அம்பிகையின் பரிபூரண சாந்நித்யம் ஶ்ரீவித்யா தேவதையாக இருக்கும் யந்த்ர ரூபத்திலேயே சிறப்பாகக் காணப்படும். ஆகவே இதற்கெனச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. அடுத்து இவற்றில் காணப்படும் எட்டுத்தளங்கள் வஸுதல: வஸுக்கள் எனப்படும். அஷ்டவஸுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆகையால் இங்கேயும் எட்டு என்னும் எண்ணையே இந்த வஸு தல: என்னும் சொல் குறிக்கும். அடுத்து வரும் பதினாறு தளங்கள் பதினாறு கலைகளையும் குறிக்கின்றன. இவற்றோடு பிந்துவையும் சேர்த்துக்கொண்டு நாற்பத்து நான்கு கோணங்கள் என்று சொல்வார்கள். இந்த ஶ்ரீசக்ரமும் பூப்ரஸ்தார்ம், மேரு ப்ரஸ்தாரம் என இருவகைப்படும். மேரு என்பதையும் அனைவரும் பார்த்திருப்போம். மேருவும் பூர்ண மேரு, அர்த்த மேரு என இருவகைப்படும். ஆகவே அவற்றுக்கு உரிய முறையில் வழிபடவேண்டும்.
அம்பாளின் இந்த வாசஸ்தலத்துக்கு ஶ்ரீநகரம், ஶ்ரீபுரம் என்றே பெயர். இதை எல்லாம் குருமுகமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். மேலோட்டமாகச் சொல்லியதை வைத்து எதுவும் செய்யக் கூடாது. சக்கரங்கள் வழிபடுபவரின் எந்தப்பக்கமாக இருக்கவேண்டும் என்பதில் இருந்து கணக்கு உண்டு. அம்பிகையை வழிபடுவதும் இருவிதமான முறைகளில் வழிபடுவது உண்டு. ஒரு வழிபாட்டு முறையில் சக்கரத்தின் நடு முக்கோணம் மேல் நோக்கியும், இன்னொரு முறையில் நடு முக்கோணம் கீழ் நோக்கியும் காணப்படவேண்டும். ஆகவே மிகவும் கவனத்தோடு செய்யப்பட்டு, அதைவிடக்கவனத்தோடு பூஜையில் வைத்து, ஆசாரம் தப்பாமல் குரு மூலம் உபதேசம் பெற்ற பின்னரே இந்த வழிபாடுகளைச் செய்யலாம். அதுவரைக்கும் ஸ்லோகம் மட்டும் சொல்லுவோம்.
இப்படியான தேவியைத் துதித்த பட்டரோ தான் அழிவற்ற இன்பத்திலே வாழும்படியான ஒரு பரம்பொருளே அவள் எனக் கூறுகின்றார். ஶ்ரீசக்ர ராஜ்யத்தில் வசிக்கும் தேவியைத் தன் மனக்கண்ணால் தரிசித்தவர், இந்லழகை வாயினால் உரைக்கவும் முடியுமோ என்கிறார். ஏழு கடல்களாலேயும், ஏழு உலகங்களாலேயும், பெரிய அட்ட குலாசலங்களாலேயும் அணுக முடியாத தேவியானவள் சூரிய, சந்திரர்க்கு நடுவே அவர்களின் சுடரை விடப் பிரகாசமாகக் கோடி சூரியப் பிரகாசமாக நித்தியசூரியாக விளங்குகிறாள் என்கிறார்.
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
மனதாலும் வாக்காலும் அணுகுவதற்கு அரியவளான தேவியை நம் பேரின்ப வாழ்க்கைக்குப் பற்றுக்கோடானவள் என்பதைப் புரிந்து கொண்டு, அவளே கதி எனச் சரணடைந்து, நாம் செய்யும் அனைத்துத் தவறுகளையும், அவள் விலக்கும் காரியங்களைச் செய்தாலும் பொறுக்கும் தன்மையையும் கொண்டவள் அம்பிகை. அந்த உரிமையிலும், தைரியத்திலுமே தாம் அவளை வாழ்த்தித் துதிப்பதாக பட்டர் கூறுகிறார்.
//ஶ்ரீ//
ReplyDeleteஅப்படின்னா?
சிம்மாசனேஸ்வரி நன்றாக உள்ளது.சக்கரத்தை வைத்து துதிப்பதில் கூட இவ்வளவு விசயங்கள் உள்ளதா?
ReplyDeleteவாங்க விவசாயி, எங்கே இந்தப்பக்கம்? பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு? இப்போ எங்கே இருக்கீங்க? குழந்தை நல்லா இருக்காளா?
ReplyDeleteஶ்ரீ ன்னா ஶ்ரீ தான்! :))))))
விச்சு, தொடர் வரவுக்கு மிக்க நன்றி. ஆமாம், எல்லாவற்றிலும் விஷயம் இருக்கிறது. அதனால் தான் கொஞ்சமாவது புரிதல் வேண்டும் என்பதற்காகக் கூடியவரை சொல்ல வேண்டியவற்றை மட்டும் சொல்கிறேன். எல்லாமும் தெரிஞ்சுக்கணும்னா மந்திர உபதேசம் பெற்று அதற்கான தகுதியை அடைய வேண்டும்.
ReplyDeleteபடிச்சாச்சு .,புரிய,மனதில் பதிய ஞானம் வேண்டும் போல :)
ReplyDeleteநிறைய சூட்சுமங்கள் இப்படி யாராவது சொன்னால் தான் புரியும் (அப்படியும் புரியாது சில நேரம்:). புரியாத சூட்சுமத்தினால் என்ன பயன் என்றும் யோசிப்பதுண்டு.
ReplyDeleteசிம்மாசனேஸ்வரி என்ற வார்த்தையையே இப்போது தான் கேள்வி படுகிறேன் கீதாம்மா !
ReplyDeleteஹய்யா !
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம் கீதாம்மா அவர்களின் எண்ணங்கள் ப்லோக்ளில் கமெண்ட்ஸ் போட முடிகிறது
அவரும் கூகிள் காரியும் சண்டை முடித்து சமாதானத்துக்கு வந்துடாங்க போல :))))
பேராசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் என்று நினைக்கிறேன். அவர் எழுதிய கட்டுரை ஒன்று என் பள்ளிக் கால பாடப்புத்தகத்தில் படித்தது நினைவில் நிற்கிறது.
ReplyDeleteஅதில் 'ஸ்ரீ' என்னும் வார்த்தைக்குப் பொருள் 'திரு' என்று சொல்லியிருப்பார். 'திரு' என்றால், 'அழகிய' என்கிற பொருளையும் அடுத்துச் சொல்லியிருப் பார்.
பொதுவாக திரு என்றால் செல்வம் என்று நாம் பொருள் கொள்கிறோம்.
அவர் 'அழகிய' என்று எடுத்தாண்டது அந்த வயதிலேயே எனக்குப் புதுமையாகவும், பொருள் பொதிந்ததாகவும் தோன்றியது.
கட்டுரை அட்டகாசமாகச் செல்கிறது. அந்த அட்டகாசத்திற்குக் காரணம் உங்கள் ஈடுபாடே! அங்கிருந்து கொண்டு எப்படி இப்படி?.. ஏதாவது குறிப்புகள் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்களா, என்ன?..
வாங்க ஜீவி சார், ஶ்ரீ என்றால் திரு என்று இளாவுக்கும் (விவசாயி) தெரியும்னு நம்பறேன். :))))))
ReplyDeleteகட்டுரை அட்டகாசமாகச் செல்கிறது. அந்த அட்டகாசத்திற்குக் காரணம் உங்கள் ஈடுபாடே! அங்கிருந்து கொண்டு எப்படி இப்படி?.. ஏதாவது குறிப்புகள் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்களா, என்ன?..//
உங்கள் பாராட்டுக்கு நான் தகுதியானு யோசிக்கிறேன், இல்லைனு மனசாட்சி சொல்லுது. ஈடுபாடு என்னமோ வாஸ்தவம் தான். மற்றபடி செளந்தர்ய லஹரி பாஷ்யம், தேவி மஹாத்மியம் உரை, தேவிபாகவத சாரம் போன்றவற்றைப் படித்துக்கொள்கிறேன். ஸ்லோகத்தையும் அதற்கேற்ற அந்தாதியையும் தேடவே அரை நாள் ஆகிறது. அப்படியும் திருப்தியா அமையறதில்லை. பரமாசாரியாளோட தெய்வத்தின் குரலும் உதவிக்கு வருது. ஆகவே பாராட்டுக்களெல்லாம் இவங்களைச் சேர்ந்தது. எனக்கில்லை. நன்றி வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும்.
வாங்க ப்ரியா, புரியும்; புரியறாப்போல் தான் எழுதறதா நினைச்சுட்டு இருக்கேன். :)))))
ReplyDeleteவாங்க விவசாயி, ஶ்ரீ எனக்குச் சரியாத்தான் தெரியுது. உங்களுக்கும், ஶ்ரீநிவாச கோபாலனுக்கும் ஸ்க்ரிப்ட் மாத்தித் தெரியுதோ என்னமோ! :(( என்ன காரணம்னு புரியலை. நீங்க போட்டிருப்பது, ஶ்ரீநி போட்டிருப்பது இரண்டுமே எனக்குச் சரியாவே தெரியுது. :))))
ReplyDeleteவாங்க விச்சு, சும்மா சக்கரத்தை வைத்துத் துதிப்பது இதில் இல்லை என்பதுதான் முக்கியமான பொருளே. :))))))
ReplyDeleteவாங்க அப்பாதுரை, சூக்ஷ்மம் புரியலைனா அதனால் நமக்கு வேண்டுமானால் பலன் இருக்காது. ஆனால் சிலருக்குக் கிடைக்கும் இல்லையா! புரிஞ்சுக்கறவங்களும் இருக்காங்க; :))))))
ReplyDeleteசிம்ஹாசனேஸ்வரி" தான் சரியான வார்த்தை ப்ரியா. சிம்மத்தை ஆசனமாய்க் கொண்டவள். என்பது பொருள்.
ReplyDeleteஅவரும் கூகிள் காரியும் சண்டை முடித்து சமாதானத்துக்கு வந்துடாங்க போல :))))
ReplyDeleteதெரியலை ப்ரியா; ஜெயஶ்ரீக்கும் பிரச்னை இருக்குனு சொல்றாங்க. நான் கமென்ட் வரதை எல்லாம் கணக்கிலே வைச்சுக்கறதே இல்லை. யாருமே படிக்கலைனு நினைச்சுட்டு இருந்தால் பலரும் குறிப்பிட்டுத் தனி மடல் போடுவாங்க. அதனால் கமென்ட் போட நேரம் இல்லைனு நினைச்சுக்குவேன். அதோடு மொக்கை தான் எல்லாருக்கும் ஆல் டைம் ஃபேவரிட்! :)))))))