எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 27, 2011

ஜிகு ஜிகு ஜிகு ரயில் வண்டி, கூ உச் உச் உச் உச்!

ரயிலில் ஏறிய எட்வர்ட் அங்கே அவன் மட்டும் தனியாக இல்லை, எனவும் அவனைப் போன்ற குழந்தைகள் பலரும் சான்டாவைக்காணப் பயணப்பட்டிருப்பதையும் கண்டான். அவர்களில் ஒரு சிறுமி தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற தன்னம்பிக்கையோடு இருந்தாள்.
பில்லி என்னும் வேறொரு சிறுவனோ ஷிகாகோவின் இல்லினாய்ஸிலிருந்து வந்திருந்தான். தனிமையை விரும்பினான் . அவனுக்கு ரயிலின் கூரையின் மேலே ஒரு நாடோடியுடனும், நெருப்பு அள்ளிப் போடும் ஃபயர்மேனான ஸ்டீமரோடும் ரயிலின் எஞ்சினியரான ஸ்மோக்கியோடும் மோதல் ஏற்பட்டது. அதோடு இல்லாமல் ரயில்பாதையில் நிறையத் தடங்கல்களுக்கும் குறைவில்லை. ஒரு நேரம் ஒரு பெரிய மலைப்பாதையை ரயில் தாண்டுகையில் அந்த நாடோடியும், சிறுவனும் அங்கே நடுவழியில் குறுக்கிட்ட சுரங்கப்பாதையில் இடித்துக்கொண்டு நசுங்கிப் போய்விடாமல் இருக்கவேண்டிக் கீழே இறங்கினார்கள். வழுக்கிவிட்டது. கிட்டத்தட்ட ரயிலில் இருந்து கீழே விழுந்திருக்க வேண்டும். மேலேயே இருந்திருக்கலாம் என்றால் சுரங்கத்தின் கூரைக்கும், ரயிலின் மேல்பாகத்துக்கும் இடைவெளி ஒரு இஞ்ச் கூட இல்லை. நல்லவேளையாகத் தப்பிப் பிழைத்தனர். அதை அடுத்து கூட்டம் கூட்டமாகக் காரிபோ என அழைக்கப்பட்ட மிருகங்கள் வந்தன. (கலைமான்??) ஒருவழியாக அவற்றிலிருந்தும் தப்பினால் ரயிலின் முக்கியச் சாவி ரயிலை மெதுவாகச் செலுத்த முயன்றபோது உடைந்துவிட்டது. மிகவும் கஷ்டப்பட்டுச் செலுத்திக்கொண்டிருந்த ரயில் இப்போது நீராவியை அள்ளித் தெளித்தபடி (சே, நிஜம்மாவே ஜலம், மேலெல்லாம் தெளிக்கிறதே!:D) கட்டுப்பாடில்லாமல் சென்றது.

நம் ஹீரோவான எட்வர்டும், ஹீரோயின் ஆன அந்தச் சிறுமியும் ரயிலின் கண்டக்டரின் உதவியோடு முன் நின்று ரயிலைப் பனிப்பாறைகளால் நிரம்பியதொரு ஒடுக்கமான பள்ளத்தாக்கிற்குக் கொண்டு வந்தனர். திடீரென அங்கே செங்குத்தாகப் பாதை கீழே இறங்கி மேலே செல்ல, மூவரும் முன்னால் நின்றவண்ணம் இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டனர். ரயில் வேகமாய்ச் சென்றது. அங்கிருந்த ஓர் உறைந்த ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலை ஓட்டுவதற்குச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த ஸ்டீமர் அவசரத்திலும் சாவியைச் சரி செய்ய வேண்டும் என்ற வேகத்திலும் தெரியாமல் அதை விழுங்கி விட்டான். இப்போ என்ன செய்யறது? ரயிலோ குலுங்கிக்குலுங்கிச் செல்கிறது. அதோ அந்தச் சாவி! ஸ்டீமரின் தொண்டையிலிருந்து வெளியே வந்து, கீழே உறைந்திருக்கும் பனியில் அல்லவோ விழுகிறது. ஆஹா! இது என்ன! அது விழுந்த வேகத்தில் அங்கே உறைந்திருக்கும் பனியெல்லாம் உடைந்து போகிறதே! அதற்குள் ஸ்மோக்கி தன்னிடமிருந்த ஒரு ஹேர்பின்னால் காட்டர்பின்(சாவி) செய்யவேண்டிய வேலைக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறான். அவர்களுக்குப் பின்னாலேயும் ஐஸ் உடைந்து கொண்டு வந்தது. ரயிலின் பாதையும் முழுக்க முழுக்க ஐஸால் நிறைந்து இருந்தது. கன்டக்டர் வெகு கவனமாக ஸ்மோக்கியையும், ஸ்டீமரையும் ஏரியின் அடுத்த பக்கம் தாண்டுவதற்கு உதவி செய்கிறார். அப்பாடா, ஒரு வழியா வடதுருவத்துக்கு வந்து சேர்ந்தாச்சு. ஆனால் இந்த பில்லி, என்னமோ சான்டாவைப் பார்க்கத் தான் வரப் போவதில்லை என்கிறானே? ஏனென்று கேட்டால் அவன் எங்கிருந்து வந்திருக்கிறானோ அந்த ஊரும் சரியில்லையாம்; அவன் குடும்பமும் உடைந்து விட்டதாம். கிறிஸ்துமஸோ, சான்டாவோ தனக்கு எதுவும் நன்மை செய்ய முடியாது என்று கூறுகிறான். உண்மையா?

4 comments:

  1. திரும்பி படம் பார்ப்பது மாதிரியே இருக்கு,உங்க பதிவை படிக்கும் பொழுது.

    ReplyDelete
  2. கன்டக்டர் வெகு கவனமாக ஸ்மோக்கியையும், ஸ்டீமரையும் ஏரியின் அடுத்த பக்கம் தாண்டுவதற்கு உதவி செய்கிறார். அப்பாடா, ஒரு வழியா வடதுருவத்துக்கு வந்து சேர்ந்தாச்சு.

    ஜிகு ஜிகு ஜிகு ரயில் வண்டி, கூ உச் உச் உச் உச்!" பயணம் ரசிக்க வைக்கிறது..

    ReplyDelete
  3. வாங்க ராம்வி, நன்றிங்க.

    ReplyDelete
  4. வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete