே ஓவர்.. எங்கவந்து அரிசிப்பானை வைக்க இடம் இல்லைன்னு தேடுறீங்க..ஹ்ம்ம்

    ReplyDelete
  11. /இப்போ எவ்வளவு உபயோகமா இருக்கு என்பதோடு எவ்வளவு உபத்திரவம் (நறநறநற) என்பதும் நாளைக்குச் சொல்கிறேன்//

    நாளைக்குமா? :)

    ReplyDelete
  12. @கார்த்தி இந்த மாசம் 12 ஆம் தேதி வந்துட்டு போயிடுங்க. ஏன்னா அன்னிக்கிதான் ஆடியும் அமாவசையும் சேர்ந்து வருது.
    அன்னிக்கி மேடம் கூழ் ஊத்துவாங்க வந்து குடிக்கலாம்

    ReplyDelete
  13. சத்தியம்மா நான் இந்த பதிவ படிக்கல...ஆனா ஆஜர்...

    யப்பா...பதிவர் குல மானிக்கங்களா...

    இவங்க பதிவுல தமிழ் தப்பு கண்டு பிடிச்சு சொல்லுறவங்களுக்கு பரிசு காத்திட்டு இருக்கு...

    பின்னூட்டத்தில சொன்னா..50000 paisa

    மொத்த பதிவயும் அக்கு வேறா ஆணி வேறா பரிச்சு தப்பு கண்டு பிடிச்சு சொன்ன....100000 paisa...

    ReplyDelete
  14. பரிச்சு** பிரிச்சு... நீங்க குட்டுறதுக்கு முன்னாடி..நானே...சொல்லிடுறேன்..

    ReplyDelete
  15. idhai mokkainu sonna summa vida maatingla?? mokkaiya mokkai nu sollama ennanu solradhu??! :-(

    ReplyDelete
  16. கடைசியிலே, ச்சீச்சீ, முதலில் இருந்தே படம் போன இடம் தெரியலையே? எங்கே போய் மாட்டினது? ஏபிசிடி இஎஃப்ஜிஹெச், சே, டிபிசிடி(ப்ளயின்,)டிபிசிடி1,2,3, என்னோட இந்த ஹூஸ்டன் அபார்ட்மென்ட் படம் எங்கே ஒளிச்சு வச்சீங்க? டெம்ப்ளேட் மாத்தறேன் பேர்வழின்னு படத்தை, அது ஒழுங்க எனக்கு வரதே பெரிய விஷயம், அங்கேயோ தூக்கிக் கடாசிட்டீங்களே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    இ.கொ., இ.கொ., உங்களை., க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @மின்னல், உங்களுக்கு என்ன? எது வேணா சொல்லுவீங்க!

    @போர்க்கொடி, போதுமே, பீஈஈஈஈஈஈத்த்தல், எழுதறதை ஒழுங்காப் படிக்கிறது இல்லை, அப்புறம் யாராவது வந்து சுட்டிக் காட்டியதும், வந்து பின்னூட்டம் போட வேண்டியது!

    ReplyDelete
  17. @தஞ்சாவூரான், குழந்தைதானே, கான்டி எடுத்தா எடுத்து சாப்பிடட்டுமே, நீங்க ஏன் சார் போட்டிக்குப் போறீங்க? பாவம், குழந்தை! :P

    @அம்பி, நீங்க? உயரம்? ஹா,ஹா,ஹா? :P

    @மதுரையம்பதி, நறநறநறநறநற

    ReplyDelete
  18. @கோபிநாத், இது மட்டுமா? இந்த மாதிரி முத்து முத்தான விஷயங்கள் ஏராளமாக் கொட்டிக் கிடக்கு! அள்ளத் தான் முடியலை!

    @கார்த்திக், பின்னூட்ட வள்ளலே, இது என்ன சோதனை? ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என நீங்கள் வந்தால், பின்னூட்ட ஹிட் எனக்குக் குறைந்து கொண்டே வருதே, தினமும் ஆடிதான், இந்த மாசம் பூரா, ஆகவே உங்கள் மேலான வரவை எதிர்பார்க்கும்
    தலைவி!

    @சார்,சார்,சார், கடைசியிலே அம்பிக்கு விருந்து, விருந்து கொடுத்து இப்படியாக் கூழ் குடிக்கிற மாதிரி ஆயிடுச்சு? நல்ல டாக்டர் கிட்டேக் காட்டிடுங்க உடனேயே! இந்த அம்பி இப்படித்தான், அதான் நான் ஜீரண மருந்து விவரம் எல்லாம் யூனியனிலே எழுதி இருக்கேனே, அதையாவது பாருங்க சார், அம்பி, அம்பி, இனி சார் வீட்டிலே திங்கறதுக்கு அலையறதைக் குறைங்க முதலிலே!

    ReplyDelete
  19. @tbcd1,2,3,& so on, உங்களுக்கு பதிலே கிடைக்காது, முதல்லே தமிழை ஒழுங்கா எழுதக் கத்துக்கங்க, மிஸ்டர். நீங்க மதுரைன்னு சொல்லிட்டுத் திரியாதீங்க! ஏற்கெனவே சொல்லிட்டேன், இப்போ மறுபடியும் சொல்றேன், ஒவ்வொரு முறையும் "தருமி" சார், பாவம், உதவி செய்ய முடியுமா? க்ர்ர்ர்ர்ர்ர்., இப்போவே சொல்லிட்டேன், இந்த க்ர்ர்ர்ர்ர்ர்ர்., நறநறநற ரெண்டும் உபயோகித்தால் சிங்கப்பூர் டாலர் எல்லாம் பத்தாது, யூரோவில் ராயல்டி கொடுக்கணும்! :P

    ReplyDelete
  20. உங்களுக்கெத்தமாதிரியே நடக்குதே!!
    படம் போன இடம் தெரியலையே
    நறநறநற..
    அதைத்தேடித்தேடி அலுத்தேனே
    நறநறநற...

    சின்னதா ஒரு ஸ்டூல் வாங்கிக்கலாமே
    அங்கேதான் அழகழகா கிடைக்குமே!!

    ReplyDelete
  21. @தி.ரா.ச. சார், கமென்டுக்குப் பதில் கமென்டலைன்னு சொன்னீங்களே! உங்க பிசி ஆணி பிடுங்கலில் சரியாப் பார்க்கலை நீங்க! :P

    @நானானி, அந்தப் படம் இல்லைன்னா என்ன? வேறே படம் போட்டுட்டேன். இன்னும் எழுதலை! அப்புறம் சின்னதா என்ன பெரிசா ஒரு ஸ்டூல் இருக்கு. ஆனால் அதிலே ஏறி சாமான்கள் எடுக்கிறதை எழுதினால் ஸ்வாரஸ்யம்ங்கிறீங்க? என்னங்க நீங்க இவ்வளவு "அப்பாவி"யா இருக்கீங்க! :P பையனுக்கு வேறே கல்யாணம் செய்யப் போறீங்க! பாஆஆஆர்த்து! :D

    ReplyDelete
  22. ம்..ம்ம்.. என்னத்தன்னு சொல்றது! மனுஷன் ஆறடி இருந்தா என்ன, அதைவிட அதிகமா இருந்தாதான் என்ன .. தகப்பன் குலத்தைக் காக்க எப்போ எந்த சாமி எந்த அவதாரம் எடுத்து வரப்போகுதோ தெரியலை ..

    ReplyDelete