எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 25, 2011

வட துருவத்துக்கு வாரீஹளா!

கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது. நாளை கிறிஸ்துமஸ். மிசிகனில் உள்ள க்ரான்ட் ராபிட்ஸில், பத்து வயதே ஆன எட்வர்டிற்கு (கற்பனைப் பெயர்) தூக்கம் வரவே இல்லை. நாளை விடிந்தால் கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸின் உண்மையான திருப்தியும், புனிதமும் கிறிஸ்துவை நம்புவது மட்டுமில்லாமல், சான்டா என்னும் தாத்தா தான் வந்து வருடா வருடம் பரிசுப் பொருட்களைக் கொடுப்பார்கள் என்று அம்மாவும், அப்பாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே! அது உண்மையா?? சான்டா கலைமான்கள் பூட்டிய வண்டியில் வெள்ளி மணிகளை ஆட்டிய வண்ணம் "ஹோ ஹோ, ஹோ" என்று கோஷம் போட்டுக்கொண்டு வருவாராம். அவரவர் ஆசைப்பட்டுக் கேட்கும் பரிசுகளைப் புகைபோக்கி வழியாய்க் கீழே இறங்கி (எப்படி முடியும் இது?) கொடுப்பாராமே? உண்மையா? எட்வர்ட் இன்றிரவு விழித்துக்கொண்டு இதைக் கண்டு பிடித்தே ஆகவேண்டும் என நினைத்தான்.

பக்கத்து அறையில் அவன் தங்கையை அவன் பெற்றோர் தூங்க வைக்கும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் படுக்கையில் படுத்திருந்த அவனுக்குக் கீழே இருந்து ஏதோ சப்தம் கேட்க உடனே சான்டா வாயில் வழியாக வருகிறாரோ எனத் தோன்ற அவசரம் அவசரமாகக் கீழே இறங்கினான். ஏதோ நிழல் போல் தெரிந்தது. இதுதான் சான்டாவோ என நினைத்துப் பார்க்கையில் அவன் பெற்றோர் தான் சான்டாவின் அலங்காரத்தில் வந்திருப்பதைப் புரிந்து கொண்டுவிட்டான். என்றால் தங்கையைத் தூங்க வைத்துவிட்டு சான்டாவின் உடையை அணிந்து கொண்டு இருவரும் வருகின்றனரா? எழுந்தவன் தன்னுடைய புத்தக அலமாரியைக் குடைந்தான். என்சைக்ளோபீடியாவிலோ அல்லது அவனிடம் இருக்கும் மற்றப் புத்தகங்களிலோ சான்டாவைப் பற்றிய விபரங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றான். சரியான புத்தகம் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக அவன் பெற்றோர் அவன் அறைப்பக்கம் வருவது தெரிய வரவே, மீண்டும் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.

சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்பதில் எட்வர்ட் எவ்வளவு ஆவலாக இருந்தான் என்பது குறித்து அவன் பெற்றோர் இருவரும் அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டே அங்கே வந்தனர். இரவு எத்தனை மணியானாலும் விழித்திருந்து சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்டுவிட்டே படுப்பானே என அவர்கள் சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் மன உறுத்தலாக இருந்தது அவனுக்கு. யோசனைகள் செய்து கொண்டே தூங்காமல் இருந்தவனுக்கு ஒரு மணி நேரம் சென்றது தெரியவில்லை. அப்போது எங்கேயோ ரயில் ஊதும் சப்தம்.



கூ கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்,

இந்த நேரத்தில் ரயிலா? அதுவும் இங்கேயா?

"எட்வர்ட், எட்வர்ட், வா, எழுந்திரு, இந்த ரயிலில் நாம் வடதுருவத்திற்குப் போகப் போகிறோம். சான்டாவை அங்கே நீ நேரேயே சந்திக்கலாம்."





ரயிலின் கன்டக்டர் கூறினார். சற்றே தயங்கிய எட்வர்ட் தன்னையும் அறியாமல் எழுந்து வந்து ரயிலில் ஏறிக்கொண்டான். ரயிலும் கிளம்பியது.

ரயிலின் பெயரே போலார் எக்ஸ்பிரஸ்.

கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்


ரயில் தொடர்ந்து செல்லும்!

டிஸ்கி: பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் என் போக்கில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஆகவே ஏற்கெனவே தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும். அதோட எங்கள் ப்ளாகுக்குக் கதை எழுதினதின் தாக்கம் இன்னமும் இருக்கே! :))))))))) நன்றி.

15 comments:

  1. சிறுவர்களுக்கான ஒரு நல்ல படம்,உங்கள் பார்வையில்..நன்றாக ஆரம்பித்துள்ளது.
    தொடருங்கோ மாமி,படிக்க ஆவலாய் இருக்கு.

    ReplyDelete
  2. அப்புறம்?..

    ReplyDelete
  3. train uch uch nnukoota pookumaa?
    chik chik thaan keettu irukkeen!

    ReplyDelete
  4. அடேடே...அப்புறம் சொல்லுங்கள்...

    ReplyDelete
  5. வாங்க ராம்வி, இது தியேட்டரில் பார்த்தால் தான் ரசிக்கலாம். :))))

    ReplyDelete
  6. ஜீவி சார், வாங்க! :)

    ReplyDelete
  7. வா.தி. எங்க ஊர் டிரெயின் கூ உச் உச் உச் தான் நீராவி இஞ்சினாச்சே! உங்க கடலூரிலே சிக் சிக் சிக்னு போகும்போல! :))))))

    ReplyDelete
  8. ராம்ஜி யாஹூ, என் பதிவுக்கு வந்து எத்தனை மாசம் ஆச்சு? :)))) பலமான அறிவிப்புக் கொடுத்துட்டுத் தானே கிளம்பினேன். இங்கே வந்ததைப் பத்தியும் எழுதி இருந்தேனே!

    ReplyDelete
  9. வாங்க ஶ்ரீராம், அவ்வளவுதானா? :))

    ReplyDelete
  10. \\அதோட எங்கள் ப்ளாகுக்குக் கதை எழுதினதின் தாக்கம் இன்னமும் இருக்கே! :))))))))) நன்றி.
    \\

    அதே..அதே ;-)

    ReplyDelete
  11. வாங்க கோபி, வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  12. தொடருங்கள். வருகின்றோம் :))

    ReplyDelete
  13. ippathan sameebathil movies now channelil parthen

    ReplyDelete
  14. வாங்க மாதேவி, வரவுக்கு நன்றி.

    எல்கே, தியேட்டரில் பார்த்தால் இன்னும் ரசிக்கலாம்.

    ReplyDelete