चातुर्भि: : श्रीकण्टै: शिव व्युवतिभि: पञ्चभिरपि
प्र्भिन्नभि: श्म्भोर्णव्भिरापि मुलप्र्क्रुतिभि:
चतुश्चात्वारिम्शद -वसुदल -कलाश्र -त्रिवलय -
त्रिरेखाभि; सार्धं तव शरणकोणा: परिणता:
சா₁து₁ர்பி₄: : ஶ்ரீக₁ண்டை₁: ஶிவ வ்யுவதி₁பி₄: ப₁ஞ்ச₁பி₄ரபி₁
ப்₁ர்பி₄ன்னபி₄: ஶ்ம்போ₄ர்ணவ்பி₄ராபி₁ முலப்₁ர்க்₁ருதி₁பி₄:
ச₁து₁ஶ்சா₁த்₁வாரிம்ஶத₃ -வஸுத₃ல -க₁லாஶ்ர -த்₁ரிவலய -
த்₁ரிரேகா₂பி₄; ஸார்த₄ம்ʼ த₁வ ஶரணகோ₁ணா: ப₁ரிணதா₁:
சதுர்ப்பி: ஶ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர் -நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய-
திரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:
சிவகோணம் முற்பகர்வது ஒருநாலு சத்திநெறி
செறிகோணம் அத்தொடரும் மருவுகோள்
நவகோணமும் உட்படுவது எழுமூ விரட்டி ஒரு
நவில் கோணமுற்றதுவும் வலயமா
யிவரா நிரைத்த தளம் இருநாலும் எட்டிணையும்
எழிலாய வட்டமொடு சதுரமாய்
உவமானம் அற்றதணி தனி மூவகைக்கணும்
உமைபாதம் உற்ற சிறுவரைகளே
வீரை ராஜக்கவிராயரின் தமிழாக்கம்.
சென்ற ஸ்லோகத்தில் குண்டலினி ஏறுவதையும், ஸஹஸ்ராரத்தில் காட்சி கொடுத்துவிட்டு மீண்டும் யதாஸ்தானம் வருவதையும் பார்த்தோம். இப்போது ஶ்ரீசக்கரத்தின் வர்ணனையைப் பார்ப்போம். அம்பாளின் நாம ஸ்வரூபம் மட்டுமின்றி யந்திர ஸ்வரூபமும் உள்ளது. யந்திர ஸ்வரூபமே ஶ்ரீசக்கரம் எனப்படும். இந்த ஶ்ரீ சக்கரம் ஒன்பது முக்கோணங்களால் ஆனது.
இந்த யந்திரமானது அபார சக்தி கொண்டது. ஒவ்வொரு தேவதைக்கும் அக்ஷரக் கூட்டங்கள் ஒரு ரூபம் எனில், சப்தரூபம், மந்திர ரூபம், யந்திர ரூபம் என்றும் உண்டு. கோடுகள், கோணங்கள், வட்டங்கள், கட்டங்களால் ஆன அந்த யந்திர ரூபத்தின் அர்த்தங்கள் குரு மூலமே அறியத் தக்கவை. அம்பிகைக்கு உரிய மந்திரத்தை மனதில் ஜபித்தவண்ணம் யந்திரத்திலும் வழிபாடுகள் செய்வதுண்டு. கோணங்கள், தளங்கள் ஆகியவற்றில் அவை அவைக்கு உரிய மந்திர அக்ஷரங்களைப் பொறித்து வழிபாடு செய்வார்கள். அம்பாளுக்கு இருக்கக் கூடிய அநேக ரூபங்களுள் இந்த ஶ்ரீசக்கர வழிபாடே பிரபலமாக இருக்கிறது.
மந்திரங்களில் சப்தம் மாறுபட்டால் எவ்வாறு அதன் மூலம் தோஷங்கள் ஏற்படுமோ அப்படியே ஶ்ரீசக்கரத்தின் அமைப்பிலும், அதற்கென உண்டான அளவுகளிலும் சிறு மாறுபாடு கூட இருக்காமல் என்ன பரிமாணத்தில் இருக்கவேண்டுமோ அவ்வாறே இருக்க வேண்டும். அதோடு கூட வழிபாட்டுக்கென உள்ள நியமங்களையும், ஆசாரங்களையும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அம்பாளின் செளந்தரிய விக்ரஹ வடிவை விட இந்த ஶ்ரீசக்ர வடிவுக்கே அதிகம் சிறப்பும் உண்டு. இந்த மந்திரங்களிலும் நாமம் என்பதே கிடையாது. பீஜாக்ஷரங்களே காணப்படும். அதோடு ஶ்ரீவித்யா தேவதையை திரிபுரசுந்தரி என அழைத்தாலும் உருவம் அமைக்காமல் யந்திர ரூபமாகவே வழிபடுவார்கள். இதற்கான காரணம் எவரும் கூறவில்லை. ஆகையால் அது முறையாக சாக்த வழிபாட்டைச் செய்பவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று.
ஒன்பது கோணங்களால் ஆன இந்த ஶ்ரீசக்கரத்தில் கீழ் நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் சக்தி சக்கரங்கள் எனப்படும். மேல் நோக்கிய நான்கும் சிவ சக்கரங்கள் எனப்படும். கொடிய விஷத்தைத் தன் கழுத்தில் வைத்திருக்கும் ஶ்ரீகண்டனாகிய ஈசனின் பத்தினியான பராசக்தியைக் குறிக்கும் இந்த சக்கரத்தின் வர்ணனை மேலும் வருமாறு:
ஒன்பது சக்கரங்களும் அண்டம் எனப்படும் இவ்வுலகின் மூலகாரணங்கள், அதே போல் பிண்டமாகிய இவ்வுடலின் மூலகாரணங்கள் ஆகியவற்றின் தத்துவங்களைக் குறிக்கும். ஆகவே மூலப்ரக்ருதி எனப்படும். சிவாம்சம் கொண்ட மூலப் ப்ரக்ருதி பிண்டமாகிய உடலில் மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகிய நான்காகும். அதே அண்டமாகிய உலகில் மாயை, சுத்தவித்தை, மகேசுவரன், ஸதாசிவன் ஆகிய நான்காகும்.
சக்தி அம்சமோ எனில் தோல், ரத்தம், மாமிசம், மேதை எனப்படும் மூளை, அஸ்தி எனப்படும் எலும்பு ஆகிய ஐந்தும் ஆகும். அதே அண்டமாகிய உலகில் ப்ருத்வி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய ஐந்தாகும்.
தொடரும்.
நல்ல விளக்கம்.
ReplyDeleteகுரோம்பேட்டை நாட்களில் நவராத்திரியின் போது ஸ்ரீசக்ர வடிவமைப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பயந்து பயந்து செதுக்கியதைப் பார்த்திருக்கிறேன்.
//மந்திரங்களில் சப்தம் மாறுபட்டால் எவ்வாறு அதன் மூலம் தோஷங்கள் ஏற்படுமோ அப்படியே ஶ்ரீசக்கரத்தின் அமைப்பிலும், அதற்கென உண்டான அளவுகளிலும் சிறு மாறுபாடு கூட இருக்காமல் என்ன பரிமாணத்தில் இருக்கவேண்டுமோ அவ்வாறே இருக்க வேண்டும். //
ReplyDeleteஸ்ரீதத்வநிதி - எட்டு மற்றும் பதினாறு இதழ் தளங்களின் அளவு, நடுவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சக்ரத்தின் அளவில் இருக்க வேண்டும் என வரையறுக்கின்றது. இப்போது நாம் காணும் படத்தில் இருக்கும் 8 & 16 இதழ் தளங்களை விடப் பெரியதாக அமையவேண்டும். மிக விரிவாக எழுதவேண்டியிருக்கும். உங்கள் விளக்கம் அருமை. நன்றி. நி.த. நடராஜ தீக்ஷிதர் http://natarajadeekshidhar.blogspot.com
வாங்க அப்பாதுரை, ஆமாம், ஶ்ரீசக்ரம் மட்டும் ரொம்பவே கவனித்துச் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
ReplyDeleteவாங்க தீக்ஷிதரே, நீங்க படிக்கிறது குறித்து சந்தோஷம் ஏற்பட்டாலும், அதே சமயம் நான் எழுதுவதிலும் கவனம் கூடுதலாக இருக்கவேண்டும். கூடியவரை ரொம்ப ஆழமாப் போகாமல் கவனமாய் இருந்தால் மட்டும் போதாது இல்லையா? எழுதுவதும் சரியா இருக்கணும்.
ReplyDeleteஇந்தப் படம் கூகிளாரைக் கேட்டதில் கொடுத்தார். எங்கே இருந்து வந்ததுனு தெரியலை. இருக்கலாமா? எடுத்துடவானு மட்டும் சொல்லுங்க. படம் சரியில்லைனா இருக்க வேண்டாமோனு ஒரு எண்ணம்.
ஒவ்வொரு விதமான பத்ததியில் ஒவ்வொரு விதமான கணிதங்கள் அமைகின்றன. எல்லாவற்றையும் விளக்குவது கடினம். சில முறைகளில் ஸ்ரீ சக்ரத்தின் பதினாறு இதழ் தளங்களுக்கு வெளியே மூன்று வட்டங்கள் (வளையங்கள்) அமையும். அவற்றிற்கு மந்திரங்கள் இல்லை. சில முறைகளில் அந்த மூன்று வட்டங்களுக்கும் தனித்தனி அம்பிகை உண்டு. அதற்கும் வழிபாடு உண்டு. ஸ்ரீ சக்ரம் ஒரு சாகரம். இந்தப் படம் நன்றாகவே உள்ளது. சாஸ்த்ரீய விளக்கம் ஒன்றை எடுத்துக் காட்டவே எழுதினேன். இப்பொழுது கணிணி வழியே ஸ்ரீ சக்ரம் வரைய முடிகின்றது. ஆனால், manual ஆக வரைவதில் மிகப் பெரும் கஷ்டம் இருக்கின்றது. ஸ்ரீ சக்ரத்தில் உள்ள 43 முக்கோணங்களுக்கு மேலாக சில கோணங்கள் (கோடுகள் சரியாக இல்லாமையால்) அமைந்து விடும். அது தவறானதாகிவிடும். ஸ்ரீ சக்ர வழிபாடு அம்பிகை வழிபாட்டின் உச்சநிலை வழிபாடு. நன்றி. நி.த. நடராஜ தீக்ஷிதர்
ReplyDeleteவாங்க தீக்ஷிதரே, மறு வரவுக்கும், விளக்கத்திற்கும் நன்றி.
ReplyDeleteமாமி
ReplyDeleteஉங்களோட ஸ்கிரிப்ட்ல 'ஸ்ரீ' சரியாக வருவதில்லை என்று நினைக்கிறேன். ஶ்ரீ என்று வருகிறதே :)
பொறுமையாக ஒவ்வொன்றாக படிக்கிறேன்.
சுலோகம் எழுதும்போது நம்பர் கொடுத்து எழுதுவது நல்லது தான். ஆனால் எழுதும் போது ஒரு flow போய் கஷ்டம் ஆகி விடுவதால் நான் அப்படி செய்வதில்லை. குழப்பமான இடங்களில் சமஸ்க்ருத அக்ஷரத்தை எனது பதிவில் சேர்த்துக் கொள்கிறேன். இப்படி எண்ணோடு எழுதுவது சிரமமாக இருந்தால் நீங்களும் அப்படியே செய்யலாமே.