முதலில் பாயிரச் செய்யுள்களை மட்டும் இங்கே இடுகிறேன். அதன் பின்னர் அந்த அந்த ஸ்லோகத்துக்கு உரிய செய்யுட்களைக் குறிப்பிட்ட பகுதியில் சேர்த்துவிடுகிறேன். சிரமம் பார்க்காமல் போய்ப் படிக்கவும் சுட்டி தந்துவிடுகிறேன். நன்றி. இதை அனுப்பித்தந்த திரு அப்பாதுரைக்கு என் நன்றி.
பாயிரம்
மொழிந்த மறை நூல் இயற்று முகபடாம்
அணிந்து முதுஞான தானம்
பொழிந்து தனது இணைமணி என்று இருசுடரும்
ப்ணைகளிற்றைப் போற்றல் செய்வாம்
வழிந்து பெரும்புனல் பரந்து வடவரையில்
உலகு ஏழும் ஏழும் ஒக்க
வழிந்திடினும் அழியாத அபிராமி
பாடல் வளம் அளிக்க என்றே.
இத்தனை நாள் நீயிருக்க வாயிருக்க
இயல் இருக்க அருள்பாடாமல்
மத்தனை ஆளுங்கொடியை இப்போது என்
வழுத்துகின்றவாறு என்பீரேல்
பித்தனை யார் ஏவல் கொள்வார் பித்து ஒழிந்தால்
உரியவர்கள் அடிமை ஓலைக்
கொத்தனை யார் ஏவல் கொள்வார் கொள்ளும்போது
எவனாலே குழப்பலாமே.
யாமளைதன் பெரும்புகழை ஆதிமறை
நாலில் வடித்தெடுத்த நூலை
நாமகள் தன் பாடல் இது என்று அரனார்க்கு
நவிலவ்வர் நகை செய்தன்றே
பாமகளை அருகழைத்துப் பருப்பதத்திற்
பொறித்திருந்த பரிசு காட்டும்
சேமநிதிப்பாடலை என் புன்கவியால்
கொள்வது அவ்வடிமை அன்றே.
அரன் கயிலைப் புறத்து எழுதப்படு நூலை
அருந்தவத்துப் புட்பதந்தன்
பரந்த வடவரை அழுத்த அதைக் கவுட
பாதர் உளம்பதித்து முற்றும்
தரம் பெறு சொல் அமுது எனப் பின் சங்கரமா
முனிக்கு அருள அந்த மேகம்
சுரந்து உலகில் வாடும் உயிர்ப் பயிர் தழைப்பச்
சொரிந்தது எனச் சொல்வர் நல்லோர்.
இன்ன தன்மைய நூலினைக் கவி
ராசராச வரோதய
மன்னன் நம் பிரமாதராயன்
வடித்து அரும்பொருள் கூறவே
கன்னல் அம்சிலை வேள் எனுங் கவி\
ராசபண்டிதன் வீரையான்
சொல் நயம்பெறு காவியக்கவி
சொல்ல என்று தொடங்குவான்
வடமொழி எனும் பழைய விரிகடல் பிறந்து இறைவர்
மணையிடை இருந்து சிலைமேல்
இடமொடு தவழ்ந்து தனது இடுபெயர் சவுந்தரிய
லகரி என நின்று வளர்மாது
அடலரசு முன்பினுள் பல மத ப்ரபந்தம் எனும்
அடுபகை துரந்து என் மணிநா
நடம் இடு பெருங்கவிதை மதகரியொடும் புவியை
நகர் வலம் வந்தது இதுவே.
இதுவரை நான் பாயிரச் செய்யுள்களெல்லாம் வாசித்ததில்லை.பொறுமையாக வாசித்தேன்.நன்றி
ReplyDeleteவிச்சு வரவுக்கும், கஷ்டப்பட்டுப் படிச்சதுக்கும் நன்றி.
ReplyDeleteஅடடா! இதை மறுபடி டைப் பண்ணீங்களா! எத்தனை சிரமம்! இருந்தாலும் எங்களுக்கெல்லாம் வசதி. ரொம்ப நன்றி.
ReplyDeleteஅப்பாதுரை,
ReplyDeleteசிரமம் எல்லாம் எதுவும் இல்லை. இணையத்தில் நான் அதிகம் செய்யும் வேலையே இது தானே! :)))))))))