
சான்டா அங்கே ஒரு மாபெரும் கப்பலில் மிதந்து கொண்டிருந்தார். இந்தப் பையன் பில்லி, அங்கே தான் காலநிலையைக் கவனிக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தான். எட்வர்டும், அந்தச் சுட்டிப் பெண்ணும் அவனை அழைக்கச் சென்றபோது தவறுதலாக எதையோ அழுத்த, அது பின்னாலேயே நகர ஆரம்பிக்க மூவரும் அதோடு பயணித்து, அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டே வந்தனர்.

கிறிஸ்துமஸின் முதல் பரிசைக் கொடுக்க சான்டா எட்வர்டைத் தேர்ந்தெடுத்தார். எட்வர்டிடம் இவ்வுலகில் இருக்கும் எதை வேண்டுமானாலும் கேள்; உனக்குக் கிடைக்கும் எனக் கூறினார். எட்வர்டுக்கோ அந்த வெள்ளி மணியின் மேலே ஆசை; மணி ஓசை எல்லாருக்கும் எப்போதும் கேட்காது.


குழந்தைகளும் மீண்டும் போலார் எக்ஸ்பிரஸுக்குத் திரும்பினார்கள். குழந்தைகளின் டிக்கெட்டுகளில் அறிவுரைகள் நிரம்பிய கடிதங்களைக் கோர்த்துக் கொடுத்தார் ரயிலின் கன்டக்டர். தன் வீடு வரும் போது தன் ட்ரவுசர் பையைச் சோதித்துப் பார்த்த எட்வர்ட் அந்தப் பை எப்படியோ ஓட்டையாகி இருப்பதையும் வெள்ளி மணி அதிலிருந்து கீழே விழுந்திருப்பதையும் கண்டு ஏமாந்து போய்ச் சுற்றும் முற்றும் தேடினான். மணி எங்கும் கிடைக்கவில்லை. ரயிலிலிருந்து கீழே இறங்கித் தேடலாம் என்றால் நேரமாகிவிட்டது. மனம் ஒடிந்து போனான் எட்வர்ட். ஆனால் அவன் மனதில் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கும் நிகழ்வு ஒன்று அப்போது நடந்தது. ஷிகாகோவிலிருந்து வந்த பில்லிக்கு அவன் கேட்ட பரிசு கிடைத்துவிட்டதாம். சான்டா வந்து கொடுத்திருக்கிறார் என மிகவும் சந்தோஷம் அடைந்து கிறிஸ்துமஸ் தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாய்ச் சொன்னான். அவன் வீட்டருகே ரயில் வந்து நின்றதும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லிப் பிரியாவிடை பெற்றான் எட்வர்ட். மறுநாள் கிறிஸ்துமஸ் அன்று காலை அவன் தங்கை கிறிஸ்துமஸ் மரத்தினருகே இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த பரிசுப் பொருள் ஒன்றைக்கண்டாள். அனைத்துப் பரிசுகளும் பிரிக்கப்பட்டிருக்க அது மட்டும் பிரிக்காமல் காணப்பட்டது.
எட்வர்ட் அதை எடுத்துப் பிரித்தால் ஆஹா, அந்த வெள்ளி மணியே அது! அதை எடுத்து ஆட்டிப் பார்த்தான். இனிய நாதம் கிளம்பியது. அவன் மட்டுமின்றி அவன் தங்கையும் கேட்டாள். ஆனால் அவன் பெற்றோருக்குக் கேட்கவில்லை. ஏனெனில் அவர்கள் சான்டாவை நம்புவதை விட்டுவிட்டனர். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவன் பெரியவனான பின்னரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சிநேகிதர்களுக்கும் சரி, அவன் சகோதரிக்கும் சரி, அவர்கள் வயதானபின்னால் கேட்கவே இல்லை என்று சொன்னார்கள்; சொல்கிறார்கள். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவனுக்கு வயதானபின்னரும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் அவன் உண்மையாக சான்டாவின் இருப்பை நம்புகிறான்.
ரொம்ப நன்றாக எழுதியிருக்கீங்க மாமி.
ReplyDeleteஅங்க கிருஸ்மஸ் கொண்டாட்டம் எல்லாம் தொடங்கியாச்சா??
வெள்ளி மணி ஓசையிலே...
ReplyDeleteஇது படக் கதையா..நான் பார்த்ததில்லை.
வாங்க ராம்வி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், அதற்கான பர்ச்சேஸும் தாங்க்ஸ் கிவிங் நாளில் இருந்து ஆரம்பிக்கிறது. இப்போ வரும் எல்லா நிகழ்வுகள், குழந்தைகளுக்கான பரிசுப்பொருட்கள், பெரியவங்களுக்கானவைனு எல்லாம் கிறிஸ்துமஸை அடிப்படையாக வைத்தே வருகின்றன.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், போலார் எக்ஸ்ப்ரஸ் படத்தோட பெயர். 4 டி படம். அதற்கான ஐநாக்ஸ் தியேட்டரில் பாருங்க. ஐமாக்ஸ்?? எனக்கு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் புரியவில்லை. ஆனால் இரண்டிலும் படங்கள் பார்த்திருக்கிறேன். :))))))
ReplyDelete