எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 07, 2010

அந்த நாளும் வந்திடாதோ !! 1

மழைக்காலம் முடியப் போகிறது. மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. தென் மாவட்டங்கள் குறிப்பாய் விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் அதிக பாதிப்பு. வெள்ளம் வீடுகளில் புகுந்து ஏழை மக்கள் அவதி, சாதாரணமாய் இப்படித் தான் செய்திகள் வரும். ஆனால் இப்போல்லாம் வெள்ளம் ஏழை, பணக்காரர் என்ற பேதம் பார்க்கிறது இல்லை. எல்லார் வீடுகளுக்குள்ளேயும் நுழைந்து எல்லாரையும் ஒரு கை இல்லை எல்லாக் கையாலேயும் பார்த்துட்டுத் தான் போகிறது. போன வருஷம் வரைக்கும் எங்க வீட்டுக்குள்ளும் தண்ணீர். போன வருஷம் நிறைய வரலை என்றாலும் வாசல் வராந்தா வரை வந்துவிட்டது. இந்த வருஷம் நேற்றுக் கூட மயிரிழையில் உள்ளே வரட்டுமா வேண்டாமானு கேட்டுட்டு இருந்தது. மழை நின்னதோ பிழைச்சோம்.

இந்த நிலைமை எல்லா இடங்களிலும் காண்கிறோம். தொலைக்காட்சியில் ஆங்காங்கே விவசாயிகள் அழுகிய பயிர்களைக் காட்டி அழுகின்றனர். மழை என்ன திடீர்னு வந்ததா?? காலம் இல்லாத காலத்தில் வருகிறதா? இல்லாட்டி நம்ம தமிழ்நாட்டில் மழையே பெய்தது இல்லையா?? ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனப்போக்குவரத்து ஸ்தம்பித்ததுனு சொல்லும்போது நாமும் ஸ்தம்பிச்சுத் தான் போறோம். வீடுகளில் தண்ணீர் புகுந்தது, சுரங்கப் பாதைகளில் தண்ணீர் புகுந்ததுனு சொல்லும்போதும் எரிச்சலாய்த் தான் இருக்கு! வயல்களில் தேங்கிய நீரெல்லாம் பாசன வாய்க்கால்கள் வழியாக ஓடவேண்டாமா?? சரி, ஆறுகளில் இந்த மழைக்காலத்தில் எப்படி வெள்ளப் பெருக்கு வருது?? அவ்வளவு மழையா பெய்யுது? மழை பெய்யும் அளவைப் பார்த்தால் வருஷா வருஷம் குறைச்சலாத் தான் இருக்கு. ஆனாலும் ஆறுகளில் நீர் கரையை உடைத்துக்கொண்டு வருகிறது. ஏரிகளில் நீர் கரையை உடைக்கிறது, அல்லது கலங்கல்கள் உடைக்கப் படுகின்றன. சில ஊர்களில் ஏரிக்கரையையே வெட்டி விடுகிறார்கள். இப்படித் தான் 2008-ம் வருஷம் அம்பத்தூர் ஏரியை இரவுக்கிரவே உடைத்துவிட்டு எங்கள் பகுதியில் தண்ணீர் புகாத வீடே இல்லைனு ஆகிவிட்டது. இதற்கெல்லாம் யார் காரணம்?? என்ன காரணம்?? நாம் தானே காரணம்?? ஆங்காங்கே ஏரிகளை ஆக்கிரமித்து, ஏரிக்கரைகளைச் சரிவாக்கி, சமதளமாக்கி, விளைநிலங்களை வீடுகளாக்கி, ஏரிப்பாசன வாய்க்கால்கள், ஆற்றுப்பாசன வாய்க்கால்களைத் தூர்வாராமல், ஆகாயத் தாமரையும், பார்த்தினீயமும் முளைக்கவிட்டுக் கொண்டு நிம்மதியாய் வீட்டில் இலவச அரிசியை இலவச எரிவாயு அடுப்பில் சமைச்சுச் சாப்பிட்டுட்டு, இலவசத் தொலைக்காட்சியில் மானாடி, மயிலாடிக்கொண்டு, டீலா நோ டீலானு கேட்டுட்டு இருப்போம். இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டியதுனு சொல்லிட்டு, அரசாங்கம் எப்படிச் செய்யும்னு யோசிக்காமக் கையைக் கட்டிட்டு இருக்கலாம்.

பத்தாததுக்கு இந்த வருஷம், தமிழக அரசு , வெள்ள நிவாரண நிதியாக 5,000/- ரூபாய் கொடுக்கப் போறாங்களாம். அதோட பொங்கலுக்கு அரிசி, பருப்பு, வெல்லம், ஏலக்காய், மு.ப.(நெய் விட்டுட்டாங்க, அதையும் கொடுக்கக் கூடாதோ? :P), புடைவை,வேஷ்டி எல்லாம் இலவசம். நாம பாட்டுக்கு ஜாலியா 5,000 ரூபாயை வாங்கிக்கொண்டு, இலவசப் புடைவை, வேஷ்டியை வாங்கிக்கொண்டு இலவச அரிசியில் பொங்கல் கொண்டாடுவோம். ஏரி உடைச்சால் என்ன? ஆற்று வெள்ளம் ஊருக்குள்ளே புகுந்தால் என்ன?? பயிர், பச்சை அழுகினால் என்ன?? ஆடுமாடுகள் செத்தால் என்ன?? அதெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கும்.

ஏரியைத் தூர் வாரணுமா? அரசாங்கம் செய்யணும். ஆற்றில் வளர்ந்திருக்கும் ஆகாயத் தாமரைக்கொடிகளை அகற்றி ஆற்றை ஆழப்படுத்திக் கரைகளை உயர்த்தணுமா?? அரசாங்கம் செய்யணும். சாலைகள் மோசமான நிலையில் இருக்கா?? இருந்தால் என்ன போச்சு?? அரசாங்கம் எப்போவோ போட்டால் போடட்டும், இல்லாட்டியும் இந்தச் சாலைகளில் நடப்போமே! இலவச அரிசியை வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டுட்டு, இலவச டிவியில் மானாடுவோம், மயிலாடுவோம், டீலா, நோடீலா விளையாடுவோம், இன்னும் பணம் வரும், அதோட தொலைக்காட்சியில் நம்ம முகம் தெரியும், நாம் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை க்ளோசப்பில் வேறே காட்டுவாங்க. இந்த ஜன்மம் எடுத்ததுக்கு இந்த பலன் கூட இல்லைனா என்ன?? வேலைக்கு உணவு திட்டத்திலே அரிசி நிச்சயம், பணம் நிச்சயம், வேலை செய்யறோமா, செய்யலையானு யாரு கண்டுக்கப் போறாங்க?? ஏற்கெனவே கட்டுமான வேலைகளுக்கு பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்திலிருந்து ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நாட்களிலே நம்ம விவசாய வேலைகளுக்கும் அவங்க வருவாங்க. நாம ஜாலியா இருப்போம்.

மனசே கொதிக்கிறது. நம் வாழ்க்கை முறையை, நம் விவசாயத்தை, நம் நம்பிக்கைகளைக் கெடுக்கவேண்டி உள்ளே வந்த ஆங்கிலேயர் முதலில் கெடுத்துக்குட்டிச்சுவராக்கியது, நம் குருகுலமுறைப் படிப்பையும், அடுத்து நம் விவசாய முறையையும். நம் நாட்டு விவசாய முறையில் கால்நடைகளின் முக்கியத்துவமும், அவற்றை நாம் தெய்வமாக வழிபடுவதையும் கவனித்த ராபர்ட் க்ளைவ் இந்தியாவின் முதுகெலும்பை உடைக்கவேண்டுமானால் கால்நடைகளை, முக்கியமாய் தெய்வமாய் வழிபடும் பசுக்களை வாழ்க்கையிலிருந்து நீக்கவேண்டும் என்று எண்ணினார். ஆகவே 1760-ம் வருஷம் முதல் பசுவதைக்கான இல்லத்தை ஏற்படுத்தி ஒருநாளைக்கு 30,000 பசுக்களைக் கொல்லவேண்டும் என்று திட்டமிட்டார். வங்காளத்தில் மனிதர்களின் எண்ணிக்கையைவிடப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாய் இருப்பதாய்த் தோன்றியது க்ளைவுக்கு. ஆகவே இந்தியாவை நிலைகுலைய வைக்கவேண்டுமென்றால், அதன் அழகான அருமையான பொருளாதாரத்தைச் சீரழிக்கவேண்டுமானால் பசுக்களைக் கொல்லவேண்டும் என்று அதை ஆரம்பித்து வைத்தார்.

ஆகவே இயற்கை உரங்களையே போட்டு பயிர் செய்த நம் மக்கள் செயற்கை ரசாயன உரங்களை நம்பி மண்ணில் போட்டு மண்ணின் வளத்தை இழந்துவிட்டார்கள். இப்போது என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் விவசாயத்தில் லாபமே காண முடிவதில்லை. மேல்நாடுகளில் எல்லாம் இப்போது இயற்கை உரங்களுக்கு மாறிவிட்டார்கள். ஆனால் நாம்?? உலகுக்கே உதாரணமாக இருந்த நாம்?? 1740-ம் வருஷம் ஆர்காட் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 54 க்விண்டால் அரிசி வெறும் மாட்டுச் சாணத்தையும் இயற்கை உரத்தையுமே நம்பி விளைவிக்கப் பட்டது. ஆனால் பசுவதையை இந்தியாவில் ஆரம்பித்ததுமே மாட்டுச் சாணம் கிடைக்காமல், இயற்கை உரங்கள் கிடைக்காமல் யூரியாவையும், பாஸ்பேட்டையும் கேட்டுக்கொண்டு இங்கிலாந்தின் கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டோம். ஆக, நம் விவசாயம் படுத்தது இப்படி என்றால் ஆறு, குளங்களோ?

தூர் வார ஆட்கள் இல்லாமல், கிராமத்தில் ஜனங்கள் இதெல்லாம் அரசாங்கம் தான் செய்யணும்கிற நினைப்புக்கு வந்து பல வருஷங்கள் ஆகின்றன. முன்பெல்லாம் அதாவது அறுபது வருடங்கள் முன்னால் கூட என் கணவர் சொல்லுகிறார்:
கிராமங்களில் பட்டாமணியம், கிராமக் கணக்குப் பிள்ளைனு பரம்பரையா வரவங்களுக்கு எந்த இடங்களில் எந்தக் குளம் எப்போ தூர் வாரணும், யாரோட வயலில் தண்ணீர்ப் பாசன வாய்க்கால் அடைச்சிருக்கு, எந்தக் குளம் ஆடு, மாடுகள், வண்டிகள் கழுவப் பயன்படுத்தணும்,எந்தக் குளம் குடிநீர்க்குளம், கிணறுகள், மற்றும் வயல்கள் யார், யாரோடது எல்லைகள் எது? சாலைகளை எப்போப் போடணும், எப்படிப் போடணும், ஆட்களுக்கு என்ன செய்யறதுனு அந்த அந்த ஊர் ஆட்களை வைத்தே ஒரு வீட்டுக்கு ஓரு ஆள்னு பொது வேலைக்கு வந்து எந்தவிதமான தொந்திரவுகளும் இல்லாமல், கவலையே இல்லாமல் எல்லாம் செய்துட்டு இருந்திருக்காங்க.

குளங்களுக்குக் காவலுக்கு ஆட்கள் போட்டிருப்பாங்களாம். பொது மேய்ச்சல் நிலங்களில் ஆள் உயரத்துக்குப் புற்கள் வளர்க்கப் படுமாம். குடிநீர்க்குளத்தில் மறந்து கூட யாரும் கை,கால் கழுவுவதோ, குளிப்பதோ இல்லாமல் பார்த்துப்பாங்களாம். அப்படி யாரானும் தவறிச் செய்துட்டால் உடனேயே காவலாளியின் கடுமையான கண்டிப்புக் கிடைக்குமாம். இதை எல்லாம் நினைச்சுக் கூடப்பார்க்க முடியலை இப்போ. யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எந்தக் குளத்தில் வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் செய்துக்கலாம்னு ஆயிட்டது. ஆனால் அதைக் கண்டிக்க முடியாது. கண்டிச்சால் போச்சு! கண்டிப்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். இதைப் பத்தி எழுதப் போனால் இன்னும் கடுமையா வார்த்தைகள் வருமோனு தோணுது. கொஞ்சம் கொஞ்சமாச் சொல்றேன்.

தொடரும்!

16 comments:

  1. நாங்கல்லாம் இந்தத் தலைமுறை மக்கள். எங்களுக்கு பழைய கால பாசன முறையோ இல்லை எப்படி ஏரி ஆறுகள் பாதுகாக்கப் பட்டதோ தெரியாது. கொஞ்சம் விரிவாக சொல்லுங்க

    ReplyDelete
  2. ஹிஹிஹி, எல்கே, சைகிள் காப்பிலே சாண்ட்ரோ ஓட்டறீங்க?? எனக்கும் தெரியாதுங்கோவ்வ்வ்வ்வ், கேட்டு வச்சிருக்கேன். அதையும், சில, பல பழைய நூல்களையும், பார்த்துட்டு எழுதறேன். :))))))))))))

    ReplyDelete
  3. கொடுங்கோலன் செங்கிஸ்கான், ஒரு சட்டம் போட்டிருந்தானாம். நீர் நிலைகளை மாசுபடுத்துபவர் யாராக இருப்பினும் போகுமக்களே, அவருக்கு மரண தண்டனை விதித்து விடலாம் என்று. ஒரு கொடுங்கோலன் இயற்கை சூழல் மாசுபடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்தான் என்பதை அறியவரும்போது இப்போதைய அரசியல்வாதிகளை நினைத்தால் பற்றிக் கொண்டு வருகிறது.

    ReplyDelete
  4. நல்ல பதிவு கீதாம்மா! வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்!!

    @ LK - பாட்டி சீரியஸா பேசிண்டு இருக்கும் போது 'நச்'னு ஒரு கோல் போட்டீங்களே LK!....:)LOL

    ReplyDelete
  5. இதை நானும் கேள்விப் பட்டு இருக்கின்றேன். மராமத்துப் பணிகள் என்று சொல்வார்கள். ஆனா இதை எல்லாம் காண்ட்டாரக் கிடைக்கும் என்பதுக்காம பி டபிள் யூ க்கு மாத்திய புண்ணியாவான் தான் நம்ம மஞ்சத்துண்டு முருகேசன்.

    ReplyDelete
  6. வாங்க அஷ்வின் ஜி, முதல் வரவு?? இல்லைனு நினைக்கிறேன். நீங்க சொல்வது போல் கடுமையான சட்டங்கள் வந்தால் ஒழிய நம் மக்கள் திருந்தப் போறதில்லை! :(

    ReplyDelete
  7. தக்குடு வருகைக்கும், ஆமோதிப்புக்கும் நன்றி தெரிவிக்கும் அதே நேரம் எல்கேக்கு ஜால்ரா போட்டதை வன்மையாய்க் கண்டிக்கிறேன். :P

    ReplyDelete
  8. வாங்க பித்தனின் வாக்கு, எல்லாக் கஷ்டகாலமும் ஆரம்பிச்சதே இந்த நாட்டாமை, பட்டாமணியம், கணக்குப்பிள்ளைகளின் பரம்பரை உரிமையை மறுக்க ஆரம்பிச்சதிலே இருந்து தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இன்னும் தகவல்கள் சேகரிச்சு வைத்திருக்கிறேன். பாருங்க, ஆங்கிலேயர் வரும் முன்னர் இந்தியாவின் மக்களுடைய கல்வி நிலையைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். ஆங்கிலேயர் செய்த பிரித்தாளும் கொள்கை ஆரியர், திராவிடர் என்பது மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. சரித்திர பூர்வமாய் ஐரோப்பிய சரித்திர ஆராய்ச்சியாளர்களே அது இல்லைனு சொல்லியும் இன்னமும் இங்கே அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாம் ஆங்கிலேயர்கள் செய்த வேலை!:(((((((((((

    ReplyDelete
  9. //ஆங்கிலேயர் செய்த பிரித்தாளும் கொள்கை ஆரியர், திராவிடர் என்பது மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. //
    ஓஹோ? அப்படியானால் நான்கு வருணங்களைப் பற்றி சொல்லப்பட்ட மனுசாத்திரத்திற்கு முன்பே ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்துவிட்டார்களா ?

    ReplyDelete
  10. வாங்க லதா, அதே லதாதானே?? :)))) மனு சாஸ்திரம் சொன்னதே பல இடங்களில் சரியாப் புரிஞ்சுக்கலை, அதோட வர்ணம் என்பது வேறு, இந்த ஜாதி வேறுபாடு என்பது வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்பினது ஆங்கிலேயர்களே. அவங்க வர வரைக்கும் இந்த வர்ண ரீதியான அமைப்பு இயற்கையாக இருந்தது. யாரும் எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமலேயே அவரவருக்கு என விதிக்கப்பட்டிருந்த வேலைகளைச் செய்து வந்தார்கள். நான்காம் வர்ணம் என்று சொல்லப்படுபவர்களும் வேதம் கற்கத் தடை இருந்ததில்லை. அதே சமயம் முதல் வர்ணத்தவர் ஆன பிராமணர்கள் சந்தேகங்களை நான்காம் வர்ணத்தவரிடம் கேட்டுக் கொள்வதற்குத் தடையும் இருந்ததில்லை. கடுமையான சட்ட, திட்டங்களே பிராமணர்களுக்கு இருந்தன என்பதும் மறுக்க முடியாது. இது குறித்து எழுத இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும். குறிப்புகளை இப்போத் தான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி உங்கள் கேள்விக்கு. பலருக்கும் இந்த சந்தேகம் இருந்திருக்கும். மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்கள் தான் ஆங்கிலேயர் . அதற்கு முன் இருந்த வர்ணாசிரம தர்மத்தின் வர்ணங்களின் முறை பற்றியோ வாழ்க்கை முறை பற்றியோ, அதிலே பேதங்கள் இருந்து மக்களுக்குள் பிரச்னைகள் இருந்ததாகவோ நம் சரித்திர ஆசிரியர்கள் கூடச் சொன்னது இல்லை. இதிலே குழப்பத்தை உண்டு பண்ணியது அடுத்தடுத்து வந்த அந்நியர் ஆட்சியே.

    ReplyDelete
  11. ஆங்கிலேயர்கள் பிரித்தாள செய்தார்கள். இப்போதுள்ளவர்களுக்கு 2ஜி 3 ஜி வரை அது பயன்படுகிறது.

    நாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்த பலவற்றை தூக்கி காடாசி விட்டு திரிகிறோம்.

    ReplyDelete
  12. //கடுமையான சட்ட, திட்டங்களே பிராமணர்களுக்கு இருந்தன என்பதும் மறுக்க முடியாது. இது குறித்து எழுத இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும்//

    சோ இது பற்றி வேண்டிய மட்டும் எழுதியிருக்கிறாரே.

    ReplyDelete
  13. @லதா, உங்க கேள்விக்கு ஐரோப்பியரான Francois Gautier எழுதிய Arise Again O India புத்தகத்தின் நாலாம் அத்தியாயம் இரண்டாம் பத்தியின் பதில்.

    The foundations of the Indian society were thus unique, because all the aspects of life were turned towards the spiritual. The original social system was divided in four "varnas", or four castes, (as per todays opinion) which corresponded to each one's inner capacities.

    Indian society of that time was neither dry nor ascetic; it satisfied the urges, desires and needs of its ordinary people, particularly of the husband and wife........... And when man had satisfied his external being, when he had paid his debt to society and grown into wisdom, it was time to discover the spirit and roam the width and breadth of India, which at that period was covered him and he would begin imparting allthe knowledge, worldly andinner, gathered in a lifetime- and the cycle would thus start again. That the great majority did not go beyond the fist two stages,( i.e., four ashramas ) is no matter; this is the very reason why Indian society provided the system of castes, so that each one fitted in the mould his inner development warranted.

    ReplyDelete
  14. எங்கள் தாத்தா, அவருக்குப்பின் மாமா இருவரும் ஆழ்வார்குறிச்சி கிராமக் கர்ணமாக இருந்தார்கள். நாங்கள் விடுமுறையில் ஊருக்குப் போகும்பாதெல்லாம் கிராம அதிகாரிகள் மாமாவிடம் வந்து ரிப்போர்ட் செய்வதைப் பார்த்திருக்கிறேன். கர்ணமான மாமாவுக்கு ஊரில் இருந்த மரியாதை இப்போ ஜில்லா கலெக்டருக்குக் கூட இல்லை.
    இப்படி மழை பெய்து வெள்ளம் வருவதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்றுதான் இன்றைய அரசு சொல்லும்.
    சகாதேவன்

    ReplyDelete
  15. வாங்க சகாதேவன், முதல் வரவு?? நன்றி வரவுக்கும் கருத்துக்கும். உண்மைதான் அந்தக் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு யார், யார் வீட்டிலே எங்கே எங்கே வயலோ, காடோ, தோப்போ இருக்கு, எப்போ வரி கட்டணும், எப்போ அதைத் தாமதமாய்க் கட்டலாம்னு தெரியும். அதோட இப்போப் பெரிசாப் பேசற மனித நேயம் என்பது அதெல்லாம் பேசப்படாமலேயே அந்தக் காலங்களில் இருந்தது. ஒரு தெருவில் ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் தெரு மட்டுமல்லாமல் ஊரில் தெரிந்தவர்கள் அனைவரும் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். இப்போ??

    ReplyDelete
  16. நாடு போகும் போக்கைப் பார்த்தா.... நாளைக்கு கழுவிவிடவும் அரசாங்கம் வரணுமுன்னு சொல்வாங்க போல:(

    அரசாங்கமே குடிக்கடையைத் திறந்து ஊத்திக்கொடுத்தே ரெண்டு தலைமுறையை 'குடிமக்கள்' ஆக்கி இருக்கு:(

    என்னமோ போங்க.....

    ReplyDelete