எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 29, 2008

பிரசவத்துக்கு இலவசம்!!!!!!!!!! :P

என்னனு பார்க்கிறீங்களா? இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ஆஸ்பத்திரி மாஆஆஆஆஆதிரி எல்லாம் இல்லை, பிரசவ ஆஸ்பத்திரியே தான். ஊரிலே இருக்கும் நாய், பூனை எல்லாம் மற்ற நாட்களில் எங்கேயோ போயிட்டு இருக்கும், சாதம் வைச்சால் கூடச் சாப்பிட வராது. என்னை ஒரு அல்பமாகப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கும். பத்தாதுக்குக் கூப்பிட்டால் ஏதோ விரோதி மாதிரி உர்ர்ர்ர்ருனு முறைச்சுட்டு வேறே போகும். அதனாலோ என்னமோ என்னோட ம.பா. நாங்க கல்யாணம் ஆனதிலே இருந்து வளர்ப்புப் பிராணியாக முதலில் ஒரு பைரவரைக் கொண்டு வந்தார். அவர் சில நாட்கள் தான் இருந்தார். தூங்கும்போது கூட என் பொண்ணோட தொட்டிலிலோ, தூளியிலோ தான் படுத்துப்பேன்னு அடம் பிடிக்கும் டைப். ஆனால் அவளைத் தூளியை விட்டு என்னைத் தவிர என் ம.பா. மட்டுமே எடுக்கணும், வேறே யாராவது எடுத்தால் அவ்வளவு தான், வீட்டுக்குள்ளேயே ஒரு ஓடிப் பிடிச்சு விளையாடுதல் நடக்கும். எடுக்க வந்தவங்க வெறுப்பாயிடுவாங்க. ஆனால் அது பாவம், நான் ஒரு நாள் அதுக்குத் தெரியாமல் பால் வாங்கப் போனபோது (வேலி தாண்டிக் குதித்துப் போவேன், இல்லைனா சுத்த்த்த்த்திட்ட்ட்ட்ட்டுப் போகணும், அதுவும் தாண்டிக் குதிக்கும்போது ஒரு வண்டியில் அடிபட்டு உயிரை விட்டு விட்டது. அப்போ அதன் தாக்கம் அவ்வளவாத் தெரியலை. ராஜஸ்தானுக்கு மாத்திப் போயிட்டோம்.

அங்கே வந்தது ஒரு சிட்டுக் குருவி ஜோடி. இது பத்தி முன்னேயே எழுதிட்டேன். ஒருநாள் அதுங்க வந்துடுச்சுனு நினைச்சுக் கதவைச் சாத்திட்டுப் படுக்க, ஒண்ணு வரவே இல்லை. அன்னிக்கு அதோட ஆஃபீஸிலே ஓவர்டைம் பார்த்திருக்கு போல. கதவெல்லாம் சாத்தினதும் வந்திருக்கு. வெளியே இருந்து அது கூப்பிட, உள்ளே கதவுக்கு நேர்மேலே இருந்த வெண்டிலேஷன் கட்டையில் உட்கார்ந்து இருந்த அதன் ஜோடி, இங்கே இருந்து கத்த, கூட்டில் குஞ்சுகள் கத்த, ஒரே களேபரம். சோககீதம் இசைப்பதை நல்லவேளையாய்ப் புரிஞ்சுட்டு, என்னனு பார்த்து, வெளியே இருந்த குருவியை உள்ளே விட்டோம். அந்தக் குருவிங்க தான் சொன்னதோ, இல்லை மத்த ஜந்துக்கள் எல்லாம் என்ன நினைச்சதோ தெரியலை, தேன் கூட்டில் இருந்து, குளவிக்கூடு, (விதவிதமாய் இருக்கும், அறை அமைப்புக்கள் எல்லாம் ஆர்க்கிடெக்ட் தோத்தாங்க), கிளிகள், புறாக்கள், மைனாக்கள் என்று எல்லாம் வாசம் செய்ய ஆரம்பிச்சது. பத்தாதுக்கு எலிகளும் கூட. இந்த எலிகள் எல்லாம் ரொம்பவே தைரியம் ஜாஸ்தி. சமைக்கும்போது கூடவே வந்து உட்கார்ந்து (மாமியார்கள் மாதிரி?) நல்லாச் சமைக்கிறேனா என்று வேவு பார்க்கும். ஜெர்ரி கிட்டே தோத்துப் போற டாமா என்ன நாம? இருந்தாலும் அதுங்க அடிச்ச லூட்டி தாங்கலை தான்.

எல்லாம் குஞ்சும், குளுவானுமாய் நம்ம வீட்டில் தான் வாசம். எங்கே போனாலும் ராணுவக் குடியிருப்பா? மரம், செடி, கொடிகளுக்குப் பஞ்சம் இல்லை. கிட்டத் தட்டக் காட்டு வாசிதான். அதனாலே முதல்லே ரொம்ப வருஷம் கழிச்சுச் சென்னைக்கு வந்து சொந்த வீட்டில் வசிக்க ஆரம்பிச்சப்போ கொஞ்சம் கஷ்டமாவே இருந்தது. கவலைப்படாதேனு கொஞ்ச நாட்களிலேயே ஊரில் உள்ள நாய், பூனை எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததோடு இல்லாமல், அதுங்க பிரசவத்தையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்க ஆரம்பிச்சது. அதிலே ஒரு சமயம் ஒரு நாய்க்குப் பிரசவம் ரொம்பக் கஷ்டமாப் போய் "ப்ளூ க்ராஸ்" காரங்களுக்குத் தொலைபேசி, (தெருக்காரங்க எல்லாம் சேர்ந்து தான்) அவங்களை வரவழைச்சு, அதுக்கு சிசேரியனும், குடும்பக் கட்டுப்பாடும் சேர்த்துச் செய்யச் சொல்லி,குட்டிகளைக் காப்பாற்றினோம். அதுவும் நன்றி மறக்காமல் தன்னோட பெண், பேத்தி, கொ.பே. என்று அனைத்து நாயினங்களின் பிரசவத்தையும் எங்க வீட்டிலேயே வச்சுக்கிறது. என்ன, வாசலில் தென்னை மரத்தடி ரொம்ப கூலா இருக்குமா? அங்கேயே சாக்குப் போட்டு வைப்போம், டெலிவரி ஆனதும் குட்டிகள் கண் திறக்கும் வரை காத்திருந்து, பின்னர் கொஞ்சம் பெரிசா ஆனது, அம்மா நாய் இல்லாத சமயம் பார்த்து, வெளியே ஒரு பந்தல் போட்டு, (வெளியே விடலைனால் மாடிப்படி, தென்னை மரத்தடிக்குப் பக்கம் இருக்கும் குழாய் கிட்டே எல்லாம் போகவே முடியாது, அம்மா அப்படி ஒரு காவல் காக்கும்) அதுங்களுக்குப் படுக்கை மற்ற சாப்பாடு ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்து, (ம்ஹும் வாடகை எல்லாம் கொடுக்காதுங்க) ஒண்ணொண்ணாய் வெளியே விடுவோம். அதுங்களும் கொஞ்சம் பெரிசா ஆயிருக்குமா எப்படியோ போய்ப் பிழைச்சுக்கும்.

ஆனால் இந்த்ப் பூனைங்க இருக்கே, அதுங்க வீட்டுக்குள்ளே வராந்தாவிலேயோ, அல்லது வெளியே இருக்கும் பாத்ரூமிலேயோ தான் குட்டி போடும். வராந்தாவில் இருக்கும் ரூமுக்குள் போகவே முடியாது. கோலமாவு, மற்றும் செருப்பு எல்லாம் வைக்கும் அந்த அறை பூனைங்க குட்டி போடும்போது மட்டும் வெளியே வைக்க ஆரம்பிச்சு, இப்போ நிரந்தரமாய் செருப்பையும்,. கோலமாவையும் வெளியேயே வைக்கும்படியா ஆக்கிடுச்சு. கோலமாவை வெளியே வச்சால் காக்கை, எலி, மற்றப் பறவைகள் வந்துடும். எலி தான் வீட்டுக்குள்ளேயே குஞ்சு போட்டு எல்லாம் எழுதினேனே, அமெரிக்காவிலே இருந்து வந்ததும். தோட்டத்தில் இதெல்லாம் பத்தாதுன்னு இப்போப் பெருச்சாளி குஞ்சு போட தொட்டி முற்றத்தில் இருந்து தண்ணீர் போகும் குழாயை அடைச்சுவிட்டு, அந்தத் தண்ணீர் நிரம்பும் தொட்டியைச் சுத்தமாய்க் காயவச்சு, அதிலே பாலிதீன் பைகள், மற்றும் பேப்பர்கள் எல்லாவற்றையும் ரொம்ப அழகாய் மெத்தை மாதிரிப் போட்டுக் குஞ்சு போட்டு வைச்சிருக்கு. அதை வெளியே எடுத்துப் போடவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பெரிசானதும் விரட்டிட்டு இப்போத் தான் அடைச்சோம். இப்போப் பாருங்க வெளியே இருக்கும் குளியல் அறையில் பூனை 3 குட்டிகள் போட்டிருக்கு. அதுங்களுக்கு நான் திரும்பத் திரும்பப் பிரசவம் பார்க்கிறதும், பத்தியமாய்ச் சாப்பாடு போடறதும், மருந்து கிளறித் தரதுமாய் ரொம்பவே ஜனரஞ்சகமாய்ப் போயிட்டிருக்கு! இப்போ அம்மாப் பூனை எங்கேயோ வெளியே போயிருக்கு போலிருக்கு. குட்டிகள் எல்லாம் கத்திட்டு இருக்கு, ரொம்ப அழகான குட்டிகள்.அதுங்களைப் போய்ப் பார்க்கணும், வர்ட்டாஆஆஆஆஆ????????????

இந்த திவா வேறே சும்மா இருக்காம முன்னாலேயே வொர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சுக்கிறது தானேன்னு கேட்டுட்டு இருக்கார். நான் என்ன அவர் மாதிரியா எழுதறேன்? இல்லை, அப்படி எல்லாம் முன்னேற்பாடு செய்துட்டு உட்கார்ந்தால் இந்த மாதிரி மொக்கை எல்லாம் போடவா முடியும்? அது புரியலை அவருக்கு! :P :P

44 comments:

  1. அட!
    பங்களூர் போய் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நினச்சேன்.

    அது சரி வோர்ட்ல மொக்கை எழுத முடியாதா என்ன? உங்க திறமையை இவ்வளவு குறைவா மதிப்பு போடறீங்க! நீங்க அனுமார் மாதிரி.

    ReplyDelete
  2. ஹாய் தலைவி,

    அது சரி அப்ப உங்க வீடு இரு மினி சரணாலயும்னு சொல்லுங்க...
    ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் இந்த யானை, சிங்கம், சிறுத்தை கரடியெல்லாம் மட்டும் சேத்துக்க மாட்டேங்கறீங்கனு உங்க மேலே ஒரு கம்ப்ளெயிண்ட் பதிவாகி யிருக்கு.

    ReplyDelete
  3. உங்க தாய் உள்ளத்தை படித்து ஒன்னும் சொல்ல முடியல தலைவி...நா தழுதழுக்குது..அவ்வ்வ்வ் ;)

    ReplyDelete
  4. ஹா..ஹா.. அக்கா.. கலக்கல் நகைச்சுவை.. பேசாம டிஸ்கவரி சேனலை உங்க வீட்டுக்கு மாத்திடலாம்:))))))))))))

    ReplyDelete
  5. // இந்த எலிகள் எல்லாம் ரொம்பவே தைரியம் ஜாஸ்தி. சமைக்கும்போது கூடவே வந்து உட்கார்ந்து (மாமியார்கள் மாதிரி?) நல்லாச் சமைக்கிறேனா என்று வேவு பார்க்கும். //

    //(ம்ஹும் வாடகை எல்லாம் கொடுக்காதுங்க)//
    அவ்வ்வ். இதுவேறயா?..ஹா..ஹா:))))))))

    ReplyDelete
  6. //இப்போப் பாருங்க வெளியே இருக்கும் குளியல் அறையில் பூனை 3 குட்டிகள் போட்டிருக்கு. அதுங்களுக்கு நான் திரும்பத் திரும்பப் பிரசவம் பார்க்கிறதும், பத்தியமாய்ச் சாப்பாடு போடறதும், மருந்து கிளறித் தரதுமாய் ரொம்பவே ஜனரஞ்சகமாய்ப் போயிட்டிருக்கு!//

    படா ஜனரஞ்சகம் தான்:P :))))))))))) என்ஜாய்..
    சூப்பர் காமெடி. மொக்கை.. தலைவி வாழ்க.:))

    ReplyDelete
  7. அதனாலோ என்னமோ என்னோட ம.பா. நாங்க கல்யாணம் ஆனதிலே இருந்து வளர்ப்புப் பிராணியாக முதலில் ஒரு பைரவரைக் கொண்டு வந்தார்

    அப்போது ஆரம்பிச்சதுதான் பாவம் ம.பா
    நானும் இதே மாதிரி ஒரு ஜீவனை 8 வருடம் இன்னும் அதன் நினைவில் உள்ளேன்
    தென்னகத்து மேனாகா காந்தி வாழ்க

    ReplyDelete
  8. உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுக்கா

    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  9. ஜீவ காருண்யத்தில் வள்ளலாருக்கு வாரிசாகத்
    தாங்கள் தான் என்பதைத் தெரிந்து கொண்ட
    ஐந்தறிவு ஜீவிகளின் பாசத்தை என்ன சொல்லி
    பாராட்டினாலும் தகும். பொறுத்திருங்கள்.
    அடுத்த Mother Universe
    பட்டம் உங்களுக்குத்தான் என
    பட்சி சொல்கிறது.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullaValaipathivugal.blogspot.com

    ReplyDelete
  10. //அதுங்களுக்கு நான் திரும்பத் திரும்பப் பிரசவம் பார்க்கிறதும், பத்தியமாய்ச் சாப்பாடு போடறதும், மருந்து கிளறித் தரதுமாய் ரொம்பவே ஜனரஞ்சகமாய்ப் போயிட்டிருக்கு!//

    தலைவியாரே! கலக்கலா எழுதிருக்கீங்க. ரொம்ப நல்லாருந்தது படிக்க. எல்லா உயிரினமும் உங்களை அம்மாவா நினைக்குது போலிருக்கு. ஏன்னா பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குத் தானே வருவாங்க?
    :)

    ReplyDelete
  11. //நீங்க அனுமார் மாதிரி.//

    அப்படியா?:-)))

    ReplyDelete
  12. //நீங்க அனுமார் மாதிரி.//

    அப்படியா?:-)))

    ReplyDelete
  13. கீதா,,

    இதுவா மொக்கை?

    ஊஹூம்..... நம்பமாட்டேன்.

    ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்.

    உங்களை இங்கே ஒரு சங்கத்துலே ஆயுட்கால அங்கத்தினரா ஆக்கியாச்சு:-))))

    ReplyDelete
  14. எங்க தஞ்சாஊர் ஊட்டுலே 20 கரப்பான் பூச்சி, 1 பெருச்சாளி, 2 பூனை, 1 நாய்க்குட்டி, 33 பல்லி,
    குரங்கு பெருசிலெ 3, சின்னதிலே 12, குட்டி 23, ஆடு 4, மாடு 2, அணில் 3 லிருந்து 5, மரவட்டை 20,
    சிலந்தி 3, இருக்கு.
    துளசி அம்மா சங்கத்திலே எங்களை அங்கத்தினர்களா சேத்துப்பாங்களா இல்ல இந்த ஜீவன்களையெல்லாம்
    சேத்துப்பாங்களா ?
    கரேட்டா சொல்லுங்க...
    வரும்போது ரேஷன் கார்டும் கொண்டு வரணுமா ?
    இல்ல..வேற எதுனாச்சும் அட்ரஸ் ப்ரூஃப் தேவையா?

    மேனகா சுப்புரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  15. //எங்க தஞ்சாஊர் ஊட்டுலே 20 கரப்பான் .....அணில் 3 லிருந்து 5, மரவட்டை 20,சிலந்தி 3, இருக்கு.//

    அப்புறம் எறும்பு பூரான் ஈ கொசு எல்லாம் வேற இருக்கணுமே?
    :-))))))))))))

    (சுப்பு, மேனகா சுப்பு அப்படி 2 பேர்களா? அதாவது persons not names!)

    ReplyDelete
  16. அடடே.. நாங்கள் பிறக்கும்முன் வந்த பதிவு! எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்கும் கூட இவ்வளவு கருணையா? சமைக்கும் பொது அருகில் அமர்ந்து சூபர்வைஸ் செய்யும் எலியை மனக்கண்ணில் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது! சுப்பு தாத்தா அப்போவே உங்கள் தளம் வந்து பின்னூட்டம் போட்டிருக்கார்!

    ReplyDelete
    Replies
    1. சுப்புத் தாத்தா அதுக்கும் முன்னாடியே வந்திருக்கார். கருத்து மோதல் ஏற்பட்டிருக்கு அவரோட! :)

      Delete
    2. http://sivamgss.blogspot.in/2008/03/blog-post_24.html//

      ஓரிரு வருடங்கள் முன்னர் சூப்பர் சிங்கரில் பாடிய சின்னப் பெண்ணைக் குறித்து (கௌதமன் போட்ட பதிவு) நான் "ரசிக்கவில்லை, விரசம்" என்று எழுதிய பின்னூட்டத்துக்கு இதே சுப்புத் தாத்தா என்ன பதில் சொன்னார் என்று அதிலே போய்ப் பார்க்கவும்! :) காலம் மாறினாற்போல் சு.தா.வும் மாறிட்டார்! அதிலேயே இதையும் சொல்லி இருப்பேன். பதிவின் பெயர் நினைவில் இல்லை. இல்லைனா தேடி எடுத்துடலாம்! :)) இதைப் படிச்சுட்டு சு.தா. ஒண்ணும் நினைச்சுக்க மாட்டார். ஆகையால் உங்கள் கருத்தை தாராளமாச் சொல்லலாம்.

      Delete
    3. ராஜஸ்தான், குஜராத்தில் தான் இப்படி எலிகள் அதிகம்! சமையலறை மேடையிலேயே சர்வ சுதந்திரமாக நடமாடும். கீரை மசிச்சால் மேடை நுனியிலே உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கும். குஜராத்தில் ஒரு முறை எலி மருந்து வைச்சுச் செத்துப்போன எலியைக் காலையிலே எடுத்துப் போடலாம்னு படுத்துட்டோம். காலை பார்த்தால் பாடியைக் காணோம். இன்று வரை எங்கே போச்சுனு தெரியாத சஸ்பென்ஸ் அது! :) இப்படி எவ்வளவோ ரசமான அனுபவங்கள் எலி, பெருச்சாளி, நாய்க்குட்டிகள், பாம்புக்குட்டிகள், மயில், குயில்னு எல்லாத்தோடயும் ஏற்பட்டிருக்கு.

      Delete
    4. //இன்று வரை எங்கே போச்சுனு தெரியாத சஸ்பென்ஸ் அது! :) இப்படி எவ்வளவோ ரசமான அனுபவங்கள்//

      ஆ! எலி வச்சு ரசம்லாம் வைப்பீங்களா! ஹிஹிஹிஹி...

      Delete
    5. பழைய பதிவுக்கு நீங்கள் கொடுத்துள்ள லிங்க் வேலை செய்யவில்லை.

      Delete
    6. // இந்த டாஷை எடுத்துட்டு வெறும் லிங்கை மட்டும் போடுங்க! கீழே உள்ள மாதிரி http://sivamgss.blogspot.in/2008/03/blog-post_24.html

      Delete
    7. ம்ம்ம்... பெரிய கருத்து மோதல் எதுவும் இல்லை. அப்புறம் லிங்க் நான் இன்பாக்சுக்கு வரும் மெயிலிலிருந்து அப்படியே க்ளிக் செய்து போவேன். நோ காபி பேஸ்ட்!

      Delete
    8. ஸ்ரீராம், எலிதான் மிச்சம் வெச்சு ரசம் வைக்கும்!

      Delete
    9. ஹிஹிஹி... எனக்குப் புளிரசம் தெரியும். எலிரசம் இப்பத்தான் கேள்விப் படறேங்க்ணா!

      Delete
    10. ஶ்ரீராம் தம்பி, வா.தி. தம்பியைக் கேளுங்க! உங்களுக்கு அண்ணா! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எலி ரசம் வைக்கச் சொல்லிக் கொடுப்பார். நாளைக்குத் "திங்கற" கிழமைக்கு ஒரு பதிவு தேத்தலாம்! :)))

      Delete
  17. எங்கள் ப்ளாக் லிங்க் பார்த்து வந்தேன் ..ஆஹா அப்படியே எங்க வீடு மாதிரியே இருக்கே ..எங்க வீடும்சென்னைல மினி அசைலம்தான் ...காக்கா குருவி நாய் பூனை எல்லாம் அடைக்கலம் தேடி வரும் ..உண்மைல எலிங்க எவ்ளோ அழகு தெரியுமா ..அந்த கண்ணுக்கே 100 மார்க் கொடுக்கலாம் மினுக் மினுக்னு பார்க்கும் :) ..பதிவு செம அட்டகாசம் ரசித்தேன்

    ReplyDelete
  18. உங்களோட சண்டை போட்டதா நீங்க சொன்ன பதிவு எங்கேன்னு பார்த்தேன். அந்த பதிவு இல்லை இப்போ எப்படின்னு பிளாக்கர் சொல்றது.
    Sorry, the page you were looking for in this blog does not exist.
    Home
    அப்போது தான் ஞாபகம் வந்தது.

    அது போன ஜன்மமா இருந்திருக்கலாமோ ?

    இருக்கலாம்.

    நீங்க இந்த பதிவிலே இது என்ன மீள் பதிவா ? 2008 லேந்து தொடர்கிறது ? சரவணன் மீனாச்சி மாதிரி.!!!

    ஒரு தினுசா ஒரு டிரான்ஸ் லே போயி, பார்த்தேன்.

    போன ஜன்மத்திலே நீங்க மாமியாராவும் நான் (பெண் ஜன்மமா) உங்க மாட்டுப்பொன்னாவும் இருந்திருக்கேன்.
    எந்த காலம் அப்படின்னு கூட லேசா தெரியறது. 1856 முதல் 1860 வரை. அப்ப நீங்க போடாத சண்டையா..
    ஆனா அந்த காலத்துலே அதெல்லாம் சகஜம் நா !!
    மாட்டுப்பொண் மாட்டுப்பொன் இல்ல அப்படின்னு நீங்க சத்தமா
    சொல்றது காதுலே விழரது. !!

    நான் மாடு மாதிரி அந்த ஜன்மத்திலே உழைச்சதும் நான் பொன் போல இருந்ததை யாருமே உங்காத்துலே ( போன ஜன்மத்துலே )
    கவனிக்கலயே !! அதுவும் தெரிஞ்சது.

    அதான் பகவான் ஆகப்பட்டவன், பிரும்மாண்ட கோடி நாயகன்,
    இந்த ஜன்மத்திலே எலிக்கும் பிரசவத்துக்கும் பிரசவம் பார்க்க உங்களை
    அனுப்பிச்சு இருக்கானோ ! தெரியல்ல. அதுக்கும்.ஒரு பிரச்னம் பார்த்து தான் முடிவு செய்யணும்.

    ஹி ...ஹி ...

    அதெல்லாம் இருக்கட்டும். அடுத்த மாசம் ஸ்ரீரங்கம் வரலாம்.

    மெது வடை சூடா.....( எலிக்கு போடறா மாதிரி இல்லை.! ) ஒரு பத்தோ இருபதோ !

    சுப்பு தாத்தா.

    www.subbuthatha72.blogspot.com
    Here your friend waits to hear you

    ReplyDelete
    Replies
    1. சு.தா. அந்த லிங்கிலே கடைசியிலே வர// எடுத்துட்டுப் போடுங்க! நான் சொன்ன அந்தக் கருத்து வேறுபாடு பதிவு வரும். :) இல்லைனா என் கையில் விழுந்த சாக்லேட் என்று கூகிளார் கிட்டேக் கேட்டால் கொடுப்பார். :)

      Delete
    2. வாங்க, வாங்க ஶ்ரீரங்கம் வாங்க, என்னிக்குனு சொல்லிடுங்க! ஏன்னா எங்களுக்கும் சென்னைப் பயணம் ஒண்ணு இருக்கு! 2.3 நாட்கள் தங்கறாப்போல் இருக்கும். தங்க இடத்தைத் தான் தேடிட்டு இருக்கோம். :) நீங்க உங்க பயணத் தேதியைச் சொன்னா அதுக்கு முன்னேயோ, பின்னேயோ சென்னைப் பயணத்தை வைச்சுக்கலாம். :)

      Delete
    3. மெதுவடை என்ன, கீரை வடையே செய்து தரேன்.

      Delete
    4. ஒரு பத்தோ இருபதோ !// என்ன அண்ணா? டிமாண்ட் ரொம்ப குறைச்சலா இருக்கே!

      Delete
    5. //தங்க இடத்தைத்தான் தேடிட்டிருக்கோம்/?

      ஓ மை காட்! எங்கே போக? கான்கிரீட் கட்டடத்த தேட மாட்டீங்களா?

      Delete
    6. @ஶ்ரீராம், ஃபுல் ஃபார்மிலே இருக்கீங்க போல! :) அண்ணா,மன்னி ஹைதையில் வாசம், மாம்பலத்திலே தம்பி வீட்டிலே தங்கினால் அம்பத்தூரில் வேலை ஆகாது! ஏன்னா முக்கியமான வேலையே அம்பத்தூரில் தான்! அம்பத்தூரில் தங்குவதற்கு இடம் பார்க்கணும். :) அதான் சொன்னேன்.

      Delete
  19. தங்க இடத்தைத் தான் தேடிட்டு இருக்கோம். :) //

    எங்க கிருஹத்துக்கு கண்டிப்பா வரணும். இங்கேயும் தங்கலாம்.
    என்ன கொஞ்சம் ஆசாரமா இருக்கணும்.
    மாமா பஞ்சகச்சம் ,நீங்க மடிசார் கட்டிக்கணும். த்ரிசதி , (த்ரிஷா தி இல்ல) படிக்கறப்போ ஆத்துக் கதை நாட் அலௌடு . ஆனா அப்பப்ப ஸ்ட்ராங் டிகிரி காபி கிடைக்கும்.
    போஜனத்துலே வெங்காயம், பூண்டு கிடையாது.
    முந்தா நாள் மோகன்ஜி வந்தார்.
    திவாஜி வருவார் னு நினைக்கிறேன். என்னிக்கு வரார் நு தெரிஞ்சா அன்னிக்கு ஒரு கணபதி ஹோமம் ஏற்பாடு பண்ணலாம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. //திவாஜி வருவார் னு நினைக்கிறேன். என்னிக்கு வரார் நு தெரிஞ்சா // தெரிலியே! :(

      Delete
    2. வரோம், சு.தா. தங்க முடியாட்டியும் உங்க வீட்டுக்குக் கட்டாயமா வரோம். :) மோகன் ஜி மும்பையிலிருந்து வந்தாச்சா? அடுத்த மாசம் ஶ்ரீரங்கம் வரப்போறதாச் சொல்லிட்டு இருந்தார். என்னனு இனிமேத் தான் தெரியணும். போஜனத்திலே ரசமும், சுட்ட அப்பளமும் இருந்தால் போதும் சு.தா. என்ன ஒரு விஷயம்னா சுட்ட அப்பளத்தின் மேலே நெய் விட்டுக்கணும்! :) இல்லைனா உள்ளே இறங்காது!

      Delete
  20. டிமாண்ட் ரொம்ப குறைச்சலா இருக்கே! //

    Demand must be always related to supply.
    And
    supply must also equal the demand.

    Can One inject lignocaine as much for a tooth removal as you do for an amputation ?

    subbu thatha.
    Divaji,
    Can we do Ganapathy Homam and Sudharsana Homam one by one ?

    ReplyDelete
  21. இப்போ ஸ்ரீரங்கத்திலும் இது தொடருதா? அப்படீன்னா, கிச்சன்லேர்ந்து (அடுப்பிலேர்ந்து) நேரடியா வராத எதையும் (வடை) கொஞ்சம் யோசனை செய்துதான் உங்கள் வீட்டில் சாப்பிடணும்போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை நெ.த. இங்கே அடுக்குமாடிக் குடியிருப்பு. நாலாவது மாடி! அம்பத்தூரிலே இருந்து சாமான்களோட ஒரு எலி வந்திருக்கு போல! சாமானைப் பிரிக்கிறச்சே வெளியே வந்து சமையலறையை ஒட்டிய வெராந்தாவில் உள்ள ஜன்னல் வழியாக் கீழே குதிச்சுத் தற்கொலை பண்ணிண்டுடுத்து! :))) அப்புறம் ஒண்ணையும் காணோம். இரண்டு நாட்களாகக் கொசு இருக்கிறதுனு ரங்க்ஸ் சொல்றார். எனக்குத் தெரியலை! :) ஆகவே தைரியமாச் சாப்பிடலாம்.

      Delete
  22. ஹாஹாஹா :) அட்டகாசமா எழுத்து நடை ஏற்கனவே பின்னூட்டம் தந்திருக்கேன் ஆனாலும் இன்நும் பல முறை படிச்சாலும் தப்பில்லை இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு .நீங்க இந்த மாதிரி பதிவுகளை மீண்டும் மீள்பதிவு போடுங்கக்கா ..கீதாரங்கனுக்கெல்லாம் ஆசையா இருக்கும் படிக்க ..

    எங்க வீடும் இப்படித்தான் ஊரில் குருவிகள் கூடு கட்டி குடும்பத்தை பெருக்கி பறந்து செல்லும் வரை மின்விசிறி போடா விட மாட்டாங்க அம்மா .நாமதான் அதுங்களுக்கு கவனிக்கணும் என்பாங்க .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஏஞ்சல், இப்போல்லாம் குருவிகள் உள்ளேயும் வரதில்லை. மின் விசிறியின் மேல் பக்கம் அதுங்க கூடு கட்ட வசதியாயும் இருப்பதில்லை. குருவிகளை அவ்வப்போது ஶ்ரீரங்கம் வீதிகளில் பார்த்தாலும் எங்க பக்கம் அதிகம் இல்லை. :(

      Delete