
பக்கத்து ஊரான சான் அன்டானியோவின் ரிவர் வாக்கிற்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல் சாப்பாடு பிரச்னை. :))) பழங்கள், பிஸ்கட், சாலட் என சமாளிச்சாச்சு! அங்கே தங்கி இருந்தப்போப் பொழுது போகலைனு தொலைக்காட்சியை மேய்ந்தபோது காட்ச் மீ இஃப் யு கான். என்ற படத்தைப் பார்க்க நேர்ந்தது. நாங்க பார்க்கையிலே வழக்கம்போல் கொஞ்சம் படம் ஓடியாச்சு. ஆஸ்பத்திரியில் நர்சிடம் பொய்யான தகவல்களைக் கொடுக்கும் இடமா இருந்ததா! சரி, நம்ம வசூல்ராஜாவோட ஒரிஜினலோனு நினைச்சுட்டேன். கடைசியிலே பார்த்தாக்க, இது "நான் அவனில்லை(?) படத்தோட ஒரிஜினலோனு சந்தேகம். லியனார்டோ டி காப்ரியோ நல்லா நடிச்சிருக்கார்னு சொல்றது எல்லாம் சும்ம்ம்மா! ஒரிஜினல் Frank Abagnale, Jr. ஆகவே மாறிட்டார்.
அவரோட அப்பாவைச் சந்திக்கிறதெல்லாம் உண்மைக் கதையில் இல்லையாம்; சினிமாவுக்கு மசாலா சேர்க்க வேண்டிச் சொல்லி இருக்காங்களாம். ஆனாலும் அது கதையோட ஒட்டியே வருவதால் வித்தியாசமாத் தெரியலை. கல்யாண ரிசப்ஷன் பார்ட்டியில் அவசரம் அவசரமா மனைவி கிட்டே உண்மையை ஒத்துக்கொண்டு தன்னோட கூட ஓடி வரும்படி கேட்டுக்கொண்டு, அவளுக்காகக் காத்துட்டு இருக்கிறச்சே, மனைவி வரதைப் பார்த்து சந்தோஷப்பட்ட அடுத்த விநாடியே ஆங்காங்கே நிற்கும் உளவுத்துறை ஆட்களை அடையாளம் கண்டு கொண்டு ஏமாந்து போகிறார். மனைவி அப்புறம் என்ன ஆனானு சரியாத் தெரியலை சினிமாவிலே. உண்மை வாழ்க்கையில் பிடிபட்டு தண்டனை அனுபவிச்சப்புறமும் விடுதலையாகிக் கல்யாணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளும் 26 வருடத் திருமண வாழ்வும் இந்தப் படத்தை எடுக்கையில் உண்மையான ஃப்ராங்கிற்கு ஏற்பட்டிருக்கிறது.
விமானத்திலிருந்து கழிவறை வழியாத் தப்பிக்கிறதெல்லாம் ரொம்பவே ஓவர்! நம்பறாப்போல் இல்லை. அதுவும் உண்மைக் கதையில் இருந்திருக்காதுனு நினைக்கிறேன். என்னதான் கழிவறை வழியாக் கீழே ஒளிந்திருந்து தப்பிச்சாலும் விமானம் மேலே பறக்கையிலே எப்படி அவ்வளவு நேரம் ஒளிஞ்சிருக்க முடியும்? அந்தச் சின்ன துவாரம் வழியாக் கீழே சக்கரங்களுக்கு நடுவே இறங்கி ஓடிடறாராம். ம்ஹும்; சான்ஸே இல்லை; கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் எல்லாம் தூங்கிட்டா இருந்தாங்க?
மற்றபடி படம் உண்மைக் கதைங்கறதாலே உள்ளது உள்ளபடி எடுத்திருக்காங்க. எப்.பி.ஐ. கிட்டேயே மாட்டிக்கொண்டு, தண்டனை பெற்று, பின்னால் அவங்களுக்குத் தற்செயலாக உதவி செய்து, விடுதலை அடைந்து, அவங்களுக்கே உதவிகள் செய்து அதன் மூலம் நிரந்தர வருமானம் பெற்று; நடுவில் மறுபடி ஓடிப் போய்; மறுபடி திரும்பி வந்து! எல்லாம் நடந்தவை. உண்மையான ஃப்ராங்கே பார்த்துட்டுப் பாராட்டினாராம். நிறைய விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைச்சிருக்கு. தொய்வில்லாமல் இருந்தது.
அட கீதாம்மா. படம் பார்த்து உடனே கதையும் சொல்லியாச்சா.
ReplyDeleteநன்றாக இருக்கே. நம்ம ஊர்ல தான் கதைவிடுவார்கள்னு பார்த்தால்
அந்த ஊர்ர்ப் படமும் இப்படி செய்கிறாளே.நீங்கள் சொன்ன விதத்தில் எனக்கு உடனே பார்க்க வேண்டும் போல இருக்கு.சான் அண்டோனியால சுத்திப் பார்க்கலியா.
ஹாஹா, ஊரைச் சுத்திட்டு வந்து ரெஸ்ட் எடுக்கறச்சே பார்த்தது தான் வல்லி. படம் இன்டரஸ்டா இருக்கவே பார்த்து முடிச்சுட்டுத் தான் தூங்கப் போனேன். :)))))))
ReplyDeleteஸ்டாரில் வருதானு பாருங்க. இல்லைனா வேறே எதிலாவது போடுவாங்க. படம் வந்து பத்து வருஷம் ஆகி இருக்கும்போல!
ReplyDeleteகீதா மாமி,பட விமர்சனம் அருமையா இருக்கு.
ReplyDeleteஇங்க ஆங்கில சேனல்ல போட்டுட்டாங்க நிறைய தடவை பார்த்துட்டேன். திரில்லிங்கா இருக்கும்.
நெட்டில் தேடினால் டவுன்லோடுக்குக் கிடைக்குமே...
ReplyDeleteவாங்க ராம்வி, படம் பார்க்கிறது ரொம்பவே குறைச்சல் தான். இங்கே வந்தால் எப்போவானும் பார்க்கிறது உண்டு. அதோடு எங்க கேபிளில் ஆங்கில சானல்கள் எல்லாம் வராது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நெட்டிலே டவுன்லோட் செய்து பார்க்கும் அளவுக்கு அவ்வளவு ஆர்வம் எனக்குக் கிடையாது. :)))))) இப்படி எப்போவானும் பொழுதுபோக்காய்ப் பார்க்கிறதுதான்.
ReplyDelete