இதை முதல்லே இந்தப் பதிவுகள் பக்கம் போடலாமா, வேணாமானு ரொம்ப யோசிச்சேன். அப்புறம் இந்தக் கவிதைகள், ஸ்லோகங்கள், பாடல்கள் இவற்றில் உள்ள பொருளை நாம் உணர வேண்டுமானால் சொற்களை மாற்றிப் போட்டுப் படிக்க வேண்டி உள்ளது. இது எல்லா மொழிக்கும் பொருந்தும். ஆகவே இந்தப் பதிவுப் பக்கத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இங்கேயே எழுதுகிறேன்.
*************************************************************************************
பாண்டவர்கள் வனவாசம் போனதும் நம் அனைவருக்கும் தெரியும். அதில் கடைசி ஒரு வருஷம் அவர்கள் அறிந்தவர், தெரிந்தவர் கண்களில் படாமல் அக்ஞாதவாசம் இருக்க வேண்டும் என்ற கட்டளையை ஒட்டி, விராட நாட்டுக்கு வந்து அக்ஞாத வாசம் செய்கின்றனர். அவர்களை எப்படியாவது வெளிக் கொணர நினைத்த துரியோதனனும், அவனுடைய சகோதரர்களும், பாண்டவர்களின் ராஜ பக்தியை நன்கு உணர்ந்து, விராட அரசனுக்குக் கெடுதல் செய்தால் பாண்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று விராட நாட்டின் எல்லையில் உள்ள பசுக்கள் மந்தைக்கு வந்துப் பசுக்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போக ஆரம்பித்தனர். இது அதிகம் ஆகி பசுக்களின் சொந்தக்காரர்கள் விராட அரசனிடம் முறையிடவே, பசுக்களை ஓட்டிச் செல்பவருடன் போர் நடத்துவதற்காக விராட அரசகுமாரன் உத்தரகுமாரனைத் தயார் செய்கின்றனர். பயந்த சுபாவம் கொண்ட விராட இளவரசனின் தேரோட்டியாக வருவது வீரம் நிறைந்த அர்ஜுனனன். அவன் இருப்பதோ பெண் வேஷத்தில். அரசனையும், இளவரசனையும் சமாதானப் பேச்சுக்களால் தைரியம் சொல்லிவிட்டு விராட இளவரசனின் பயத்தைப் போக்கும் விதமாய்த் தானே வில், அம்பு எடுத்துப் பாணங்கள் மழை பொழிகிறான் அர்ஜுனன். அப்போது கெளரவரின் படைகளுடன் வந்திருந்த பீஷ்மர் ஒரு பெண்ணா இப்படி வில்லில் விளையாடுவது என அதிசயிக்க உடன் வந்த துரோணருக்குத் தன் மாணாக்கனை அடையாளம் தெரிந்து விடுகிறது. ஆனால் அது அர்ஜுனன் தான் என்று அனைவருக்கும் தெரியும் படி சொல்லி விட்டால் பின் அவர்களின் அக்ஞாதவாசம் வெளிச்சத்துக்கு வந்து விடும் அல்லவா? ஆகவே மறை பொருளில் பதில் சொல்கிறார். மேலோட்டமாய்ப் பார்த்தால் முன் பதிவில் கண்ட அர்த்தம் தான் வருகிறது அல்லவா?
"நதீஜலம் கேசவநாரி: கேது: நகாஹவ்யோ நாம நகாரிஸூனு:
ஏஷாங்கநா வேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:"
என்பது ஸ்லோகம்.
நதீஜலம் கேசவநாரிகேது என்று வருவதை, "நதீஜ+லங்கேச+வநாரிகேது" என்று பிரித்துக் கொள்ள வேண்டும். நதீஜ என்பது இங்கே உண்மையில் பீஷ்மரைக் குறிக்கிறது. கங்கையின் மைந்தர் அல்லவா? அடுத்து லங்கேச வநாரி கேது= லங்கேசன் என்றால் ராவணன், வநாரி=வனங்களை அழித்த சத்துருவை, கேது=கொடி
"ராவணனின் வனங்களை அழித்த அனுமனைத் தன் கொடியாகக் கொண்ட" என்று அர்த்தம் வரும்.
நகாஹவ்யோ நாம= நகம் என்றால் மரம் அல்லது மலை என்று முன்பே பார்த்தோம். மரத்துக்கு அர்ஜுனன் என்றும் வடமொழிப் பெயர் உண்டு. ஆகவே இங்கே அருஜுனனின் பெயரை மறைமுகமாய்க் குறிக்கிறது. அடுத்தது நகாரிஸூநு= இந்த இடத்தில் மலைகளின் விரோதிக்குப் பிள்ளை என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். மலைகளின் கர்வத்தைத் தன் வஜ்ராயுதத்தால் அடக்கியவன் இந்திரன். இந்திரனுடைய வரத்தால் பிறந்தவன் அர்ஜுனன். ஆகவே நகாஹவ்யோ நாம நகாரி ஸூநு= என்பது அருஜுனனைக் குறிக்கிறது.
ஏஷ அங்கனா வேஷதர:கிரீடி= கிரீடி என்பது அருஜுனனின் சிறப்புப் பெயர். அவனின் வீரத்தைப் பாராட்டி இந்திரனால் கொடுக்கப் பட்டது. ஏஷ அங்கனா வேஷதர=பெண் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அர்ஜுனன் என்ற பொருள் வரும்.
கடைசியில் (இத்தோடு விட்டு விடறேன், ஜூட்!) ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:
இதில் ஜித்வா வயம்= ஜித்வா வ+யம், நேஷ்யதி, ச+அத்ய, க+ அவ: எனப் பிரித்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் முதலில் பொருள் கொள்ள வேண்டியது ச அத்ய= மேலும் இப்போது, யம்=எந்த துரியோதனனை (இங்கே மறை பொருளாய்க் குறிக்கும்) ஜித்வா=ஜெயித்து, வ=உங்களுடைய, கா=பசுக்களை, நேஷ்யதி=ஓட்டிப் போகப் போகிறான், அ=அவனை, அந்தத் துரியோதனனை, அவ:=அவனைக் காப்பாற்றுங்கள்."
"கங்கையின் மைந்தரே! மலைகளின் விரோதியான இந்திரனின் பிள்ளையான அருஜுனன் தான் பெண்வேஷம் தரித்து வந்திருக்கிறான். துரியோதனால் கவர்ந்து செல்லப் பட்ட பசுக்களைத் திரும்ப அவன் ஓட்டிச் செல்லப் போகிறான். இவனிடம் இருந்து துரியோதனனைக் காப்பாற்றுங்கள்.' இது தான் துரோணர் மறை முகமாய்ச் சொன்னது. ஆகவே எதிலும் நேர் பொருள் ஒன்று இருக்கும். மறை பொருள் வேறேயாக இருக்கும். தமிழிலும் பழங்காலத்தில் எழுதிய சித்தர்களின் ஓலைச் சுவடிகளில் மிகுந்த மறை பொருள் உண்டு. அவற்றைப் பற்றி இந்தத் தலை சுற்றலில் இருந்து நீங்க எல்லாம் மீண்டு வந்து தெளிந்த பின்னர் எழுதறேன்.
ஆகா!.....நேத்தே படிச்சுட்டேனே....:-)
ReplyDeleteசகோதரி,
ReplyDeleteகடைசியில் விளக்கத்தை போட்டு என்னைப்போன்றவர்களை காப்பாற்றிவிட்டீர்கள். ஆனால் ஒரு கஷ்டம். பிற மொழி உச்சரிப்புகளை தமிழுக்கு கொண்டு வரும்பொழுது வாசிப்பது மிகவும் கடினம். tha,t'ha da dha இது எல்லாமே ''த''வின் வடிவம் எப்படி படிப்பது என்றுதான் புரியவில்லை. தமிழிலும் இது போன்ற எழுத்துக்களை உறுவாக்கி அதற்கு இலக்கணமும் வடிப்பார்களேயானால் தமிழ் முழுமை பெறும் என்பது என் கருத்து.
//tha,t'ha da dha இது எல்லாமே ''த''வின் வடிவம் எப்படி படிப்பது என்றுதான் புரியவில்லை//
ReplyDeleteஇதற்காகத்தான் எழுத்துக்களுக்கு அருகிலேயே 2,3, என்று எண்களைத்தருவார்கள்...அதாவது 'தா' என்ற சப்தத்திற்கு த(3) என்று குறிப்பு....
அறுமை தலைவி அறுமை. வாரியாரும் கீரனும் இல்லாத குறையை நீங்கள் தீர்த்துவிட்டீர்கள். வாழ்க உங்கள் கலைத்தொண்டு.சீக்கிரம் ஏதாவது ஒரு மேடையில் உங்கள் சொற்பொழிவை/பேச்சை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteமதுரையம்பதி, பக்கத்திலேயே புத்தகத்தை வச்சுட்டு, நேத்திக்கு என்ன, எப்போவோ படிச்சிருப்பீங்க! இது நல்லா இல்லை! :))))))
ReplyDelete@வாசி, ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு, நான் சொல்ல வந்ததின் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
மதுரையம்பதி, ஆமாம், நான் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் இல்லையா, மறந்துட்டேன்! :(
மணிப்பயல், அருமைங்கிறதை நீங்க எழுதி இருக்கும் விதத்தைப் பார்த்து "அறுவை"யோன்னு நினைக்கத் தோணுது! இன்னுமா தப்புத் தப்பா எழுதறீங்க? உங்களுக்கும் இம்பொசிஷன் கொடுக்க வேண்டியது தான்! :P
அப்பவே நா டவுட்டு ஆனேன் தலைவி ஆனா போஸ்ட் பண்ணினப்பறம் ஒண்ணும் செய்ய முடியல்லை.
ReplyDeleteமணிப்பயல், திருத்தலாமே, இதிலே அது ஒண்ணும் கஷ்டம் இல்லை, கொஞ்சம் கீழேயும் எப்படித் தட்டச்சிலே வந்திருக்குன்னு பாருங்க. இல்லாட்டி இ-கலப்பை போட்டாச்சா? அதிலேயும் உடனேயே கவனிச்சுடலாம்.
ReplyDeleteதலைவி
ReplyDeleteமுதல் பத்தி அத்தோட கடைசி பத்தி இந்த ரெண்டு தான் புரியுது ;-)
\\தமிழிலும் பழங்காலத்தில் எழுதிய சித்தர்களின் ஓலைச் சுவடிகளில் மிகுந்த மறை பொருள் உண்டு. அவற்றைப் பற்றி இந்தத் தலை சுற்றலில் இருந்து நீங்க எல்லாம் மீண்டு வந்து தெளிந்த பின்னர் எழுதறேன்.\\
அடுத்து சித்தர்களா!!ம் கலக்குங்க ;-)
\\இல்லாட்டி இ-கலப்பை போட்டாச்சா? அதிலேயும் உடனேயே கவனிச்சுடலாம்.\\
ReplyDeleteஇ-கலப்பையில் எப்படி கண்டு பிடிப்பது?
நான் எழுதிய 'த' வின் வடிவங்களின் என் கருத்து என்னவெனில் உதாரணத்திற்கு தன் என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். Than means body, Dhan means money. சில இடங்களில் தன் என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தையும் இதைப்போல் குழப்பும் வார்த்தையாக அமைந்துவிட்டால் (நிறைய இடங்களில் காணமுடியும்)பிறகு அனார்த்தமாகிவிடும். அதிலும் ஸமஸ்கிருதம் கடினம்தான்.